சில நிமிடங்கள் வெளியே நின்றவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு உள்ளே வர, அவனோ எப்போதும் போல் ஷோட்ஸ் ஒன்றுடன் கட்டிலில் அமர்ந்து அவளை தான் துளைத்தெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்…
அவளுக்கு அவனது பார்வையை எதிர்கொள்ளவே தடுமாற்றமாக இருந்தது…
அவனைப் பார்க்காமல் தன் உடைப் பெட்டியில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மகிமா அவன் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்து கப்பலுக்கு வந்தாள்… அதுவும் பழுதாகி இருக்க, அவள் போட்ட திட்டமே சொதப்பளாகி விட்டது.
அபின்ஞானுடன் பயணப்படுவதை நினைக்கும் போதே அவளுக்கு பயமாகவும் சோர்வாகவும் இருந்தது…
அவன் பேசியதை இன்னும் அவளால் கடந்து வர முடியவில்லை…
அவன் வார்த்தைகள் அன்று தேள் போல் அல்லவா அவளை கொட்டின… என்னவெல்லாம் பேசி விட்டான்… இவ்வளவு பிரச்சினைக்கு இடையே எதுவும் நடக்காதது இப்போது அவளுடன் அத்துமீரவும் ஆரம்பித்து விட்டான்…
இரண்டு மாதங்கள் கப்பலில் பயணிக்க வேண்டும்…
இனி அபின்ஞானுடன் அல்லவா இருக்க வேண்டும்.
என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை…
அவன் நடவடிக்கைகளிலே புரிந்து விட்டது அவன் அவளை ஒருபோதும் தன்னை விட்டு விலக விடமாட்டான் என்பது…
குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தாள் மகிமா. அபின்ஞான் இருக்கவில்லை.
கப்பலையும் எடுக்கும் நேரம் என்பதால் அனைத்தையும் சரிபார்க்க கீழ்தளத்துக்கு சென்றிருந்தான் அவன்…
கப்பலுக்கு மருத்துவர்கள், உளநல மருத்துவர்கள், கடற்படை வீரர்களை அபின்ஞான் தம் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது அவசரத் தேவைகளுக்காக அவர்களை அழைத்து இருந்தான்….
அவர்களுக்கான அறைகளை இரண்டாம் மாடியில் ஒதுக்கி இருந்தான்…
கப்பலும் புறப்பட தொடங்கியது…
அவர்கள் செல்ல வேண்டியது பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதிக்கு… அங்கே செல்ல பத்து நாட்கள் தாண்டி விடும்…
அதற்கு முன் ஒவ்வொரு நாட்டினதும் கடல் எல்லையை கடக்கும் போது அந்தந்த நாட்டுக்கு தம் வருகையை அறியத் தர வேண்டும்…
இப்போது தான் ஒவ்வொரு நாட்டிலும் போர் அது இது என்று ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனவே… சொல்லாமல் சென்றால் போர்க்கப்பல் என்றோ… ரகசிய உளவுத்துறை கப்பல் என்றோ… தாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம்…
அதுமட்டுமில்லாமல் ஏதாவது ஆபத்தென்றால் கூட அருகில் இருக்கும் நாடுகளின் உதவியை நாட முடியும்…
கரனை அழைத்தவன், “ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பார்த்து செஞ்சுட்டியா?” என்று கேட்க,
அவனும், “முடிச்சிட்டேன்டா…” என்றான்.
“ம்ம் ஓகே” என்ற அபின்ஞான், “இனிமே டெய்லி ஒன் ஹவர்க்கு மேல ஸ்விம்மிங் பிரக்டிஸ் பண்ணுடா… அதோட ஜிம் போற டைமயும் கூட்டிக்கோ… தூங்கிட்டே இருக்காதே… நம்ம வந்திருக்க வேலைக்கு எவ்ளோ பாஸ்ட்டா இயங்குறோமோ அதுதான் நமக்கு சேப்டி… சஞ்சனாக்கும் சொல்லிடு” என்றவன் மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சரிபார்த்து விட்டு தன்னறைக்குச் சென்றான்…
“இவ திங்கிறதையும் தூங்குவதையுமே முழு நேர வேலயா வெச்சி இருக்கா போல” என்று நினைத்தபடி தன் வேலைகளை பார்க்க மடிக்கணனியை எடுக்க… அவன் மடிக்கணனியின் அருகே அவள் புத்தகப்பை இருந்தது…
“எப்ப பார்த்தாலும் ரிசர்ச்… ரிசர்ச்ன்னு புலம்பிட்டு என்னத்த பண்றான்னு பார்க்கலாம்” என்று எண்ணியவன் அந்த பேக்கை திறந்து பார்த்தான்…
அதிலோ ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலிருந்து தற்கால நூல்கள் வரை இருந்தன…
அதிலோ வித்தியாசமான கவர் பேஜுடன் “மகான்ஞான்-2020” என்ற ஒரு ப்ரொஜெக்ட் புக் இருந்தது…
அதைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், “இதெல்லாம் படிப்பாளா? இன்ட்ரஸ்டிங்…” என்றவன் அதை இருந்த மாதிரியே வைத்துவிட்டு, அவள் அருகே படுத்துக்கொண்டான்…
யாரோ தன்னை தூங்க விடாமல் உழுக்குவது போல் இருக்க, கஷ்டப்பட்டு கண்களை விரித்தாள் மகிமா…
அபின்ஞான் தான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்…
இந்தக் கரடியோட முடியல… தூங்க கூட விடமாட்டான்” என மறுபக்கம் திரும்பி தூங்க ஆரம்பித்தாள்.
“மகி… கெட்டப்… எவ்ளோ நேரமா தூங்கிட்டிருக்க” என்றபடி அவளை உலுக்க…
“ம்ம்…” என்று முனங்கியபடி மீண்டும் தூங்க,
“கும்பகர்ணி… கும்பகர்ணி…” என சத்தமாகவே அவளுக்கு திட்டியவன், “நீ இப்ப எழும்பலான உன்ன கிஸ் பண்ணிடுவேன்” என்று அவள் முகம் நோக்கி குனிந்த படி கூற…
அதிர்ச்சியில் சட்டென கண்களை திறந்தபடி வேகமாக எழுந்து அமர்ந்தவள், அவள் அருகே சிரித்தபடி அமர்ந்திருந்த அபின்ஞானை முறைத்தபடியே குளியலறைக்குள் சென்று பிரஷாகி வெளியே வந்தாள்.
அவள் வந்தவுடன் அவள் முன்னால் காபி கப்பை நீட்டிய படி நின்றான் அபின்ஞான்.
அவனை அழுத்தமாக பார்த்தவள், எதுவும் பேசாது காபியை வாங்கி அருந்தத் தொடங்கினாள்.
“காபி எப்படி இருக்கு?” என்று அவளைப் பார்த்து கேட்டான் அபின்ஞான்.
“நோட் பேட்” என்று ஒரு மிடரு அருந்தியவாரு மகிமா சொல்ல,
“இதுக்கு நீ பதிலே சொல்லாம இருந்திருக்கலாம்” என்று அபின்ஞான் முகத்தை சுழித்தபடி கூற,
“உங்களுக்கு விருப்பமான பதில் வேணும்னா… நீங்க என்கிட்ட கேட்டிருக்கக் கூடாது… ஏன்னா நான் எனக்கு விருப்பமான பதிலத்தான் சொல்வேன்” என்றவள், “ஒரு சிம்பிள் காபியை போட்டு தந்துட்டு கின்னஸ் ரெகார்ட் போட்ட மாதிரி அபிப்ராயம் கேட்கிறத பாரு” என அவள் வாய்க்குள் முனங்கியது அவன் பாம்பு செவிகளிலும் கேட்டு விட்டது.
“நான் பெரிய சாதன படைச்சா கூட யார் கிட்டயுமே அதப் பத்தி எதுவுமே கேட்டதில்ல… ஆனா ஒரு சின்ன காபிக்கு… உன்கிட்ட எப்படி இருக்குன்னு கேட்க தோணுது” என்றான்.
அவளோ அமைதியாக காபியை அருந்திக் கொண்டிருந்தாள்…
“மகி… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று கூற,
அவளோ எதுவும் சொல்லாது தான் அருந்திய காபி கப்பை கழுவிக் கொண்டிருந்தாள்…
“மகி நான் சொல்றத கொஞ்சம் கேளு… நான் பேசுறத கணக்கெடுக்காம உன் வேலய பார்த்துட்டிருந்தா என்ன அர்த்தம்? நான் உன்கிட்ட இவ்ளோ பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்” என அவள் பின்னாலே வந்தபடி கேட்க,
“எனக்கு நீங்க சொல்ற எந்த விஷயத்தையும் கேட்க விருப்பமில்லன்னு அர்த்தம்” என்றவள் தன் கைகளை துடைத்த படி வெளியே செல்ல பார்க்க,
ஆழ்ந்த மூச்சை விட்டு தனக்கு வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன்… அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தவன் அங்கிருந்த இருவர் அமரக்கூடிய சோபாவில் அவளை அமர்த்தி அவனும் அவளுடன் ஒட்டி அமர்ந்து கொண்டான்…
அவள் அவனிடமிருந்து விலக பார்க்க, தன் ஒற்றை கையை நீட்டி அவள் இடையே பற்றி தன்னுடன் நெருக்கிக் கொண்டவன், “மகி என்ன பாருடி” என்றான் மென்மையாக…
அவள் அவனிடமிருந்து விலக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அவன் அவளை மேலும் மேலும் நெருங்கிக் கொண்டிருக்க, அது அவளுக்கு கூச்சமாகவும் சங்கடமாகவும் இருந்தது…
தன் இடையை அழுத்திப் பிடித்திருந்த அவன் கை மேல் தன் கையை வைத்து, அவன் கையின் அழுத்தத்தை குறைக்க முயன்ற படி, கோபத்தில் முகம் சிவக்க அவன் முகத்தை தவிர மற்ற எல்லா இடத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அவனுக்கும் தான் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை நினைத்து புதுமையாகத்தான் இருந்தது…
ஆனாலும் அவள் புறக்கணிப்பை தான் அவனால் தாங்க முடியவில்லை…
ஏனென்றால் இதுவரை அவன் தான் அனைவரையும் தவிர்த்து இருக்கிறான். அவனை யாருமே இவ்வாறு தவிர்த்தது இல்லை…
அவள் அவனிடம் வந்து பேசும் போதோ பின்னால் சுற்றும் போதோ கண்டு கொள்ளாதவன், அவள் விலகும் போது தன்னை மீறி அவன் மனம் அவள் பின்னாலே செல்ல துடிக்கிறது… இதுதான் மனித மன விந்தை போல…
அந்த சுழலுக்குள் அவனும் மாட்டி விட்டதை இன்னும் அவன் அறியவில்லை…
அவள் இடையிலிருந்த கையை இடம் மாற்றி அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்கச் செய்தவன், “மகி நீ என்ன பார்க்கலன்னா… உன் லிப்ஸ்லயே கிஸ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்றவன், தன் பெருவிரலால் அவள் இதழ்களை அழுத்தமாக வருடினான்…
சட்டென அவன் வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டவள், “எப்ப பாரு கிஸ் பண்ணுவேன், கிஸ் பண்ணுவேன்னு மிரட்டிட்டு இருக்கான் ராஸ்கல்” என் நினைத்தபடி அவனைப் முறைத்துப் பார்த்தவள் அவனிடமிருந்து விலகி அமர, அவளின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையில் வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டவன்,
அவள் வேண்டுமென்றே விலகுவதால் அவளாள் விலக முடியாதவாறு நெருங்கியமர்ந்தான்…
அவன் தான் நினைத்ததை சாதிப்பவன் ஆயிற்றே…
அவள் இரு கைகளையும் பற்றி தன் கைக்குள் அடக்கி கொண்டு ஏதோ சொல்ல பார்ப்பதும் பின் தயங்குவதுமாக இருந்தான் அபின்ஞான்.
மகிமாவோ அவன் கைக்குள் அடங்கி இருந்த தன் கைகளைப் பார்த்தவள் பின் அவன் விசித்திரமான நடவடிக்கையை புதினம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மகி…” என்று சிறு இடைவெளி விட்டவன், “ஐ அம் ரியலி சாரிடி” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டான்…
அவனை “அடப்பாவி…” என்பது போல் பார்த்த மகிமா, “இத சொல்றதுக்கா இவ்ளோ தயக்கம்…. இவ்ளோ ஆர்ப்பாட்டம்… உலகத்துல யாருமே இந்த வேர்ட்ஸ்ஸ யூஸ் பண்ணாத மாதிரி… அதுக்கு ஒரு பெருமூச்சு வேறு…” என்று நினைத்தவள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை….
“மகி அன்னக்கி இருந்த கோபத்துல டென்ஷன்ல நான் யோசிக்காம பேசிட்டேன் டி… நீ என் முக்கியமான டாக்குமெண்ட்ஸ், ஜுவல்ஸ வீசினதால என்னால என் கோபத்த கண்ட்ரோல் பண்ணவே முடியல… கோபத்துல ரொம்ப ஓவராவே பேசிட்டேன்டி… ஐ அம் ரியலி சாரிடி… நான் இதுவரை யார்கிட்டயும் சாரி கேட்டதே இல்ல… உன்கிட்ட தான் கேட்கிறேன்” என் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.
“அது பார்த்தாலே தெரியுது” என்று நினைத்தவள் அப்போதும் அமைதியாகவே இருந்தாள்…
அவன் இதுவரை பேசத தெல்லாம் சேர்த்து வைத்துப் பேச அவளோ அமைதியாக இருந்தாள்.
அவள் தன்னை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பதை கண்டதும் கட்டுப்படுத்திய கோபம் மீண்டும் வெளிவரத் தொடங்கியது.
“மகி… பேச போறியா இல்லையா?” என்று கத்தினான்…
அவன் இவ்வளவு நேரம் அவளுடன் மென்மையாக பேசியதே உலக அதிசயங்களில் ஒன்றுதான்… அவனது இயற்கை சுபாவம் எவ்வளவு நேரம் தான் மறைந்திருக்கும்.
“எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு பேசுறீங்க அபி… கொஞ்சமே குற்ற உணர்ச்சியே இல்லையா உங்களுக்கு… அன்னைக்கு என்ன ஒரு மனுஷியா கூட மதிக்கல… என் அண்ணாவை ரிசப்ஷனுக்கும் கூப்பிடல்ல… அன்னைக்கு எனக்கு எப்படி எல்லாம் கதை சொன்னீங்க… இன்னைக்கு எதுவுமே நடக்காத மாதிரி என் பக்கத்துல வந்து உக்காந்துட்டு பேசுறீங்க… இதே நான் உங்க பக்கத்துல வந்தா அதுக்கு எனக்கு வேற பேரு வைப்பீங்க” என்றாள் ஆதங்கமாக…
அருகில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தை எட்டிப் பார்த்தவன், “அதே மூஞ்சி தாண்டி… குற்றை உணர்ச்சி இருக்கிறதனால தான் இப்போ சாரி கேட்டுட்டு உன் பின்னாலே சுத்திட்டு இருக்கேன்… நான் அன்னைக்கி உன் கிட்ட அப்படி பேசினது பிழ தான்… அன்னக்கி இருந்த டென்ஷன்ல யோசிக்காம பேசிட்டேன்…அதுக்கு தான் சாரி கேட்டுடேனே… உன் அண்ணா விஷயத்த பேசாதே” என்றான் கறாராக…
“ஓஹ்… அண்ணாவ பத்தி பேசக் கூடாதா… நான் நீங்க பேசிறத கேட்டது தான் என் பிழ… பேசுறதெல்லாம் பேசிட்டு இப்ப ஒரு வார்த்தைல சாரின்னு சொன்னா… நீங்க பேசினதெல்லாம் இல்லாம போயிடுமா…” என்று ஆழ்ந்த மூச்சை விட்டவள், “எனக்கும் இத பத்தி திரும்பத் திரும்ப பேசுறது பிடிக்கல அபி… உங்களுக்கும் என் அண்ணாக்கும் ஒத்தே போகாது… என் விஷயத்ல அண்ணா தான் முதல்ல இருக்கணும்னு நான் நினக்கிறேன்… ஆனா உங்களுக்கு அவன சுத்தமா பிடிக்காது… உங்க விஷயத்த அவன ஒரு மூனா மனுசனா கூட மதிக்க மாட்டீங்க… இப்படி லைஃப்ல எங்களுக்கு சேர்ந்து வாழவே முடியாது… அதனால நாம பிரிஞ்சிடுறது பெட்டர்…” என்றாள் அவளும் உறுதியாக…
“ஏய் அரைஞ்சென்ன பாரு… பொறுமையா சொன்னா ரொம்பதான் ஏறிட்டு போற, நான் ஒரு நாளும் உனக்கு டிவோஸ் தர மாட்டேன், சும்மா என்ன டென்ஷன் படுத்தாதே… நான் சொன்னா சொன்னது தான்…” என்றவன் அவளை முறைத்தபடியே தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு நீந்துவதற்காக கரண் அறைக்குச் சென்றான்…
“சரியான திமிரு… அவன் ஈகோவ விட்டு தர முடியாது… நான் மட்டும் அவனோட பேசணுமா?? அவன் செஞ்சது பிழையே இல்லையாம்… எங்கிருந்துதான் சட்டம் பேசுகிறேனோ” என எரிச்சலாக நினைத்தவள் அவனை கண்டுகொள்ளவில்லை…
அவளும் இங்கே தன்னந்தனியே இருந்து என்னதான் செய்வது சஞ்சனாவின் அறையை நோக்கிச் சென்றாள் …