சஞ்சனாவின் அறைக்கு முன்னால் வந்து நின்ற மகாதேவ் சங்கடமாக அவள் அறைக்கதவை தட்டினான்…
இதுவரை சஞ்சனா தான் அவன் பின்னாலே சுற்றுவளே தவிர அவன் யார் பின்னாடியும் சென்றதில்லை…
சஞ்சனா அறைக் கதவை திறக்க, உள்ளே சென்றவன் அவளை உற்றுப் பார்த்தபடி, “ஏன் நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்க” என்றவன் குரலை செருமியபடி, “நேத்து ஹார்ஷா நடந்துட்டேனா? உனக்கு அன்கன்ஃபர்டர்பல்லா இருந்துச்சா?” என்று கேட்க,
அவளுக்கோ, அவனது இந்தக் கேள்வி உண்மையான அக்கறையா? அல்லது வெறும் நடிப்பா? என்று புரியவில்லை…
“ஐ அம் பைன்” என்றாள் பட்டும் படாமல்…
“ஓஹ் ஓகே… ஆனா ஏன் ஒருமாதிரி இருக்க? ஏதாவது பிரச்சினயா சஞ்சு… டெல் மீ” என்று அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி கேட்க…
“நீ தான்டா என் பிரச்சினையே” என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்ல தேவ்… கொஞ்சம் டயர்டா மட்டும் தான் இருக்கு… தட்ஸ் ஆல்… போட்டிங்க்கு போக டைம் ஆயிடுச்சு… நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்…
“ஓகே” என்றவனுக்கு அவள் தன்னிடம் ஏதோ மறைப்பதாகவே தோன்றியது…
******
இன்றுடன் பசிபிக் சமுத்திரத்துக்கு வந்து மூன்று வாரங்கள் கடந்து விட்டன…
இதுவரை அவர்கள் தேடுவது இன்னும் கிடைக்கவில்லை…
தேடி தேடி கலைத்துப் போய் விட்டனர்… என்னவென்று முடிவெடுக்க முடியாத ஒரு நிலை…
இன்று போட்டிங் கொஞ்சம் தூரம் செல்லலாம் என்று தீர்மானித்திருந்தனர்…
அபின்ஞான் கடல் காற்றை ரசித்துக்கொண்டு விசில் அடித்தபடி கூலாக, படகை ஓட்டிக் கொண்டிருந்தான்…
அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த மகிமா… “நாம எவ்ளோ ஆபத்தான இடத்துல இருக்கோம், நீங்க இப்படி கூலா இருக்கீங்க? உங்களுக்கு பயமே இல்லையா” என்று கேட்க,
அவளைப் பார்த்து சிரித்தவன், “நான் வந்த நோக்கம் நடக்கணும்ன்னா… அதுக்கு பயப்படுறது டென்ஷன் ஆகுறது வேஸ்டான ஒரு விஷயம்… நாம டென்ஷன் ஆகினா எங்களை சுத்தி இருக்கிற இயற்கையே எங்களுக்கு எதிரா சூழ்ச்சி வலை பின்ன சான்ஸ் இருக்கு… கூலா ரிலாக்ஸா இருந்தா எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடலாம்” என்றான் சுற்றியும் தன் கூறான விழிகளால் ஊன்றி கவனித்தபடியே…
“நல்ல பிளேன் தான்” என்ற படி கடலை பார்க்கத் தொடங்கினாள் மகிமா…
மகாதேவ் கேமராவை கடலினுள் அனுப்பி அதை ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருக்க, டச்பேர்ட் திரையைப் பார்த்த ராகவ், “இங்கேயாவது நாம தேட்றது இருக்குமாடா?” என்று கேட்க,
“ம்ஹூம்… இங்க இருக்க வாய்ப்பே இல்ல… நாளைக்கு வந்து வேற இடத்துல தான் தேடணும்… லேட்டாயிடுச்சு நாம இப்ப கிளம்பலாம்” என்று கேமராவை மேலே எடுக்க ராகவ் படகை எடுத்தான்…
கரன் இன்று சென்ற பகுதியோ அதிக ஆழமாக இருந்தது…
இதற்கு மேல் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் கேமராவை பாதுகாப்பாக ஆழமான ஒரு இடத்தை நோக்கி வீசிய கரன் மேலே வரத் தயாரானான்…
சஞ்சனா திரையில் அவனைப் பார்த்தபடி, “இன்னைக்கு உள்ள ரொம்ப டார்க்கா இருக்கு…” என முனு முனுத்தவளது கண்களோ அதிர்ந்து விரிந்தன…
கரனை நோக்கி ஏதோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது… இருட்டில் அது சரியாக விளங்கவில்லை…
“கடவுளே…” என்றவள் அவனுக்கு ஆபத்து சொல்வதற்காக அவள் டச் பேடில் இருந்த பட்டனை அழுத்த… கரன் கையில் இருந்த சிவப்பு நிற சென்சர் லைட்டோ ஒளிரத் தொடங்கியது…
சென்சர் லைட் எரிவதை கண்ட கரன், ஏதாவது ஆபத்தா என்று சுற்றியும் பார்க்க… அவன் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை…
திடீரென நீர் கலங்கலாக மாற சிறிய மீன்களை உள்ளடக்கிய மீன் கூட்டங்கள் அவனை தாண்டிச் சென்றன…
“ஓஹ்… இது தான் வந்திருக்கு” என நினைத்தவன், இதற்கு மேல் இருக்க முடியாது என்று வேகமாக மேல் நோக்கி நீந்த ஆரம்பித்தான்….
அவனை சுற்றி எதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது… ஆனால் என்ன வென்று தான் புரியவில்லை…
கடலின் ஆழ் பகுதியிலிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டுமே…
ஏதேர்ச்சையாக பின்னால் திரும்பி பார்த்தவனது கண்களோ உச்சகட்ட மின்சாரம் தாக்கியது போல் விரிந்து கொண்டன…
அடுத்த கணம் அவன் மூளை வேகமாக செயல்பட அசுர வேகத்தில் நீந்த தொடங்கினான்…
அவனை விட ஐந்து மடங்கு பெரிய சூறா போன்ற ஒரு உயிரினம்… அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது…
உயிர் பயத்தில் அவன் வேகமோ அலாதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவனால் நீந்த முடிய வில்லை….
அவன் உடல் எதிலோ சிக்கி விட்ட உணர்வு…
பின்னால் திரும்பி பார்க்காமலே மேல் நோக்கி செல்ல முயன்று கொண்டிருந்தான் கரன்.
சஞ்சனாவோ தன் கையில் இருந்த வொக்கி டாக்கியை பயன்படுத்தி அபின்ஞானை தொடர்பு கொள்ள அவளுக்கு இருந்த பதற்றத்தில் அதுவோ சரியாக வேலை செய்யவில்லை…
“ஷிட்…” என்றவள், அதன் பட்டன்களை கண்டபடி அமுக்கிப் பார்க்க எதுவும் சரியாக அமைந்து விடவில்லை…
அதை தூக்கி போட்டில் போட்டவள் டச்பேர்டை பார்க்க… கடல் நீரோ தனி சிவப்பு நீராக காட்சியளித்துக் கொண்டிருந்தது…
“ஓ மை காட்” என்றவள் அவசர தேவைக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் கடலில் குதித்தவள், ஆழம் நோக்கி நீந்தத் துவங்கினாள்….
இது அனைத்தும் முப்பது வினாடிகளுக்குள்ளே நடந்து முடிந்து விட்டது…
அபின்ஞான் வாக்கி டாக்கியில் ஏதோ சத்தம் கேட்க அதை எடுத்துப் பார்த்தான்…
யாரோ அவனை தொடர்பு கொள்ள முயன்றிருப்பது புரிந்தது…
சஞ்சனா தான் என்பதை புரிந்து கொண்டவன், அவளை தொடர்பு கொள்ள முயல அந்தப் பக்கத்திலிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை…
அபின்ஞானோ கப்பலை நெருங்கி விட்டிருந்தான்…
படகை வேகமாக திருப்பியவன், மகிமாவை பார்த்து, “தேவ்க்கு பாஸ்ட்டா சஞ்சனாட போட் இருக்க இடத்துக்கு போக சொல்லு” என்றவன் படுவேகமாக அவர்களை நோக்கி செல்ல தொடங்கினான்…
மகிமாவுக்கும் ஏதோ பெரிய பிரச்சினை என்று புரிந்ததால் எந்தக் கேள்வியும் இன்றி வேகமாக தேவுக்கு விஷயத்தை கூறினாள்…
சஞ்சனா நீந்திக்கொண்டு ஆழத்துக்கு செல்லும்போதே… அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தான் கரன்…
சஞ்சனா அவனை அதிர்ந்து பார்க்க… செய்கையால் அவளை மேலே போகும் படி கூறினான்…
அவளும் வேகமாக மேலே நீந்த தொடங்கினாள்…
போட்டில் ஏறியவள் கரன் ஏறுவதற்காக, கையை கொடுக்க அவனால் சரியாக ஏறிக்கொள்ள முடியவில்லை…
அவனை கஷ்டப்பட்டு இழுத்து போட்டில் போட்டவள், அவன் காலை பார்த்ததும், அவள் விழிகளோ கண்ணீர் கொட்ட தொடங்கியது…
செயலிழந்து நின்று விட்டாள் சஞ்சனா…
“குயிக்கா போட்ட எடு” என்று கரன் கூற… சஞ்சனாவோ அசையாமல் நின்று இருந்தாள்…
“அவசரமா எடு… குயிக் சஞ்சு ” என்று அவன் தொண்டை கிளிய கத்தியதுமே போட்டை வேகமாக செலுத்த ஆரம்பித்தாள்…
தன் கண்களில் வலிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்த படியே நடுங்கும் கரங்களை கட்டுப்படுத்திய படி படகை செலுத்திக் கொண்டிருந்தாள்…
எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதே அவளுக்கு மறந்து விட்டது…
அவள் இதயம் வெளியே வந்தது போல் சத்தமாக துடித்துக் கொண்டிருந்தது…
அவள் மேனியோ பதறி நடுங்கிக் கொண்டிருந்தது…
அதேநேரம் சஞ்சனாவை தேடிக் கொண்டிருந்த மகாதேவின் கண்ணிலும் அவர்கள் பட்டுவிட அவனும் வேகமாக இவர்களை நெருங்கினான்…
“சஞ்சனா மரியாதையா சொல்லிட்டேன் நிப்பாட்டாம போடி” என்று கரன் வலியில் மீண்டும் கத்த,
அதற்கு மேல் படகை செலுத்துவதற்கு கொஞ்சமுமே அவள் உடலிலோ மனதிலோ பலமில்லை…
அழுதபடியே போட்டை நிறுத்தி விட்டாள் சஞ்சனா…
கரனது படகுக்கு இரு பக்கமும் அபின்ஞானும் மகாதேவும் தம் படகை நிறுத்தியவர்கள் வேகமாக கரனது படகில் ஏரிக்கொண்டவர்கள், சஞ்சனாவை பார்த்து, ஃபாஸ்ட்டா மகி போட்கு போ” என்று அவளை அனுப்பிய அபின்ஞான், ராகவை பார்த்து, “ஃபாஸ்ட்டா ஷிப்புக்கு போய் மெசேஜ் குடு” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே தேவ் கரனின் படகை ஓட்ட ஆரம்பித்து விட்டான்…
முதலுதவியைப் பெட்டியை எடுத்த அபின்ஞான் கரனின் அருகே அமர்ந்து, அவன் காலைப் பார்த்தான்…
அவனின் தொடை பகுதியில் உள்ளங்கை அளவான ஒரு சதை பகுதி பிளந்து அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது…
கப்பலுக்கு செல்லும் வரை அவனது ரத்தப்போக்கை நிறுத்த வேண்டுமே…
பஞ்சையும்… பெண்டேஜையும் எடுத்தவன், வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை தடுத்து பஞ்சை காயத்தின் மேல் அழுத்தமாக வைத்து பிடித்துக் கொண்டான்….
“ஆஆஆஆ…..” என்று கத்தியவனுக்கோ தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு வலி…
“கொஞ்சம் பொறுத்துக்கோடா போயிடலாம்…” என்ற அபின்ஞானது சமாதான வார்த்தைகள் அவன் காதில் ஏறவில்லை…
அதிகமான ரத்தப்போக்கால் அவனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது…
தன் ரத்தம் பட்ட கையாலே அவன் கன்னத்தை தட்டிய அபின்ஞான், “டேய் என்ன பாரு… தூங்கிடாதே…” என்று பேசிக்கொண்டே, “பாஸ்டா போ தேவ்” என்று கரன் மயங்கி விடாமல் இருக்க அவன் கன்னத்தில் தட்டிய படியே கத்தினான்…
அவர்களது சென்ற வேகத்திற்கு ஐந்து நிமிடங்களிலே கப்பலை அடைந்து விட்டனர்…
ராகவ் சென்று வைத்தியர்களுக்கு அறிவித்திருந்ததால்… கரனின் சிகிச்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன…
நான்கு பக்கமும் விழாமல் மூடப்பட்டு படுக்கை போன்ற ஒன்று மேலிருந்து கீழே தொங்க போடப்பட்டிருந்தது…
அதில் அபின்ஞானும் மகாதேவும் சேர்ந்து கரனை வைக்க… மேலிருந்தவர்கள் சேர்ந்து இழுத்து, அவனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அவனை எடுத்துச் சென்றனர்…
அனைத்து வைத்திய வசதிகளையும் செய்து வைத்திருந்தது இப்பொழுது உதவியாக இருந்தது…
இப்பொழுதுதான் அனைவருக்கும் மூச்சே வந்தது…
ஆசுவாசமாக மூச்சு விட்ட மகாதேவ் சஞ்சனாவை தேடி விழிகளை சூழல விட்டான்…
அவளோ சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
வேகமாக அவள் அருகே சென்றவன், அவள் கையில் இடது முழங்கைக்கு கொஞ்சம் மேலே கிழித்து அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருக்க… அதிர்ந்தவன், “உனக்கும் அடிபட்டு இருக்கு சஞ்சு… பெஸ்ட் எய்ட் எடுக்காம இங்க என்ன பண்ற” என்றபடி அவளை வைத்தியரிடம் அழைத்து சென்றான்…
மருந்திட்டு பிளாஸ்டர் ஒட்டிய வைத்தியர், “ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
கரனுக்கோ அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததால் ரத்தம் தேவைப்பட்டது… வெளிய வந்த வைத்தியர், “ஓ பொசிடிவ் பிளட் வேணும்” என்று கூற அபின்ஞானுக்கோ என்ன செய்வதென்றே விளங்கவில்லை…
இந்த நடுக்கடலில் எங்கே அவன் ரத்தம் தேடி செல்வான்…
அங்கிருந்த மகாதேவ், “நான் மகிமாவ அழைச்சிட்டு வரேன்… அவளும் இதே ப்ளாட் குரூப் தான்” என்றவன் மகிமாவை அழைத்து வர, அவளிடம் இரத்தம் எடுக்கப்பட்டதன் பின் கரனுடைய சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது…
ஐந்து மணித்தியாலங்களாக சத்திர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது…
அவனுக்கான சிகிச்சை முடிந்ததும் வைத்தியர் வெளியே வரவும், அனைவரும் அவரை தான் பார்த்தனர்,
“பதினஞ்சி ஸ்டிசஸ் போட்டிருக்கோம்… நல்லவேளை அவர்ட போர்ன்ஸ்கு எந்த ஒரு டேமேஜ்மே இல்ல… ஒரே ஒரு எலும்பு மட்டும் கொஞ்சம் டேமேஜ் ஆயிருக்கு ஆனா அதை ட்ரீட்மென்ட் மூலம் சரி பண்ணிடலாம்… டோன்ட் ஒரி” என்று படி கரனை பார்க்க சென்றார்…
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர்…
இதுவரை என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
ஆனால் உயிர் போய் திரும்பி வந்தது போல் தான் இருந்தது…
கப்பலில் அபின்ஞான் ஒரு மினி ஐசியு யை கட்டியிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தில் அது மிகவும் உதவியாக அமைந்துவிட்டது.
ஆடம்பரத்தின் உச்சமாக மட்டும் கப்பலை கட்டாமல்… எல்லா வகையான வசதிகளையும் செய்து வைத்திருந்ததால் ஒரு உயிர் தப்பித்துக் கொண்டது…
ஐசியுவுக்கு வெளியே அபின்ஞானும் மகாதேவும் அருகருகே நின்று இருந்தனர்.
அவர்கள் முன்னால் வந்து நின்றாள் சஞ்சனா….
“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்குமே… ரெண்டு பேரும் நல்லா சண்டை போட்டுக்கோங்க… ஏன் இப்ப மட்டும் சேர்ந்து இருக்கீங்க… போங்க போய் தனித் தனியா உங்க வேலைய பாருங்க… உங்க ரெண்டு பேர்ட்ட ஈகோ தான் ஜெயிச்சுடுச்சு… லாஸ்ட் வரைக்கும் நாம பிரிஞ்சு தான் வேல பாத்துட்டு இருக்கோம்… கரனுக்கு ஏதாவது நடந்திருந்தா தான் உங்களுக்கு இன்னும் கொண்டாட்டமா இருந்திருக்கும்… அவன் பேரன்ஸ்க்கு என்ன பதில் சொல்லுவீங்க ரெண்டு பேரும்” என்று இன்றய அதிர்ச்சி வேதனை இது வரை மறைத்திருந்த ரகசியங்களை தன்னை மறந்த நிலையில் ஆவேசமாக கொட்டத் தொடங்கினாள்…