என் தேடலின் முடிவு நீயா – 24

4.9
(35)

தேடல் 24

சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட மகாதேவ், “என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற… என்ன பேச்செல்லாம் பேசுற” பாய்ந்து கொண்டே அவள் அருகே வர அவளோ ஆசையாமல் நின்று இருந்தாள்…

“சஞ்சனா இப்ப நீ சொல்றத கேக்குற மூட் இல்ல, ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு நானே மனசு உடைஞ்சி போய் இருக்கேன்” என்றான் அபின்ஞான்…

“ஓஹோ நான் வாயால சொன்னதே உங்களால தாங்க முடியல…. ஜஸ்ட் ஒரு செகண்ட் மிஸ் ஆகி இருந்தா அவன் உயிரே போய் இருக்கும்… இன்னக்கி நடந்த இந்த விஷயத்துக்கும் கரன் இப்படி படுத்திருக்கவும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் முழுப் பொறுப்பு… நானும் பார்த்துட்டே இருக்கேன்… இங்க வந்ததிலிருந்து அடிச்சிட்டு சாவுறீங்க…. நீங்க போட்ற சண்ட… உங்க பழிவெரி… வன்மத்தால ரெண்டு பேருக்கும் என்ன கிடைச்சிச்சு… லாஸ்ட்க்கு என்னத்த கொண்டு போகப் போறீங்க ரெண்டு பேரும்…

சொல்லுங்க அத்தான் நீங்களா இந்த இடத்த கண்டுபிடிச்சீங்க? இல்லயே…

நீயும் சொல்லு தேவ்… நீ மட்டுமா இருந்து இந்த இடத்தை கண்டுபிடிச்ச… அதுவும் இல்லையே…

நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து தான் இந்த இடத்தை கண்டுபிடிச்சோம்…

‘மகான்ஞான்’ நம்ம யுனிவர்சிட்டியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்…

அது என்னமோ நீங்க ரெண்டு பேரும் தான் தனித்தனியா இருந்து கண்டுபிடிச்ச மாதிரி… அடிச்சுட்டு சாவ பாக்குறீங்க…

நம்ம அஞ்சு பேரும் சேர்ந்து தானே பண்ணோம்…

அதுக்கு பேர் கூட உங்க ரெண்டு பேர்ட பேர சேர்த்து தானே நாம வெச்சோம்…

 மகாதேவ் பேர்ல முதல் பகுதி “மகா”வும் அபின்ஞான் பேர்ல கடைசிப் பகுதி”ன்ஞான்” னும் சேர்த்து தான் மகான்ஞான்னு நம்ம ப்ராஜெக்ட்க்கு பேர் வெச்சோம்… ஆனா அந்த பேர உங்களுக்கு வெளிய சொல்ல அவமானம்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச ப்ரொஜெக்ட்ன்னு சொல்ல உங்க ஈகோ தடுக்குது… ஆனா தனியா கண்டுபிடிச்ச மாதிரி பெருசா பேச வந்திருவீங்க… அன்னக்கி நாம சேர்ந்து செஞ்ச ப்ராஜெக்ட ஏன் இப்ப நம்ம எல்லாரும் சேர்ந்து இத கண்டுபிடிக்க முடியாது?”

அத்தான் தேவ் வ பழிவாங்க என்னென்னமோ செய்றான்…

தேவ் நீ அத்தான பழிவாங்க என்னென்னமோ செய்றான்…

கடைசில உங்க ரெண்டு பேருக்கும் சப்போர்ட்டா உங்க கூட இருந்த நாங்க தான் பாதிக்கப்பட்றோம்…

ஏன் இன்னும் ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்க… நல்லா சண்டை போடுங்க” என்றவள் இருவரையும் முறைத்தபடியே தன் அறையை நோக்கிச் சென்றாள்…

இக்கதையை அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த மகிமா… சஞ்சனாவின் பின்னாலே சென்றாள் …

சஞ்சனா அறைக்குள் வந்ததும் அவள் கையைப் பற்றிக் கொண்ட மகிமா,

“என்ன சொல்ற சஞ்சு… நீங்க எல்லாரும் ஒரே யுனிவர்சிட்டியா” என்று எதையும் இணைத்துப் பார்க்க முடியாமல் கேட்க…

“இல்ல… ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்…” என்று கூறியவளை அதிர்ந்து பார்த்தாள் மகிமா…

இந்தக் கதை அவளுக்கு புதிதல்லவா…

ஆம்… அபின்ஞான், மகாதேவ், சஞ்சனா, ஒரே பாடசாலையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒரே வகுப்பையும் சேர்ந்தவர்கள் தான்…

சிறுவயதிலிருந்தே நெருங்கிய

நண்பர்கள் தான் அபின்ஞானும் மகாதேவும்…

எப்போதுமே நகமும் சதையும் போலவே ஒட்டிக்கொண்டே திரிவர்…

அடுத்த வீட்டில் மாங்காய் திருடுவதில் இருந்து, வகுப்பை கட் பண்ணி விட்டு வெளியே சுத்த செல்வது வரை இருவரும் ஒன்றாகவே செய்வர்…

இருவருக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் பெண்கள் விஷயம் மட்டும் தான்…

சிறு வயதிலிருந்தே எல்லா பெண்களோடும் மகாதேவ் நன்றாக சிரித்து சிரித்து பேசியே மயக்கி விடுவான்.

 அவன் மேல் காதல் வயப்பட்ட பெண்களில் சஞ்சனாவும் ஒருத்தி…

 அதுவும் பத்தாம் வகுப்பிலேயே…

 அபின்ஞானோ பெண்கள் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான்…

 அது மட்டும் தான் இருவருக்குள்ளும் இருக்கும் வித்தியாசம்…

படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்று விடுவார்…

போட்டி மட்டுமே இருக்குமே தவிர பொறாமை இருக்காது இவரிடமும்…

இருவரும் சேர்ந்தால் அவர்களை யாராலும் தோற்கடிக்கவே முடியாது…

இவர்களது இந்த ஆழமான நட்போ அவர்கள் பத்தாம் வகுப்பு வரை தான் தொடர்ந்தது…

அவர்களது பத்தாம் வகுப்பு முடியும் தருவாயில் சயின்ஸ் டீச்சருக்கு அபின்ஞான் பெயரில் ஒரு காதல் கடிதம் சென்றது…

அபின்ஞானுக்கோ இந்த செய்தி அதிர்ச்சி…

 உடனே மகாதேவை தேடித்தான் சென்றான்…

அவனுக்கு அல்லவா சயின்ஸ் டீச்சரை ரொம்ப பிடிக்கும்…

தேவ் அருகே சென்றவன், “எதுக்குடா சயின்ஸ் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்த” என்று அவன் ஷர்ட் காலரை பற்றிய படி கேட்க,

 உனக்கென்ன பைத்தியமா அபி… நான் எதுக்கு அவங்களுக்கு லெட்டர் கொடுக்கணும், நீ கொடுத்துட்டு உன் தப்ப என் மேல போடாதே” என்றான் தேவ்…

“என்னடா நீ செஞ்சுட்டு என்ன மாட்டிவிட பாக்குறியா? உனக்கு அவங்களை பிடிக்கும்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா…” என்றான் கோபத்தில்…

“அபி சும்மா சும்மா உன் தப்ப தூக்கி என் மேல போடாதே” என்றான் தேவ் உருமளாக…

“நான் உன்னை நம்பினேன் டா… ஆனா நீ எனக்கு என்ன நல்லா ஏமாத்திட்ட… நம்பிக்க துரோகிடா நீ… இனி என்னோட பேசாதே…” என்ற அபின்ஞான் அங்கிருந்து சென்றான்…

தேவ் அவனையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் இந்த கடிதத்தை அபின்ஞான் எழுதினானா? மகாதேவ் எழுதினானா? என்பது இன்றும் தெரியாத விடயமாகவே இருக்கின்றது.

அடுத்த நாளே அபின்ஞானது பெற்றோரை அதிபர் அழைத்திருந்தார்…

வீட்டுக்கு சென்றதுமே அவனது அப்பா அவனை வெளுத்து கட்டி விட்டார்…

 அதன் பிறகு அவனை ஆசிரியர்களும் பெரிதாக மதிக்கவே இல்லை…

ஆரம்பத்தில் நன்றாக பேசியவர்கள் தலைமை பொறுப்புகளை வழங்கியவர்கள் இப்போது அவனை ஒதுக்கி வைக்கும் பொழுது அவமானமாக உணர்ந்தான் அபின்ஞான்.

 மாணவர்கள் கூட அவனை அவமானப்படுத்துவதற்காக இதே கதையை கூறிக் கொண்டிருக்க, அபின்ஞானால் அதற்கு மேல் அந்த பாடசாலையில் இருக்க முடியவில்லை….

அந்த கோபம் எல்லாம் சேர்ந்து தேவ் மேல் ஒரு வெறுப்பையும் வன்மத்தையும் பலிவெறியையும் அவனுக்குள் உருவாக்கி இருந்தது…

அபின்ஞான், மகாதேவ் இருவருமே பாடசாலை மாறி சென்று விட்டனர்…

அதற்குப் பிறகு அவர்கள் சந்தித்துக் கொண்டது என்னவோ பல்கலைக்கழகத்தில் தான்…

அங்கே மகாதேவின் உற்ற நண்பனாக ராகவ் இருந்தான்…

 அபின்ஞானின் நண்பன் தான் கரன்…

மூவரும் திரும்ப ஒன்றாக சந்தித்ததில் சஞ்சனாவுக்கு தான் மகிழ்ச்சி தாங்கவில்லை….

 அவள் அல்லவா மீண்டும் தேவை எப்போது சந்திப்போம் என்று காத்துக் கொண்டிருந்தாள்…

தொல்பொரு ஆய்வு (Archaeology) கற்கையே அபின்ஞான் மற்றும் மகாதேவும் படித்துக் கொண்டிருக்க மகாதேவை தொடர்ந்து பார்ப்பதற்காகவே சஞ்சனாவும் அத் துறையையே தெரிவு செய்தாள்…

ஆனால் அங்கேயும் இருவருக்குள்ளும் போட்டியும் சண்டையுமாகவுமே நாட்கள் நகர்ந்தன…

எல்லா விளையாட்டுளையும் எதிரெதிர் அணியாவே இருப்பார்கள்…

போட்டி ஒழுங்காக நடைபெற்று முடியுதோ இல்லையோ இருவரும் இடையிலே அடிதடியில் இறங்கி விடுவர்…

அவர்கள் சண்டையை விலக்கி விலக்கி கரணுக்கும் ராகவுக்கும் தான் வெறுத்துப் போய்விடும்…

ஒரு நாள் சஞ்சனா அவள் பேரையும் தேவ பேரையும் இணைத்து பிலேம்ஸ் போட்டு பார்க்க அதை அபின்ஞான் கண்டுவிட்டான்…

 அவள் அம்மா மீனாட்சியடமும் கூறி விட்டான்…

அன்றைய நாளை அவளாள் மறக்கவே முடியாது… மீனாட்சி விளக்குமாரை எடுத்து அவளை அடி வெளுத்து விட்டார்…

அதிலிருந்து தேவ் பக்கத்துல நிற்கக் கூட விடமாட்டான் அபின்ஞான்…

ஆனால் அவர்களை சேர்த்து வைப்பது போல் யூனிவர்சிட்டியில் ஒரு ப்ரொஜெக்டை செய்வதற்காக அபின்ஞான், மகாதேவ், சஞ்சனா, ராகவ் மற்றும் கரனை ஒரே அணியில் போட்டு விட்டனர்…

அபின்ஞான் மற்றும் மகாதேவின் சண்டைகளுக்கு மத்தியில் அந்த ப்ராஜெக்ட் செய்யப் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும்….

 அபின்ஞான் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிராகவே மகாதேவ் செய்வான்…

தேவ் கருத்தை சொன்னால் அதற்கு எதிராகவே அபின்ஞான் செய்வான்…

இருவரும் எந்த ஒரு விடயத்திலும் ஒத்துப் போகவே மாட்டார்கள்…

ஆரம்பத்தில் இருந்த ஆழமான நட்பு, இப்பொழுது அதைவிட பல மடங்கு வெறுப்பாக மாறி இருந்தது இருவருக்குள்ளும்…

அவர்கள் என்ன ப்ரொஜெக்ட் செய்வதென்றோ, ப்ரொஜெக்டுக்கான ஒரு தலைப்பை பற்றியோ அவர்கள் எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை…

 கடைசியில் என்னென்னதோ பேசி எப்படியோ இருவரும் ஒரு ப்ரொஜெக்டை செய்ய ஒத்துக் கொண்டார்கள்…

இருவரும் சம்மதித்ததும் தான் குழுவினருக்கோ மூச்சே வந்தது… ஒரு தலைப்பை தெரிவு செய்யவே மாதக்கணக்கில் இழுத்து விட்டனர் இருவரும்…

ஆனால் அவர்கள் செய்த ப்ரொஜெக்டோ யூனிவர்சிட்டியில் அவர்கள் எதிர்பார்க்காமலே மிகச் சிறந்த ஒரு செயற்திட்டமாக அமைந்துவிட்டது…

 ஆனால் ஈகோவில் ஊறிப் போய் இருக்கும் இருவருக்கும் அது தாங்கள் இருவரும் சேர்ந்து செய்த ப்ராஜெக்ட் என்று வெளியே சொல்லிக் கொள்வதற்கோ அவமானம்…

அது தங்கள் ப்ராஜெக்ட் என்பதை முழுதாக மறைத்து விட்டனர் இருவரும்…

அவர்கள் செய்த ப்ராஜெக்ட் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆக்கிரமித்து இருந்த காலங்களில் இம் நாட்டிலிருந்து பெருமதி வாய்ந்த ரத்தின கற்களை சூறையாடிக் கொண்டு போயிருக்கின்றனர்…

ஆனால் அவர்கள் நாட்டை அடைவதற்கு முன்பே பசிபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியில் அவர்களது கப்பல் மூழ்கி விட்டது…

அக்கப்பலிலோ ரொம்ப பெருமதி வாய்ந்த விலை மதிக்க முடியாத ரத்தினங்களும்… மாணிக்கங்களும் நவ ரத்தினங்களும் அதில் இருந்ததாக சொல்லப்படுகிறது…

இதுவரை அந்த இடத்தை யாருமே கண்டுபிடிக்க வில்லை… அது சம்பந்தமாக தான் அவர்களது ப்ரொஜெக்ட் இருந்தது…

 பல்கலைக்கழகம் முடிந்தது விட அனைவரும் பிரிந்து விட்டனர்…

 சஞ்சனாவும் கரனும் அபிஞ்ஞானது கம்பெனியிலே வேலைக்கு சேர, ராகவ் மகாதேவனது கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்து கொண்டான்…

 ஆனால் இன்று எதிர்பாராமல் பல்கலைக்கழகத்தில் எந்த ப்ராஜெக்ட் செய்தார்களோ அதை இப்பொழுது தேடுவதற்காகத்தான் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்…

 ஆனால் அன்று ஒன்றாக செய்ததை இன்று இருவரும் பிரிந்து தனித்தனியாக செய்வதற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சஞ்சனா சொன்னதை மகிமா அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தாள்…

“அப்போ நீங்க பண்ணின ப்ராஜெக்ட தான் நான் இப்போ ரிசர்ச் பண்ணிட்டு இருக்கேன்… அந்த எக்ஸ் த்ரீ பொக்ஸ (X3 box) தான் நானும் தேடிட்டு இருக்கேன்” என்ற மகிமா, “உங்க அத்தானோ… என் அண்ணனோ என்கிட்ட ஒரு வார்த்தை சரி சொல்லல… அவங்க ரெண்டு பேருக்குமே நானும் மகான்ஞான் ப்ரொஜெக்ட்டை தான் ரிசேர்ச் பன்றேன்னு நல்லவே தெரியும்… படுப்பாவி பயலுங்க… என் கிட்ட ஒரு வார்த்த சொல்லல” என்று கோபமாக கூறினாள்.

“அவனுங்க ஒரே ஸ்கூல், ஒரே யுனிவர்சிட்டின்னு சொல்லிக்கவே விருப்பப்பட மாட்டானுங்க… இதுல அவனுங்க ஒரே ப்ராஜெக்ட் செஞ்சன்னு சொல்லிக்கவா போறானுங்க… சரியான திமிரு புடிச்சவனுங்க… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ப்ரொஜெக்ட செஞ்சோம்ன்னு சொல்றதுக்கு அவனுங்க ஈகோ விடுமா? என்று கேட்டாள் சஞ்சனா.

“ம்ம் அது சரிதான்” என்று சொல்லிக் கொண்ட மகிமா, இப்போதுதான் சஞ்சனா சொன்ன கதையை மீண்டும் யோசித்தவள் வாயில் கையை வைத்த படி சஞ்சனாவை அதிர்ந்து பார்த்தவள், “அடிப்பாவி… பிசினஸ் மீட்டிங்ல ஆரம்பிச்ச லவ்ன்னு அன்னைக்கு என்னமா பொய் பொய்யா கத சொல்லி வச்ச… டென்த்லயே ஆரம்பிச்ச லவ்வா? அப்ப நீ இன்னைக்கு வரைக்கும் முதிர் கன்னியா இருக்க இதுதான் காரணமா ஏண்டி…?” என்றாள் வடிவேல் பாணியில் கேட்க…

“நான் இத சொன்னா உன் அருமை புருஷன்னும் உன் நொண்ணனும் என்ன தின்னு போடுவானுங்க” என்றாள்…

“ம்ம் அதுவும் சரி தான்…இனி என்ன பண்ணுறானுங்கன்னு பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே மகிமாவும் சஞ்சனாவும் தத்தம் அறைக்குச் சென்றனர்…

மகிமா அறைக்குல் செல்லும்போதே அபின்ஞான் படுத்துக்கொண்டு இருந்தான்…

அவனுடன் பழகிய நாட்களில் அவன் சோர்வாக இருந்ததை அவள் பார்த்ததே இல்லை…

குளித்து தன் உடையை மாற்றி வந்தவள், அமைதியாக அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்கொள்ள… அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான் அபின்ஞான்…

இருவருக்கும் நீண்ட நேர அமைதி…

அவர்களில் பேசாத மௌனத்துக்குள் ஆயிரம் விடயங்கள் ஒளிந்து இருந்தன…

“மகி… நான் தப்பு பண்ணி இருப்பேன்னு நீயும் நினக்கிறியா?” என்று அவனே ஆரம்பித்தான்…

அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் அணைப்புக்குள் இருந்தபடியே, “அபி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… எனக்கு நீங்க ரெண்டு பேருமே இந்த வேலய பண்ணிருக்க மாட்டீங்கான்னு தோணுது” என்று மகிமா தயங்கியபடி சொல்ல,

அவளை சட்டென தன் மேல் இருந்து தள்ளிவிட்ட படி எழுந்து அமர்ந்தான் அபின்ஞான்…

அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்…

“அந்த நம்பிக்கை துரோகிய எப்பிடி நம்ப சொல்ற… ஸ்கூல்ல எவ்வளவு அவமானப்பட்டேன் தெரியுமா? டீச்சர்ஸ் எல்லாம் என்ன பொம்பள பொறுக்கி மாதிரி பார்த்தாங்க… பசங்க என்ன அப்படி கேலி பண்ணாங்க… எல்லாரும் என்ன தலை மேல தூக்கி வெச்சு கொண்டாடிட்டு திடீர்னு எல்லாரும் கால்ல போட்டு மிதிச்சா எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு… இது எல்லாத்துக்கும் காரணம் உன் அண்ணா தான்… தேவுக்கு தான் சாயின்ஸ் டீச்சர ரொம்ப பிடிக்கும்… அவன் பண்ணிட்டு என்ன மாட்டி விட்டுட்டான்… பொறுக்கி” என்று அவனுக்கு திட்ட,

அவனை நெருங்கிய அமர்ந்து, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “அபி எனக்கு உங்க வேதன புரியுது, லைஃப்ல மறக்க முடியாத ஒரு அவமானம் தான்… ஆனா நீங்க அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்று அவள் கூற…

அவளை புரியாது பார்த்தான் அபின்ஞான்…

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அண்ணாவும் லெட்டர் போடலன்னு அவ்ளோ உறுதியா அடிச்சு சொல்றான்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்து விலகப் பார்க்க… இன்னும் அவனை இறுக்கியணைத்துக் கொண்டவள், “சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றவள்,

 “நீங்க ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை தான் சொல்றீங்க… நான் உங்க ரெண்டு பேர் பக்கமும் இல்லாம நடுவுல இருந்து யோசிச்சு பார்க்க கிட்ட… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த வேற யாரோ இத பண்ணி இருந்தா என்ன செய்வீங்க? எதுக்கும் அண்ணா கிட்ட நேரடியா போய் கேட்டுப் பார்க்கலாமே” என்று மகிமா கெஞ்சுதலாக கேட்க….

அபின்ஞானின் புருவங்களும் யோசனையாக சுருங்கின…

அவன் மனம் மாறுவதற்கு முன்பே, “வாங்களேன் போய் பேசிப் பார்க்கலாம்” என்று அவன் கைபிடித்து இழுக்க… அவனுக்கும் அது சரி என்று படவே அமைதியாகவே அவளுடன் சென்றான்…

எல்லோரும் கரன் அறையில் தான் இருந்தனர்…

சஞ்சனா வெளியே நின்று இருக்க, அவளை அழுத்தமாக பார்த்த அபின்ஞான்… மகிமாவை பார்த்து, “உனக்காக மட்டும் தான் தேவோட பேச வரேன்” என்று அப்போதும் தன் ஈகோவை விட்டு கொடுக்காமல் கரன் அறைக்குள் நுழைந்தான்…

“இவன் பட்டும் திருந்தலல்ல…” என்று மகிமாவை பார்த்து சஞ்சனா சொல்ல…

“இவனுங்க எல்லாம் திருந்தாத ஜென்மம்…” என்ற மகிமாவும் சஞ்சனாவுடன் சேர்ந்து, “இனி என்ன நடக்குமோ” என்ற பயத்திலே உள்ளே நுழைந்தாள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!