“நானே இறங்கி வந்து பேசுனதும் ரொம்ப தான் சீன் போடுறா” என்று உள்ளுக்குள் அவளை திட்டியவள்.
“சும்மா டைம்னா போட வேணாம் இனியாள். ஆனா, இப்போ நாம இங்க சுத்தி பாக்குறதுக்காக வந்து இருக்கோம். இப்ப போய் இப்படி தலை வலிக்குதுன்னு என்ஜாய் பண்ணாம வேஸ்ட் பண்ண போறியா.. இது நார்மல் டேப்லெட் தான் எப்போ தலைவலி வந்தாலும் நாங்க இதுதான் யூஸ் பண்ணுவோம். இதுல ஒன்னு போட்டாலே போதும் சட்டுனு தலைவலி சரியாகிவிடும் நீ வேணும்னா ட்ரை பண்ணி பாரு” என்று எது எதுவோ பேசி அவளை அந்த மாத்திரையை உட்கொள்ள வைத்து விட்டாள்.
அவளும் தலைவலிக்கான மாத்திரை தானே என்ற எண்ணத்தோடு அதை விழுங்கி இருக்க அதுவோ தூக்க மாத்திரை..
1 மாத்திரை உட்கொண்டால் வேலை செய்யுமோ செய்யாதோ என்ற சந்தேகத்தில் மேலும் 1 மாத்திரையை அவள் குடிக்கும் ஜுஸிலும் கலந்து கொடுத்துவிட்டாள்.
கொஞ்ச நேரத்திலேயே அவளால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தூக்கம் வந்தது.
அன்று இரவு அவர்கள் இந்த ரெசார்ட்டில் தான் தங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, தங்களுக்கான அறையின் சாவியை வாங்கிக்கொண்டு அனிதா அவளை அழைத்து சென்றவள் அறைக்குள் அவளை படுக்க வைத்தாள்.
படுத்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும். அடுத்த நொடியே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள்.
அனிதா சற்று நேரம் அவள் அருகில் அமர்ந்து பார்த்தவள். அவள் இப்போதைக்கு எழுவதாக தெரியவில்லை என்றதும் கதவை சாற்றிவிட்டு மற்ற தோழிகளுடன் சேர்ந்து அவ்விடத்தை சுற்றி பார்க்க கிளம்பி விட்டாள்.
மதன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியையும் அவள் பார்க்கவில்லை.
அவள் ரூமிற்கு சென்று உறங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆஷா மதன் தன் அக்காவிடம் செல்பேசியில் கூறியிருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.
அந்த இடமே அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது.
சுற்றிலும் பலூன்கள் வீற்றிருக்க..
சிவப்பு வண்ண ரோஜா பூவினாலேயே இதயம் போல் வடிவமைக்க பட்டு இருந்தது.
வெள்ளை நிறத்தில் இரண்டு சார்களும் ஒரு டேபிளும் வீற்றிருக்க. அந்த டேபிளின் மேலும் பெரிய மெழுகுவத்தியும் ரோஜா பூவினால் ஆன அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அதை பார்க்கவே ஆஷாவிற்கு அத்தனை அழகாக தெரிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை சுற்றிலும் இருள் கவ்வ தொடங்கிவிட்டது. ஆஷா அவ்விடத்தை வந்து அடைந்ததுமே அங்கே போடப்பட்டிருந்த டேபிளின் அருகே வண்ண நிறங்களால் புகைகள் தோன்ற..
வெள்ளை நிற சட்டையும், ஜீன் பேண்ட்டும் அணிந்த வண்ணம் தன் கையில் சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தை ஏந்தியவாறு அவளை நோக்கி நடந்து வந்தான் மதன்.
தூரத்திலிருந்து பார்த்தவனுக்கு சரி வர ஆஷாவின் முகம் தெரியவில்லை. சற்று அருகில் வந்தவனிற்கு வந்திருப்பது இனியாள் அல்ல ஆஷா என்ற நிதர்சனம் உரைக்க அப்படியே நின்று விட்டான்.
அவன் அருகில் அவள் காதல் வழிந்தோடும் விழிகளோடு நடந்து வரவும்.
அவளை அதிர்ந்து போய் பார்த்த மதன், “ஆஷா நீ எங்க இங்க?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
அது அவளுக்கு சுர்ரென்று கோபத்தை உண்டு செய்ய, “ஏன் வேற யார் வருவாங்கன்னு எதிர்பார்த்தீங்க?” என்றாள் பதிலுக்கு.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம் நீ எதுக்கு இங்க வந்த ரெசார்ட்டுக்கு போ” என்று சற்று கண்டிப்பான குரலில் தான் கூறினான்.
“மதன் ஐ லவ் யூ”.
“வாட்! உனக்கு என்ன பைத்தியமா ஆஷா.. நான் உன்னோட ப்ரொபசர் அதை மறந்துடாத”.
“ஓ! அப்போ ஸ்டுடென்டை நீங்க லவ் பண்ண மாட்டீங்களா என்ன..” என்று ஏளன பார்வையோடு நக்கல் வழிந்தோடும் குரலில் அவள் கேட்கவும்.
மதனுக்கு அவளின் கேள்வியில் ஒரு மாதிரியாகிவிட்டது.
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்”.
“இங்க பாருங்க மதன் நான் உங்களை எப்போ முதல்ல பார்த்தேனோ அப்போதிலிருந்தே உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். எனக்கு எல்லா விஷயமும் தெரியும்.. நீங்க இனியாளுக்கு ப்ரொபோஸ் பண்றதுக்காக தானே இந்த அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணி இருக்கீங்க”.
அவளின் வார்த்தைகள் மதனுக்கு பெரும் அதிர்ச்சியை வாரி வழங்கியது. யாரிடமும் அவன் கூறவில்லையே.. எப்படி இவளுக்கு தெரிந்தது. ஒருவேளை, தான் இங்கே இனியாளை வர கூறியதை அவள் இவளிடம் கூறியிருப்பாளோ..
இல்லை, இல்லை.. அப்படியே கூறியிருந்தாலும் நான் என் காதலை கூற தான் அவளை இங்கே வர சொன்னேன் என்பது அவளுக்கே தெரியாதே என்று சிந்தித்தவாறு நின்று இருக்க.
“ரொம்ப யோசிக்காதீங்க.. நீங்க இனியாளை லவ் பண்ற விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும். நீங்க உங்க சிஸ்டர் கிட்ட போன்ல பேசுனதை நான் கேட்டேன்”.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. இனியாள் எங்க.. தேவையில்லாத வேலை பாக்குற ஆஷா நீ.. எல்லா விஷயமும் தெரிஞ்சு என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணுறியே.. நான் எப்படி உன்னுடைய லவ்வை அக்சப்ட் பண்ணுவேன்னு நினைக்கிற”.
“வாட்! அப்படியே இருந்தாலும் கண்டிப்பா நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்”.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. நான் உண்மையா உங்களை காதலிக்கிறேன். இனியாள் மேல நீங்க வச்சிருக்க காதலை விட என்னோட காதல் பல மடங்கு உண்மையானது”.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! இந்த டாபிக்கை பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண கூட எனக்கு விருப்பமில்லை. இதுவரைக்கும் நான் உன்னை அப்படி பார்த்ததும் இல்லை.. எனக்கென்னமோ உன்கிட்ட இதை பத்தி எல்லாம் பேசவே ஒரு மாதிரி இருக்கு. திரும்ப என்கிட்ட இந்த டாபிக்கோட வந்து நிக்காத. இது எல்லாத்தையும் இப்பவே மறந்துடு” என்றவாறு அவன் ரெசார்டை நோக்கி நடக்க முற்படவும்.
“ஒரு நிமிஷம்” என்ற ஆஷாவின் வார்த்தைகள் அவனை அதற்கு மேல் முன்னேற விடாமல் தடுத்தது.
நின்ற இடத்திலேயே திரும்பி அவளை ‘என்ன’ என்பது போல் அவன் ஒரு பார்வை பார்க்கவும்.
“எங்க போறீங்க இனியாளை பாக்கவா.. இனியாள் தூங்கிகிட்டு இருக்கா.. இதோட மேடம் காலையில் தான் எழுந்திரிப்பாங்க. நீங்க என்ன தான் அவ பக்கத்துல போய் உங்க காதலை சொல்லி அழுது புலம்பினாலும் அவ எழுந்திரிக்க மாட்டா”.
“ஏன்?” என்றவன் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி அவளை சந்தேகமாக பார்க்கவும்.
“நான் தான் அவளுக்கு தூக்க மாத்திரையை கொடுத்து தூங்க வச்சுட்டு வந்தேன்”.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ.. இதெல்லாம் உனக்கு பைத்தியக்காரத்தனமா தெரியலையா.. பாவம் அவ ஏன் இப்படி எல்லாம் பண்ற”.
“ஏன்னா எனக்கு நீங்க வேணும். என்னால யாருக்காகவும் உங்களை விட்டுக் கொடுக்க முடியாது. அதுவும் அவளுக்காக நிச்சயமா விட்டுக் கொடுக்க முடியாது. என்னோட காதல் உண்மையானது.. நான் கொடுத்தது தூக்க மாத்திரை மட்டும் தான். அதனால் அவ உயிருக்கு எந்த பிரச்சனையும் வராது பயப்படாதீங்க.. இன்னைக்கு எப்படியாவது என் மனசுல இருக்கிறதை உங்க கிட்ட சொல்லனும்னு தான் நான் இப்படி எல்லாம் பண்ணேன். அது ஏன் மதன் உங்களுக்கு புரியவே மாட்டேங்குது” என்று கலங்கிய விழிகளோடு அவள் கேட்கவும்.
அவளை முறைத்துப் பார்த்த மதன், “நீ பண்றது எல்லாம் பாத்தா லவ் ப்ரொபோசல் மாதிரியே இல்லை. யாரையும் வற்புறுத்தி காதலிக்க வைக்க முடியாது. அதெல்லாம் தானா வரணும்.. உனக்கு வேணும்னா என் மேல வந்திருக்கலாம். ஆனால் எனக்கு உன் மேல வரல” என்று அவளை பார்த்து அழுத்தமாக கூறியவன்.
“இனிமேலும் வராது!” என்று விட்டு விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி விட்டான்.
எத்தனை ஏற்பாடுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் அவ்விடத்திற்கு சென்றான்.
இப்பொழுது பெரும் ஏமாற்றத்தோடு அங்கிருந்து செல்கிறான்.
ஆஷாவின் செயலில் இன்னமுமே அவனுக்கு மனம் ஆறவில்லை. அதிலும், தனக்காக அவள் இனியாளுக்கு இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறாள் என்று எண்ணும் பொழுது இவனின் காதல் கொண்ட மனம் குற்ற உணர்ச்சியில் மறுகியது.
அவளின் வாழ்க்கையே தன்னால் தான் திசை மாறப் போகிறது என்பதை அறியாமலே மதன் பெரும் குற்ற உணர்ச்சியாக உணர்கிறான்.
தன் அறைக்குள் வந்தவனிற்கு நிலை கொள்ளவே முடியவில்லை. ஒருமுறை இனியாளை பார்த்துவிட்டு வந்தால் தான் தன் மனம் லேசாகும் என்பதை உணர்ந்தவன் மெதுவாக எழுந்து இனியாளின் அறை நோக்கி நடந்தான்.
அவனுக்குமே சற்று தயக்கமாக தான் இருந்தது. இதுவரை அவளிடம் தன் காதலை கூட உரைக்கவில்லை.
இரவாகிவிட்டது.. இந்நேரத்தில் அவளின் அறை கதவை தட்ட சற்று சங்கடமாகவும் இருந்தது.
ஆனாலுமே, ஆஷாவின் செயலால் இவனுக்குள் குற்ற உணர்ச்சி மலையளவு எழுந்து நிற்க. வேறு வழியில்லாமல் அவளின் அறை கதவையும் தட்டி விட்டான். வெகு நேரம் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான். எந்த ஒரு பதிலும் வரவில்லை.
பொறுத்து பார்த்தவன் அவள் அவளின் தோழி அனிதாவுடன் உறங்கி விட்டாள் என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பி விட்டான்.
ஆனால் அவன் அறியாத உண்மை என்னவென்றால் அறைக்குள் அனிதா இருந்திருக்கவில்லை.
பாரி வேந்தன் தான் இனியாளுக்கு கலவி பாடம் கற்பித்து கொண்டு இருந்தான்.
ஆம், அன்றைய கான்பரன்ஸ் இனிதே நிறைவடைந்து. இரவு உணவை உண்டு முடித்த பாரிவேந்தன் கை கழுவ செல்லவும். தன் கையில் 2 ஜூஸ் கிளாஸ் உடன் அவ்விடம் வந்த அரவிந்த் தான் ஒன்றை குடித்துக் கொண்டே பாரி வேந்தனிடம் சகஜமாக பேசி சிரித்தவாறு அவனை நோக்கி ஒன்றை நீட்டினான்.
பேச்சுவாக்கில் அவன் நீட்டிய ஜூஸை தன்னை அறியாமலே குடித்து முடித்தான் பாரிவேந்தன்.
சற்று நேரத்தில் அவனின் உடலில் ஏதேதோ மாற்றங்கள்.. அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை.