என் பிழை நீ – 24

4.7
(25)

பிழை – 24

அரவிந்த் கொடுத்த ஜூசை குடித்தவனுக்கு சற்று நேரத்தில் ஹார்மோன்கள் பேய் ஆட்டம் போட தொடங்கியது.

தன்னை அடக்க வழி தெரியாமல் பரிதவித்து போய் படபடப்பாக நின்றிருந்தான் பாரிவேந்தன்.

“என்னாச்சு பாரி எனி ப்ராப்ளம்?”.

“என்னனு தெரியல அரவிந்த்.. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்” என்றவன் அழுத்தமாக தலையை கோதிவிட்டுக் கொண்டு தன் முகத்தை குளிர் நீரில் அடித்து கழுவினான்.

அவனுக்குள் அப்படி ஒரு உணர்ச்சி பெருக்கு..

இதுவரை இப்படி ஒரு சூழலை அவன் சந்தித்ததே கிடையாது. தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணத்தை புரியாமல் அதை எப்படி கையாள்வது என்றும் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

அவன் குடித்தது ஒன்றும் சாதாரண பழச்சாறு அல்லவே..

அரவிந்த்தின்‌ கை வண்ணத்தால் உருவாக்கப்பட்ட வயாகரா மாத்திரை கலக்கப்பட்ட பழச்சாறு.

அவனின் நிலையை கண்ட அரவிந்தின் இதழிலோ யாரும் அறியா வண்ணம் வன்ம புன்னகை படர்ந்தது.

“இட்ஸ் ஓகே டா சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்காம இருக்கும். வா கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு” என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு இனியாளின் அறைக்கு வந்தான்.

ஏற்கனவே இனியாள் தூக்க மாத்திரையின் வீரியத்தால் அறைக்குள் ஆழ்ந்த நித்திரையில் இருக்க.

அவளின் அறை வாயிலுக்கு வந்த அரவிந்த், “நீ இந்த ரூமுக்குள்ள போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணு ஓகே ஆனதும் வா”.

“இது யாருடைய ரூம்?”.

“யாரும் இல்லடா, நான் தான் இந்த ரிசார்ட்ல பேசி உனக்காக அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நீ போ”.

அரவிந்தின் வார்த்தைகளை உண்மை என்று அப்படியே நம்பிய பாரிவேந்தனுக்கும் இப்பொழுது வேறு வழி தெரியவில்லை. தனக்குள் உணர்வுகள் பேரலையாக எழுவதை நன்கு அவனால் உணர முடிந்தது.

அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது இருக்கும் சூழலில் மற்றவர்களின் முன்பு தன்னால் இருக்க முடியாது என்ற நிதர்சனமும் அவனுக்கு உரைக்க.. வேறு வழியில்லாமல் அரவிந்த் கூறியது போல் அவ்வறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள் அவனை அனுப்பிய அரவிந்தின் இதழிலோ கோணல் புன்னகை.

அவன் நினைத்தது வெற்றி கரமாக நடந்தேறி விட்டதல்லவா.. அந்த வெற்றிகளிப்பு அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அரவிந்திற்கு வேண்டியதெல்லாம் விதுஷாவின் முன்பு பாரிவேந்தனை தவறாக காட்ட வேண்டும் என்பது மட்டும் தான்.

இந்த அறைக்குள் கல்லூரி மாணவி யாரோ இருக்கிறாள் என்பது அரவிந்திற்கும் தெரியும். ஆனால் அது யார் என்ற விஷயம் எல்லாம் அவனுக்கு தெரியவில்லை.

ஏற்கனவே இந்த ரெசார்ட்டில் விசாரித்தவனிற்கு கல்லூரி மாணவ மாணவிகள் இங்கே தங்கி இருப்பதாக விஷயம் கிடைத்தது.

அதை வைத்து தான் யாரோ மாணவி இங்கே தங்கி இருக்கிறாள், பாரிவேந்தன் தற்பொழுது இருக்கும் நிலையில் அவனை இந்த அறைக்குள் அனுப்பினால் அவனால் தன் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் எப்படியும் அப்பெண்ணிடம் தவறாக தான் நடப்பான்.

அப்பெண் கூச்சலிட்டு விஷயம் பெரிதாகினால் பாரிவேந்தனின் மானம் அடுத்தவர் முன்னிலையில் பறிபோய்விடும்.

அவனின் மேல் அவப்பெயரும் தோன்றும்.

இதனால் விதுஷாவின் மனதிலிருந்தும் பாரிவேந்தன் நீங்கி விடுவான் என்று எண்ணியவன் இவ்வாறு செய்தான்.

ஆனால் அறைக்குள் இருந்தோ எந்த வித அலறல் சத்தமும் கேட்கவே இல்லை. அங்கேயே சுற்றி சுற்றி வெகு நேரம் நின்று பார்த்த அரவிந்திற்கு ஏமாற்றம் தான் கிட்டியது.

“என்ன இது சத்தத்தையே காணும். ஒருவேளை ரூமுக்குள்ள வேற யாரும் இல்லையோ” என்று இவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அனிதா அறை நோக்கி நடந்து வந்தாள்.

இவனோ தன் செல்பேசியில் எதையோ பார்ப்பது போல் சற்று தள்ளி நின்று கொண்டு அனிதாவை நோட்டம்விட்டான்.

அறைக்கு வந்த அனிதாவோ அறை கதவை திறக்க முற்படவும். அதுவோ உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

“என்ன இது நான் போகும் போது டோர் ஓபன் பண்ணி தானே வச்சிட்டு போனேன். ஒரு வேளை அவ எழுந்திருச்சு லாக் பண்ணிட்டாளோ” என்ற எண்ணத்தோடு சற்று நேரம் நின்று கதவை தட்டிப் பார்த்தாள் கதவு திறக்கப்படுவதாகவே தெரியவில்லை.

“சரி தூங்கிட்டா போலருக்கு” என்று எண்ணிக்கொண்டு வேறு ஒரு நண்பியின் அறைக்கு உறங்க சென்று விட்டாள்.

அவள் சென்றதை பார்த்த அரவிந்தும் இதற்கு மேல் இங்கே நிற்க முடியாது என்று எண்ணியவன் விதுஷா இருக்கும் இடத்தை அடைந்தான்.

அவளோ எங்கே பாரிவேந்தனை காணவில்லை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்.

அரவிந்தும் தனக்கு தெரியாது என்பது போல் பதில் உரைத்து கொண்டிருக்க.. மறுநாள் விடியலுக்கு பிறகு தான் அவர்கள் பாரி வேந்தனை கண்டார்கள்.

ஆனால் இவ்விஷயத்தை பொறுத்த மட்டும் அரவிந்திற்கு பெரும் ஏமாற்றம் தான். என்ன தான் அவன் நினைத்தது போல் காரியத்தை கச்சிதமாக செய்து முடித்திருந்தாலும், அவன் ஆசைப்பட்டது போல் உள்ளிருந்த பெண் கூச்சலிட்டு பாரிவேந்தனின் மானத்தை இழக்கச் செய்யவில்லையே..

இவன் அப்பெண்ணுடன் அன்றைய இரவை கழித்து விட்டு வந்திருக்கிறான். ஆனால் யாருக்குமே இதைப்பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியவில்லை. இதில் அரவிந்திற்குமே சற்று குழப்பம் தான். உள்ளே என்ன நடந்திருக்கும் என்று..

அன்று இரவு இனியாளின் அறைக்குள் நுழைந்த பாரிவேந்தனோ அறை கதவை தாழிட்டு விட்டு வேகமாக தன் சட்டையை கழட்டி போட்டவனிற்குள்ளோ அப்படி ஒரு அனல்.

முற்றிலுமாக தன் நிதானத்தை இழந்து விட்டான். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்றே புரியாத நிலை.

ஏதோ வெறி பிடித்தவன் போல் தன் தலைமுடியை அழுத்தமாக பற்றி கொண்டு மூச்சு வாங்க நின்று இருந்தவன், அப்பொழுது தான் அறையில் இனியாள் படுத்திருப்பதையே கவனித்தான்.

வேகமாக அவள் அருகில் சென்றவனிற்கோ தன் உணர்வுகளையும் மீறி ஒரு உறுத்தல் மெல்லிதாய் அவனின் மனதை அழுத்த செய்தது.

தான் செய்யப் போகும் காரியம் எத்தகைய பிழை என்பதை அறியாதவன் அல்லவே அவன்..

தான் செய்யப்போவது எவ்வளவு பெரிய காரியம். இதனால், இருவரின் வாழ்க்கையுமே கேள்விக்குறியாக போகிறது.

அதிலும், தன்னைவிட இப்பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு பெரிய இன்னல்களை எல்லாம் சந்திக்க நேரிடும் என்று அவனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதையெல்லாம் நினைத்து தன்னை கட்டுக்குள் கொண்டு வரும் நிலையை அவன் எப்பொழுதோ கடந்து விட்டான்.

இனியாளுக்கோ தன் முன்னே ஒருவன் பரிதவித்து கொண்டிருப்பது கூட தெரியவில்லை, அப்படி ஒரு ஆழ்ந்த நித்திரை.

என்ன தான் அவனின் மனம் இது தவறு என்று அவனுக்கு எடுத்துரைத்தாலும், அவனின் உணர்வுகளோ இப்பொழுதே தன் முன்னே நிர்மலமான முகத்துடன் உறங்கிக் கொண்டிருப்பவளை ஆட்கொள்ள தூண்டியது.

அதன் விளைவு எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட..

உணர்ச்சி பெருக்கில் அவனின் உடலின் ஒவ்வொரு அணுக்களும் போடும் பேய் ஆட்டத்தை தாங்க முடியாமல் அவள் மேல் படர்ந்தவன். அவளின் செவ்விதழை தனக்குள் உள் வாங்கிக் கொண்டான்.

இருவருக்குமான முதல் இதழ் தீண்டல்.. அதையெல்லாம் உணரும் நிலையில் இருவருமே இல்லை.

மனம் விரும்பி ஒருவரை ஒருவர் நேசித்து.. மனமொத்து ஒருவருக்குள் மற்றொருவர் மூழ்கி போய் அரங்கேறும் கூடல் எத்தனை இனிமையானது..

அதற்கெல்லாம் இங்கே சற்றும் வாய்ப்பில்லை என்பது போல் அவசரமாகவும் நிதானம் இன்றி வேக வேகமாகவும் அரங்கேறியது இவர்களின் முதல் கூடல்.

இனியாளிடம் மெல்லிய முணங்கள்.. ஆனாலுமே, அவனை தடுக்கும் நிலையில் அவள் இல்லை.

என்ன தான் ஆழ்ந்த நித்திரையாக இருந்தாலும் பெண்களுக்குரிய எச்சரிக்கை அவளின் மூளையை விழித்துக் கொள் என்று எவ்வளவோ வற்புறுத்தியும் விழிகளை திறக்க முடியா நிலை.

தன்னையும் மீறி அவனை தன்னிடமிருந்து பிரிக்க அவளின் கைகள் மேலெழுந்தாலும் மீண்டும் துவண்டு போயின.

ஒரு முறை அல்ல.. அன்றைய இரவு தீரும் மட்டும் மீண்டும் மீண்டும் பலமுறை அவளை ஆட்கொண்டான் பாரிவேந்தன். அதன் பிறகு எப்பொழுது கண்ணயர்ந்தான் என்பது அவனுமே அறியவில்லை.

ஏதோ ஒரு ஊந்துதலில் சட்டென்று பதட்டத்தோடு விழி விரித்தவனிற்கோ அங்கே இருக்கும் சூழல் பிடிபடவே சில நொடிகள் தேவைப்பட்டது.

அழுத்தமாக தன் முகத்தை தேய்த்தவனிற்கு நேற்றைய சம்பவங்களை ஒவ்வொன்றாக அவனின் மூளை எடுத்துரைக்கவும் நொறுங்கிப் போய்விட்டான்.

இன்னமுமே அவனின் கைகள் அவளை சுற்றி வளைத்துக் கொண்டு தான் இருந்தது. அவளுமே அவனின் மார்பை தலையணையாக்கி அவனுக்குள் முற்றிலுமாக ஒடுங்கிப் போய் உறங்கிக் கொண்டிருந்தாள்.

தன்னிடமிருந்து அவளை பிரித்து எடுத்தவனிற்கோ அவளின் நிலையை இப்பொழுது காணவே சற்று சங்கடமாக இருந்திருக்க வேண்டும்.

வேகமாக அவளின் உடைகளை அவளுக்கு அணிவித்தவன்.

குற்ற உணர்ச்சியோடு அவளின் முகத்தையே சற்று நேரம் பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

அவனின் கண்களும் கலங்கிவிட்டது.

நானா இப்படி ஒரு செயலை செய்தது என்று அவனால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தன்னை நினைத்தே கோபமாகவும், அருவருப்பாகவும் இருந்தது.

அதிலும், இனியாள் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் இன்னமுமே நித்திரைக் கொண்டு இருப்பது வேறு அவனுக்கு அச்சத்தை கொடுக்க. வேகமாக அவளை பரிசோதித்தான் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த பிறகு தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வெளியேறியது.

ஆனாலும் அவள் தன்னை தடுக்காமல் இருந்ததற்கான காரணம் அவனுக்கு அப்பொழுது விளங்கவில்லை.

இனியாளை எண்ணியும் அவனுக்குள் பல சந்தேகங்கள்.. இருப்பினும், அவள் விருப்பமில்லாமல் அவளை ஆட்கொண்டதில் பெரும் குற்ற உணர்ச்சியே அவனை கொள்ளாமல் கொண்டது.

அதிலும், அவளுக்கு இதை பற்றி எல்லாம் தெரிய வந்தால் அவள் எப்படி இதை எடுத்துக் கொள்வாள்.

அவளிடம் தானே இதை பற்றி எல்லாம் கூறி சரி செய்ய வேண்டும். இவளையே தன் மனைவியாக்க வேண்டும் என்ற முடிவை அவன் அன்றே எடுத்துவிட்டான்.

அவனின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு செல்பேசி சிணுங்கவும், விதுஷாவின் எண் தான் திரையில் மின்னியது. வேகமாக தன் உடையையும் அணிந்தவன் அறையை விட்டு வெளியேறி விட்டான்.

நேற்று இவ்வளவு பெரிய சம்பவம் அரங்கேறியதை கூட உணராமல் இன்னமுமே நித்திரை கொண்டிருக்கும் இனியாளை பார்த்து அவளின் விதியே கேலி புன்னகையை உதிர்த்தது.

நேற்றைய இரவு எத்தனை மனிதர்களை எத்தனை விதமான உணர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ஆஷாவிற்கோ மதனின் நிராகரிப்பில் அழுகையில் கழிய..

மதனிற்கோ குற்ற உணர்ச்சியோடு பெரும் வருத்தத்தில் கழிந்தது!

விதுஷாவிற்கு தன் காதலை பாரிவேந்தனிடம் வெளிப்படுத்த முடியாத தவிப்புடன் கழிய..

அரவிந்திற்கோ அறைக்குள் என்ன நடைபெறும் என்ற குழப்பத்திலும், விதுஷா இனி தனக்குத்தான் என்ற நிம்மதியிலும் கழிந்தது.

ஆனால், இனியாளோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராமலே தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!