அப்பொழுது நாராயணனின் அறைக்குள் நுழைந்த பாரிவேந்தன், “இப்போ எப்படி பீல் பண்றீங்க?” என்றான் இன்முகமாக.
அவனை நோக்கி புன்னகைத்தவர், “இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு” என்று குழறி குழறி பேசினார்.
“சரி, இதுக்கு அப்புறம் அப்பாவை நாம வீட்டில் வச்சு ட்ரீட் பண்ணிக்கலாம். நீ போய் அவருடைய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு டிஸ்டார்ஜ் ஃபார்மாலிட்டிசை முடித்துவிட்டு வா” என்று கூறி இனியாளை அங்கிருந்து வெளியே அனுப்பினான்.
அவளும் அவனுக்கு தலையசைத்தவள் அறையை விட்டு வெளியேறி விட.
பாரிவேந்தன் நாராயணனிடம், “என்னை மன்னிச்சிடுங்க.. நான் என்ன தான் காரணம் சொன்னாலும் அன்னைக்கு நான் அப்படி நடந்து இருக்க கூடாது. தப்பு தான்.. அதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க உங்க பொண்ண இனிமே கண் கலங்காம பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன். உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம அவளை நான் சந்தோஷமா பாத்துப்பேன்” என்றதுமே நாராயணனின் கண்கள் கலங்கிவிட.
அவனின் கையை பிடித்து கொண்டவர், “ரொம்ப சந்தோஷம். நீங்க சொல்றத கேட்கவே மனசுக்கு நிறைவா இருக்கு. இதுவரைக்கும் என்ன நடந்திருந்தாலும் சரி, அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் சரி, இனி அவளை சந்தோஷமா பாத்துக்கோங்க எனக்கு அதுவே போதும்” என்றார் கண் கலங்க.
“கண்டிப்பா” என்கவும் இனியாள் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
‘இங்கு என்ன நடக்கிறது’ என்று ஒன்றும் புரியாமல் அவர்களை குழப்பமாக பார்த்தவாறு அவர்கள் அருகில் இனியாள் வரவும்.
தன் குரலை செருமிய பாரிவேந்தன், “என்ன ஆச்சு எல்லாம் முடிஞ்சிடுச்சா கிளம்பலாமா?” என்று அவள் பேசவே சந்தர்ப்பம் அளிக்காமல் அவனே கை தாங்கலாக நாராயணனை அழைத்துக் கொண்டு இனியாளுடன் அங்கிருந்து புறப்பட்டான்.
வீட்டிற்கு அவரை அழைத்து வந்தவர்கள் முத்துலட்சுமி இடமும் அனைத்தையும் விவரிக்க. அவருக்கும் இதில் மகிழ்ச்சி தான், “தாராளமா இங்கேயே இருக்கட்டும் பாரி”.
இன்று தான் முதல் முறை தன் பேத்தியை காண்கிறார் நாராயணன்.
யாழ் நிலாவிற்கு மூன்று வயது நிரம்பிவிட்டது. அங்கே பொம்மைகள் உடன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
நாராயணன் குழறியபடி யாழ்நிலாவை நோக்கி கையை காண்பித்தவர், “அது?” என்கவும்.
இனியாளுக்குள் தடுமாற்றம்..
“நிலா இங்க வா” என்று அவளை தன் அருகில் அழைத்த இனியாள், “என்னோட பொண்ணு தான் பா” என்றாள் தயங்கியவாறு.
யாழ்நிலாவை தொட்டுப் பார்த்த நாராயணனுக்கு அத்தனை பூரிப்பு, ஆனந்தம்.
“சின்ன வயசுல உன்னை பார்த்த போலவே இருக்கா” என்றார் நெகிழ்ந்து போய்.
‘இத்தனை நாட்கள் ஆகிவிட்டது தன் பேத்தியை காண’ என்று அவரின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
“நீங்க ரொம்ப ஸ்ரைன் பண்ண வேணாம். நல்லா ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரமா உடம்பு சரி ஆகும். அப்ப தான் உங்க பேத்தியோட சேர்ந்து ஓடி ஆடி விளையாட முடியும்” என்றவாறு அவருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவரை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான் பாரி வேந்தன்.
ஏனோ, இனியாளுக்கு மனம் நிறைவாக இருந்தது.
இனியாளுக்கு மட்டுமல்ல பாரி வேந்தனுக்கும் தான்..
அவள் இழந்ததை எல்லாம் அவளுக்கு மீட்டு கொடுத்து விட்ட உணர்வு.
ஆனால், அவள் தன்னிடம் அவளையே இழந்ததை மீட்டு கொடுத்து விட முடியுமா..
முடியாதே..
அதற்கு தான் அவனையே அவளுக்கு கொடுத்து விட்டானே..
இரவு அனைவரும் உறங்கி விட்டதும் யாழ்நிலாவையும் உறங்க வைத்தவள் தான் மட்டும் உறங்காமல் பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் வந்து நின்ற பாரிவேந்தன், “தூங்கலையா?” என்றவாறு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்த இனியாள், “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் குரலில் அத்தனை கனிவு.
“எதுக்கு?” என்றவனும் அவளை பார்க்க.
“எனக்கு நிறைய ஹெல்ப் பண்றீங்க”.
“இது ஒன்னும் ஹெல்ப் இல்ல.. என்னுடைய கடமை தான். ஒரு ஹஸ்பென்டா வைஃபோட ஃபேமிலியையும் கவனிச்சுக்குறது என்னுடைய கடமை தானே” என்றவாறு அவன் தன் ஒற்றை கண்ணை சிமிட்டவும்.
அவளுக்குமே அவனின் வார்த்தை அத்தனை இதமாக இருந்தது. தன் தந்தைக்கு பிறகு தன்னை மற்றொருவன் இப்படி தாங்குகிறான் என்றால் அது பாரிவேந்தன் தான்.
பாரி வேந்தன் போல் தனக்கு வாழ்க்கை துணை அமைந்ததை எண்ணி மன நிறைவாக உணர்ந்தாள்.
“அப்போ அவரை நீ மனசார உன்னுடைய ஹஸ்பண்டா ஏத்துக்கிட்டியா என்ன? அப்போ நீயும் அவரை காதலிக்கிறியா?” என்று அவளின் மனசாட்சியே அவளை நோக்கி கேள்வி எழுப்பியது.
“எப்போதோ..!” என்ற பதில் தான் அவளிடம்.
பாரி வேந்தனின் முகத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கியவன், “என்ன அப்படி பார்க்குற?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
“நம்ம பொண்ணுக்கு மூணு வயசு ஆகுது டி. ஆனா, இன்னமும் நீ நான் பக்கத்துல வந்தாலே இப்படி நடுங்குறியே.. எப்போ தான் டி எனக்கு ஓகே சொல்ல போற?” என்றான் தாபக் குரலில்.
அவனின் குரலுக்கே இவளின் உடல் சிலிர்த்து அடங்க. பதில் பேச முடியாமல் வெட்கத்தோடு தலை தாழ்த்திக் கொண்டாள்.
அவளை மேலும் நெருங்கியவன் அவளின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியவாறு, “இப்படி எல்லாம் பண்ணாத டி ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்” என்றான் அவளின் செவிமடலில் மீசை உரச கிசுகிசுப்பாக.
அவனின் மனைவி தான்..
அவனின் குழந்தைக்கு தாய் தான்..
ஆனாலுமே, இன்னும் அவள் இதற்கெல்லாம் பழக்கப்படவில்லை தானே..
அவளுக்கு அவன் அருகாமை புதிது தானே..
வெட்கத்தில் முகம் சிவந்து போய் அவனை எதிர்நோக்கியவள், “இப்போ யாரு உங்கள கண்ட்ரோல் பண்ண சொன்னது?” என்றதும் இன்பமாக அதிர்ந்தவன்.
“வாட்! கம் அகைன்” என்று ஆர்வமாக கேட்கவும்.
அவனின் செல்பேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.
“இந்த நேரத்தில் யாரு?” என்று சலிப்பாக எடுத்துப் பார்த்தான்.
விதுஷா தான் அழைத்திருந்தாள்.
‘என்ன இந்த நேரத்துல கால் பண்றா?’ என்று எண்ணிக்கொண்டே அழைப்பை இவன் ஏற்கவும்.
எதிர்முனையில் அழுகையின் விசும்பல் சத்தம் கேட்டது. உடனே பதட்டமான பாரிவேந்தன், “என்ன விது ஏன் அழற?”.
“பாரி அரவிந்தோட நடவடிக்கையே சரியில்லடா.. ட்ரிங்க் பண்ணிட்டு வீட்டுக்கு வரான். இப்போ கூட பாரு எங்க போனானு தெரியல கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான். எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்றாள் பதறிக்கொண்டு.
“சரிடி நீ ஒன்னும் பயப்படாத நான் வரேன். அரவிந்த் எங்கனு நாம போய் பார்க்கலாம்” என்றவாறு அவன் கிளம்பவும்.
இனியாள் தானும் உடன் வருவதாக கூறி அவனுடன் புறப்பட்டாள்.
இனியாள் வந்தால் விதுஷாவிற்கும் நன்றாக இருக்கும் என்று எண்ணியவன் அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
“அழாமல் அந்த அட்ரஸை சொல்லு அவன் நிச்சயமா அங்க தான் இருப்பான். நாம போய் கூப்பிட்டு வந்துடலாம்” என்றவாறு அவள் கூறிய முகவரிக்கு புறப்பட்டனர்.
இவர்கள் எண்ணியது போலவே அவன் அங்கே தான் இருந்தான். முழுதாக குடித்துவிட்டு நிதானம் இன்றி டேபிளின் மேலேயே தலை குப்புற படுத்து கிடந்தான்.
அருகில் நின்ற வெயிட்டரோ, “சார் நாங்க கடையை மூட போறோம். நீங்க கிளம்பிட்டீங்கனா கடையை மூடிடுவோம் எழுந்திரிங்க சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
ஓட்டமும் நடையுமாக அவன் அருகில் சென்ற பாரிவேந்தன், “தம்பி என்னுடைய பிரண்டு தான் நாங்க பார்த்துக்கிறோம்” என்றவாறு பாரிவேந்தன் ஒருபுறமும் விதுஷா ஒரு புறமும் அரவிந்தை தாங்கி பிடிக்க அவனை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினர்.
“விடுடா.. விடுடா என்ன.. என்னை எங்க கூட்டிட்டு போற? நான் உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன் டா பாரி.. விதுஷா எனக்கு வேணும்னு தான் தப்புனு தெரிஞ்சும், துரோகம்னு தெரிஞ்சும் உனக்கு நான் அவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செஞ்சேன். ஆனா, என்னால இப்போ சந்தோஷமா வாழ முடியலடா.. அவகிட்ட போனாலே உன்னுடைய நினைப்பு தான் வருது. உனக்கு நான் செஞ்ச துரோகம் தான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்குது. என்னால மனசார அவளோட சேர்ந்து வாழ முடியலடா.. ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. என்னை மன்னிச்சிடுடா பாரி” என்று ஓவென்று போதையில் அழுதான்.
அவன் என்ன கூறுகிறான், எதை பற்றி கூறுகிறான் என்று விதுஷாவிற்கு சற்றும் விளங்கவில்லை.
ஆனால், பாரி வேந்தனுக்கும் இனியாளுக்கும் எதுவோ புரிவது போல் இருக்கவும்.
இருவரும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இதுவரையிலுமே பாரிவேந்தனுக்கு இருக்கும் பெரும் சந்தேகம் அன்று இரவு தான் ஏன் இனியாளிடம் தவறாக நடந்து கொண்டேன் என்பது தானே..
இன்று வரையிலுமே அவனுக்கு அதற்கான பதில் கிடைக்கவில்லை.
அதைப்பற்றி தான் அரவிந்த் கூறுகிறானோ என்று எண்ணியவன், “நீ என்ன சொல்ற அரவிந்த்?”.
“ஆமா டா.. நான் ஒரு நம்பிக்கை துரோகி. நீ நினைக்கிற மாதிரி நான் உனக்கு உண்மையா இல்ல டா.. விதுஷாவை நான் தான் காதலிச்சேன். அவளுக்கும் உனக்கும் வீட்ல கல்யாணத்துக்கு பேசினதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதனால தான் அன்னைக்கு ராத்திரி உனக்கு ஜூஸ்ல வயாகரா கலந்து கொடுத்துட்டேன். நீ எப்படியும் அந்த ரூமுக்குள்ள இருந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துப்ப..
அந்த பொண்ணு வெளியில வந்து சத்தம் போட்டு கத்துவா.. உன் பேரு மத்தவங்க முன்னாடி கெட்டுப் போயிடும். விதுஷாவும் நீ வேண்டாம்னு முடிவு பண்ணிடுவான்னு நினைச்சேன் டா. ஆனா, கடைசில என்னென்னமோ நடத்து போச்சு. ஆனாலும், நான் ஆசைப்பட்ட மாதிரி என் விதுஷா எனக்கு இப்போ கிடைச்சிட்டா.. இருந்தாலும், எனக்கு இப்போ ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குடா.
நீ என்னை எவ்வளவு நம்பின என்னை உண்மையான பிரண்டா நினைச்ச இல்ல.. எங்க கல்யாணத்துக்கு கூட எவ்வளவு உதவி பண்ண.. உனக்கு போய் இப்படி செஞ்சிட்டோமேன்னு எனக்கு மனசு ஆற மாட்டேங்குது டா. உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் நான் செஞ்ச பாவம் தீராது. ஆனாலும், எனக்கு அதை தவிர வேற வழி தெரியலடா.. என்னை மன்னிச்சிடுடா பாரி”.
ஆசை அரவிந்தின் மூளையை மங்கச் செய்து விட்டது. தான் செய்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள அவன் நினைக்கும் பொழுதோ காலம் கடந்து விட்டது..