என்‌ பிழை‌ நீ – 49

4.9
(21)

பிழை – 49

ஏர்போர்ட்டுக்கு வந்தது முதல் இவ்வளவு நேரமும் விதுஷா தன் கூலர்சை கழட்டவே இல்லை. அணிந்து கொண்டே தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம் தன் கலக்கமான விழிகளை யாரும் கண்டு விடக்கூடாது என்பது தான்.

அவளாலுமே இந்த விவாகரத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. ஒரு கோபத்தில் விவாகரத்திற்கு முறையிட்டு விட்டாள்.

அரவிந்த் அவளிடம் நாள் தவறாமல் மன்னிப்பு கூறவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலுமே தன் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை.

அதற்காக உடனே அவனை மன்னித்து விட்டேன் என்று ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

தன் மனம் என்ன வேண்டுகிறது என்பதை தன்னாலேயே புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமான மனநிலையில் தான் தற்பொழுது அவள் இருக்கிறாள்.

“இப்ப என்ன எனக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு இன்னொரு டிராமாவ ஸ்டார்ட் பண்ண போறியா?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு அவள் கோபமாக கேட்கவும்.

அவளின் கோபத்தை கண்டு பதறிய அரவிந்த், “இல்ல விது பாரி தான் சொன்னான்” என்றான் புரியாமல்.

ஆம், பாரிவேந்தன் தான் அரவிந்திடம் இவ்வாறு கூறியிருந்தான்.

ஏனென்றால், விமான நிலையம் கிளம்பி வரும் வரையிலும் ஏதோ ஒரு ஆர்வத்தில் அரவிந்த் விதுஷாவை பார்க்க வேண்டும் என்று கிளம்பி வந்து விட்டான்.

அவளை பார்த்த நொடி முதல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஏதோ அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது போல் அப்படியே உறைந்து விட்டான்.

அடுத்து என்னவென்று அவனால் சிந்திக்க முடியவில்லை, எதையும் செயல்படுத்தவும் முடியவில்லை.

நாளை விவாகரத்து வழக்கிற்கு ஆஜராக வேண்டும். இன்று இவர்கள் இருவரும் ஏதாவது பேசி சமாதானம் ஆகினால் தான் உண்டு.

ஆனால், அரவிந்த் இப்படி அமைதியாக இருந்தால் என்னாவது என்று சிந்தித்த பாரிவேந்தன் விதுஷா உடன் வந்திருக்கும் அவளின் நண்பனை அவள் மணந்து கொள்ள போவதாக அரவிந்திடம் ஒரு கட்டுக் கதையை கூறிவிட்டான்.

அப்பொழுதாவது அவன் உணர்ச்சிவசத்தில் அவளிடம் எதையாவது பேசுவான் என்று எதிர்பார்த்தான். அவன் கணித்தது போலவே அரவிந்தும் விதுஷாவிடம் பேசி விட்டான்.

ராபர்ட் இந்த இடைப்பட்ட காலத்தில் விதுஷா உடன் பேசி பழகி நண்பன் ஆகினானே தவிர, அவனுக்கும் விதுஷாவிற்கும் இடையில் எந்த ஒரு உறவும் கிடையாது.

“அப்போ நீ அந்த ராபர்ட்டை கல்யாணம் பண்ணிக்க போறதில்லையா?” என்று ஆர்வமாக கேட்ட அரவிந்தை முறைத்து பார்த்தவள், “இவ்வளவு நேரம் நான் உன்கிட்ட அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன். எனக்கு ஒரு கல்யாணம் பண்ணதே போதும் போதும்னு ஆகிடுச்சு. திரும்பவும் கல்யாணம் பண்ற அளவிற்கு என் மனசுல தெம்பு இல்ல”.

அவளின் வார்த்தை அரவிந்தின் இதயத்தை சுருக்கென்று தைக்க.

“என்னை மன்னிச்சிடு இனி தெரியாம கூட எந்த தப்பும் செய்ய மாட்டேன் ஐ ப்ராமிஸ் யு.. நிச்சயமா உனக்கு உண்மையா இருப்பேன். இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னித்துவிடு”.

அவனின் தோற்றமும் வார்த்தையும் அவளுக்குள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எப்படி இருப்பவன் இப்படி பொலிவிழந்து சோர்ந்து போய் இருக்கிறானே..

அவனின் தோற்றமே அவன் எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறான் என்பதை இவளுக்கு எடுத்துரைத்தது.

அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தன் கூலர்சை கோபமாக கழட்டியவள் கண்ணீர் நிறைந்த கண்களோடு வேகமாக எழுந்து வந்து அவனின் சட்டையின் காலரை பிடித்து எழும்பி நிற்க வைத்தாள், “ஏன் டா இப்படி எல்லாம் பண்ண.. என்னால உன்ன ஏத்துக்கவும் முடியல.. வெறுத்து ஒதுக்கவும் முடியல.. என்னை கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிற டா நீ.. ஏன் டா பாரிக்கு அப்படி பண்ண”.

“தெரியாம பண்ணிட்டேன்னு சத்தியமா சொல்ல மாட்டேன் டி. தெரிஞ்சு தான் பண்ணேன். ஆனா, அப்போ இருந்த மனநிலையில் எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சாலும் செஞ்சாகணும்னு ஏதோ ஒரு வேகத்தில் பண்ணிட்டேன். மன்னிச்சிடுடி.. திரும்ப இப்படி எதுவும் நடக்காது. அதுக்காக நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனால், என்னை விட்டுட்டு போயிடாத.. இந்த தண்டனையை என்னால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூட பாக்க முடியாது. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல விது ஐ அம் சாரி” என்றான் சோர்ந்து போய் தழுதழுத்த குரலில்.

அவ்வளவு தான்.. அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

இத்தனை நாட்களின் பிரிவிற்கும் சேர்த்து மிக மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

இருவரின் கண்களிலும் கண்ணீர் அவர்களின் பிரிவுக்கு சான்றாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“இனி எனக்கு தெரியாம இப்படி ஏதாவது பண்ணுனா சாவடிச்சிடுவேன் டா உன்ன”.

“உன் கையால செத்தாலும் எனக்கு சந்தோஷம் தான் டி. ஆனால், என்னை விட்டுட்டு திரும்பவும் போயிடாத” என்றவனோ அவளை தன்னோடு நன்கு இறுக்கி கொண்டான்.

இருவருக்கும் இடையே காற்று கூட புக முடியாத அளவிற்கு அப்படி ஒரு நெருக்கம்.

இவர்களை பார்த்துக் கொண்டே அவ்விடம் வந்து சேர்ந்த மற்ற மூவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டவாறு புன்னகைக்கவும்.

இப்போது தான் இனியாளுக்கும் பாரிவேந்தனுக்கும் கூட மனநிறைவாக இருந்தது.

“அப்போ டைவர்ஸ் கேஸை கேன்சல் பண்ணலாம்ல விது” என்ற பாரிவேந்தனின் குரலில் சட்டென்று அரவிந்திடமிருந்து பிரிந்தவள், “சாரி பாரி.. எல்லாத்துக்குமே ரொம்ப சாரி டா”.

“போதும்டி. திரும்பத் திரும்ப எத்தனை தடவை தான் மாத்தி மாத்தி சாரி கேப்பிங்க. உங்க சாரியை கேட்டு கேட்டு எனக்கு காதெல்லாம் வலிக்குது. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க” என்று தன் கரம் கூப்பி விளையாட்டாக அவன் பேசவும்.

அதில் அனைவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

“திரும்ப மேடம்க்கு ஃபாரின் போற பிளான் இருக்கா?”.

“ம்கூம்… இனி அரவிந்த் கூட தான்” என்றாள் அவனை பார்த்து புன்னகைத்தவாறு.

“குட்! அப்போ நெக்ஸ்ட் வீக் என் டாட்டரோட பர்த் டே செலிப்ரேஷன் இருக்கு அதுக்கு நீங்க ஃபேமிலியோட கண்டிப்பா வந்துடனும். அண்ட் ஆல்சோ, எங்க வீட்டுக்கு சீக்கிரமே ஒரு குட்டி ஏஞ்சல் வர போறாங்க இதே போல நீங்களும் எங்களுக்கு சீக்கிரமா ஒரு குட் நியூஸ் சொல்லணும்னு நாங்க ஆசைப்படுறோம்”.

“ஹே! கங்கிராட்ஸ் டா! ரொம்ப சந்தோஷம்” என்று இருவருமே கூறவும்.

பிறகு, அவரவர் வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.

இனியாள் மதனிற்கு அழைத்து தன் மகளுடைய நான்காம் வயது பிறந்தநாள் விழாவிற்கு அவனை வருமாறு அழைத்தாள்.

அவனுக்குமே இனியாளின் வாழ்க்கை சீரானதில் அத்தனை மகிழ்ச்சி தான்.

அடுத்த ஒரு வாரமும் அவர்களின் செல்ல மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகியதிலேயே சென்றுவிட்டது.

இவர்கள் அழைத்திருந்த அனைவருமே வந்திருந்தனர். இனியாளின் அண்ணன் குடும்பம், மதன் மற்றும் அனிதா அவளின் கணவருடன், ரம்யா அவளின் குடும்பத்தார், விதுஷா அரவிந்த், அலமேலு என மேலும் சிலரும் வந்திருந்தனர்.

இனியாள் மூன்று மாத மகவை சுமந்து கொண்டிருக்கிறாள். வந்தோர் அனைவரையும் வரவேற்று அவர்களை இன்முகத்தோடு கவனித்துக் கொண்டிருந்தாள்.

கேக்கை வெட்டும் நிகழ்வும் இனிதே நிறைவடைய..

மதன் ஒருபுறம் நின்று கொண்டிருந்தான்.

ஆஷாவை இனியாள் நிகழ்வுக்கு அழைத்திருக்கவில்லை. அந்த அளவிற்கு அவளுடன் இன்னும் இவளின் மனம் ஒன்றிப் போகவில்லை.

அனிதாவும் ஆஷா உடன் இன்றுவரை சரிவர பேசவில்லை. கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் உரைப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

அவளுக்கு இன்னமுமே இனியாளின் விஷயத்தில் ஆஷா நடந்து கொண்டதில் அத்தனை கோபம் இருக்கத்தான் செய்கிறது.

ஆஷாவே மதனை தேடி தேடி சென்று பேசி பார்த்து விட்டாள். அவனின் மனம் இறங்குவதாகவே தெரியவில்லை.

கடைசியாக அவன் ஒப்புக்கொள்ளும் வரை காத்திருப்பதாக கூறிவிட்டு வந்துவிட்டாள். அத்தோடு இன்று வரை ஆஷா மதனை தொந்தரவு செய்யவில்லை.

அவனுமே விட்டது தொல்லை என்பது போல் அவளின் புறமே திரும்பாமல் இருக்கிறான்.

அவர்களை நோக்கி வந்த இனியாள், “எல்லாரும் சாப்பிட போகலாம் வாங்க” என்றவாறு அவர்களை அழைத்துக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு சென்றாள்.

மதனும் எதுவும் பேசாமல் அமைதியாக உணவை உண்டு கொண்டிருக்கவும் இனியாளே பேச்சை துவங்கியவள், “என்ன சார் நெக்ஸ்ட் என்ன பிளான்?”.

“நெக்ஸ்ட் என்ன.. வேற ஒன்னும் இல்ல இப்படியே லைஃபை ஓட்ட வேண்டியது தான்” என்றான் உணவிலேயே கவனத்தை செலுத்தியவாறு.

“இப்போ என்னுடைய லைஃப் செட்டில் ஆயிடுச்சு. நீங்க இப்படி தனியா இருக்குறத பார்க்கும்பொழுது எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு. நீங்க ஆஷாவை கல்யாணம் பண்ணிக்கலைனாலும் பரவாயில்லை. அது உங்க தனிப்பட்ட விருப்பம் நீங்க யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா, என்னை நினைச்சு நீங்க குற்ற உணர்ச்சியா இருந்த வரைக்கும் போதும் சார். இனி உங்க லைஃபை நீங்க பார்க்கலாம் இல்ல”.

“நீ குற்றவுணர்ச்சி ஆகிற அளவுக்கு இதுல எதுவுமே இல்ல இனியாள் நீ ஃப்ரீயா விடு”.

“அதுக்கு இல்ல சார்..” என்று அவள் ஆரம்பிக்கும் பொழுதே.

அவளை நோக்கி கோபமாக நடந்து வந்த பாரிவேந்தன், “என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல.. ஒரு இடத்துல உக்கார சொன்னா கேக்க மாட்டியா? எதுக்கு இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டே இருக்க”.

“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்துறீங்க”.

“அப்புறம் உன்ன ரெஸ்ட் எடுன்னு தான சொல்றேன். வந்து இருக்குறவங்கள எல்லாம் கவனிச்சுக்க எங்களுக்கு தெரியாதா.. உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க.. போ.. போய் அங்க சேர்ல உட்காரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்”.

“ஐயோ! எவ்வளவு நேரம் தான் நான் சும்மாவே உட்கார்ந்து இருக்கிறது” என்று அவள் சளிப்பாக கேட்கவும்.

“ரொம்ப பண்ணாம வாடி” என்று அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று விட்டான் பாரிவேந்தன்.

அவர்கள் ஒருவர் மேல் மற்றொருவர் பிணைப்போடு இருப்பதை பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

மதனுக்கு அவர்கள் இருவரையும்  இப்படி பார்க்கவே மனநிறைவாக இருந்தது.

மதன் எதையோ சற்று நேரம் சிந்தித்தவன் ஆஷாவின் எண்ணிற்கு அழைப்பு விடுக்கவும்.

அவளோ தன் அன்னையுடன் வாக்குவாதம் செய்துவிட்டு தன் அறைக்கு வந்தவள் கட்டிலில் குப்புற படுத்து அழுது கொண்டு இருந்தாள்.

அவள் அருகில் வந்து அமர்ந்த அவளின் அக்கா, “இங்க பாரு ஆஷா அம்மாவும் எவ்வளவு நாளா உன்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற? வயசாகிட்டே போகுது இல்ல.. அவங்களுக்கும் அந்த வருத்தம் இருக்க தானே செய்யும்”.

“ப்ளீஸ் கா.. நீயாவது என்னை புரிஞ்சுக்கோ.. வாழ்க்கையில ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். ஒரு பெண்ணுடைய வாழ்க்கையே என்னால அழிஞ்சு போயிருக்கும். நல்ல வேளையா அவ வாழ்க்கை இப்போ சரியா அமைஞ்சிடுச்சு. அதுக்காக நான் செஞ்ச தப்பு இல்லன்னு ஆகிடாதுல.. நான் செஞ்சது தப்பு தானே.. அதுக்கான தண்டனை எனக்கு கிடைக்கணும்னு நான் நினைக்கிறேன். நான் மதனை விரும்புறதை பத்தி உங்க எல்லாருக்குமே தெரியும். அப்படி இருந்தும் ஏன் என்னை போர்ஸ் பண்றீங்க?”.

“நீ மதனை விரும்புறது எல்லாம் சரி, ஆனா, அவர் தான் உன்னை விரும்பலையே”.

“அப்படியே இருந்துட்டு போகட்டும். ஒருவேளை, கடைசி வரைக்கும் அவர் என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்னா.. இனியாளுக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனையா நினைச்சு என் வாழ்க்கை பூரா மதனை நெனச்சுக்கிட்டே தனியாவே நான் என் வாழ்க்கையை வாழ்ந்திடுவேன்” என்று அழுகையோடு அவள் கூறும் பொழுது தான் மதனின் எண் இவளின் செல்பேசியின் திரையில் மின்னியது.

நம்ப முடியாமல் தன் கண்களை அழுந்த துடைத்துவிட்டு மீண்டும் தன் செல்பேசியின் திரையை பார்த்தாள்.

ஆம், மதனின் எண் தான்..

தன் நடுங்கும் கைகளால் அழைப்பை ஏற்றாள். முதல் முறை இன்று தான் மதன் அவளுக்கு அழைப்பெடுத்திருக்கிறான். அதுவே அவளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.

“ரெடியா இரு நாளைக்கு பொண்ணு கேக்க வரேன்”.

அவன் கூறுவதை உள்வாங்கிக் கொள்ளவே இவளுக்கு சற்று நேரம் தேவைப்பட்டது, “என்… என்ன.. சொல்றீங்க..” என்றாள் திணறியவாறு.

“ஆமா, நாளைக்கு என் ஃபேமிலிய கூட்டிட்டு வரேன். ரெடியா இரு” என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.

அவள் செய்தது மிகப் பெரிய தவறு தான். ஆனாலும், உண்மையிலேயே அதை எண்ணி வருந்துபவளை மன்னிப்பது ஒன்றும் தவறில்லையே..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!