அத்தியாயம் 1
சில மனிதர்கள் இல்லாமையில் கூட ஆனந்தம் காண்கிறார்கள். அனைத்தும் இருந்தும் அனாதை ஆகிறேன் நான்!…
இன்னும் வராமல் என்ன பண்ணிட்டு இருக்காங்க?..நேரம் கடைப்பிடிக்கிற பழக்கம் இல்லையா அந்த பொண்ணுக்கு? அகைய்ன் கால் என்று சொல்லிவிட்டு ,
ஸ்கிரிப்ட்-லாம் சரியாக உள்ளதாயென மீண்டும் ஒரு முறை வாசித்து பார்த்தவன், மீதி எல்லாம் தயாரா என்று கேட்டுவிட்டு அன்று ஷுட்டிங் நடைபெற தேவையான அனைத்தும் தயாராக உள்ளதா என்று விசாரித்தான்.. “நித்தம் உன் கனா” திரைபடத்தின் டைரக்டர் மற்றும் நாயகனான திலீப்குமார் நாயகி வராத அவசரத்தில் இருந்தான்.
இது அவனுக்கு இருபதாவது படம். திரையுலகில் திலீப்குமார் என்றால் கொடிகட்டி பறக்கும் அளவு திறமையான அழகு நிறைந்த நடிகர் என்ற பொன் வசனத்தையும் தாங்கியிருந்தான் அவன்!..
இளையவர்கள் செய்யும் காதல் சமாச்சாரத்தை தான் இந்த படங்கள் மூலம் கொண்டு வருவதால் இளவயது முகமாக தேடி அவன் தேர்ந்தெடுத்த கதைக்கு தகுந்த பெண் தான் “மாலினி”.
இன்ஸ்டாகிராமில் ஒன் மில்லியன் பாலோவரை தன் வசம் கொண்டவளுக்கு திலீப்குமாரின் இந்த படம் இரண்டாம் பட்சம் தான். சற்று அகம்பாவம் பிடித்த பெண் எனலாம். எதையும் சரியாக முடிக்காமல் தொட்ட இடத்தில் பாதி, அதன் பின் மீதி என்று முடிக்கும் குணாதிசயம் உடையவள்.
இந்த கதையின் டைரக்டர் கூட படப்பிடிப்பு தளத்தில் வந்து ஆஜரான பின்னும் ஹீரோயின் தாமதம் அனைவரையும் எரிச்சல் மூட்டியது.
“முதற்கோணல் முற்றிலும் கோணல்”…நான் அப்பவே சொன்னன். “இந்த மாதிரி பண திமிரு பிடிச்ச பொண்ணு நம்ம கதைக்கு வேண்டாம்னு நீ கேட்டையா லோகேஷ்” என்று தனது நண்பனை திட்டி தீர்த்தான் திலீப்குமார்.
இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திடுவாங்க திலீப்… அவங்க எவ்வளவு பெரிய இன்ஃப்ளுயன்சர் தெரியும்ல..உன் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் பாலோவர் மாதிரி அவளும் பாதி வச்சிருக்கா…நீ பதினொன்பது படத்துக்கு சொந்தகார ஆனதுக்கு அப்புறம் இந்த பாலோவர்ஸ்…பட் அவளுக்கு இன்ஸ்டாகிராம் ஆரம்பிச்சு ஆறு மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள ஒன் மில்லியன் பாலோவரை தாண்டி போயிட்டு இருக்கு.
எது பின்னாடி மவுஸ் இருக்கோ அதை டைம் பாத்து யூஸ் பண்ணிக்கணும்…இல்லைனா நஷ்டம் நமக்குதான்…பத்து நிமிஷம் பொறுத்து பார்ப்போம் வரட்டும் என்று நண்பனின் கோபத்தை மட்டுப்படுத்தி பெருமூச்சு விட்ட லோகேஷ் இந்த படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர்.
என்ன இருந்தாலும் தனது நண்பனின் பேச்சை கேட்டு சமாதானம் அடைந்தாலும் அவனுக்கு கோபம் அதிகமாயின.
போதும் எத்தனை பாலோவர்ஸ் இருந்தால் என்ன இனிமே அவங்க என் படத்துல நடிக்க கூடாது. அவங்க இஷ்டத்துக்கு வரதுக்கு இது என்ன சத்திரமா?..வெகுண்டெழுந்து கத்தி கொண்டு இருந்தான்.
அப்போது தான் இந்த படத்தின் டைலாக்கர் மற்றும் துணை நாயகியான
” சில்வியா” தனது மொபைலோடு பறபறப்பாக ஓடி வந்தவள் மூச்சிறைக்க திலீப்குமார் முன் நின்றாள்.
மாலினி வந்த கார் விபத்தாகிடுச்சாம்…ட்ரைவர் வர லேட் பண்ணி அதுக்கு அப்புறம் வேகமா கிளம்பி வந்ததால தான் திடீர் விபத்தாம்… மாலினிக்கு கை முழுக்க இரத்தம் வடியுதாம்… அவசரமாக அவங்க பி.ஏ கால் பண்ணி சொல்லிட்டு வச்சிட்டாங்க திலீப் என்றவளை முறைத்தான் அவன்.
உனக்கு நான் எப்பவும் சார்தான் திலீப் இல்ல…
இருபது படத்திலும் டைலாக்கர் அவள் மட்டும் தான். அவளது ஒவ்வொரு வசனமும் படத்திற்கு தகுந்தார் போல அமையும் என்பதில் நம்பிக்கை கொண்ட திலீப்குமார் சில்வியா_வை மட்டமாகவே நடத்துவான். இன்றும் அதுபோல நடந்து விட ” அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சமாச்சம் பயப்படுறானா பாரு, நம்மல அதட்டுறதுல தான் குறியா இருப்பான்” என அவனை மனதில் திட்டி கொண்டு அவன் முன்பே சிலை போல நின்றாள்.
இன்று கதையை ஆரம்பிக்க வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் தயார். அப்படி இருக்கையில் ஹீரோயின் வருகையில்லாததால் ஆக்டர் திலீப்குமார் படம் தாமதம் என்பது அவனுக்கு ஒப்பான செய்தி அல்ல.
யார் எப்படி போனால் எனக்கு என்ன கவலை. கொடுத்த நேரத்தில் வந்திருந்தால் இந்த விபத்து வேண்டாதது. அவளின் அலட்சியம் அவளுக்கு பாடத்தை புகட்டி விட்டது என்று மாலினிக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது தனது பணியில் ஈடுபட தயாரானான்.
அவனது இந்த அலட்சிய செயலைக் கண்டு சில்வியாவும் அதிர்ந்து தான் போனாள்.
திலீப் குமாரின் குணங்களில் மிகவும் அபத்தமானது அடுத்தபவர்க்கு என்ன நடந்தால் என்ன என் வேலை சரியாக நகர வேண்டும் என்பது. இப்போதும் மாலினிக்கு ஏற்பட்ட விபத்தினை குறித்து ஒரு துளி அளவு கூட வருத்தப்படாமல் அவள் செய்த காலதாமதத்திற்கு கடவுள் அனுப்பி வைத்த வேதனை என்று வேதபுராணம் பாடுகிறான்.
சில்வியா நீயும் வயசு பொண்ணு தான். சிறிது நேரம் உற்று கவனித்தவன் நீயும் பார்க்க சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்க. சோ இந்த படத்துல நீயே ஹீரோயினியா ஆக்ட் பண்ணிடு. உனக்கு அசிஸ்டன்ட் ஹீரோயினியா இன்னொரு பொண்ண நான் அப்பாயிண்ட் பண்றேன். இந்த அவசரத்துல வெளிய ஆள் தேட முடியாது.
திலீப் குமாரின் திரைப்படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாநாயகிக்கும் பின் குறிப்பில் ஏதாவது ஒன்று இருக்கும். உதாரணத்திற்கு மாலினி ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர். வெறும் ஆறு மாதத்தில் தனது அழகின் மேன்மையால் ஒன் மில்லியன் பாலோரை கொண்டு வந்தவளை வலை வீசி தேடி அப்பாய்ண்ட் செய்திருந்தார்கள். அதற்கு முன் நடித்த படத்தின் கதாநாயகி தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த படங்களின் நாயகி வேறு.
இப்போது சில்வியாவை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதை தடுக்க இயலாத சூழ்நிலைக்கு அவள் தள்ளப்பட்டுள்ளால் என்பது சில்வியாவும் லோகேஷும் அறிந்த உண்மை!…
லோகி அண்ணா… என்று அவனிடம் அப்பாவியாய் பதறிய சில்வியாவின் தோளை தட்டிக் கொடுத்து நீ ஒன்னும் கவலைப் படாத, எப்படி நீ டயலாக்ஸ் எல்லாம் எழுதறியோ அதை நீ பேசி ஆக்ட் பண்ணா போதும்டா. மற்றதையெல்லாம் உன் அண்ணன் நான் பார்த்துக்கிறேன்…
லோகேஷ் மற்றும் சில்வியாவும் உடன் பிறந்த அண்ணன் தங்கை. சிறுவயதில் பள்ளிகளில் அவர்கள் நடத்திய நாடகங்களும் அவற்றிற்கு கொடுக்கப்பட்ட வசனங்களும் இவ்விருவரும் தயாரித்துக் கொண்டது. அதில் வெற்றி கிடைத்த போது இருவரும் தீர்மானித்தவை தான் திரைப்படத்தில் தான் தங்களது வாழ்க்கை என்று.
கதாநாயகன் கதாநாயகியாக நடித்தால் மட்டும் தான் திரைப்படத்தில் சாதிக்க முடியும் என்பதையெல்லாம் சினிமாவில் காட்டப்படும் ஜோடிகைகள்… சில்வியாவும் லோகேஷும் திரைப்படத்தில் காட்டப்படாத ஒளிமுகமான முகங்கள்!…
வசன குறிப்புகள் என்ற பெயர் பலகைக்கு மட்டும் சொந்தக்காரியான சில்வியா இப்போது கதாநாயகியாக உருவெடுக்கும் இந்த படம் அவளைப் பார்த்து மெத்தனமாக சிரித்தது.
மாலினியால ஆல்ரெடி ரொம்ப லேட் பண்ணிட்டா. தயவு செஞ்சு நீங்க கொஞ்சம் ரெடி ஆகிட்டு வரீங்களா மேடம். எனக்கு சன் இங்கே இருக்கும் போது இந்த சீன் எடுக்கணும் என்பது ரொம்ப முக்கியம். இதுக்காக நான் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ண முடியாது.
மாலினியின் தாமதத்திற்கும் சரி சில்வியாவின் இந்த திடீர் கதாநாயகி பொசிஷனுக்கும் சரி எந்தவித முக பாவனைையும் மாற்றாமல் பொம்மை போல பேசிவிட்டு நகர்ந்தவனை அண்ணனும் தங்கையும் இவன திருத்தவே முடியாது என்று குசலம் பேசிவிட்டு கிளம்பினார்கள்.
இந்தப் படத்தின் திடீர் கதாநாயகியாக நான் வருவேன் என்று சிறிதும் யோசிக்க வில்லை என்ற சிந்தனையோடு மேக்கப் செய்து கொண்டிருந்தவர்களின் முன்பு அமர்ந்திருந்தால் சில்வியா.
அன்றைய படப்பிடிப்பின் படி கல்லூரியின் முதல் நாள். எப்போதும் ஹீரோயினி வருகை பிரம்மாண்டமாக அமைய வேண்டும் அல்லவா!
ஹீரோயினி என்றாலே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவியாக அலைபவள் தானே!… இப்படத்திலும் கல்லூரி வகுப்பு சீன்களில் சில்வியா இதைத்தான் தொடர்ந்தாக வேண்டும். இதில் என்ன விதி என்றால் திலீப் குமாரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று சில்வியா ரெசிகினேஷன் கொடுத்திருந்த சமயத்தில் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டது.
சில்வியாவும் பார்ப்பதற்கு லட்டு போன்று இருப்பாள். கண்கள் இரண்டும் துள்ளி ஆடும் மீன்களைப் போல ஆங்காங்கே அவ்வப்போது சென்று வந்து கொண்டிருக்கும். சிரிப்பின் போது அந்த சத்தம் ஏனோ இதமான மெல்லிசையை உண்டு செய்யும். பேசும் வார்த்தைகளில் கூட இனிமை நிறைந்ததோடு தவழுபவளுக்கு திடீர் கோபம் ஏற்படுமாயின் அது தனது எதிரே இருப்பவர்களின் மனநிலையைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் பேசுவாள்.
இந்த படத்தில் நடித்து ஆக வேண்டும் என்பதெல்லாம் அவளது கட்டாயம் அல்ல.
எதற்காக இந்த முகப்பூச்சு வர்ணங்கள் . வேறு ஒரு கதாநாயகி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடலாம் என்று கிளம்பியவளை “நீ கேக்குற டிவர்ஸ் வேணும்னா கண்டிப்பா இந்த படத்தை நீ நடிச்சு கொடுத்து தான் ஆகணும்”.. – திலீப்குமார்
இங்க பாரு திலிப் நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க. மாலினி தானே இந்தப் படத்தோட ஹீரோனியா இருந்தாங்க.
கொஞ்ச நேரம் முன்ன வரைக்கும் அவங்க தான் இந்த படத்துக்கான ஹீரோயினியா இருந்தாங்க. பட் அவங்களோட விபத்து உன்னை செலக்ட் பண்ண வச்சிருச்சு…
எல்லா டைம்லையுமே உனக்கு நான் செகண்ட் ஆப்ஷன் தானே…
நோ இந்த டைம் எனக்கு வேற வழியே இல்லாததுனால தான் நீ… இதெல்லாம் என்னால செய்ய முடியாது நீ வேற யாரையாவது பார்த்து ஹீரோயினியா பிக்ஸ் பண்ணிடுன்னு நீ சொல்லிட்டு கிளம்பலாம்னு நினைச்சன்னு வச்சுக்கோ இப்பவே உன்னோட டாடிக்கு நான் கால் பண்ணுவேன்…. நம்மளோட டிவர்ஸ் மேட்டர் பத்தி கண்டிப்பா உடனே சொல்லிடுவேன், அப்புறம் உங்க அப்பாக்கு ஆல்ரெடி வந்து இருக்க பர்ஸ்ட் அட்டாக் கூட இப்ப செகண்ட் அட்டாக் வந்து ஒரே அடியா போய் சேர்ந்துடுவார்…
வார்த்தையை ஒழுங்கா பேசு திலீப்… என் அப்பாவை பத்தி தப்பா பேசினா அவ்வளவுதான்… கோர்ட்டில கேட்டா டிவேர்ஸ் கொடுத்து தான் ஆகணும்னா நீ கொடுத்து தானே ஆகணும்…
மனப்பூர்வமாக ரெண்டு பேரும் டிவோர்ஸ் கொடுத்தால் தான் ஏத்துப்பாங்கன்னு உன் மக்கு மண்டைக்கு யாரும் சொல்லி கொடுக்கலையா சில்லு… அப்பாவை பத்தி பேசினா அவ்வளவு கோவம் வருதுல்ல சும்மா டயலாக் மட்டும் எழுதிட்டு சம்பளம் வாங்கிட்டு போற உனக்கு நடிச்சு பார் எவ்வளவு அருமை இருக்குன்னு உனக்கு புரியும்… சும்மா சொல்ல கூடாது பார்க்க நல்லா தான் இருக்க அதனாலதான் இந்த படத்தோட ஸ்கிரிப்ட்டையே ஓரளவுக்கு நான் சேஞ்ச் பண்ணிட்டேன்…
என்று குரூரமாக பேசியவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அவனின் மனைவியான சில்வியா.
தொடர்வேனே!….