அத்தியாயம் 10
காதல் எப்போதும் அழகாக வேண்டும் எனில் தம் துணையின் குறையை நிறை ஆக்கி கொள்ள வேண்டும்
சில்வியாவின் கோபம் மட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது.
அதிலும் வைஷியா திலீப்பின் கைகளை கோர்த்த வாக்கில் நடந்து வந்ததும், இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததும் அவளின் வயிற்று எரிச்சலை மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தன்னோடு பிறந்தவள் தான் தனக்கென்று ஆயிரம் விஷயங்கள் செய்துள்ளால் என்பதை அவளது மனம் அப்போது மறந்து போனது தான் உண்மையான வேடிக்கையான செயல்.
பிறந்த நாள் முதல் இப்போது வரை தனக்கு தேவையான செலவுகளை பார்த்து பார்த்து செய்யும் தனது சகோதரியின் அன்பை உணர்ந்த சில்வியாவின் மூளை அந்நேரம் பார்த்து அமைதி காத்தது தான் அவள் சண்டையிட்டதற்கான முதல் காரணமாக அமைந்தது.
செல்வியும் தன்னிடமிருந்த காகிதத்தை மோகனிடம் காட்டி விட, அதை திறந்து படித்த அனைவரும் வைஷியாவும் திலீப்பும் ஒரு மாத காலமாக காதல் உறவில் இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட , அவனைப் போல் நல்ல ஆண்மகன் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்ன செல்வியையும் பார்த்து மோகன் சிரித்து அவர்களின் உறவுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்து கொண்டிருந்தார்கள்.
தான் ஆசைப்பட்ட ஒருத்தன் தனக்கான வாழ்க்கை என்று நிர்மாணித்திருந்த போது இதோ அவன் உனக்கானவன் இல்லை என்று வாய்க்கு எட்டியவை வயிற்றுக்கு செல்ல இயலாத அளவுக்கு அவளிடம் இருந்து பறித்துக் கொண்டால் வைஷியா என்று தவறாக புரிந்து கொண்டாள் சில்வியா.
மதியும் சில்வியாவிடம் பேசலாம் என்று சென்ற போதெல்லாம் முறைத்தே அவளை ஒதுக்கி நிறுத்தி வைத்து விட்டாள்.
வைஷியா சில்வியாவின் அருகில் வந்து திலீப் எனக்கு மாப்பிள்ளையா வருது உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே டா. ஏன்னா இந்த மாதிரி மாப்பிள்ளை நம்ம ஊர் ஃபுல்லா தேடுனா கூட கிடைக்க மாட்டார். எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் வேற என்று அன்பாக மொழிந்த அவளிடம்,
திலீப் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்னு தான் நான் ஆசைப்பட்டவன நீ கொத்திக்க பாத்தியா அக்கா என படார் என்று பேசி விட்டாள்.
தானும் திலீப்பும் காதலிக்கும் இந்த தருணத்தில் சில்வியா சொல்லும் இந்த பேச்சு அவளுக்கு அதிர்ச்சியை தான் ஊட்டியது.
என்ன சில்வியா சொல்ற…
நடிக்காத வைஷு. எனக்கு திலீப்ப ரொம்ப பிடிக்கும்ன்றது உனக்கு நல்லா தெரியும். அந்த விஷயம் உனக்கு தெரிஞ்சி இருந்துமே அவ மேல ஆசைபட்டன்னு பொய் சொல்லி நான் ஆசைப்பட்ட ஒருத்தனை உனக்கு வாழ்க்கை துணையாக மாத்திக்க நினைச்சிருக்க பாத்தியா உன்ன மாதிரி ஒரு கேடு கெட்ட ஜீவன நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று வாய்க்கு வந்தவற்றை எல்லாம் பேசி வைஷியாவின் இலகு மனதை கொய்து எறிந்தால் சில்வியா.
சில்வியா பேசிய அனைத்து வார்த்தையும் வில்லிலிருந்து எழுந்த அம்பு நெஞ்சை பாய்த்தது போல வைஷியாவின் மனதில் பாய்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
தங்கைகளின் முகம் மாறிவிட்டில் தனது அனைத்து சேவைகளையும் மாற்றிக் கொள்ளும் அளவிற்கு இறங்கிச் செல்லும் குணம் கொண்ட வைஷியா இப்போது சில்வியா பேசிய பேச்சுக்களை கண்டு சிலை போல நின்று விட்டாள்.
இப்போது திலீப் என்னம்மா சொல்ற சில்வியா. என்ன பொறுத்த வரைக்கும் நீ எனக்கு ஒரு தங்கச்சி மாதிரி தானே வழிய நீ நினைக்கிற மாதிரி நான் உன் மேல என்னைக்குமே ஆசைப்பட்டது இல்ல…
என்ன திலீப் சொல்றீங்க. நீங்க பொய் பேசுறீங்க. நீங்க என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணது, என் கூட மட்டுமே சாப்பிட வந்தது, எனக்காக ஒருத்தர் கிட்ட சண்டை போட்டு அவரோட சட்டையை கிழிச்சது, ஹெட் மாஸ்டர் கிட்ட வந்து எனக்காக பெர்மிஷன் போட்டது, ஏன் எனக்கு டூர் பீஸ் கொடுத்தது, நான் ஒரு நாள் அழுது உக்காந்துட்டு இருந்தப்ப கூட எனக்காக வந்து மோட்டிவேட் பண்ணி பேசினீங்க…
எல்லாமே மறந்துட்டீங்களா? இவ்வளவும் பண்ணிட்டு என் மேல இஷ்டமே இல்லன்னு பொய் பேசுறீங்களே இந்த நடிப்புக்காரி உங்கள அப்படி என்ன மாய வேலை செஞ்சு மயக்கினாள் என்று தான் யூகித்தவை மட்டுமே சரி என்ற வாக்கில் முழுவதுமாக ஆணித்தரமாக நின்றாள் சில்வியா.
சிறுபிள்ளைத்தனமாக பழகும் குழந்தையைப் போல அவளை பாவித்த திலீப்பிற்கு கூட அவள் சொன்ன ஒவ்வொன்னும் அவள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக அவளுக்காக கூடவே இருந்து பார்த்து பார்த்து செய்தவை மட்டுமே என்பது தானே தவிர இதில் காதல் எங்குள்ளது .
ஆனால் பேதை அவளோ இந்த காலத்து நடைமுறை போல அதை காதல் என்று வடிவமைத்து கல்யாணம் பிள்ளைக்குட்டி என்று கனவு கண்டுள்ளால் என்பதை இப்போதே அறிந்து கொண்டான்.
கண்கட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற விதத்தில் காட்டும் அன்பின் ஆழம் அரியாது உள் நுழைந்து விட்ட திலீப்பிற்கு இப்பொழுது சில்வியாவை சமாளிப்பது மிகப்பெரிய சுமையாக அமையும் என்பது அங்கு இருந்த யாரும் அறியாத உண்மை.
திலீப் அவளின் அருகாமையில் சென்று பொறுமையாக அவளிடம் புரிய வைத்தான்.
இங்க பாரு சில்வியா உனக்காக நான் சப்போர்ட் பண்ணுது உன் கூடவே நான் நின்னது எல்லாமே உண்மை தான். பட் அது எல்லாமே காதல் ஆகிடாது. எல்லாமே உன் மேல எனக்கு இருந்த ஒரு மரியாதை, அன்பு அதையும் தாண்டி ஒரு அக்கறை
என் பிரண்டோட தங்கச்சி வருத்தப்படறாளேங்கிற ஒரு கனிவும் கூட சேர்ந்தது. அவ்வளவு தானே தவிர உன் மேல எனக்கு காதலோ பின் நாட்களில் வரப்போற வாழ்க்கையை பற்றியும் நான் உன்னோட ஒரு நாள் கூட நினைச்சதில்லம்மா.
நீங்க பொய் பேசுறீங்க. இல்ல உங்களை இந்த மாதிரி பேச வச்சிருக்க இந்த மாயக்காரி. என் கூட இந்த மாதிரி நினைக்காத அப்ப நீங்க ஏன் வைஷு கூட மட்டும் நினைச்சீங்க?..- சில்வியா
எவ்வளவோ பொறுமையாக பேசி புரிய வைக்க நினைத்த திலீப்பிடம் மீண்டும் கேள்வி குடைச்சல் கொடுத்தாள்.
இங்க பாரு சில்வியா உங்க அக்காவும் நானும் ஒரே மாதிரியான சிந்திக்கிற குணம் கொண்டதை நாங்க பழக பழக புரிஞ்சுகிட்டோம். ஒரு நாள் அவங்க இல்லாம என்னால ஒரு கொஞ்ச நேரத்துக்கு கூட மூவ் பண்ண முடியல. அப்ப தான் நான் புரிஞ்சுகிட்டேன் அவங்க மேல நான் ஆசைப்படுகிறேன்னு. ஆசைப்படுறேன்னு சொல்றத விட அவங்கள நான் விரும்புறேன் என்கிறது அன்னைக்கு தான் நான் கண்டுபிடிச்சேன்.
அன்னைக்கு எனக்கு நடந்த அதே ஃபீலிங்ஸ் அவங்களுக்கும் நடந்துச்சுன்னு என்கிட்ட ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னாங்க. சோ அன்னைக்கு நாங்க முடிவெடுத்து நமக்கான வாழ்க்கையில ரெண்டு பேரும் இனிமேல் சேர்ந்துதான் வாழ்க்கை நடத்த போறேன்னு முடிவு எடுத்துட்டோம்.
என்ன பொறுத்த வரைக்கும் என்னோட வைஃப் என்னோட லைஃப் எல்லாமே இனிமே என்னோட வைஷியா மட்டும் தான்!… அவளை தாண்டி நான் எந்த விஷயத்தையும் தப்பா நானா யோசிக்கவில்லை என்பது மெய் என்று கூறி முடித்தான் .
உனக்கும் இருக்க மனச உடைக்காமல் என்ன ஒரு பிரெண்ட் பாண்டுல வச்சிருந்தீங்கன்னா இதுக்கு மேலயும் நம்ம உறவு நீடிக்கும். அப்படி இல்லைன்னா இப்பவே நம்ம துண்டிச்சிக்கலாம். தப்பான ஒரு உறவா வளரக்கூடாது என்னை பொறுத்த வரைக்கும் என்று கரராக அப்போதுதான் அவனின் இன்னொரு முகத்தை அவளிடம் காட்டினான்.
இல்ல திலீப் நீங்க பொய் பேசுறீங்க… மீண்டும் மீண்டும் சில்வியா தான் பேசுவது மட்டும் தான் சரி என்று நிரூபிக்க முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
வேகமாக அவள் அருகாமையில் வந்த லோகேஷ் இங்க பாரு சில்வியா திலீப் தான் சொல்றான்ல. அவனும் வைஷியாவும் லவ் பண்றம்னு நீ ஏன் பைத்தியக்காரி மாதிரி பண்ற…
இல்லன்னா நான் பைத்தியம் இல்லை அண்ணா. நான் ஆசைப்பட்டேன்னு தெரிஞ்சும் அவ அவர வேணும்னு காதல் வலையில சிக்க வச்ச உன் அக்காக்காரி தான்னா பைத்தியம். அவளுக்கு எல்லாமே எனக்கு ரெண்டாவதா போய் சேரணும்ங்கிறது மட்டும் தான் ஆசை. இப்போ திலீப் எனக்கு கிடைக்க கூடாதுங்குற ஒரு ஆசையில அவனை எப்படியோ அடைஞ்சிட்டாள்.
என்று எரிந்து கொதித்தவள் வைஷியாவின் அருகாமையில் சென்று நல்லா இரு ஆனால் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது திலீப் கூட மட்டும் தான் இல்லன்னா வாழ்நாள் முழுக்க நான் கல்யாணம் பண்ணிக்காமல் நம்ம வீட்டிலேயே இருந்துக்குவேன் என்று சொல்லியவள் தனது அறையில் சென்று அடைபட்டு கொண்டாள்.
சில்வியாவின் இந்த திடீர் மாற்றத்தையும் இந்த திடீர் எரிச்சலையும் யாருமே எதிர்பாராத ஒன்று.
திலீப் மற்றும் வைஷியாவின் காதல் வீட்டில் சந்தோச கூச்சலை ஏற்படுத்தும் என்று எண்ணி இருந்த போதிலும் குபீர் என்று வெடித்த எரிமலை வீட்டிலிருந்த அனைவரின் இனிமையான சூழலையும் தலைகீழாய் மாற்றிவிட்டது.
அதிலும் சில்வியாவும் மதியும் அக்கா அக்கா என்று உருகும் வைஷியாவிடமே அவளை அவதூறாக பேசிய சில்வியாவின் இந்த புதிய மாற்றத்தை கண்டு அவர்களின் பெற்றோர்களே மனமுடைந்து போய்விட்டார்கள்.
திலீப் அதை விட மோசம் என்று தான் சொல்ல வேண்டும். இனிமையாக ஒரு சிட்டுக்குருவி கூட்டம் போல் இருந்த வீட்டிற்குள் நுழைந்த நான் அந்த சிட்டுக்குருவி கூட்டத்தில் ஒருத்தனாக அங்கமிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தங்களுக்குள் உதித்த காதல் என்ற மூன்றெழுத்து குடும்பம் என்ற ஐந்தெழுத்தை சீரழிக்க போகிறதே என்று வருந்த தொடங்கி விட்டான்.
வைஷியாவும் திலீப்பும் பார்வையாலே தங்களது வேதனையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். இனி என்ன நடக்க போகும் என்ற பயத்தோடு நின்று கொண்டிருந்தார்கள் மற்ற அனைவரும்.
தனது அறையில் சென்று அடைபட்டு இருந்த சில்வியாவோ தனது உடைமைகளை பேக் செய்து கொண்டு வெளியே வந்தாள்.
இனிமே என்னால இந்த வீட்ல ஒரு நொடி கூட இருக்க முடியாது. என்னோட அக்காவுக்காக யோசிக்கிற இந்த வீட்ல ஒருத்தர் கூட எனக்காகனு யோசிக்கல. இந்த வீட்ல எனக்குனு யாருமே கிடையாது. நான் ஒரு அனாதை மாதிரி தான் இருக்கேன். அதனால இனிமே இந்த வீட்டில நான் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை. இல்லை நாலும் பிரயோஜனம் இல்லை. நான் ஆசைப்பட்ட இடத்துக்கு போறேன் யாரும் என்ன தேடாதீங்க என்று சொல்லி விட்டு விறு விறுவென்று நடக்க தொடங்கிய அவளின் கண்ணில் இறுதியாக பட்டவன் வலியோடு நின்று கொண்டிருந்த திலீப்பும் வைஷியாவும் மட்டுமே!
வைசியாவின் அருகாமையில் வந்த சில்வியா என் வாழ்க்கைய சந்தோஷமா வாழக்கூடாதுன்னு என்கிட்ட இருந்து பரிட்சிட்டல்ல, நீ எப்படி சந்தோசமா வாழ்றேன்னு நான் பாக்குறேன் என்று சவால் விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினால் அக்கா என்று செல்லமாக கொஞ்சிக் கொண்டு மட்டுமே திரியும் அந்த சின்னஞ்சிறு பிஞ்சு.
பதின் வயதில் ஏற்படும் காதல் உறவின் விளைவுகள் குடும்ப உறவுகளை அருத்து எரியும் என்பதில் நிஜ உலகிலே நிறைய இருந்துள்ள போது சில்வியாவும் அவற்றுள் சிக்கி கொண்டால் என்பது தான் குடும்பம் சிதைந்து போக வழி வகுத்தது.
மதி, சில்வியாவின் நிலையில் நின்றிருந்த போது ஏன் திலீப் அண்ணா இப்படி பண்ணீங்க… உண்மையாளுமே நீங்க எங்க கூட இல்லாமலே இருந்திருக்கலாம். எங்க அண்ணாக்கு நீங்க ஃப்ரண்டா இல்லாமல் இருந்திருந்தால் எங்க சில்வியா எங்களை விட்டு பிரிஞ்சி இருக்க மாட்டா. என் அக்காவ நீங்க காதலிக்காம இருந்திருந்தீங்கன்னா எங்க சில்லு எங்க வீட்டை விட்டு வெளியே போய் இருக்க மாட்டா. எங்க அப்பா அம்மாவுக்கு இந்த நியூஸ் தெரியாமலே இருந்த அவங்களாவது வருத்தப்படாம இருந்திருப்பாங்க.. இப்ப எல்லாமே பண்ணிட்டு எப்படின்னா ஒரு குத்துக்கல் மாதிரி எங்க வீட்டிலேயே நின்னுட்டு இருக்க அசிங்கமா இல்ல என்று மதியும் திலீப்பை திட்டு தீர்த்தாள்.
வைஷியாவிடம் திரும்பி வைஷு நம்மள பிரிக்கிற இந்த காதல் உனக்கு வேணாம். நம்ம உறவு அறுக்குற இந்த திலீப் சுத்தமா நமக்கு வேண்டாம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டாள் மதி.
சில்வியாவும் மதியும் ஒரே அறையில் இருந்தவர்கள் தான். அவளும் இவளும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், விளையாடிய புகைப்படங்கள், ஊஞ்சலாடிய புகைப்படங்கள் என்று மதியை சில்வியாவின் புறமே யோசிக்க தூண்டிவிட்டது அவளது மனது…
சில்வியா மீண்டும் வீட்டை வந்து அடைவாளா?… அல்லது சில்வியாவிற்காக வைஷியா தான் தனது காதலை விட்டுக் கொடுத்து விடுவாளா?…
தொடர்வேனே!..