எல்லாம் பொன் வசந்தம்..(11)

4.8
(4)

அத்தியாயம் 11

 

காதல் சொல்லி சொல்லி உணர்வதை விட, செயலில் புரிந்து கொள்ளுமளவு உறவு அமைவது தான் அழகு!

 

தோழமைகள் மற்றும் குடும்பம் என்று அனைத்தையும் சிதைத்து விட்டு தனது தோழியோடு நான் செய்தது சரி தானே என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தாள் சில்வியா.

 

அவளது மனநிலையை எண்ணி அச்சம் கொண்ட அவள் தோழியும் நீ தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிகிட்டன்னு நினைக்கிறேன் என்றாள்.

 

என்னிடம் துரோகம் செய்து விட்டார்கள் என்று மற்றவர்கள் மீது கோபத்தோடு இருந்த அவளுக்கு தோழி கருத்து எல்லாம் காதில் விழுந்தால் தானே.

 

தான் நினைத்தது தனக்கு மட்டும் தான் வேண்டும் என்ற எண்ணம் தான் இப்போது அவளிடம் ஓங்கி இருந்தது.

 

என்ன தொந்தரவு பண்ணாதடி.  நான் ஆசைப்பட்ட என் திலீப்ப என் கிட்ட இருந்து பரிச்சவ அவ. இனி மேல் அவ இருக்க இடத்துல என்னால இருக்க முடியாதுடி என்று தனித்து வாழ்வதாக முடிவு எடுத்தாள்.

 

கொஞ்சம் பொறுப்பா பேசுடி.  உன் அக்கா உனக்காக எவ்வளவு பண்ணி இருக்காங்க.  அவங்க நினைச்சு இருந்தால் உனக்காகன்னு எதுவுமே பண்ணாமல் எல்லாம் எனக்கு‌தான் வேணும்னு சேமிச்சு வச்சிருந்தால் நீ இந்த சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருப்பையா?..அக்கா வேண்டாம் வீடு வேண்டாம்னு துடிக்கிறையே அப்படின்னா அவ வாங்கி கொடுத்த ட்ரஸ் அவ வாங்கி கொடுத்த வாட்ரோபில்ல எதுக்குடி துணிலாம் எடுத்துட்டு வந்திருக்க. 

 

உன்ன பொறுத்த வரை உன் அக்கா பிரச்சனை இல்ல.  தீலீப் தான் பிரச்சனை.  திலீப் உன்கிட்ட காட்டுன அன்ப நம்மோட வயசு தவறா எடுத்துகிட்டு காதல்னு உருவம் பண்ணிகிட்ட.  இப்ப அது பொய்னதும் உன் மனசும் மூளையும் வேலை செய்யுறது நிறுத்திட்டு தப்பு தப்பா வேலை செய்யுது போல.

 

திலீப் உன்ன காதலிக்கலன்னு கோவப்பட்டையே அவங்க மனசு ஒத்து போகாமலாடி அவங்க அந்த காதல் வலையில விழுந்து சந்தோசமா அதை வழிநடத்தி இருப்பாங்க. உண்மையா திலீப் உன்கிட்ட காட்டுனது பாசம்.  உன் அக்கா கிட்ட காட்டுனது காதல்.  உன்ன அவர் பாசமா பார்த்துகிட்டது உன் மேல நல்ல எண்ணம் அவருக்கு.  உன் அக்கா மேல ஆசைப்பட்டது அவளுக்கு அவருக்கும் எண்ண உணர்வு சரியா அமைஞ்சதால்ல தான்.  இப்ப புரியுதா உன் மூளைக்கு.  நல்லா யோசி… அதுக்கு முன்ன சாப்பிடு என்று இரவுணவாக சப்பாத்தியும் தக்காளி சட்னியும் கொடுத்தவள் கதவை தாழ் போட்டு விட்டு நகர்ந்து கொள்ள தோழியின் கருத்துகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தாள் சில்வியா.

 

தடம் மாறும் போது அறிவுரை வழங்கும் இந்த தோழி போல் அனைவருக்கும் அமைந்தால் பாதை தடம் மாறாது எந்த பெண்ணுக்கும்.

 

தனது தோழியின் கருத்தும் சரி என சிந்தித்த சில்வியாவின் மனதில் தவறு செய்து விட்டோம் என்று சரியான யோசனை ஊர்ந்தது.

 

தனது அக்காவை பழித்து பேசி விட்டோம்.  எனது அக்காவை விரும்பிய வரையும் வெறுத்து கத்தி விட்டோம்.  இப்போது எப்படி அவர்கள் இருவரிடமும் முகம் கொடுத்து பேசுவேன் என்று தவித்தாள்.

 

என்ன இருந்தாலும் தான் செய்தது தவறு.  மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்  என்று முடிவு எடுத்தாள்.  அதன் பின் தோழியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டவளின் மனம் இருதலை கொல்லி பாம்பாக அலை பாய்ந்தது.

 

மனமோ இதை செய்து உனது தன்மானத்தை விட்டு கொடுக்க போகிறாயா என்று அவளுக்கு நல்லறிவுரை சொல்வதை போல மாற்ற முயற்சித்தது.

 

மூளையோ வேண்டாம் தனது அக்காவின் விருப்பம்.  அவளுக்கான வாழ்வு என இப்போது தான் அவள் முதல் அடி எடுத்து வைக்க போகிறாள் என்று அறிவுரை வழங்கியது.

 

மூளையும் மனதும் தனது பங்குகளை சொல்லி விட இனி அவளது விருப்பம் என்று ஒதுங்கி கொண்டது.

 

சில்வியாவோ ” வீட்டின் முன்புறம் சென்று காலிங் பெல்லை அமுக்கியதோடு உர்ரென்று நின்றிருந்தாள்”.

 

வாடிய முகத்துடன் வெளியே வந்து பார்த்த வைஷியாவும் மதியும் வா சில்லு.  ஏன் இங்கையே நிக்குற என்று இருவரும் ஆர்ப்பரித்தார்கள்.

 

அம்மா அப்பா சில்லு வீட்டுக்கு வந்துட்டா.  வாங்க…என்று பெற்றவர்களை அழைத்தாள் வைஷியா.

 

என் தங்கமே எதுக்கு உனக்கு அவ்வளவு கோபம் என்று செல்வியும், உனக்கும் திலீப்ப பிடிச்சிருக்காடா என்று மோகனும் பறி தவித்ததை கண் கூடாக பார்த்ததும் துடித்து போனாள்.

 

வைஷியாவோ “உனக்கு விருப்பம் இல்லேன்னா இந்த காதலும் வேண்டாம்.  கல்யாணமும் வேணாம் சில்லு.  எனக்கு நம்மள விட இந்த காதல் பெரிது அல்லடா.  திலீப் கிட்ட நான் பேசிக் கொள்கிறேன்” என்று   சொல்லவும் கண் கலங்கி விட்டாள்.

 

இதெல்லாம் நாடகம் என்று சொல்லிய தனது மனதை தட்டி ஓரமாக அமர வைத்து விட்டாள் சில்வியா. 

 

சாரி வைசு. என்னுடைய எமோஷனல் உன்ன ரொம்ப பாதிச்சிருச்சு இல்ல.  நான் திலீப்ப லவ் பண்ணது உண்மைதான் பா.  பட் என்னோட அக்காவும் திலீப்பும் விரும்புறாங்கன்னு ஆசைப்பட்டதும் என்னால அதை ஏத்துக்க முடியல முதல்ல.  இப்ப என்னோட மனசு தெளிவா ஆயிடுச்சு.  காரணம் என் பிரண்டு பிரியா தான்.  அவ தான் இது சரி இல்லன்னு எனக்கு புரிய வச்சா.  

 

மதி அருகே சென்றவள் நேத்து உன்னு கூட நான் காயப்படுத்திட்ட இல்லடா என்னை மன்னித்துவிடு டா என்று அவளது கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டாள் வைஷியா.

 

அட விடு  சில்லு இதனால என்ன?.. உனக்கு புடிக்கலனதும் அக்காவே இந்த கல்யாணத்தையும் நிறுத்திட்டா நான் எல்லாம் எம்மாத்திரம் விடு என்ற மதியின் வாயை அடைத்தவள்,

 

இல்ல மதி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.

 

என் அக்கா வைஷு ஆசைப்பட்ட அந்த மாப்பிள்ளை ஓட என் அக்கா நிம்மதியா வாழ்வது நான் பார்த்து சந்தோஷப்படுவேன்.  உண்மையாலுமே என்னோட குழப்பமான மனச பிரியா தெரிய வச்சதால எனக்கு அவர் வேண்டாம். 

 

வைஷுக்கா நம்ம வீட்டு மாப்பிள்ளை வந்து உன்ன பொண்ணு பாக்க சொல்லு. நம்ம  கோலாகாலமா அதை செலிப்ரேஷன் பண்ணிடலாம் என்று சொல்லி மூவரும் கட்டியணைக்க வெளியே சென்றிருந்த லோகேஷ் வரவும் சரியாக இருந்தது.

 

இவர்கள் மூவரும் கட்டியணைத்த படி இருந்ததை கண்டு நெக்குறுகி போனான்.

 

எப்படி இந்த பிரச்சனையை முடிப்பது என்று குழம்பி இருந்த சமயத்தில் தெய்வமாக வந்தவள் தான் பிரியா.

 

அதன் பின் திலீப்பிடமும் அழைத்து லோகேஷ் பேசி விடவும், அவனுக்கும் அப்போது தான் மனதில் அமைதி அடைந்தது. 

 

பின் குடும்பத்தில் குட்டையை குழப்பி விட்டேனே என்று இரவு முழுவதும் உறக்கத்தை கலைத்தவன் அவன்.

 

தனது வீட்டிலும் தங்களது காதலை பகிர்ந்து கொண்டவன் அவர்களை அழைத்துக் கொண்டு வைஷியாவை பெண் பார்ப்பதற்காக அன்றே புறப்பட்டு விட்டான்.

 

டாடி மம்மி நீங்க முதல்ல போங்க.  நான் எங்களோட காதல் வெற்றிக்காக ஒரு கிஃப்ட் என் பியூச்சர் வைஃப்க்கு வாங்க போறேன்.  நான் வாங்கிட்டு வந்துறேன். நீங்க போய் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு இருங்க என்றவன் அவர்களை அனுப்பி வைத்தவன் பைக்கை விருட்டென்று கிளப்பினான்.

 

ஒரு மணி நேரம் முப்பது நிமிடத்திற்கு மேலாக கடந்தும் கூட வைஷியாவின் வீட்டில் அமர்ந்திருந்த திலீப்பின் பெற்றவர்கள் எல்லா முறையையும் பேசி முடித்துவிட்டு நிட்சய தேதியோடு திருமண தேதியையும் குறித்து கொண்டு திலீப்பிற்காக காத்திருந்தார்கள். 

 

கிஃட்டு தேடப் போனாரா இல்ல செய்து எடுத்துட்டு வர போனாரான்னு தெரியல – இது மதி

 

ஏன் மாமா லேட் என்று ஃபோனில் அழைத்திருந்த மதியிடம் உன் அக்காவுக்காக ஒரு சர்ப்ரைஸ் வாங்க வந்திருக்கேன் என்று சொன்னவன் இன்னும் வராததை எண்ணி நொந்து போய்க் கொண்டிருந்தாள்.

 

சில்வியா என்ற ஒருவளின் மனம் மாற்றம் இரு வீட்டாரின் இன்பத்திற்கு வழிவகுத்து என்பது தானே உண்மை.  அதை கண்ணார கண்டவள் பெரும் அளவு மகிழ்ச்சி கொண்டதோடு தனது தோழியான பிரியாவை மனதில் நினைத்து நன்றி தெரிவித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

 

வீட்டின் சந்தோசத்தை கண்டு பூரித்து போனாள்.  

 

க்கீ..க்கீ… என்று ஹாரன் சத்தம் வரவும் மதி ஓடி சென்று எட்டி பார்க்கவும்,திலீப் வந்திருந்தான்.

 

அவன் வைத்திருந்த வண்டியின் முன்பு பெரிய பார்சல் இருக்கவும் ஐ என்று கட்டிக் கொண்டு  தூக்க ஓடினாள்.

 

“என்ன மாமா மொத கிஃப்ட் பெரிய அளவில் இருக்கு” – மதி.

 

பின்ன என் வீட்டுக்கு வர போற என்னோட வைஷு என்ன சாதாரணமா.  அதான் அவளுக்காக குவாலிட்டியா ஒரு கிப்ட்.  அந்த கிஃப்ட் அவ கூட இருக்கும் போதெல்லாம் என்னோட ஞாபகம் கண்டிப்பா அவளுக்கு இருக்கும்.  அதுக்காக தான் இவ்வளவு நேரம் தேடி தேடி நான் வாங்கிட்டு வந்திருக்கேன் இன்று சிலாகித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான் திலீப்.

 

ஹாஹா… வந்ததே லேட்டு இதுல வாசப்படியில அரை மணி நேரம் நாயமா – சில்வியா.

 

நீயுமா சில்லு… அக்காவும் தங்கச்சியும் ஒன்னு சேர்ந்துக்கிட்டு இந்த பெரிய அக்காவையும் மாமாவையும் கலாய்க்காம வாங்க இந்த பார்சல்ல பிரிப்போம்.

 

கூடவே லோகேஷும் சூழ்ந்து கொள்ள ஐவரும் சேர்ந்து அந்த பார்சலை பிரித்த தருணம் உள்ளே இருந்து இரண்டு நாய்க்குட்டிகள் வெளியே எட்டிப் பார்த்தன. 

 

வெள்ளை வெளேர் என்று கொழுத்து போய் புசுபுசுவென்று முடிகளுடன் க்யூ க்யூ சத்தத்தோடு எட்டிப் பாத்தா அவ்விரு நாய் குட்டிகளும் ஒன்று வைஷியாவை தழுவிக் கொண்டது.  மற்றொன்று சில்வியாவின் தலையைப் பிடித்து இழுத்தபடி அவளோடு கோர்த்துக் கொண்டது. 

 

நான் வாங்கிட்டு வந்த நாய்க்குட்டில கூட மதிய புடிக்கலையே ரெண்டுக்கும் என்று கலாய்த்த போது திலீப்பிற்கு ஒரு அடி அவளால் விடப்பட்டது. 

 

மாமா ரொம்ப ஓவரா பேசாதீங்க. இந்த பஞ்சுமிட்டாய் கலர்ல இருக்குற நாய் குட்டிக்கெல்லாம் என்ன பிடிக்கனும்னு அவசியம் இல்லை என்று விளையாட்டாக ஆரம்பித்தவள் என்னோட மன்னவன் எனக்காக காஸ்ட்லியான இதே மாதிரி ஸ்பெஷலான நாய்க்குட்டி வாங்கிட்டு வந்து சர்ப்ரைஸ் பண்ணுவார் நீங்களும் பார்ப்பீங்க பார் என்று சொல்லவும் அதுக்குள்ள அம்புட்டு கனவு கண்டுட்டையா மகாராணி என்று அவளது கன்னத்தை கிள்ளினான் லோகேஷ்.

 

என் அக்கா தங்கச்சிங்கள படிங்கடி படிங்கடின்னு சொன்னா மட்டும் மூக்கு வெடப்பா ஆகிடும்.  இதே கல்யாணம் காதல் சமாச்சாரம் பத்தி பேசினா அப்படியே குளுகுளுனு உக்காந்து பேசி பேசறாங்கப்பா… இதுங்களாம் பொம்மனாட்டிங்கன்னு சொன்னா யாராவது நம்புவாங்கல டா என்று திலீப்பிடம் குறைபட்டுக் கொண்டான் லோகேஷ்.

 

ஏண்டா இப்படி கேக்குற. உன் அக்கா தங்கச்சி உன்கிட்ட ரொம்ப வெளிப்படையா இருக்காங்க.  அப்படின்னா அவங்களை நீ ரொம்ப செல்லமா வளர்த்துகிறாய் என்று அர்த்தம் உன்ன மாதிரி ஒரு அண்ணாவோ, ஒரு தம்பியோ கிடைக்க உன் சகோதரிங்க தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.  

 

உன் மேல இருந்த நல்ல மதிப்பால் தாண்டா உன் அக்கா மேல எனக்கு விருப்பம் வந்துச்சு.  என்ன அவளை விட ஒரு வருஷம் நான் இளையவனா இருந்தாலுமே என்னை விட அவளுக்கு தான் ரொம்ப பொறுப்பு அதிகம். 

 

ஏன் எக்ஸாம்பிளுக்கு சொல்லனும்னா இந்த சின்ன youtube ல ஆரம்பிச்சு சினிமா ஃபீல்ட்ல எப்படி இறங்கணுங்கற வரைக்கும் நமக்கு இப்பவே கோச் பண்றவ, பின் நாட்களில் நம்ம எந்த வழியா போனால் நம்மளால மேனேஜ் பண்ண முடியும். நம்மளோட லைஃப் செட்டில் பண்ண முடியும்னு யோசிக்காமல்லா இருப்பா அவ.

 

சில்வியாவையும் சும்மா சொல்ல முடியாது டயலாக் ரைட்டர்ல  பயங்கரமா மிஞ்சிட்டாள்.   சொல்லப்போனால் நம்மளோட youtube பஸ்ட் சீரியஸ்லையே பேமஸ் ஆகுறதுக்கு அவளோட டயலாக் தான் முக்கியமான காரணமே!..

 

ஏன் உன் கடைக்குட்டி இருக்குதே அந்த மதி எடிட்டிங்ல வேற லெவல் பண்ணிருது.

 

ஆக மொத்தம் இந்த வீட்ல இருக்குற மூணுமே ரொம்ப தங்கமான குழந்தைங்க… ஒன்னே ஒன்னு தான் தெண்டத்துக்கு இருக்குது. அதுதான் என் பிரண்டு லோகேஷ் என்று அவனது காலை வாரினான் திலீப். 

 

செல்ல கொஞ்சலோடு வைஷியாவின் முகத்தை வருடியது அந்த குட்டி நாயில் ஒன்று.  மறு புறமும் சில்வியாவின் கையில் இருந்த குட்டி நாயோ தனது விரலில் உள்ள நகத்தினால் அவளது முகத்தில் ஒரு கோடிட்டது. 

 

தேதிகள் குறிக்கப்பட்டதையும் திலீப் இடம் சொல்லி விடை பெற்றவர்கள் திலீப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அவனோ வைஷியாவை காதல் பார்வையோடு பார்த்த படி பகர்ந்தான்.

 

                  தொடர்வேனே!…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!