அத்தியாயம் 12
காதல் மற்றும் குடும்பம் இணைவதில் நாம் பிரயத்தனப்படுதல் தான் காதலின் வெற்றிக்கு வழி வகுக்கும் அம்சம்!
சில்வியாவின் மனம் மாற்றம் திலீப் மற்றும் வைஷியாவின் காதல் பாதையில் விளக்கேற்றி வைத்தது. சுடரும் தீபம் போல அவர்கள் அன்பு மோல் ஓங்கிய தருணம் அவை!
இன்னும் மூன்று நாட்களுக்கு பின்னர் நிட்சயம் என்ற பரபரப்பில் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள்.
நிட்சயத்திற்கு தேவையான பதார்த்தங்களும் அவை செய்பவர்களையும் ஆர்டர் செய்ததோடு, பந்தல் போன்ற அமைப்புகளையும் சில்வியாவும் மதியும் பார்த்து பார்த்து கவனித்து கொண்டார்கள்.
லோகேஷ், ” மணமேடை அலாங்காரத்தில் கருத்தாய் இருந்தான்”.
வைஷியாவின், பூரிப்பான முகம் அவளுக்கு இந்த திருமணத்தில் எத்தனை ஆனந்தம் என்பதை தெள்ளத் தெளிவாக கேட்டது.
திலீப் மற்றும் வைஷியாவின் காதல் கொடி வெற்றி விழாவாக மாறிய தருணம் அவர்கள் சொந்தம் நட்சத்திரங்களாக வீட்டினை அலங்கரித்து இருந்தார்கள்.
இவங்க எங்க அத்த வைஷூ. இவங்க தான் என்ன சின்ன வயசுல இருந்தே நல்லா பார்த்துப்பாங்க. இப்ப வீடு மாத்தி வந்த அப்புறம் நான் அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணன். இப்ப உன்னால மீட் பண்ண டைம் ஸ்பெண்ட் பண்ற வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று வைஷியாவிடம் சில உறவுகளை அறிமுகம் செய்து வைத்து கொண்டிருந்தான் திலீப்.
தொலை தூரத்தில் பந்தலின் வெளியில் வாழை மரங்களை நட்டு அவற்றை கட்டிக்கொண்டு இருந்த சில்வியாவின் கண்களில் இந்த காட்சி படவும் அவள் இமைகள் தன்னிச்சையாக நீரூத்தன.
இவை யாவும் தான் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்த அவளின் ஆசை மனதை அடக்க அரும்பாடுபட்டாள்.
காதல் வசப்பட்ட மனது சில நிமிடங்கள் தடுமாறி இடம் புரண்டு விட்டது.
லோகேஷ் தான் சில்லு சமையல் காரங்க வந்துட்டாங்களாம்டா. போய் பிக்கப் பண்ணிட்டு வந்துடு என்று அனுப்பி வைத்தான்.
அத்தோடு வைஷியாவின் அருகில் சென்று நிட்சயத்துக்கு போடுற சாரியோட ப்ளவுஸ் ஆரியோ வொர்க் பண்ணிட்டாங்களான்னு விசாரிச்சையா வைஷூ. ரடியான கேட்டு சொல்லு சில்லுவ அப்படியே வாங்கிட்டு வந்துட சொல்றேன்.
கூடவே திலீப்பிடம் ஏன் மச்சி என்னோட இரண்டாம் தங்கச்சி கிட்ட பேச மாட்ற. அவ தான் மனசு மாறிட்டால்ல. அவளுக்கும் வலிக்கும்டா. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்குடா.
திருமண தேதியையும் நிட்சய தேதியும் குறித்ததோடு சரி சில்வியாவிடம் பேசுவதை தவிர்த்து விட்டான். அத்தோடு பார்ப்பதையும் கூட அவன் நிறுத்தி விட்டான்.
சமையல்கார்களை அழைத்து வந்தவள் இடம் வா சில்லுமா நம்ம பொட்டிக் வரைக்கும் போயிட்டு வந்துவிடலாம் என்று திலீப்பே சென்று அவளிடம் பேசினான்.
அடேங்கப்பா பொண்ணு உறுதி பண்ண அப்புறம் இப்ப தான் புத்தர்க்கு புத்தி வந்திருக்கு போல என்று சொன்னவளிடம்,
உன் அளவு திலீப்பிற்க்கு தெளிவு இல்லையே சில்லு என்ன பண்ண என்று அவளோடு ஸ்கூட்டியில் அமர்ந்தான்.
அக்காவோட டிரஸ் ரெடியாச்சுன்னு மதி சொன்னா திலீப். நானே போய் வாங்கிட்டு வந்துடுறேன் நீ இறங்கு என்று அவனை விளக்கி வைக்க முயற்சித்தாள்.
என் வருங்கால பொண்டாட்டி டிரஸ் வாங்க நான் உன் கூட வர கூடாதுன்னு எனக்கு நீ ஆர்டர் போடுறயா சில்லு. இரு இரு இப்பவே இதை நான் வைஷியாகிட்ட சொல்லுறேன் என்று அவன் இறங்கி அடம்பிடிக்க சரி சரி உக்காரு திலீப் என்று மீண்டும் அமர சொன்னாள்.
சில்வியாவின் பின்புறமாக அமர்ந்தவன் அவளின் மன தடு மாற்றத்தை அறியாமல் அவளை இலகுவாக்க தோல் மீது கை போட்டு அமர்ந்தான்.
இதுவரை அமைதியோடு பயணித்த அவளது வண்டி தடுமாற்றத்தில் இதய படபடப்பில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படி எச்சில் விழுங்கிய படி வண்டியை ஓட்டிய படி ஒரு வளைவில் வண்டியை வளைத்தாள்.
மன தடு மாற்றத்தோடு பாதையும் தடுமாறி பயம் அவளை ஆட்கொள்ள வண்டியில் இருந்து சரிந்து விழுந்தாள்.
பின்னால் இருந்த அவனுக்கும் கைகளில் சரித்து விட பதறி விட்டாள்.
திலீப் திலீப் வலி எதாவது இருக்கா?…நான் தான் ஒழுங்கா பாக்காமல் என்று உலரியவளை அமர வைத்தவன் இங்க பாரு ஐ ம் ஆல் ரைட். உனக்கு தான் அடிபட்டு ப்ளட் லாஸ் ஆகுது. நீ என்ன கேர் பண்ற. உனக்கு வலிக்குதா இல்லையா?..வா நம்ம பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல ஒரு டீடி போட்டு வந்திடலாம் என்றவனை விழி அகலாது பார்த்தாள்.
ஏய் ஏய் சில்லு சில்லு ஆர் யூ ப்ரசெண்ட் என்று அவளை உலுக்கிய பின் தான் நினைவிற்கு வந்தாள்.
அவனது அன்பு வார்த்தை மற்றும் ஆறுதல் பேச்சு அவளுக்குள் அதீத குழப்பத்தை ஏற்படுத்தியது.
அவன் மீது அலைப்பாய்ந்த தனது கண்களை கட்டுப்படுத்துவதில் அவள் பெரும்பாடு பட்டாள். அருகில் இருந்த மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டு விட்டு மகிழ்ச்சியாக நிட்சயத்திற்கான உடையான லெஹங்காவினை வாங்கியதோடு வீட்டிற்கு புறப்பட்டார்கள்.
வீட்டிற்கு வந்ததும் அவளின் கையில் இருந்த கட்டினை பார்த்து பதறி விட்டாள் வைஷியா. கூடவே லோகேஷின் கண்கள் வேறு கலங்கி வலியை உணர்ந்தது.
செல்வி மற்றும் மோகன் அழுகையை சத்தத்தோடு அழுது காட்டி விட்டார்கள்.
அச்சோ மவளே இந்த நல்ல நேரத்துல ஏன் உனக்கு கெட்டது நடக்குது. வலிக்குதா ராசாத்தி என்று அழுது அரற்றிய செல்வியை சமாளிப்பது மோகனுக்கு குதிரை கொம்பானது.
விடுடி பிள்ள எதோ அவசரத்துல வேல பண்ணி இப்படி ஆகிடுச்சு. அதுக்கு ஏன் இப்படி அழுகுற. நம்ப பிள்ளைங்க நம்ம அழுறத பார்த்து ஃபீல் தான் பண்ணுவாங்க. சோ அமைதியா இருமா என்று சமாளித்தார்.
அதன் பின் தான் செல்வி அமைதி ஆனார்.
திலீப்பின் கண்களில் தனது தம்பியின் நினைவுகள் வந்து சென்றது அந்த தருணத்தில்!…
திலீப் தான் அதன் பின் தன்னை சமாளித்து கொண்டு வீட்டில் இருந்த அனைவரையும் சமாதானம் செய்தான்.
நான் தான்மா வண்டிய கீழ போட்டேன். பாப்பாவா விழல என்று சொல்லவும் தான் அனைவரும் அமைதி ஆகி விட, ஏன் என்னை காப்பாற்ற அவன் மேல் தவறை போட்டு கொண்டான்.
இதன் பின் திலீப்பினை அங்கு யாராவது திட்ட முடியுமா?… வருங்கால மாப்பிள்ளையை திட்டும் உரிமை இனி யாருக்கு உள்ளது. அத்தோடு அந்த செய்திக்கு முடிவு வைத்து விட்டான் திலீப்.
இல்லை எனில் அவர்கள் சில்வியாவை திட்டி தீர்த்து இருப்பார்கள். வலியை விட மோசமானதாக அமைந்திருக்கும் அவர்கள் பேசுவது.
மீதமிருந்த இரண்டு நாட்களில் வலியோடு உலாவியவளின் இம்சை அவள் மட்டும் அறிந்தது.
உணவு உண்ண முடியாமல், கையை சரிவர மடக்க கூட தவித்து போனாள். மதி தான் அவளுக்கு உணவு ஊட்டுவது, தண்ணீர் ஊற்றி விடுவது போல அனைத்து வேலைகளையும் அவள் தான் செய்தாள்.
வலிக்குதா சில்லுமா என்ற தாங்கலையுடைய செல்வி, ஆறுதலான அப்பா என்று அனைவரும் கையில் தாக்கினார்கள் என்றாலும் வந்த உறவினர்களில் சிலர் அக்காவுக்கு நிட்சயம் நேரத்துல இப்படி அபசகுணமா நடந்து இருக்கு என்னன்னு பாருங்கையா என்று மூதாட்டியும், ஜோசியம் பார்த்து தானே மாப்பிள்ளை ஃபிக்ஸ் பண்ணீங்க என்ற சொல்லும் அந்த கோலா கலத்தில் இடம் பெற்றது சொந்த காரர்கள் என்ற சுயரூபத்தில்.
இதுல என்ன இருக்கு பாட்டி. அவளுக்கு தானே வலி வந்து இருக்கு. எனக்கு இல்லையே என்று வைஷியா அவரை சமாளிப்பதற்கு கூற சில்வியாவின் விளையாட்டு குணம் அவற்றை தவறாக புரிந்து கொண்டது.
விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் புதைந்தவள் வைஷியாவின் இரு கையிலும் மருதாணி போட்டு முடிக்கும் வரை வெளி வரவில்லை.
சில்லு வந்து சாப்பிடு என்று மதி அழைத்த பின் எட்டிப் பார்த்தவளின் மூளை அப்போது தெளிவற்று இருந்தது.
வந்திருந்த சொந்தக்காரர்கள் அனைவரும் வைஷியாவினை நெட்டி முறித்தார்கள். பொண்ணுக்கு உண்டான கலை உண்டாயிருச்சு நம்ம பிள்ளை கிட்ட என்று சிலர் பெருமையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
திலீப்பையும் கூட அவர்கள் நல விசாரித்து வைத்தார்கள்.
இரவு உணவை உண்டு முடித்தவள் வைஷியாவின் முகத்தை கூட பார்க்காமல் மீண்டும் உறங்கச் செல்ல வைஷியாவே சில்வியாவினை தடுத்தாள்.
ஏன்டி காலையிலிருந்து என்கிட்ட ஒழுங்காவே பேச மாட்டேங்கற என்னாச்சு உனக்கு மறுபடியும் என்று அவளது கையை பிடித்து பேசியவளிடம்,
கையெடு வைஷு “காரியம் ஆகுற வரைக்கும் கால புடிப்பீங்க அப்புறம் கால மாறி விடுவீங்க. அதுக்கு அப்புறம் தலைக்கு மேல அடி விழும்னு பெரியவங்க சொன்னது ரொம்ப சரியா தான் போச்சு”, அடிபட்டது எனக்கு தானே நீ சொந்தக்காரங்க ஒருத்தவங்க கிட்ட சொல்லிட்டு இருந்தது எனக்கு கேட்டுச்சு.
என்னடி சில்வியா பைத்தியக்காரி மாதிரி பேசுற. இந்த விசேஷத்தில் இருக்கிற ஒரே குறை உன்னுடைய அடிபடுதல் மட்டும் தான். அத வச்சு வந்திருக்க சொந்தக்காரங்க ஏதோ ஒரு குட்டையை குழப்ப பாத்தாங்க. நான் அவங்களை சமாளிக்கறதுக்காக அப்படி சொன்னேன். நீ இதையே பெரிய விஷயமா மாத்துறே.
நீ பேசறது உனக்கு வேணா சின்ன விஷயமா இருக்கலாம். அவளுக்கு தான் அடிபட்டு இருக்கு எனக்கு ஒன்னும் அடிபடல நீங்க வந்து என்னோட விஷயத்துல விசேஷத்தில் இந்த குட்டைய குழப்பங்கள் சொன்னது மாதிரி எனக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி இருந்தது.
நீ சின்ன பிள்ளைன்னு நம்ம அம்மா சொல்றதுல இருக்க உண்மை இப்பதான் எனக்கு புரியுது . எந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நடத்துகிறோமோ அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ என்றவளை முறைத்த சில்வியா,
நேரத்துக்கு தகுந்த மாதிரி நடிந்துக் கொள்வது, பொய் பேசி மத்தவங்கள மயக்குறது எல்லாம் எனக்கு தெரியாத விஷயம் வைஷியா. உனக்கு வேணா அது கை வந்த கலையா இருக்கும். என்ன பொறுத்த வரைக்கும் நேர்மையா எதை செஞ்சாலும் சரிதான் என்று எடுத்தெறிந்தால் போல பேசிவிட்டு இடத்தை காலி செய்தாள்.
அவள் மனம் மாறிவிட்டால் என்று நினைத்து இருந்த வைஷியாவிற்கும் இப்போது அவள் பேசியது அதிர்ச்சியாக தான் இருந்தது.
என்ன இருந்தாலும் அவளுக்குள் ஏதோ தன் மீது கோபம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டவள் அதன் மேல் அவளிடம் சண்டையிடாமல் பொறுத்துப் போக ஆரம்பித்தாள்.
வைஷியாவின் இந்த பொறுத்து போகும் குணம் அவளின் வாழ்நாட்களின் கடைசி காலங்களில் தன்னை எண்ணிக் கொண்டிருப்பதை மறந்து போனதுதான் வியக்கத்தக்கது எனலாம்.
அவளின் இந்த பொறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி சில்வியா நொடிக்கு ஒரு முறை அவளை தனது வார்த்தைகளால் காயப்படுத்த தொடங்கினாள்.
அங்கிருந்த மற்றவர்கள் வைஷ்யாவினை ஒரு மாதிரியாக பார்க்க அவளும் சிறுபிள்ளைத்தனமாக அவள் விளையாடி விட்டு செல்கிறாள் என்று மற்றவர்களிடம் சொல்லி புன்னகையை பூத்துவிட்டு நகர்ந்தாள்.