எல்லாம் பொன் வசந்தம்…(13)

5
(2)

அத்தியாயம் 13

 

 

காதலின் உந்து சக்தி எப்போதும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருப்பது தான்!…

சில்வியா மாறிவிட்டாள் என்று நம்பியிருந்த அனைவருக்கும் அவளின் இந்த செயலும் பேச்சும் ஆற்றாமையை ஏற்படுத்தியது.

தனது இரு மகள்களின் சண்டைகளை கண்டு பரிதவித்து போனார்கள் மோகனும் செல்வியும்.

அவ்வப்போது கத்தியில் குத்துவது போன்ற வார்த்தைகளை கொண்டு என்னை காயப்படுத்தும் தங்கையை நினைத்து கவலைப்பட செய்தால் வைஷியா.

அவ என்னால தான் இப்படி முரடு பிடிச்ச மாதிரி இருக்கா.

இத்தோடு இதை பத்து முறை திலீப்பிடம் சொல்லி புலம்பி விட்டாள்.

யம்மாடி இன்னைக்கு முழுக்க உன்ன சமாதானம் பண்ணியே எனக்கு பொழுது போயிடுச்சு.  முதல்ல சாப்பிடு, அப்புறம் வர பிரிச்சனைய அப்புறம் பாத்துக்கலாம் என்று அவனும் அன்று முழுவதும் அவளுக்கு ஆறுதல் சொல்லி ஓய்ந்து விட்டான்.

சிறுபிள்ளை என்று விளையாட்டாகவும் எடுத்து கொள்ள முடியாது, மிரட்டவும் முடியாத சங்கட நிலையை தழுவினாள் வைஷியா.

அவளது குழப்பங்களுக்கே விடை தெரியாத போது மறுநாள் அவளுக்கு காத்திருந்த அதிர்ச்சி அவளை மனதுடைய செய்தது.

ஜாக்கியும் ஸ்னோப்ரும் அடிபட்டுக் கொண்டு இருந்தார்கள்.   முதலில் வவ் வவ் என்று சத்தத்தோடு ஆரம்பிக்க, பிறகு தங்களை காயப்படுத்திக் கொண்டு அடிபட ஆரம்பித்து விட்டார்கள்.

அப்போது தான் எழுந்து வெளி வந்தவள் ஜாக்கியும் ஸ்னோபரும் அடிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்து இரு நாய்களுக்கும் அடி போட்டு விட்டு நகர்ந்தாள் வைஷியா.

அவ்விரு நாய்களும் அப்போதும் அடங்காமல் மீண்டும் அடிபட்டு கொண்டே இருக்க ஜாக்கியை பிடித்து ஸ்னோபர் கடித்து வைத்து விட்டான். இதை சரியாக வெளிவந்த சில்வியா பார்த்து விட அவளுக்கு ஸ்னோபர் மீது தலை கால் புரியாமல் கோபம் எழுந்தது.  ஒரு பெரிய கட்டையை எடுத்துக் கொண்டு அந்த நாய்க்குட்டியை அடித்தாள்.

ஸ்னோபரும் வலி தாங்க முடியாமல் கத்திவிட, வெளியே நின்றிருந்த வைஷியாவின் காதில் விழுந்த நாயின் அழுகை அவளை வீட்டு போர்ட்டிக்கோவிற்க்கு அழைத்தது.

வந்தவள் சில்வியாவினை கண்டு என்னடி அதுவே வாய்யில்லாத ஜீவன்.  அத போய் அப்படி அடிக்கிறயே மனசாட்சி இருக்கா?…

ஏன் இவன் என் ஜாக்கிய கடிக்கும் போது உன் மனசாட்சி எங்கம்மா போச்சு.  சுயநலவாதி என்று அப்போதும் அவளை கடிந்து கொண்டாள்.

சமயம் வாய்க்கும் போதெல்லாம் சில்வியா வைஷியாவினை திட்டி தீர்த்துக் கொண்டே இருந்தாள்.

இன்னும் ஒரே மாத காலம் தான் இவளது இந்த தொடர் பேச்சிலிருந்து விடுபட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தால் வைஷியா.

அதற்குள் பூகம்பமே வெடித்து விடும் என்று கனவா கண்டிருப்பாலா அவள்!.

ஆம் ஸ்னோபரின் மூலமாகவே முதல் பூகம்பம் வெடித்தது.

ஸ்னோபரும் ஜாக்கியும் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் இவ்விருவரும் சத்தமிட்டு கொண்டதால் பயந்து அமர்ந்து கொண்டது அந்த இரு நாய்க்குட்டிகளும்.

இவர்கள் சண்டையிட்டு விட்டு உள்ளே சென்றதும் இரு நாய்க்குட்டிகளும் பிடித்து கடித்துக் கொண்டு அடிபட்டது.  இதில் ஸ்னோபர் ஜாக்கி கழுத்தை நறநறவென்று கடித்து விட்டான் அவனது குட்டி பற்களை வைத்து.

ஸ்னோபரும் குட்டி நாய் தான் …ஜாக்கியும் கூட குட்டி நாய் தான் ‌…அதன் தோலும் மென்மையாக இருக்க ஸ்னோபரின் பற்கள் ஜாக்கி கழுத்தை நன்றாக கவ்வியது.  இதன் விளைவு ஜாக்கி மிகவும் மோசமான நிலைக்கு  சென்று விட்டான்.

வெளியில் வந்த செல்வியின் கண்களில் இக்காட்சி பட்டுவிட அடித்துக் கொண்டு இருந்த நாய்களை பிரித்து விட்டவர் ஜாக்கியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டார் அவற்றுக்கு சில மூலிகைகளை அறைத்து வைத்தவரின் கண்ணில் கண்ணீர் உகுந்தது.

ஸ்னோபரை பிடித்து டாக் பெல்டில் கட்டிப்போட்டவர் அந்த நாய்க்குட்டிக்கு மருந்து போட்டு விட அது அவரையும் கடிக்க முயற்சித்தது. அதனால் ஸ்னோபரை கட்டியே வைத்தார்கள்.

சில்வியா, வைஷியா மற்றும் மதி மூவரும் இவ்விரு நாய்க்குட்டிக்களுக்காக பரிதாபப்பட்டு மனக்கவலையில் திரிந்தார்கள்.

சில்வியா மதியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினாள்.

எனக்கு வைஷியாவ ரொம்ப பிடிக்கும் டி. ஆனால் இப்போ அவ மேல ரொம்ப வெறுப்பா இருக்கு.  எனக்கு பிடிச்ச எல்லா பொருளையும் அவளே எடுத்துக்கிறானு தோணுது.  இது சரியா இல்ல தப்பாடி எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது…

சில்வியா நீ ரொம்ப மன குழப்பத்துல இருக்க.  வைஷு ரொம்ப கஷ்டப்பட்டு தான் நம்ம குடும்பத்தை மேல கொண்டு வந்து இருக்கா.  திலீப்  தான் வைஷுவ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறாரு.  மத்தபடி இவ்வளவு நாள் நம்ம கூட தானே வைஷூ இருக்கா? யாராவது ஒரு பையனை பார்த்து லவ் பண்ணாலா இல்லைல்ல.  இது திலீப்க்கும் அவளுக்கும் மனசு ஒத்துப்போனதுனால வந்த காதல் தானே வழிய மத்தபடி உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிக்கணும்ன்றது நம்ம அக்காவோட ஆசை கிடையாது.

அவளோட ரொம்ப ரொம்ப ஆசை என்ன தெரியுமா நம்ம ரெண்டு பேரையும் சந்தோசமா வச்சுக்கணும். திருப்தியா வச்சுக்கணும்.   எது கேட்டாலும் இல்லைன்ற ஒரு வார்த்தை அவ கிட்ட இருந்து வரக்கூடாது என்பது மட்டும் தான்.

அதுக்காக அவ இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டாள்.  இப்பதான் ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கா அதுக்கு காரணம் திலீப்னு தெரிஞ்சதும் அவன கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறாடி.  நம்ம சந்தோஷத்துக்காகவே வாழ்ந்த அவளுக்காக நம்ம என்ன விட்டுக் கொடுக்க முடியும்?  இந்த விஷயத்துல தான் நம்மளால விட்டுக் கொடுக்க முடியும். இதுக்கு மேல நீயும் புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன் சில்வியா…

மதியும் தன் மனதில் தோன்றிய அனைத்தையும் தனது இளைய அக்காவிடம் சொல்லி பெரிய அக்காவிற்கு நல்வாழ்க்கை அமைய போவதையும் சொல்லி மகிழ்ந்து கொண்டாள்.

சில்வியாவும் தன் தோழியும் இதையே தான் சொன்னாள். தனது தங்கையும் இதையே தான் சொல்லுகிறாள். இவ்விருவருக்கும் புரிந்தது ஏன் எனக்கு புரியவில்லை என்று மீண்டும் தன் மனதை வருத்த தொடங்கினாள்.

மூளை சொல்லும் அறிவுரையைக் கேட்கும் மனிதர்களையும் நம்பிவிடலாம். அதேபோல் மனது சொல்லும் அறிவுரையை கேட்கும் மனிதர்களை கூட ஓரளவிற்கு நம்பி விடலாம்.  இவ்விரண்டும் கூறும் செயல்களை எண்ணி எண்ணி குழம்பும் சில்வியாவை எப்படி நம்புவது.

சில்வியா அவ்வப்போது தோன்றும் எண்ணங்களுக்கு தகுந்தார் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த வைஷியா தான் அமைதியாகி போய்க் கொண்டிருந்தாள்.

இரு தினங்கள் கழித்து திலீப் வைஷியாவிற்கு பெரிய சர்ஃப்ரைஸ் ஆக ஒரு லெவன்டர் கலர் நிஷான் காரை கொண்டு வந்து வாசலின் முன்புறம் நிறுத்திவிட்டு ஹாரனை அடித்து கொண்டே இருந்தான்.

வெளிப்புறம் என்ன ரொம்ப நேரமாக சத்தம் என்று வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து விட, வேகமாக திலீப்  ஓடி வந்து வைசியாவின் கண்களை இறுகப் பற்றிக் கொண்டவன் அவளுக்கு காரை சர்ஃபிரைசாக கொண்டு வந்து காட்டினான்.

இவ்விருவரும் செய்த கலாட்டாவில் மற்ற இரு சகோதரர்களும் அதிர்ந்து தான் போனார்கள்.

வைஷியாவின் பெரிய கனவே ஒரு நல்ல கார் வாங்கி வெகு தூரம் டிரிப் செல்ல வேண்டும் என்பது தான்!…

நம்மைப் போன்ற சாமானிய பெண்களுக்கு எல்லாம் இதுவே பெரிய கனவு என்று தனது தங்கைகள் இருவரிடமும் சொல்லி சிலாகித்துக் கொள்வாள்.

மதி தான் திலீப் போன வாரம் கேட்டுக் கொண்டதற்கு வைஷியாவிற்கு கார் தான் வாங்க வேண்டும் என்று ஆசை என்று விளையாட்டாக சொல்ல அது இப்போது விபரீதமாக வீட்டின் முன் வந்து நிற்கிறது.

சூப்பர் திலீப் எவ்வளவு அமௌன்ட்?…வைஷியா

எவ்வளவு அமௌண்டா இருந்தால் என்ன பண்ண போறீங்க மேடம்?

சொல்லு திலீப்.  இது எனக்கு புடிச்ச கலர்லையே எனக்கு புடிச்ச டைப் மாடல் கார் கொண்டு வந்து நிருத்திருக்க.  இது எந்த மாதிரி அப்ப எவ்ளோ அமௌன்ட்னு கூட நான் தெரிஞ்சுக்க கூடாதா என்ன?…

எல்லாம் தெரிஞ்சுக்கலாம் மேடம் ஜஸ்ட் செவன் லேக்ஸ் தான் என்று சொல்லியவன் சரி வா வா காபி ஒரு கப் குடுங்க…. என்ன வந்த மாப்பிள்ளையே வெளியவே  நிக்க வச்சு பேசிட்டு இருக்கீங்க என்று அவன் பாட்டுக்கு உள்ளே அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

செவன் என்றதும் மூச்சு முட்டியது வைஷியாவிற்கு.

இவ்வளவு காசு போட்டு இப்ப இந்த கார் ரொம்ப அவசியமா திலீப்.

அப்ப கார் காசு வெறும் ஏழு ரூபான்னா அவசியமா ஆகுமா வைஷியா.  தேவை இருந்தால் வாங்க தான் செய்யனும் என்று முதலில் கலாய்த்தாலும் பிறகு அவற்றின் தேவையை விளக்கினான்.

பின் காபி அருந்தி விட்டு நால்வரும் காரில் அமர்ந்து காரை ஓட்டிப் பார்த்தார்கள்.

சில்வியாவிற்கும் கார் ஓட்ட வேண்டும் என்று வெகு ஆர்வம் மூண்டது.

அதேபோல் வைஷியாவிற்கும் தோன்ற திலீப்பிடம் நான் கார் டிரைவ் பண்ணவா என்று குலவினாள்.

ஆத்தா என் உயிர் கூட விளையாட எனக்கு விருப்பம் இல்லடி மா.  நானே இரண்டு மாசமா கிளாஸ் போய் தான் கத்துட்டு இருக்கேன்.  மேரேஜ் ஆகட்டும் உனக்கு நானே சொல்லித் தரேன் என்று அவளை செல்லமாக கன்னத்தை பிடித்து கிள்ளி சொல்லிஷவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

திஸ் இஸ் டூ மச் திலீப்… ரெண்டு வீல் சுத்தி மூணாவது பிரேக் போடணும் இதுக்கு ஓவரா பில்டப் போடுற…

என்ன ரெண்டு வீல் சுத்தி பிரேக் போடனுமா?… எதோ போண்டா சுடுற மாதிரி ஈஸியா சொல்ற… கண்ணு,காது மூக்கு வாயிலிருந்து எல்லாம் ஒன்று மேலே கான்சன்ட்ரேஷன் இருக்கணும்…

அது மிஸ் வைஷியாவுக்கு இப்ப இல்லனு நினைக்கிறேன்…

என இருவரும் மாறி மாறி பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

க்கும்… என்று தனது தொண்டையை சொறுமி பின்னால ரெண்டு சின்ன பிள்ளைங்க இருக்குறாங்கனு விவஸ்தை இல்ல என்ன இப்படி பண்றீங்க… இது மது.

சிரித்து மழுப்பி விட்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் திலீப்.

காதலியாக இருந்து தனது மனைவியாக போகும் அவள் கேட்டு திலீப் தற்போது கற்றுக் கொடுக்க இல்லையெனில் தான் எல்லாம் எம்மாத்திரம் என்று சிந்தித்தவள் அவளது கார் ஓட்டும் ஆசையினை அவளுக்குள்ளே புதைத்துக் கொண்டாள். -சில்வியா

வீட்டில் மீண்டும் இரு நாய்க்குட்டிகளும் சண்டை பிடித்தபடி  இக்காரினை வழி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அறியாத நால்வரும் சந்தோஷத்தில் திளைத்தபடி காரினை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

தொடர்வேனே!!….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!