அத்தியாயம் 15
காதலும் கலாச்சாரமும் ஒத்து போவதில் பிழையில்லை எனில் கல்யாணம் சுவர்க்கமாக அமையும்.
மதியோடு பேசிக்கொண்டே காரை ஓட்டி வந்த சில்வியாவிற்கு முன்பு நின்றிருந்த கூட்டங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின.
அதே பதற்றத்தோடு அவள் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக ஸ்கிரட்சை அமைத்து விட்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஏறிய இந்த விபத்தில் பற்பல சேதங்கள் ஏற்பட்டன.
கார் மோதலின் பின் நடந்த விபரீதங்கள் அனைத்தும் ஒரு வினாடி பொழுதில் நடந்து முடிந்த கதை.
வைஷியாவினை தன் மார்போடு அணைத்துக் கொண்டு எழுத்துரு டி என்று கதறி கொண்டு இருந்தான் திலீப்குமார்.
பாவம் அவனுக்கு தெரியுமா தெரியாதோ என்னவோ அவள் இப்போது சுவர்க்க வாசல் கதவின் முன்பாக நின்று அவனை பார்த்து கொண்டிருக்கிறாள் என்பதை!..
ஆம்! நடந்த விபத்தில் கார் ப்ரேக் அற்று வர வந்த வேகத்தில் கூட்டித்தில் இருந்த அனைவரையும் இடித்து வைஷியாவினை தூக்கி வீசியது தான் நடந்த சம்பவம்.
காரின் மேற்புறம் பறந்து சென்று பின் புறத்தில் முகத்தில் அடிபட்டு பின்புறமாக திரும்பி விழுந்தவளின் பின் புற தலையில் இருந்து சிவப்பு திரவம் வெள்ளம் போல் பாய்ந்தது.
இதன் விளைவு அடுத்த இரண்டு நிமிடத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தாள் திலீப்பின் காதலி வைஷியா.
அவன் வாழ்வில் அவனுக்கு நடந்த அகோரமாக அன்று நடந்ததை அறிந்தவன் அதற்கு காரணமானவள் காரிலிருந்து வெளியே வரவும் அவள் மீது தலைகால் புரியாத அளவு கோபம் பிறந்தது.
வெளியே வந்த அவளின் கழுத்தை நறநறவென தூக்கி பிடித்தே விட்டான் திலீப் என்ற ராட்சசன்.
உன்ன நான் உயிரோடு விட மாட்டேன் டி என்று அவளை நெறித்தவன் கண்களில் தீக்குழம்புகள்.
ஆசையாசையாய் காதலித்து திருமணம் செய்ய போகும் தனது இல்லற துணையை இல்லாமல் செய்த சில்வியாவின் மீது கொலைவெறியே அவனுக்கு உண்டானது.
இன்னும் சிறிது நேரம் அவன் பிடி தளர்த்தாமல் இருந்திருந்தால் அவளும் அன்று சுவர்க்கம் சென்றிருப்பாள்.
கூட்டத்தில் இருந்த ஒருத்தர் திலீப்பின் பிடியை நகர்த்தவும் தான் அவன் சுய நினைவுக்கு வந்தான்.
கை கால் உதரலோடு வெளியே வந்த மதி சில்வியாவின் கையை ஓடிச்சென்று இறுக்கி பற்றி கொண்டாள்.
சில்வியாவும் மதியும் கலங்கிய நிலையோடு ஓடிச்சென்று வைஷியாவினை தூக்கிய தருணம் ப்ரேக் அற்ற காரினை தனது அக்காவின் மீது விட்டது பிம்பமாக வந்து செல்ல இப்படி பண்ணிட்டனேக்கா என்று கதறி அழுதாள் மதி.
அவளின் அழுகையை செவி மடுக்கும் அளவெல்லாம் அங்கு யாருக்கும் நேரமில்லை.
ஆம்புலன்ஸ் வந்துவிட அழுகையோடு அவற்றை பின் தொடர்ந்தவர்களுக்கு அடுத்த ஒரு வாரம் எப்படி சென்றது என்றே இன்னும் அறியாத ஒன்று.
அதிலும் அடுத்த வாரத்தில் திலீப் கொடுத்த பேரதிர்ச்சி அதற்கு மேலானது.
சில்வியாவின் நிலை வேறு அந்தோ பரிதாபம் ஆனது. ஆம் அவன் வைத்த ஆப்பு அவளுக்கானது மட்டுமே!…
மோகனிடமும் செல்வியிடமும் கெட்டது நடந்து போச்சு. இப்படியே எல்லாரும் ஒடுங்கி போய் இருந்தால் என்ன ஆகுறது.
நான் சில்வியாவ என்னோட சினிமா ஃபீல்ட்க்கு நடிக்க கூப்பிட்டு போறேன். அதுக்கு நீங்க ஒத்துழைக்கனும்.
அப்பதான் சில்வியாவும் மதியும் அதுல இருந்து வெளிய வர முடியும். இல்லைனா நாலு சுவற்றுக்குள்ளையே முடங்கி போய்டுவாங்க என்று என்னவெல்லாம் பேசியவன் அவர்களிடம் அனுமதியும் பெற்றான்.
மதியும் தனது தோழியை பார்க்க சென்றிருந்த நேரமென்பதால் சில்வியாவின் அறைக்கு சென்றவன் சினிமா ஃபீல்ட்க்குள்ள உனக்கு வர விருப்பம் இருக்கா என்று மென்மையாக ஆரம்பித்தான்.
இல்லை என்று அவள் வேகமாக சொல்லவும் இருந்தாலும் இல்லைனாலும் நீ வந்து நடிச்சு தான் ஆகனும். நல்லவ மாதிரி நடிச்சு என் தங்கத்த கொலை பண்ண உன்ன நான் எப்படிடி சும்மா விடுவேன். நீ ஏன் வாழுறோம்னு ஒரு ஒரு நாளும் துடிக்கனும். அதே மாதிரி வாழாம சாகவும் வழியே இல்லாமல் நீ தவிக்கனும்டி. அப்ப தான் என்னோட தங்கத்தோட ஆத்மா சாந்தி அடையும் என்று பேரதிர்ச்சியை அவளுக்கு கொடுத்தான்.
சில்வியா செய்வதறியாது நின்றாள். நான் ஒன்னுமே என்று சொல்ல வருவதற்குள் மதி இன்னைக்கு எடிட்டிங் ஒர்க் சூப்பர் என்று உள்ளே வந்தாள்.
அவளை பார்த்ததும் ஏதோ சொல்ல துடித்த உதடுகளை மடித்து வைத்து கொண்டவள் அமைதியாக சமைந்தாள்.
திலீப் சில்வியாவை ஓரக்கண்ணால் பார்த்தவன், நீ செத்த என்று சைகை செய்து விட்டு கிளம்பினான்.
நடந்த விபத்தின் விபரீதம் வைஷியாவின் இழப்பு என்றால் வீரியம் சில்வியாவின் வாழ்க்கை என்றானது.
அதை அறியாத மதிக்கு இப்போது அது அறிய வந்த பின் தான் நடந்த அனைத்திற்கும் விடை புரிந்தது.
அப்படியெனில் சில்வியாவின் முதல் படம் நின்றது, அவளுக்கு விருப்பமானவனை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது என்றும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி வந்தது.
தவறாக புரிந்து கொண்டவன் இடம்
உண்மையை சொல்லலாம் என்றால் அவன் தலைக்கேறிய போதையில் உள்ளான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பதை மறவாதவள் அவள்.
ஆதலால் விடிந்ததும் நடந்த உண்மையை விளக்கி விட வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தவள் இப்போது புறப்பட்டாள் அரை மனதுடன்.
அவள் இந்த மன பிதட்டலோடு காரை ஓட்டி கொண்டு செல்ல அவளின் கவனம் அவள் அக்காவின் திருமணம் நடந்த விதத்தை நினைவு கூர்ந்தது.
வைஷியா இறந்து ஒரு வருசம் ஆச்சு. அதையே நினைச்சு வருத்தப்பட்டு கிடக்க இது நேரம் இல்ல. எனக்கு சில்வியாவை கல்யாணம் பண்ணி வைங்க என்று அவன் சொன்ன அந்த தருணம் தான் மோகனை உயிர் பிழைக்க வைத்தது எனலாம்.
அவருக்கு முதல் மகளின் மரணமும், இரண்டாம் மகளின் கல்யாணம் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவும் அவரை நிலை குலைய வைத்ததோடு நெஞ்சு வலியும் ஏற்பட்ட தருணம் திலீப்பிடம் மோகனும் சில்வியாவின் முடிவை சொல்ல அப்போதே அவளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவன் அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று மோகனுக்கு வாக்கு கொடுத்தான்.
அத்தோடு விட்டு விடாமல் அந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய தொடங்கிய போது சில்வியா எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல என்றவளுக்கு தான் இப்போது பதிலடி கொடுத்து கொண்டிருந்தான்.
சில்வியா பெற்றோர்களின் சொல்லை இவ்வளவு நாள் தட்டிக் கழித்து விட்டாள். ஆனால் தந்தையின் உடல் நலம் இப்போது அவளை கேள்விக்குறிக்கு தள்ளி விட்டது.
அது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திலீப் குமார் அவனது திருமணத்தை கோலாகலமாக அற்று ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண தயாரானான்.
வளர்ந்து வரும் நடிகன் என்பதால் விடிவதற்குள் முடிந்த தாலி ஏறுதல் விழா, ஹாப்பிஸ் ரிஜிஸ்டர் என்று அவன் பணத்திற்கு வளையாத இடமே இல்லை.
இனிமே அணுஅணுவாய் சித்திரவாதை படப்போற. என் வீட்டு நாய்க்கு இருக்க மரியாதை கூட உனக்கு இருக்காதுடி என்று திலீப் சொன்ன சொற்கள் இப்போது சில்வியாவின் கண்களை நனைத்தது. அனைத்தையும் சொல்லி முடித்த மதி மெய் மறந்து நின்றாள்.
இவ்ருவர்கிடைய நிலைக்கு கொண்டிருக்கும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னுடைய காதல் திருமணம் தான் உதவப் போகிறது என்று நினைத்தால் மதி.
சில்வியாவையும் லோகேஷையும் தனியே அழைத்துச் சென்றவள் “உங்க ரெண்டு பேருக்கும் தெரியாத ஒரு விஷயம் நான் பண்ணிட்டேன்”.
அப்பா அம்மா கிட்ட நீங்க தான் பர்மிஷன் வாங்கி கொடுக்கணும். லோகேஷ் அண்ணா திலீப்பையும் அக்காவை சேர்த்து வைக்க இதுதான் நல்லா ஐடியா. கண்டிப்பா இது மூலமா மாமா நடந்து உண்மையை புரிஞ்சு பாரு. எனக்கு உதவி பண்ணு.
பட் என் மேல ரெண்டு பேருமே கோபப்படக்கூடாது.
நான் தருண் என்ற பையன ஒரு வருஷமா காதலிச்சிட்டு இருக்கேன். நான் காலேஜ் ஜாய்ன் பண்ணி கொஞ்ச நாளிலேயே ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம். ரெண்டு பேரும் கேரக்டர் மட்டும் இல்ல ரெண்டு போற ப்ரொபஷனல் ஒரே மாதிரி இருக்கறதுனால நானும் லவ் பண்ணிட்டேன்.
அப்பா என்னோட திருமணம் மூலமா ஒரு நல்லது நடக்கும் என்று ஒரு திட்டத்தை அவள் கூறினாள்.
லோகேஷ் இருக்கும் இது நல்லதாக தென்பட ஓகே என்று ஒப்புக்கொண்டான்.
ஆனால் சில்வியா தான் சிறிதாக யோசித்தாள்.
நீ ஒன்னும் எனக்காக உன் வாழ்க்கையை பணையம் வைக்கலையே உன்னிடம் இல்லை அக்கா என்று சத்தியம் செய்தாள்.
பின்பு மூவரும் ஒரு அறையில் இருந்து வெளிவர திலீப் குமாரோ மக்களாக என்ன அடுத்து எப்படி புளுகளான்னு மூணு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு வந்தீங்களா?
இல்ல மாமா நான் ஒரு பையன லவ் பண்றேன் அத இந்த சமயத்துல சொல்லணும்னு ஆசைப்பட்டேன் சொல்லிட்டேன்.
உன் அக்கா என் வாழ்க்கைய நாசம் பண்ணாத பத்தல நீ ஒரு பையனோட வாழ்க்கையை நாசம் பண்ண போறே.
மதியை கூட அவன் வார்த்தையால் காயப்படுத்தியதோடு அவனது அறைக்கு சென்று விட்டான்.
பின்பு தருணிடமும் பேசியவர்கள் திருமணத்திற்காக ஏற்பாட்டினை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.
மதியும் தருணிடம் முன்பு ஏற்பட்ட விபத்து முதற்கொண்டு அனைத்தையும் ஒழிவுமறை இன்றி அவனிடம் சொல்லிவிட்டாள்.
சரி இது நம்ம செஞ்சா தான் திலீப் சில்வியாவை அவ புரிஞ்சுக்குவானா கண்டிப்பா நம்ம செஞ்சிடலாம்.
உங்க வைஷியா அக்கா இறந்ததற்கு நீ தான் காரணமா?
அவன் அழுத்தமாக கேட்க ஆமா தருண். நான் தான அன்னைக்கு கார் ஓட்டிட்டு போயிட்டு இருந்தேன். ஆனா மாமா சில்வியா ஓட்டிட்டு வந்தான்னு நினைச்சு அவளை திட்டிட்டே இருக்காரு. இப்படியாவது நான் தான் கார் ஓட்டுனனு அவருக்கு புரிய வைக்கணும்.
இதுனால அவரோட கோவமும் உன் பக்கம் திரும்பச்சுனா என்னடி பண்ணுவ.
அவர் கோபம் என் பக்கத்தில் திரும்புனா பெருசா ஒன்னும் இல்லடா பேசாம தான் இருப்பார். ஆனா என் அக்காவோட வாழ்க்கையே இப்ப கேள்விக்குறியா இருக்குது பார்த்தியா.
பாவம்டா அவ எந்த தப்பும் பண்ணல. ஆனால் தண்டன அனுபவிக்கிறா.
எல்லா தப்பும் பண்ணணுன நான் சந்தோசமா இருக்கேன். என்ன பெத்தவங்க கிட்ட கூட இந்த விஷயத்தை சொல்ல கூடாதுன்னு அவ சத்தியம் வாங்கிட்டா. அவங்ககிட்ட இருந்தும் மறைச்சுட்டோம்.
இவள் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டிருந்த மோகனும் செல்வியும் கண்கலங்கி நின்றார்கள் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறையின் வெளியில்
தொடர்வேனே!