அத்தியாயம் 16
காதல் உரையாடல் என்பது எவ்வளவு நேரம் நீடித்தாலும் அதில் கசப்பு என்பது இராது
இங்க எல்லா ஏற்பாடும் ஓரளவுக்கு முடிஞ்சது. அங்க சூழ்நிலை என்ன டி என்று குசலம் விசாரித்து கொண்டிருந்தான் தருண்.
இங்க எல்லா ஏற்பாடும் என் முன்னிலையில் நல்லா நடக்குது மிஸ்டர் தருண். நீங்க ஒன்னும் பதட்டப்படாதிங்க. போன டைம் மாதிரி இந்த டைம் எந்த குழப்பமும் வராது.
உன் முன்னிலைன்னா தான் டி பதட்டமாவே இருக்கு. வேதாளம் எப்ப முருங்கமரம் ஏறும்னு என்று நகையாடி கொண்டிருந்தான் மதியின் வருங்கால கணவன் என்ற பட்டத்தை தட்டி செல்ல காத்திருக்கும் தருண்.
நீங்க ரொம்ப ஓவரா போறிங்க தருண். வால ஒட்ட கட் பண்ணிடுவேன் என்று புதுப்பெண்ணுக்கே உரித்தான குரலிலும் மரியாதையிலும் அவனை மிரட்டி கொண்டு இருந்தாள்.
இருபத்து நான்கு முடிந்து அடுத்த பிறந்த நாளையும் பெற்றோருடன் கொண்டாடளாம் என எண்ணியிருந்தவளுக்கு இன்னும் எத்தனை நாள் பெற்றோருடனே நாட்களை கழிப்பாய் என்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்தார் அவளின் இஷ்ட கடவுளான முருகன்.
அவள் முருகனிடமே வேண்டிய வேண்டுதல் அப்பா முருகா என் புருசனுக்கு நான் ஒன்னே ஒன்னு தான் பொண்டாட்டியா இருக்கனும். காதல் கத்திரிக்காய்னு எதலையும் அவரு மூக்க நுழைக்க கூடாதுப்பா. முடிஞ்சா ஓவரா ஒர்க் ப்ரஸ் கூட கொடுப்பா, பொண்ணுங்க விஷயத்துக்கு மட்டும் அவன் பார்வை போயிடவே கூடாது என்று அவள் வேண்டிய வேண்டுதல் முருகனின் செவியை துழைக்காமல் விட்டால் தானே பொறுத்து போவார். அதனால என்னவோ காதலும் சரி, கல்யாணமும் சரி ஒருவராகவே அமைந்தது.
நிச்சய நாளின் போது என்னடி விட்டால் மாப்பிள்ளைய கடிச்சு தின்னுருவ போல என்று அவளது பெரிய எண்ணி சீண்டவும் சிரித்துக் கொண்டே தலையை குணிந்தாள்.
கொஞ்சம் பொறுமையா இரும்மா இன்னும் மூணு மாசத்துல கூட்டிட்டு போயிடுவாங்க . அப்புறம் போய் உத்து பாத்துக்கலாம் என்று சின்ன அண்ணியும் சீண்ட வெட்கத்தில் தவிதவித்து போய்விட்டாள்.
இது அண்ணிகளின் பேச்சோடு வருங்கால கணவனின் பார்வையை மேற்கொண்ட அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ரோஜா வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியது போன்றல்லவா இருந்தது.
என்ன தான் காதலித்தவனாக இருந்தாலும் கணவனாகும் போது அதில் உள்ள பூரிப்பே தனிதான்..
இவர்கள் வாழ்வு சந்தோஷத்திற்கு திளைத்துக் கொண்டிருக்க, சில்வியா ஒரு ஓரமாக நின்றிருந்தாள். திலீப் தான் இந்த நிட்சயத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்றால் நீ என்னோடு நிற்கக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தான்.
ஆனால் மதி செய்யும் குறும்புகளை கண்டு சில்வியாவின் மனம் குளுகுளுவென்றானது. எனது வாழ்க்கை எப்படி போனால் என்ன தன் தங்கையின் வாழ்க்கையாவது நிம்மதியாக உள்ளது என்று சந்தோஷப்பட்டாள்.
ஹேய் ஹேய் இங்க வா என்று அனைவரின் முன்பும் இதே கோபத்துடன் அழைத்தான் திலீப் சில்வியாவை.
ஆமா அன்னைக்கு ஏதோ படம் வந்திருக்கு போயிட்டு வரேன்னு சொன்னியே அது கிளாமராவா இல்ல அன்கிளாமராவா…
இன்னும் இதை யாருக்கும் அவள் சொல்லவில்லை . ஆனால் இவனோ அனைவரின் முன்பும் போட்டு உடைத்து விட்டான்.
திலீப் இதெல்லாம் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா.
என்ன எதுக்குடி நீ ரூல்ஸ் போடுற. பதில் சொல்லப் போறியா இல்ல என் விருப்பம் இல்லாமல் ஒரு படத்துக்கு சைன் பண்ணிட்டு வந்தேன்னு உன்ன நான் டிவோர்ஸ் பண்றதா என்று அந்த நேரத்திலும் இங்கீதம் இல்லாமல் நடந்து கொண்டான் திலீப்.
திலீப் கீப் குவைட். இது என் தங்கச்சியோட நிச்சய நாள். சந்தக் கடை கிடையாது.
கண்டிப்பா இது சந்தை கடை கிடையாது. ஆனா நீ நிக்கிற சாக்கடை. அதனால எப்படி வேணா பேசலாம்.
அவன் பொது இடத்தில் கூட தன்னை மரியாதையின்று நடத்துவதை அவள் ஏற்றுக் கொள்வாள் தான். ஆனால் தன் தங்கையின் நிச்சயம் அன்றும் இப்படி இழிவாக நடத்தினால் அவளையும் அவ்வாறு தானே நடத்துவார்கள். இதை விட கொடியது என்ன என்றால் தனது பெற்றோர்கள் இதை பார்த்து வருத்தப்படுவார்களே என்று அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
கொஞ்சம் கிளாமர் கொஞ்சம் நார்மல் என்று பதிலளித்தவளிடம் கொஞ்சம் கிளாமர்லலாம் நீ நடிக்க கூடாது. எனக்கு என் பொண்டாட்டி அப்படி நடிக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
இவன் எத்தனை பெண்களுடன் அப்படிப்பட்ட அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பான். அவையெல்லாம் வெறும் நடிப்பு மட்டும் தான் என்று தன்னை தானே சரி செய்து கொண்டு அதற்கு டயலாக்கும் அஸ்கிவாய்ஸ்ஸும் தயாரித்துக் கொடுத்த சில்வியாவிற்கு இப்போது வந்த நிலையை பாருங்கள்.
என்ன அப்படிலாம் நடிக்க முடியாது நீ என்கிட்ட எகுருவியா?… உங்க அப்பாகிட்டயும் அம்மா கிட்டையும் உன்னை நான் என்ன பண்ணப் போறேன்னு சொல்லட்டுமா என்று அவளை பணைய கைதியாக்கி அவளது ஆசைகளோடும் படப்பிடிப்புகளிலும் விளையாண்டான் அவன்.
வேண்டாம் திலீப் நான் எங்க டைரக்டர் சார் கிட்ட சொல்லி கிளாமர் இல்லாத சீன்ஸ் மட்டும் நடிக்கிறேன்.
அடேங்கப்பா திலீப் இந்த அளவுக்கு கூட கோபப்படுவார்னு இப்பதான் எங்களுக்கு தெரியுது என்று பலர் அவனைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டார்கள்.
மதிக்கும் தருணுக்கும் கூட முகம் மாறிவிட்டது.
தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இரு திலீப். உனக்கு என்னை மட்டும் தானே டார்ச்சர் பண்ணனும் நல்லா பண்ணு. என் தங்கச்சியோட நிச்சயத்த நல்லபடியா நடக்க விடு தயவு செஞ்சு என்று கையெடுத்து கும்பிட்டாள். பின் அவள் எரிச்சல் அடைவதை கண்டு சந்தோஷப்பட்டு விட்டு அமைதியானான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மோதிரங்கள் இருவரும் மாற்றப்பட்டு நிச்சயம் இனிமையாக முடிந்தது. உணவு பரிமாறப்பட்டு விட திலீப்பிற்கு இதில் விருப்பம் இல்லாததால் காரினை எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பிட்டான். சில்வியாவினை காயப்படுத்தி ஆக வேண்டும் என்று அவன் முடிவெடுத்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கின்றான் என்பதை அங்கிருந்து நால்வரும் அறிந்து கொண்டார்கள்.
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ஹலோ….
ஹ…ஹலோ …சொல்லுங்க…
இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம். நான் ஒன்னு காட்டுல இருக்க சிங்கம் இல்ல. உன் வீட்டு சிங்கம் தான் என்று சொல்லி அவளை இலகு நிலைக்கு கொண்டு வந்தான்.
உனக்கு இன்னிக்கு பர்த்டே இல்ல அதான் விஷ் பண்ணலாம்னு கூப்பிட்டேன் என்றவரிடம்
அப்ப விஸ் பண்ணுங்க சிங்கம். நாங்களும் பதில் சொல்லுவோம் என்று சொல்லவும் அவனுக்கும் கலுக்கென்று சிரிப்பு வந்து விட்டது.
ஹாப்பி பர்த்டே மை டிரீம் என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவளுக்கு ஐஸ் உலகில் ஜாம்பவிப்பது போன்ற உணர்வு.
தேங்க் யூ மை டியர் ப்ரின்ஸ் என்று இருவரும் தங்களது விருப்பங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்து கொண்டு பேசிக்கொண்டு இருந்த போது நான் கிளம்பறேன் டா என்று சொல்லிவிட்டு சில்வியா அவளது வீட்டிற்கு கிளம்பினாள்.
லோகேஷும் கூட நான் வேணா வந்து விடவாடா என்று கேட்க,
நீ ஆல்ரெடி ரொம்ப களைப்பா இருப்ப. டேக் ரெஸ்ட் நான் பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு தாய் தந்தையிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.
காரினை எடுத்துக் கொண்டு அவள் ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது அதற்குள் மழை இருட்டிக் கொண்டு வந்தது.
கொட்டும் மழையில் ஐந்தே நிமிடத்தில் வீட்டின் தரிப்பிடத்தில் தனது காரை நிறுத்தி விட்டு, வெளியே வந்தவளை முறைத்துக் கொண்டு நின்று இருந்தான் திலீப்.
லோகேஷின் வீட்டிலோ லோகேஷ் இடம் செல்வியும் மோகனும் கேள்வி எழுப்பினார்கள்.
என்ன லோகேஷ் இது. இன்னும் அவங்க வாழ்க்கை தொடங்கவே இல்லன்னு எங்களுக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சது. ஏன் இப்படி?
இல்லப்பா இதெல்லாம் திலீப் நம்ம பாப்பா மேல ரொம்ப கோவமா இருக்கான். நம்ம வைஷூ இறந்து போனதுக்கு காரணம் சில்வியா தானு அவ மேல பயங்கர கோபமா இருக்கான். அவன்கிட்ட நான் எத்தனையோ முறை சொல்லி புரிய வைத்து பாத்துட்டேன் ஆனா என்னால முடியல.
அதே மாதிரி மதியும் கூட டிரை பண்ணி பாத்துட்டாள். அவன் எங்க பேச்சை காது கொடுத்து கூட கேட்கிற மாதிரி இல்லப்பா.
அதனால தான் மதிக்கு இப்ப திருமணம் பண்ணி அது மூலமா சில்வியாக்கு ஒரு முடிவு கிடைப்பதற்கான வழிய நாங்க தயார் பண்ணிட்டு இருக்கோம்.
மதிக்கு கல்யாணம் பண்றதுக்கும் சில்வியா வாழ்க்கை சீர் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம் என்றால் செல்வி.
அது வந்து மா என்று அவர்கள் போட்ட திட்டத்தினை அவர்களிடமும் கூறினான்.
மறுபுறம் தனது வாழ்க்கை சீர் படுத்த பெற்றோர்களிடம் அண்ணன் உரையாடி கொண்டிருப்பதை அறியாத குழந்தை ஒன்று தவறு செய்துவிட்டு தாயிடம் மாட்டிக் கொண்டதை போன்று திலீப்பிடம் மாட்டிக் கொண்டால் அவள்.
கொட்டுகின்ற மலையில் ஜத ஜதவென்று நனைந்தும் விட்டாள்.
வலிய விடு திலீப் நான் உள்ள போகணும்.
உனக்கு நான் எதுக்கு வழி விடணும். இன்னைக்கு முழுக்க நீ இந்த கொட்ற மழையில தான் நிக்கணும்.
அவனையே முறைத்து நின்று கொண்டிருந்தாள்.
திலீப் ஓட மனைவி என்கிற ஸ்தானத்தில் நீ இருந்து கிட்டு கிளாமரா இருக்க சீன்ஸ்க்கு ஓகே சொல்லிட்டு வந்து இருக்கேனா , என் மேல உனக்கு பயம் இல்லன்னு தானே அர்த்தம்.
காதல் வேண்டாமாம் கல்யாணமும் வேண்டாமாம். ஆனால் கல்யாணம் செய்த பின் மட்டும் கிளாமரான சீன்களில் நடிக்க கூடாதாம்.
இவனும் மற்ற ஆண்களைப் போன்று ஆணாதிக்கம் படைத்தவன் என்றும் மனதிற்குள் திட்டி கொண்டிருந்தாள்.
ஆனால் கொட்டுகின்ற மழையை கூட பொருட்படுத்தாத அவனுக்கு தெரியாதது என்னவென்றால் அவளுக்கு மழைத்துளி பட்டுவிட்டாலே அடுத்த நாளே உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்பது.
அக்காவை காதலித்து விட்டு தங்கையை திருமணம் செய்து உள்ளான். அவனுக்கு எப்படி தெரியும் இவளுக்கு எது சேரும் எது சேராது என்று.
திலீப் சொல்றத கேளு எனக்கு இந்த மழை சேராது.
உனக்கு மழை சேராதுனா கூப்பிட்டு வச்சி என் மடியில் கொண்டாடட்டுமா?
இன்னைக்கு நீ விடிய விடிய மழையில நனைஞ்சு தான் ஆகணும். இதுதான் உனக்கு நான் கொடுக்கிற தண்டனை என்று சொன்னவன் திரும்பி பார்க்காமல் தனது ஸ்னோபருடன் தந்த அறைக்குச் சென்று படுத்து உறங்கியும் விட்டான் உடனே!
ஆனால் அவன் சொன்னது போலவே இடத்தை விட்டு துளி கூட நகராமல் கொட்டிய மழையில் நனைந்த வண்ணம் நின்றிருந்த சில்வியாவிற்கு இவனுக்கு விவாகரத்து கொடுப்பது தான் சரியானது என்ற எண்ணம் துளிர்விட தொடங்கிவிட்டது.
தொடர்வேனே!