அத்தியாயம் 17
கொட்டும் அத்தனை மழையிலும் அவள் திலீப் சொன்னதை போலவே நகராமல் நின்றிருந்தாள்.. அன்று இரவு படுத்து உறங்கியவனுக்கு ஏதோ விடியற்காலையில் விழிப்பு தட்டி விட சில்வியா என்ன செய்கிறாள் என்று மாடி அறையில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தான்.
அவள் நடுக்கத்தின் உச்சியில் இருந்ததை கண்ணார கண்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்தான். அதன் பின் என்ன வழக்கம் போல ஒரு மது பாட்டிலை எடுத்து காலை நேரம் என்றும் பார்க்காமல் டம்ளரில் ஊற்றி பருக ஆரம்பித்தான். எத்தனை டம்ளர் அருந்தி இருப்பான் என்று சொல்லும் அளவிற்கு அவன் தெளிவாக இல்லை என்பது தான் உண்மை.
அவன் கால்களோ அங்கும் இங்கும் இடறி விட, நடக்க முடியாமல் நடந்துச்சென்று சில்வியாவின் முன்பு நின்றான் திலீப்..
என்னம்மா சில்வியா கிளாமரா நடிக்க மட்டுமில்ல அப்டி நெனச்சா கூட உனக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும்னு பார்த்தியா? என்றான் திலீப்..
அவனின் பேச்சிற்கு முறைப்பையே பதிலாக கொடுத்தாள்.
அவளின் அமைதி அவனை கடுப்பேற்ற… வாய் திறந்து பேசு… என்றான் ஆக்ரோஷமாக…
இன்னும் ஆறு மாசத்துல விவாகரத்து பண்ண போற உனக்கு என்கிட்ட இவ்வளவு உரிமை கிடையாது திலீப்.
ம்ம் சரிதான் ஆனா அந்த ஆறு மாசம் வரைக்கும் நீ எனக்கு உரிமையானவ தானே. சோ எனக்கு இல்லாத உரிமை உன்கிட்ட யாருக்கு இருக்கு… என்று அவனும் வாதாடினான்.
இந்தப் பைத்தியக்காரனிடம் பேசி புரிய வைக்க முடியாது என்பதை புரிந்துக்கொண்ட சில்வியாவோ பெருமூச்சு விட்டு தன்னை சமாதானம் செய்து கொண்டு… ம்ச் இப்பையாவது நான் உள்ள போகலாமா?… என்று அழுத்தமாக கேட்டவளை மேல் இருந்து கீழாக பஒரு பார்வை பார்த்தவனுக்கோ அவளின் அழகு பித்துக்கொள்ள செய்தது…
ம்ம்.. மழையில நெனச்சி நல்லா பால்கோவா மாதிரி இருக்க அப்போ கண்டிப்பா நீ உள்ள போலாம்… என்று அவளின் நடுக்கத்தினை காரணம் காட்டி மேலும் அவளை வம்பிழுத்தான்.
அவனின் பார்வையை கண்டு கடுப்பான பெண்ணவளோ இந்த நடுக்கத்துக்கு காரணமே நீ தானே.
வாய் திறந்து சொல்லாமல் மனதிற்குள் திட்டியவள்.. ம்ச் நீ நகர்ந்தா தான் ஸ்னோபர் எனக்கு வழி விடுவான். இல்லன்னா என்னை கடிக்க வந்துடும்.
அவளின் பேச்சில் வன்மமான சிரிப்பை சிந்தியவனோ ம்ம் அவனுக்கு கூட தெரியுது உன் கிட்ட எப்படி எல்லாம் நடந்துக்கணும்னு… என்றவனை கொன்று விடலாமா என்னும் அளவிற்கு அவளுக்கு கோபம் வந்தது..
அவள் உடலோ மழையில் நனைந்து பின் நடுக்கத்தில் இருக்க சரி போனால் போகட்டும் என்று நகர்ந்து நின்றவன், அவளின் பின்புற கூந்தல் நுனியில் இருந்து சொட்டிய தண்ணீர் துளிகளால் அவனது மனம் தடுமாறியதை தடுத்துட இயலாமல் பதைபதைத்தான்.
என்ன இது இவள் எனது எதிரி. என் கோபத்திற்கு மட்டும் சொந்தமானவள். என் வீட்டில் சமையல் செய்ய மட்டும் உள்ள சமையல்காரி. வீட்டு வேலைகளை மேற்கொள்ளும் வேலைக்காரி மட்டுமே தவிர என் ஆசா பாசங்களுக்கு அவளிடம் இடமில்லை என்று அவனது மூளையிடம் அவன் எத்தனை முறையோ சொல்ல முயற்சித்தும் தோற்று தான் போனான்.
இதோ அவனது மனமோ அவள் பின்னை செல் என்று கட்டளையிட, எந்தவித சலனமும், பரிதவிப்பும் இன்றி வேகமாக அவளை நோக்கி நடந்தான்.
ஈர துணிகளோடு வாட்ரோபில் அடுக்கி இருந்த உடைகளை தனக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் சில்வியா.
திலீப்போ வேகமாக தங்களது அறைக்குள் வந்தவன் அவளது பதிலை எதிர்பாராமல் கூட கதவினை தாளிட்டான்.
இவை அனைத்தும் அவன் போதையில் நிலை அறியாமல் செய்த காரியங்கள்.
பின் வேகமாக அவளிடம் சென்றவன் அதே வேகத்துடன் அவளை இழுத்து பிடித்து சுவற்றோடு சுவராக ஒட்டியவன்… உன் மேல எனக்கு கோவம் தான் ஆனா அதைவிட உன் மேல எனக்கு பாசம் இருக்கு டி.. நீ செல்லப் பிள்ளையா உன் வீட்ல வளர்ந்தவனு எனக்கு நல்லா தெரியும். ஆனா என் மேல நீ ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக எத்தனை அனுபவிக்க வேண்டி இருக்குது.. என்ன விட்டு போயிடலாம்னு உனக்கு தோணலையா… என்றும் இல்லாத இன்று அவன் மென்மையாகவும் கனிமையாகவும் சில்வியாவிடம் பேச துவங்கினான்.
முதலில் அவனின் செயலில் அதிர்ந்தவளோ பின்பு அவனின் பேச்சில் லேசாக புன்னகைத்தவாறே… திலீப் என் வாழ்க்கைல நான் ஆசைப்பட்டு அதை அடம் புடிச்சு எல்லா பொருளையும் வாங்கி சந்தோஷப்பட்டு இருக்கேன்.. உன்ன மட்டும் நான் ஆசைப்பட்டு அடம் பிடிச்சனே தவிர, அதுக்கான எந்த முயற்சி நான் எடுக்கல. எல்லாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல நடந்து அந்த சந்தர்ப்பம் மூலமா நான் உனக்கு மனைவியா மாறிட்டேன்.. என்றவள் மேலும்…
உன் மேல எனக்கு கொள்ளை பிரியம். உன் மேல எனக்கு எந்த அளவு பாசம்னா… சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்… என் உயிரை கேட்டா கூட நான் அதை தந்துடுவேன்.
அவள் சொல்ல சொல்ல அவன் உள் மனதில் உள்ள இருதயக் கூட்டில் இருந்து அவன் இருதயம் லப்டப் என்று துடிப்பதை விட காதல் காதல் என்று தான் அதிகமாக துடித்தது.
சில்வியாவின் காதலினை உணர்ந்து கொண்டவன் அவளை மென்மையாகப் பிடிக்க அவளுக்கோ காய்ச்சல் நெருப்பாய் கொதித்தது.
அந்த நெருப்பின் விதம் கணிக்க வேண்டுமானால் மருத்துவரை முதலில் அணுக வேண்டும். ஆனால் திலீப்போ அவளது தலைமுடியை துவட்டியதோடு அவளது உடைகளை ஒவ்வொன்றாய் கழட்டினான்.
நேற்று இரவு தான் இவனுக்கு விவாகரத்து கொடுத்து விடலாம் என்னும் அளவிற்கு இவளது மூளை யோசித்தது. ஆனால் இன்று இவன் செய்யும் செயலுக்கு தடை ஏதும் போடாமல் அவளை அந்த நேரத்தில் அவனை ரசிக்க லயித்து வைத்திருந்தது.
அவளுடைய புடவையின் நுனிகள் அனைத்தையும் எடுத்தவன் இடுப்பில் சொருகி இருக்கும் மடிப்பினை எடுக்கும் போது இருவரின் கண் பார்வைகளும் ஒரு சேர தரிசித்தன.
திலீப்பின் கைகளிலோ வேகம் எடுக்க ஆரம்பித்தது. அவளது இடையினை கட்டிக் கொண்டவன், அதில் தன் முகத்தினை ஒத்தி எடுத்தான். அத்தனை குளிர் நடுக்கத்திலும் அவனது ஸ்பரிசம் அவளுக்கு வெட்கத்தினை ஏற்படுத்தியது.
இதோ உடல் முழுவதும் அவளுக்கு ஆணவன் பட்ட தேகத்தினால் சிலிர்க்க தொடங்கி இருந்தது. முகமும் செவ்வானம் போன்று சிவந்து கொண்டிருந்தது.
முகம் பதித்தவனுக்கு அதன் மேல் பொறுமையின்றி, அவளது அடுத்த உடையினை அகற்றினான். இப்போது அவளுக்கு முகம் கொள்ள வெட்கம் வந்தது.
திலீப் என்று மென்மையாக அவள் அழைக்கவும்… அவளது வாயினை தன் கைகள் கொண்டு மூடியவன்… என்ன தொந்தரவு பண்ணாதடி ப்ளீஸ்… என்றான் கிறக்கத்துடன்..
இதற்குப் பின்பு அவள் என்ன சொல்வாள். தன் காதல் கணவன் தன்னை அடைவதை தடுத்து விடும் அளவிற்கு எந்த பெண்ணிற்காக உரிமை உண்டோ..
முழுவதும் கலைந்த வண்ணத்தில் அவளை மெத்தையின் மீது சரித்தவன் தன்னையும் சரி செய்து கொண்டு அவள் மீது தொப்பென்று விழுந்தான்.
அவனது குடி அவளுக்கு குமட்டலை கொடுத்தாலும், தன்னவன் தன்னை புரிந்து கொண்டானே என்று ஆசையுடன் அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்..
இருவருக்குள்ளும் நடைபெற்ற அரை மணி நேர போராட்டத்தில் பூவிலிருந்து தேனை எடுத்த வண்டை போன்று திருப்திகரமாக படுத்து இருந்தார்கள் இருவரும்.
தாழிட்ட கதவினை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த சில்வியாவிற்கு அன்றைய தினம் பெரும் சந்தோஷத்தை இளைத்தது.
இதோ இருவரும் சங்கமித்து விடமாட்டோமோ என்று எத்தனையோ முறை ஏங்கி தவித்த அவளுக்கு, இன்று தானும் திலீப்பும் ஒன்று சேர்ந்தது பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியதோடு கதவை யாராவது திறந்து விடப் போகிறார்கள் என்று கவனத்தோடு செயல்பட்டாள்.
அரை மயக்கத்தில் இருந்தவனுக்கு சில்வியாவின் முகம் ஏதோ பூரிப்பை கொடுத்தது. ம்ச் இத்தனை நாள் உன்னோட அழக நான் தெரிஞ்சுக்காம விட்டுட்டேன்டி. இனிமே எப்பவும் உன் கூட தான் இருப்பேன். உன் வாழ்நாள் முழுக்க என் கூட இருக்க நீ ஆசைப்படுகிற அளவுக்கு உனக்கு நான் நிறைய பண்ணுவேன். உன்னை விட்டு விட மாட்டேன் டி வைஷூ… என்று அவன் முடிக்கும் போது தான் புரிந்து கொண்டாள் சில்வியா.. இப்போது வரை நடந்த அனைத்தும் தனக்கானது அல்ல என்பதை!
திலீப் திலீப் நான் வைஷு இல்லை என்று சொல்லும்போது அவன் அரை மயக்கத்தில் இருந்து உறங்கிப் போனான் என்பது தான் உண்மை.
அவன் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தினை நகர்த்துகிறான் என்று அவள் சந்தோஷப்பட்டு அறை நொடிகூட ஆகியிருக்காது அதற்குள் அவளது சந்தோஷத்திற்கு மூட்டை கட்டி விட்டான் இவன்.
தனது அக்காவை நினைத்துக் கொண்டுதான் இந்த அரை மணி நேரம் தன்னோடு இருந்தானா இவன் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
அவன் உறங்கி எழும் வரை காத்திருக்க இயலாமல் வேகமாக குளியலறையில் நுழைந்து சுடுநீரில் தன்னை சுட்டு எரித்துக் கொண்டாள்.
பின்பு தன் காதல் கணவன் தன்னை எண்ணி தானே தன்னோடு சேர வேண்டும். வேறு ஒரு பெண்ணினை மனதில் கொண்டு உடலளவில் என்னோடு சேர்ந்தால் எந்த பெண் தான் ஒப்புக்கொள்வாள். சில்வியாவின் மனம் இதை எண்ணி வருந்தியது.
வைஷூ இந்த உலகத்தில் இல்லாத போதிலும் அவள் மீது இவருக்கு தான் இத்தனை காதல் உள்ளது.
ஆனால் என்னை ஸ்னோபர் அளவிற்கு கூட மதிக்க மாட்டிக்கிறார் என்ற வருத்தம் இன்னும் தலைதூக்கியது.
இதை காட்டிலும் கொடுமை நடக்க இருப்பதை அவள் அறியாது ஸ்னோபரின் அவளையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டுக் கொண்டிருந்தாள் என்பதுதான் அந்த அப்பாவி பெண்ணின் நிலை.
மதியும் தருணும் விடியற்காலை என்றும் பாராமல் குறுஞ்செய்திகளில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளம் வயது காதலர்கள் இப்போது திருமணம் என்னும் பந்தத்தில் இணைய போவதால் அவர்களுக்குள் உரையாட எத்தனை உரையாடல்கள் காத்திருக்கும்.
நாளைக்கு நம்ம டிரஸ் எடுக்க போயிடலாம் என்று தருண் ஆரம்பிக்கும்போது
எனக்கென்ன சாரிய நீங்க தான் எடுக்கணும். வேற யாரும் அதை சூஸ் பண்ண நீங்க விடக்கூடாது. பிகாஸ் யூ ஆர் மை பார்ட்னர். எனக்கு என்ன வேணும் என்ன பிடிக்கும் என்ன நல்லா இருக்கும் நீங்க தெரிஞ்சுக்கணும் இல்ல… சோ அத நீங்க தான் பண்ணனும்.
எனக்கு எடுக்க வேண்டிய வேஷ்டி சட்டை மேடம் தான் எடுக்கணும்.
டெப்ஃணட்லி, அதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருந்துட போது தருண்.
இதற்கு தருணின் பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும் அல்லவா?
அவர்களை ஒரே பார்வையால் தன் வசமாக்கி கொள்வான் தருண் என்பது மதி நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் இப்படிப்பட்ட கண்டிஷன் அவனுக்கு போட்டாள்.
அது அத்தனை பெரிய சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை அனைவரும் தேர்ந்தெடுக்கும் போது தெரியும்.
லோகேஷ் ஒரு படப்பிடிப்பு குழுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சார் சார் அந்த பொண்ணு சொன்ன எல்லாமே நீங்க சரின்னு நினைச்சீங்கன்னா திலீப் இத்தனை வருஷமா உங்க கூட ஒர்க் பண்ணிட்டு இருந்தப்ப என்னத்த கண்டுபிடிச்சீங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தான். அதனால அவங்க ப்ரொபஷனல் பாதிக்கப்படக்கூடாதுன்னு தான இந்த முடிவு எடுத்திருந்தாங்க. அதன் மூலமா உங்க படத்துக்கோ இல்ல உங்க பட்ஜெட்கோ எதாவது பிரச்சனை வந்ததா? அவன ஹீரோவா புக் பண்ண இடத்துல,இப்ப நீங்க என்ன கூப்பிடுவது கொஞ்சம் கூட நியாயம் இல்ல என்று ஒரு தயாரிப்பாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் லோகேஷ்.
எப்பேர்பட்ட படம் லோகேஷ். திலீப் இதுவரைக்கும் எங்க கூட நடிச்ச எந்த படத்திலையும் சொதப்பல. பட் இப்போ அவனோட மவுஸ் ரொம்ப லோ. சோ நாங்க யார் மூலமா எங்களோட பிசினஸ் ரொம்ப ஈசியா வளரும்னு தான் பார்ப்போமே தவிர மவுஸ் இல்லாதவங்களுக்கு வாழ்க்கை கொடுக்க நாங்க ஒன்னும் கவர்னர் பரம்பரை இல்ல… என்று அவரும் சொல்லிவிட… இப்போது இவன் அமைதி காத்தான்.