எல்லாம் பொன் வசந்தம்…19

5
(2)

அத்தியாயம் 19

 

காதலித்தவனே கணவனாக வரும் வரம் எல்லாம் லட்சத்தில் பாதி பெண்களுக்குமட்டும் நடைபெறுகிறது.

 

காரினை தாறுமாறாக ஓட்டி சென்று கொண்டிருந்தான் திலீப். 

 

கொஞ்சம் பொறுமையா போகலாமே? 

 

ஏன் உன்னை மாதிரி நான் யாரையாவது கொன்னுடுவேன்னு பாக்குறியா. 

 

இல்லை திலீப் எனக்கு பயமா இருக்கு.

 

உட்கார்ந்திட்டு வருவதற்கே உனக்கு பயமா இருக்கு ஆனா கார் ஓட்டுவதற்கு பயமில்லை. 

 

எப்படி பேசினாலும் என்கிட்ட சண்டைக்கு வரதுக்கு மட்டும் தான் தயாராக இருப்பியா.

 

உன்கிட்ட அதை விட்டுட்டு வேற என்ன பேச முடியும். 

 

ஏதாவது நாலு வார்த்தை அன்பா பேசுறியா.

 

உன்கிட்ட அன்பா நான் பேசணுமா.  பேசின அன்புக்கு எல்லாம் நீ கொடுத்த பரிசு பத்தலையா.  எத்தனை வலி எத்தனை வேதனை எல்லாம் நீ அனுபவிக்கனும் இல்ல.  உன்ன கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்வதற்காக உன்னை  நான் ஓகே பண்ணேன்னு நினைக்கிறியா, நோ நெவர்.  ஏண்டா இவனை கல்யாணம் பண்ணினோம்னு நீ நினைக்கிற அளவுக்கு தான் உன்னை நான் வச்சுக்கணும் அதுக்கு தான் கல்யாணம் பண்ணினேன்.

 

பிகாஸ் என்னோட லைஃப்ல இருக்கும் ஒரே எதிரி நீ மட்டும் தான்.  என் லைஃபை கெடுத்த ஒரே எதிரியும் நீ மட்டும் தான். 

 

என்ன திலீப் எப்பயோ நடந்த அந்த விஷயத்தை வைத்து மட்டுமே என்னை நீ எடை போடுற.  என்னை பத்தி நீ இப்படி ஒரு அபிப்பிராயத்தில் இருப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல. 

 

ஏய் ஏய் ரொம்ப நடிக்காத.  இந்த நடிப்பு எல்லாம் இப்ப நீ ஓகே பண்ணி இருக்கியே அந்த படத்துல போய் காட்டு.  நீ பேசுற பேச்சுக்கெல்லாம் மயங்கி விழுற  ஆளு நான் இல்லை.  அதுக்கும் ஏதாவது இளிச்சவாயன் ரெடியாக இருப்பான் அங்க போய் இதெல்லாம் பேசு. 

 

சிறியதாக இருவருக்கும் ஏற்படும் பேச்சு உரையாடல் கூட அவளை கத்தி மீது நின்று இருப்பது போல் காயம் உண்டு பண்ணிய திலீப்பிற்கு அவளது ரணம் புரிவதே இல்லை. 

 

சரி  திலீப் நான் எதுவுமே உன் கிட்ட சொல்லலை.  நான் அமைதியா வரேன்.

 

ஓ இவ்வளவு பெரிய  நடிகன் பேசும் உன்னால பேச முடியாதா?  ஒருவேளை அந்த விதத்துல நீ பேச முடியாதுன்னா கூட உன்னோட கணவன் என்ற முறையில் நான் பேசினால் நீ ரெஸ்பெக்ட் பண்ணிதான் ஆகணும்.

 

இவன் என்கிட்ட பேசினாலும் தவறு பேசலன்னாலும் தவறு.  இந்த ஒரு மணி நேரம் இவன் கூட இருக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு வாழ்க்கை முழுவதும் இந்த உறவை தொடர வேண்டுமா?

 

இதெல்லாம் உனக்கு தேவையா சில்வியா.  நீ என்னடா அப்படி பண்ணிடுவ என்னை விவாகரத்து தானே பண்ணிடுவேன்னு மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போயிடு டி என்று அவளது மனசாட்சி அவளை சுரண்டினாலும், 

 

ஆல்ரெடி உன் அப்பாக்கு ஃபர்ஸ்ட் அட்டாக் வந்துருச்சு.  அதுமட்டுமில்லாமல் இப்போ உன் தங்கச்சிக்கு கல்யாணமும் பிக்ஸ் ஆயிடுச்சு.  இந்த டைம்ல நீ விவாகரத்து கிவாகரத்துன்னு முடிவு பண்ணினா அது உனக்கு மட்டும் இல்லை உன் குடும்பத்துக்கே பாதிப்பா முடியும்.  எது பண்ணாலும் யோசிச்சு பண்ணு என்று அறிவுரையை கொடுத்தது மூளை.

 

சரி அப்படின்னா நீ கேக்குற கேள்விக்கு மட்டும் நான் பதில் பேசிட்டு அமைதியா இருந்துகிறேன் திலீப் என்றாள்.

 

அவளின் இந்த தடுமாற்றங்கள் அனைத்தையும் கண்டவன் இப்படி தான் நிம்மதியே இல்லாம இருக்கணும் அதுதான் நான் விரும்புகிறேன் என்று மனதிற்குள் நினைத்தான்.

 

இவ்விருவரின் உரையாடலின் ஊடே புடவை எடுக்கும் கடையும் வந்துவிட்டது.  

 

நீ யாரு முன்னாடி வேணா எப்படி வேணா  என்னை நடத்து திலீப்.  பட் என்னோட பேரண்ட்ஸ் முன்னாடி மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ.  அவங்க வருத்தப்படக்கூடாது என்று அவனிடம் அவள் கெஞ்சி கேட்கவும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினான்.

 

கல் நெஞ்சு காரன் இவ்வளவு கெஞ்சியும் சரின்னு வாய் திறந்து சொல்றானா பாரு இன்று அவனை முறைத்த வாக்கில் காரில் இருந்து இறங்கினாள்.

 

மறுபுறம் அந்த கடையில் காரினை நிறுத்தும் இடத்தில் காரினை நிறுத்தி விட்டு வந்தான் திலீப்.

 

லோகேஷ் , அம்மா ,அப்பா, தருண் எல்லாம் ரெடி தானே.  இப்ப நடக்க போறது அனைத்தும் வெறும் ட்ராம மட்டும்தான்..  யாருக்கும் இதுல வருத்தம் இருக்கக் கூடாது.  நம்ம அக்காவை திலீப்போட சேர்த்து வைக்க நாம எடுத்து வைக்கப் போற முதல் செக் இது என்றாள் மதி. 

 

நாங்க எல்லாம் தயார்தான் என்றனர் அனைவரும். 

 

திலீப்போடு சேர்ந்து கடையின் உள்ளே நுழைந்தவளை மேலும் கீழுமாக பார்த்து முகம் சுளித்தான் தருண்.

 

அனைவரையும் பார்த்த உடனே எடை போடும் விழிப்பிற்கு இவன் தன் மனைவியை இவ்வாறு உறுத்துப் பார்ப்பதை என்னவென புருவம் உயர்த்தி பார்த்தான். 

 

அவன் புருவம் உயர்த்திப் பார்த்ததோடு தருண் பேசிய வார்த்தைக்கு பதில் அடி கொடுப்பான் என்று அனைவரும் அறிந்தது தான். 

 

என்னமதி உங்க அக்கா பெரிய ஃபேமஸ் ஹீரோவோட வைஃப்புன்னு பெருமை பீத்திக்குவ.  ஆனா இவங்க வரத பார்த்தா அப்படி தெரியலையே.  ஒரு நடுத்தர குடும்பத்திலேயே இருக்க ஒரு பொண்ணு எந்த அளவுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்குமோ அந்த மாதிரி தான் இருக்கு.  ஏன் கழுத்துல கூட ஜுவல்ஸ் இல்ல.  இவங்கள பார்த்தால் எங்க அப்பா அம்மா என்னை என்ன சொல்லுவாங்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?  என்று சத்தமாக தருண் பேச ஆரம்பித்தான்.

 

இவன் பேசுவதை பல்லை கடித்துக்கொண்டு திலீப்பும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.  

 

பிறகு தருணோடு சேர்ந்து கொண்ட மதியும் ஆமா அக்கா உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல.  எப்பேர்பட்ட கல்யாணம் நடக்கப் போகுது.  திரையுலகில் கொடி கட்டி பறக்கிற  நடிகனோட மனைவி வேற நீ.  அதுக்கு தகுந்த மாதிரி உன்னோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ்ல இம்ப்ரூவ் பண்ணு அக்கா.  எப்ப பாத்தாலும் ஒண்ணுத்துக்கும் இல்லாதவ மாதிரி இவ்வளவு கேவலமா டிரஸ் பண்ணாத அக்கா.  

 

மதி இவ்வாறு பேசவும் திலீப்பிற்கு கோபத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் ஆனது.

 

சத்தமாகவும் அழுத்தமாகவும் மதி என்று அவன் கூறவும் அவள் அமைதியாகிவிட்டாள். 

 

அவன் கூறிய அந்த அழுத்தமும் சத்தமுமே சில்வியாவின் மீது அவனுக்கு அன்பு உள்ளது என்பதை அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்திவிட்டான். 

 

பிறகு என்ன ஒரு சொட்டாக இருக்கும் அந்த அன்பினை சிறக சிறுக சேமித்து கடலளவு பெருக்கெடுக்க வைக்க வேண்டும் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

 

இல்ல மாமா அவ அப்படித்தானே டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்கா. 

 

அவ ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு ஆசைபடுறா.  அது ஒன்னும் தவறு இல்லை.  எப்பேர்ப்பட்ட நடிகனுக்கு பொண்டாட்டியா இருந்தாலுமே இவ்வளவு சிம்பிளா இருக்கணும்னு ஆசைப்படறாங்கன்னு சந்தோஷப்பட்டுக்கணுமே தவிர அதை ஒரு குறையா பேசக்கூடாது. 

 

காசு இல்லாதப்ப வருத்தப்படுறவங்க லிஸ்ட்லையும் அவள் இல்ல.  காசு இருக்கப்ப ரொம்ப ஆடுபவர்கள் லிஸ்ட்லையும் அவள் இல்லை.

 

இவ்வாறு திலீப் பேசுவதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சில்வியா. 

 

முன்பு கூட காரினை எடுப்பதற்காக தயாரான போதும் தன்னை கேலி செய்தவன் அதில் அமர்ந்த போது கூட தன்னை மட்டம் தட்டி பேசியவன் இவன்தானா! 

 

சிறிய கண்களாக இருக்கும் அவளது கண்களை பெரியதாக விரித்து இங்கு நடக்கும் காட்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டாள். 

 

எல்லா கணவனுக்கும் இருக்கும் அதே குணம் தான் திலீப்பிற்கும்‌.  அவள் மீது கோபம் தான்.  சொல்லவொண்ணா அளவிற்கு ஆத்திரமும் கூட உள்ளது.  ஆனால் இதுவரை மற்றவர்களின் முன்பு கோபப்படுத்தி மட்டுமே பார்ப்பதை தவிர குறை கூற மாட்டான். 

 

ஏதோ கல்யாணம் செய்து விட்டோம் என்று வாழும் இருவருக்குள்ளும் ஒரு துளி அளவு கூடவா அன்பு இருந்து இருக்காது.  திலீப்பிற்கு சில்வியா முன்பெல்லாம் ஒரு நல்ல தோழி தானே.  ஆதலால் என்னவோ இப்பொழுது அவன் அவளுக்காக பரிந்து கட்டி பேசினான்.

 

அப்படி சிம்பிளா இருக்கணும்னா அவளோட கல்யாணத்துல அவ இருந்துக்கலாம்.  என் கல்யாணத்துல என்னோட அக்கா ஒரு நடிகனோட பொண்டாட்டியா கிராண்டா இருக்கணும் மாமா – மதி

 

இப்ப என்ன மதி உனக்கு அவ ரொம்ப கிராண்டா ஒரு டிரஸ் போட்டுட்டு வரணும் அவ்வளவுதானே. 

 

எக்ஸ்கியூஸ் மீ யாரு இங்க?.. இன்று அந்த கடையில் உள்ள பணியாட்களை அவன் கூப்பிட்டதும் இந்த கடையிலேயே நம்பர் ஒன் காஸ்ட்ல இருக்க ஒரு சேரிய வித் ஒன் ஹார்ல பிளவுஸ் ரெடி பண்ணி கொண்டு வரீங்க. 

 

சார் சாரி டிசைன் ஏதாவது பாக்கறீங்களா? 

 

அவளுக்கு ரெட் கலர் போட்டா சூப்பரா இருக்கும்.  அந்த கலர்ல ரொம்ப ரொம்ப காஸ்ட்லியா இருக்க சேரியா இருக்கணும்.  அதோட வொர்க் பிளவுஸ்ஸா இருக்கணும்‌. இதையெல்லாம் வெறும் ஒன் ஹவர்ல ரெடி ஆகணும். 

 

என்று அந்த கடையில் உள்ள பணியாட்களுக்கு கட்டளையிட்டவன் சொடுக்கிட்டு மதியிடம் பேசினான்.

 

இங்க பாரு மதி நீ நினைக்க முடியாத அளவுக்கு என்னால அவளுக்கு செய்ய முடியும்.  சும்மா வாய் இருக்குன்னு அவளை என் முன்னாடி ஏளனமா பேசினால் நடக்கிறதே வேற. இன்னும் உன்னால பாரு உன் அக்கா எப்படி தேவதை மாதிரி தெரிவான்னு என்று மதியிடம் சொன்னவன் ஒன் ஹவர் அப்புறமா சாரி செலக்ட் பண்ணிக்கலாம் வாங்க முதல்ல சாப்பிட போலாம் என்று அனைவரையும் அழைத்துச் சென்று விட்டான். 

 

பின் மதி தருணிடம் கண் அசைக்க, இதுக்கும் உங்க மனைவி சிம்பிளான ஹோட்டல்க்கு தான் அழைச்சிட்டு போகணும்னு சொல்லுவாங்க.  செம காஸ்ட்லியான ஹோட்டல்கா அழைச்சிட்டு போக போறீங்க என்று அவனும் நக்கலாக பேசியே அவனது கோபத்தை இன்னும் தூண்டினான். 

 

அத்தோடு நிறுத்தி விடாமல் வாங்க திலீப் நான் கூப்பிட்டு போற ஹோட்டல்ல பில் மொத்தத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல அவனுக்கு கோவம் தலைக்கு மேல் ஏறிவிட்டது ‌.

 

வாயை உர்ரென்று வைத்துக்கொண்டு எந்த ஹோட்டலுன்னு கூப்பிட்டு போங்க என்று சொன்னவன் அவர்களோடு புறப்பட்டு பத்து நிமிடத்தில் அங்கே அடைந்தார்கள்.

 

நீங்க இருக்க ஒவ்வொரு ஃபுட்டும் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.‌. அத்தோடு இந்த ஹோட்டலை நினைச்சா அவ்ளோ பெருமையா இருக்கும்.

 

பிகாஸ் இங்க அவங்க கேர் பண்ற கேரக்டர் அப்படிப்பட்டது என்று தருண் அங்குள்ளவர்களை பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தான்.

 

அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் திலீப் என்ற ராட்சசன் கோபத்துடன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!