எல்லாம் பொன் வசந்தம்…(20)

5
(2)

அத்தியாயம் 20

 

கல்யாணம் செய்தும் காதலிக்கலாம் என்பதை இப்பொழுது நிறைய தம்பதியினர் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

திலீப் ஒரு டேபிளின் மீது அமர்ந்து இந்த ஹோட்டலோட நிர்வாகி யாரு உடனே நான் பார்க்கணும் என்று சொல்லவும் அவர் வெளியூரில் இருக்கிறார் என்று அந்த ஹோட்டலில் தற்போதைய பாதுகாப்பாளராக இருந்தவர் வந்து கூறினார். 

 

அவர் எங்கிருந்தாலும் எனக்கு கான்ஃபரன்ஸ்ல கனெக்ட் பண்ணி விடுங்க. 

 

அடுத்த கணமே ஹோட்டல் அதிபர் நிர்வாகி மற்றும் திலீப் மூவரும் பத்து நிமிடமாக உரையாடலை தொடர்ந்திருந்தார்கள்.

 

பிகாஸ் இது என்னுடைய ஈகோவ சம்பந்தப்பட்டது.  இதுக்கு நீங்க சம்மதிக்கணும்னா நீங்க இதுல எவ்வளவு வருமானம் இதுவரைக்கும் ஈட்டிட்டு இருக்கீங்களா அதே மாதிரி நான் ரெண்டு மடங்கு உங்களுக்கு கொடுக்கிறேன்.  இவ்வாறு அவன் சொல்லவும் திருப்திகரமாக இந்த ஹோட்டலை சில்வியாவின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார்கள் அந்த நிர்வாகியும் அதிபர்களும். 

 

அந்த டேபிளின் முன்பு வந்து அமர்ந்த திலீப் சாப்பிடுங்க மிஸ்டர் தருண்.

 

இந்த ஹோட்டல் இந்த ஹோட்டல்னு வியாக்கியானம் பேசினீங்களே இப்ப இந்த ஹோட்டல் யாருதுன்னு தெரியுமா? 

 

மிசஸ் திலீப் குமாரோட ஹோட்டல் தான் இது  என்று சொன்ன அடுத்த கணம் அனைவரும் அதிர்ந்தார்கள்.

 

எப்படி இதற்கு அவன் வாதிடுவன் என்று தான் அனைவரும் நினைத்திருந்தார்களே தவிர இப்படிப்பட்ட முடிவினை அவன் எடுப்பான் என்று ஒருவர் கூட கிஞ்சித்தும் யோசிக்கவில்லை. 

 

சில்வியாவிற்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாக விளங்கவில்லை. 

 

என்கிட்ட இருந்து நீ ஒரு ரூபாய் கூட வாங்க முடியாதுன்னு சொன்ன திலீப், என்னை ஒருத்தங்க அவமானப் படுத்துகிறார்கள் என்பதற்காகவா இத்தனையும் செய்கிறான் என்று யோசனையில் மூழ்கி இருந்தாள்.

 

சில்வியா இங்க இருக்க எல்லா ஃபுட்டுமே சூப்பரா இருக்கும்ன்னு சொன்னாங்க‌ சோ எல்லாத்துலயும் ஒரு ஒரு பைட் பண்ணாலே போதும் எல்லா ஃபுட்டையும் டேஸ்ட் பண்ணிடலாம்.  

 

என அவளிடம் அவளுக்கு ஆதரவாக பேசியவன் தருணிடம் திரும்பி,

 

யார யாருக்கு முன்னாடி பேசுறன்னு தெரிஞ்சு பேசணும்.  இல்லனா இப்ப நீ செயலால கொடுத்த பதிலடி என் கையாலையும் கொடுக்க முடியும்.  இந்த வீட்டுக்கு வர ரெண்டாவது மருமகன்ற காரணத்தினால் மட்டும்தான் அந்த கையடி கிடையாது தவிர வேற எதுவும் இல்ல. 

 

மோகனுக்கும் செல்விக்கும் தங்களின் மகளின் வாழ்க்கை இனி சீராக அமையும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. 

 

சில்வியாவிற்கு ஒருவேளை காரினுள் தான் கெஞ்சி கேட்டுக் கொண்ட காரணத்தினால் தன் பெற்றோர்களின் முன்பு இவ்வாறு நாடகம் ஆடுகிறானோ என்று இருந்தது. 

 

ஆனால் மதியும் ,லோகேஷூம் போட்ட திட்டத்தில் அவர்கள் நினைத்ததை விட நூறு மடங்கு வெற்றி கண்டுள்ளார்கள் என்பது உண்மையானது.

 

இனிமேல் சில்வியாவை பத்தி யாரும் குறையா என் முன்னாடி பேசக்கூடாது.

 

அப்படிப் பேசினா அவங்க வாயிலிருந்து ரத்தம் பொளந்துரும். 

 

என்னடா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க.  எங்க முன்னாடியே உன் பொண்டாட்டியை கேவலமா நடத்துறவன் தானே நீ.  என்னமோ நாங்க கேவலமா பேசிட்டோம்னு ரொம்ப துள்ளுற.  இதெல்லாம் வெறும் ஆக்டிங்னு எங்களுக்கு தெரியாதா? 

 

இந்த போலி பத்திரத்தை எங்ககிட்ட காட்டி இது இனிமேல் சில்வியாவோடதுன்னு சொன்னா ராசா அப்படின்னு கையெடுத்து கும்பிடுவேன்னு நினச்சையா? இது லோகேஷ்

 

திலீப் அவனை முறைத்தபடி ஆமா அவளை கேவலமா தான் நடத்தறேன்.  ஏன் இதுக்கு மேல கூட நடத்துவன்.  பிகாஸ் ஷீ இஸ் மை வைஃப் ‌. சோ ஒரு பார்ட்னர எப்படி வேணா நடத்துவதற்கு எனக்கு உரிமை இருக்கு.  ஆனால் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அப்புறம் அந்த பொண்ணை கேவலமா நடத்துவதற்கு அவங்க பெத்தவங்களுக்கு உரிமை இல்லாத அப்போ உன் தங்கச்சி உன் தங்கச்சியோட வருங்கால கணவன் இடத்துல இருக்க இந்த தருண் எல்லாம் பேசுறத என்னால கேட்டுட்டு பொருத்துப் போக முடியாது.

 

ஏன்னா என்னோட நிகழ்காலத்துல என்னோட மனைவியா இருக்கிறது என் சில்வியா தான் என்று டேபிளின் உள்ள சேரில் அமர்ந்து கொண்டிருந்தவன் எழுந்து வந்து அவளது தோலை அணைத்து அவர்கள் அனைவரின் முன்பும் கூறினான். 

 

இவள வெறுக்கிறதா இருந்தாலும் சரி கேவலப்படுத்தறதா இருந்தாலும் சரி அது நானா மட்டும் தான் இருக்கணும் தவிர வேற யாராகவும் இருக்க கூடாது.

 

இது கட்டளையிடும் தொணியில் அனைவருக்கும் பிரதிபலிக்கப்பட்டது. 

 

இவ்வாறு தன்னை கட்டி அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த திலீப்பினை விழியகழாது அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சில்வியா.  அவளை விட உயரமான அவனை பார்த்துக்கொண்டு வாயைப் பிளந்து நின்றாள். 

 

கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சைட் அடிச்சின்னா எனக்கும் அன் கம்பர்டபிளா  ஃபீல் ஆகாது என்று  முணுமுணுத்தவன் அவளின் வாயை மூடினான்.

 

பிளந்த வாயோட அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளல அவன் நக்கல் செய்யவும் அவள் தனது வாயை தன் கர்ச்சிபால் மூடிக்கொண்டு அவன் சொன்ன அனைத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள். 

 

என்னோட மனைவியை என்னை தவிர வேற யாரும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவன் சொன்னதை மட்டும் மீண்டும் மீண்டும் அவளது செவியில் கேட்பது போன்று இருந்தது.

 

திலீப்பிற்கு சில்வியாவை பேசிய தருணின் மூக்கை உடைக்க வேண்டும் அவ்வளவுதான்.

 

மீண்டும் திலீப் அவள் உயரத்திற்கு குனிந்து ரொம்ப ரெக்ககட்டி பறக்காத.  இது எல்லாம் அவங்க சொல்ற மாதிரி ஜஸ்ட் ஒன் ஆக்ட் மட்டும் தான்.. சினிமாவுல ஹீரோயின் யாராவது கஷ்டப்படுத்தறப்ப ஹீரோ வந்து காப்பாத்துறாரே அது மாதிரி.

 

அப்ப இந்த ஹோட்டல் என்னோட பேர்ல மாத்துனது கூட ஆக்டிங்கா? 

 

நோ அது மட்டும் நிஜம். திரையுலகில் முதல் இடத்தை புடிச்சிருக்குற திலீப் போட பொண்டாட்டிக்குனு சொந்தமா எந்த இடமும் இல்லைன்னு யாரும் அடுத்த செய்தியை பரப்பிடக்கூடாது இல்லை.  அதனாலதான் உனக்குன்னு இந்த இடத்தை வாங்கிப் போட்டுட்டேன்.

 

அப்படின்னா நீ என்ன உன் வைஃபா ஏத்துக்கிட்டியா திலீப்?

 

ஆச்சரியம் என்னும் விதத்தில் கேட்ட சில்வியாவினை முறைத்து அடக்கி வைத்தான். 

 

இப்பதானே சொன்னேன் இதெல்லாம் வெறும் ஆக்டிங்னு.  பட் ஹோட்டல் மட்டும் உனக்கு சொந்தமானது.  இந்த திலீப் இல்ல என்று அவள் மட்டும் அறியும் அளவிற்கு அவளது செவியில் சென்று உரையாடினான்.

 

க்கும்  என்று சொறுமிய செல்வி நீங்க பொது இடத்துல நின்னு ரொம்ப க்ளோசா பேசிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை.  இதை யாராவது போட்டோ எடுத்து ஏதாவது தவறா பேசுறதுக்குள்ள உட்காந்து சாப்பிடுங்க என்று அன்பாக மொழிந்தார். 

 

இன் முகத்தோடு அமர்ந்த திலீப் அனைத்து உணவுகளிலும் கொண்டு வந்து மேஜையில் வைக்கும்படி அவன் ஆர்டர் செய்யவும் அடுத்த கணம் அது நடைபெற்றது.

 

பணம் இருந்தால் பெரிய காரியத்தையும் சுலபமாக சாதித்த விட முடியும் என்னும் குணத்தில் இப்போது அவன் செய்து கொண்டுள்ளான்.  பணம் இருந்தாலும் கூட சாதிக்க முடியாத சில விஷயங்கள் உள்ளது என்பதை அவன் எப்போது‌ அறியப் போகிறான்.

 

அனைவரும் ஒரு மணி நேரம் தாண்டியும் உணவு உண்டு விட்டு அங்கே சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

 

பேசிய பேச்சுக்களில் இதன் முன்பு நடந்த அனைத்தையும் மறந்து போனான் திலீப். 

 

நானாவது இப்பதான் மாட்டிக்கிட்டேன் திலீப் சார் நீங்க ரொம்ப நாளாவே மாட்டிட்டு தான் இருக்கீங்க என்றவனிடம் எப்ப விழுந்தா என்ன கிணத்துல விழுந்தாச்சு இல்ல என்று நக்கல் அடித்தான். 

 

இதற்கு இரு பெண்களும் தத்தம் கணவன்மார்களை முறைத்து கொண்டிருந்தார்கள். 

 

உன் முறைப்பு எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்று வாயை வலது புறமாக கோணித்தான் திலீப்.

 

பிறகு அவர்கள் புறப்பட்டு புடவை கடைக்குச் செல்லவும் அங்கே அனைத்தும் தயாராக இருந்தது.  புடவை கட்டுறவங்களையும் வர சொல்லுங்க என்று அவன் சொன்ன தொனியில் அங்கே அனைத்தும் ஆஜரானார்கள். 

 

இவங்க என்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடித்து இருக்க வங்க‌. அவங்களுக்கு இந்த உடைக்கு தேவையான ஆடை அணிகலன்கள் மேட்ச்சஸ் ஆகணும் என கட்டளை இட்டவனன் மொபைலை எடுத்துக் கொண்டு ஒரு அழைப்பை மேற்கொள்ள கிளம்பினான் .

 

எதிர்புற அழைப்பில் இவர் சொன்ன தால் சந்தோஷத்தில் திழைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். 

 

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் இது என்னோட ரொம்ப நாள் கனவு.  அந்த கனவை இவ்வளவு சீக்கிரமா நிறைவேத்தி கொடுப்பீங்க நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.  

 

இட்ஸ் ஓகே.  நான் இந்த பொறுப்பை உங்ககிட்ட கொடுத்திருக்கேனா அத நீங்க பொறுப்பா கவனிச்சுக்கணும்.  எந்த விதத்திலும் கொஞ்சம் கூட தரம் குறையக்கூடாது.  என்னோட மனைவியை பத்தியும் அவளோட உடையை பத்தியும் இனிமேல் யாரும் தப்பா பேசிடவே கூடாது. அது உன்னோட பொறுப்பு தான் பாத்திமா என்று கட்டளை இட்டவன் அவளுக்கென்று ஒரு பொட்டிக்கை தயாரித்து உடைகளை அமைத்து வைக்கும் படி கட்டளை இட்டவன் பொட்டிக்கிற்கு தேவையான அனைத்து அமௌன்ட்களையும் பே பண்ணி இருந்தான்..

 

ஏன் இவையெல்லாம் தான் அவளுக்காக செய்கிறோம் என்று அப்போதும் அவனுக்கு எந்த யோசனையும் இல்லை.  உன்னோடு இருப்பவளுக்கு எந்த அவச் சொல்லும் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்தாய் இருந்தான்.

 

இதை அவனது முதுகு புறம் நின்று கேட்டுக் கொண்டிருந்த சில்வியா, பொட்டிக்கா எதுக்கு திலீப் என்று கேட்டாள்.

 

அவளின் முகம் இருக்கும் புறம் திரும்பியவன் நீ அணிஞ்சிருக்க உடையால என்னை கேவலமா பேசணுவங்க முன்னாடி நீ இனிமே இவ்வளவு கேவலமான துணியை உடுத்தவே கூடாது இல்ல அதுக்காக தான்.  

 

இன்னும் ஆறு மாசத்துல பிரிஞ்சுட போறோம்.  அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற திலீப்.

 

இது சில்வியாவின் கேள்வி. 

 

சரியா நீ கேள்வி கேக்குற பட் இப்போ வரைக்கும் நீ என்னோட மனைவி தானே.  அதுவும் மரமண்டைக்கு நெனப்பு இருக்கா இல்லையா.  நியூஸ் பேப்பர் டெலிவிஷன் எல்லாத்துலையும் உன்னை என்னையும் பேரா தான் காட்டுவாங்க.  திரையுலகில் கொடிக்கட்டி பறக்கிற ஹீரோ நான். என்னோட மனைவி இவ்வளவு சீப்பான டிரஸ் அணிஞ்சுட்டு இருந்தால் எனக்கு அசிங்கம் இல்லையா? 

 

அதுக்காக மட்டும் தான் இத்தனை ஏற்பாடும் என்றவன் அவளது உடையை தொட்டு இனிமே இந்த மாதிரி மட்டமான குவாலிட்டில நீ டிரஸ் போடக்கூடாது என்றான். 

 

உணவு, உடை, இருப்பிடம் என்று அனைத்தையும் மாற்றி அமைக்கும் இவனுக்கு நான் மட்டும் வேண்டாமாம் என நினைத்தாள் சில்வியா‌

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!