அத்தியாயம் 21
கல்யாணத்தில் கௌரவத்தை விட காதல் கொண்ட உள்ளங்களுக்கு தான் மதிப்பு அதிகம்.
பின்பு ஒரு மணி நேரத்தில் புடவையில் தயாராகி வந்தவளை காணும் அனைவரும் வாய் பிளந்து கொண்டு நின்றார்கள். அத்தனை அழகு. சிகப்பு வர்ணனையில் அவளின் சிரித்த முகமும், அவள் சூட்டிய மல்லிகை சரமும் ,அவளின் அழகினை மேலும் கூட்டியது.
தனது தங்கையின் இந்த ஜொலிப்பையும் தனது அக்காவின் இப்படிப்பட்ட அழகையும் இத்தனை நாள் மறைத்து வைத்துள்ளாலே என்று இருவரும் உள்ளுக்குள் அவளைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட அழக தான் இத்தனை நாள் ஒளிச்சு வச்சுட்டு இருந்தியா என்று திலீப்பும் கூட அவளுடைய செவியில் கேட்டான்.
உன்னுடைய இந்த காம்ப்ளிமென்ட்ரிக்கு ரொம்ப தேங்க்ஸ்.
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது என்று தனது மனதில் மட்டும் நினைத்துக் கொண்டான் திலீப்.
மதியும் லோகேஷூம் அருகருகில் வந்து நின்றார்கள்.
டேய் அண்ணா ரொம்ப லவ் வந்திருக்கு போல..
மதிமா எனக்கும் இப்பதான் அது புரியுது.
நான் சொன்னனே பார்த்தியா என்னோட பிளான் ஒர்க் ஆகுது.
ம்ம்ம் ஆமாண்டா என்றவர் முன்னிலையில் சில்வியாவை நெட்டி முறித்தார் செல்வி.
பின்பு மதிக்கு புடவை எடுக்க ஆரம்பித்த சமயத்தில் தான் தருண் கொண்டு வந்த செக் பவுன்சர் ஆகிவிட்டது என்ற தகவல் வந்தது.
இப்போது என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவன் முன்பு வந்து நேரம் காலம் தெரியாமல் இதுக்கு தான் பேசக்கூடாது தருண். எந்த புடவை வேணுமோ அதை எடுத்துக்கோங்க. நான் என்னோட வைஃப்போட தங்கச்சிக்காக இதை நான் கிஃப்ட் பண்றேன் என்று அவன் சொல்லவும் அவனை பெருமிதமாக பார்த்தான் தருணும்…
இவ்வளவு கனிவாகவும் பண்பாகவும் இருப்பவனுக்கு ஏன் சில்வியாவின் நிலை மட்டும் புரியவில்லை. இல்லை அவனது கோபம் தான் சில்வியாவின் நிலையை புரிய வைக்க விடவில்லையோ.
என் செய்ய விதியால் எதையும் மாற்ற முடியும் என்று நினைத்தவன் புடவையை வாங்கி விட்டார்கள்.
மதி அந்த இடத்தில் இல்லாததால் இப்போது நடந்தவை எதுவும் அவள் அறியவில்லை. அதற்குள் அவளின் தோழிக்கு அழைத்து பேசி விட சென்றிருந்தாள்.
ஏனென்றால் அவள் போட்டிருந்த அடுத்த திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்பான் தருண். அதற்காக தனது தோழியை வரும் படி கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஏனென்றால் தருண் ஹோட்டல் வாங்கிவிட்டதை கண்டத்தின் பின்புமா திலீப்பை தவறாக எண்ணுவான். அவன் இப்படியும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவான் அதனால் தான் ஏற்பாடு செய்தாள்.
புடவை வெகு அதிக மதிப்பை கொண்டதால் அனைவரும் அதிர்ந்ததோடு மட்டும் அல்லாமல் திலீப்பின் மீது ஒரு கௌரவமும் பிறந்தது தருணின் பெற்றோர் இடம்.
ஆனால் மதிக்கு இந்த வர்ணப் புடவை பிடிக்கவில்லை எனக்கு வேற வேண்டும் என்று அடம் பிடித்தாள்.
பிடிக்கவில்லை என்று சொல்லுகிறாளே என்று கோபம் எழுந்தது மற்றவர்களுக்கு.
தருண் கூட அவன் அருகில் வந்து நீ என்ன பைத்தியமாடி. இது எவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா. அதை ஏன் அவன் வாங்கி தரும் போது வாங்கி காம மறுக்குற.
நீதான் பைத்தியக்காரன் மாதிரி பேசுற டா. நேத்து நான் உன்கிட்ட என்ன சொன்னேன். எனக்குனு சாரி நீ எடுக்கணும், உனக்கான வேஸ்ட்டி நான் எடுபேன்னு சொன்னனா இல்லையா? மறந்து போயிட்டியா இல்ல அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று என் மாமாவோட காசில வாங்க பாக்குறியா.
ஏய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மறந்துட்டேன் அவ்ளோ தான்.
சண்டையாக அவனிடம் நின்ற மதியிடம் அமைதியாக போனான். வாழ்க்கையில் இருவருமே சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை வெறுத்துப் போய்விடும் அல்லவா. யாராவது ஒருத்தர் பொறுத்துப் போக வேண்டும் என்பதால் இச்சமயத்தில் தருண் பொறுத்து போனான்.
திருமணம் என்னும் பந்தத்திற்குள் இன்னும் இணையாத போதும் இவ்விருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து ஒருவர் ஒருவர்காக பொறுத்துப்போகும் சமயத்தில் திருமணம் என்னும் பந்தத்தில் உள் நுழைந்து ஒரு வருடம் ஓடி சென்று ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ளாமலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகாமலும் ரணகளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் திலீப்பும் சில்வியாவும்.
பின்னர் திலீப்பிடம் சென்றவன் அவளுக்கு இந்த கலர் பிடிக்கலையாம். நான் செலக்ட் பண்ணி தரணும்னு ஆசைப்படுறா என்று சொல்ல இதுல என்ன இருக்கு. யூ ஜூஸ் எனி கலர் சாரி டோன் வொரி அபௌட் டு மீ.
எனக்கு இதுல எந்த பிரச்சினையும் இல்லை வருத்தப்படாமல் நீ போய்எடு என்று வழி அனுப்பி வைத்தான் திலீப் ..
மீண்டும் மீண்டும் தருணின் பார்வையில் திலீப் அந்தளவுக்கு ஒன்றும் கெட்டவனாக தெரியவில்லை. மற்றவர்களும் அவனை அப்படி சொல்லவில்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறான் அவன்.
பின்பு புடவை எடுத்துக்கொண்டு அனைவரும் நகை வாங்க புறப்படும் சமயம் வந்தது.
அப்போது அந்த கடைக்கு வந்த குட்டி குழந்தை ஒன்று வைஷு அம்மா எங்க இருக்க என்ன விட்டுட்டு எங்க போயிட்ட என்று தவித்தது.
இதோ அந்த குழந்தையை பார்க்கும் போது திலீப்பிற்கும் வைஷூவிற்கும் இடையே ஒரு நாள் நிலவிய காட்சி அவன் கண் முன் வந்து சென்றது.
இருவரும் வெளியே சென்றிருந்த நாளில் அழைப்பு வந்துள்ளது என்று திலீப் பேசிக் கொண்டிருந்த போது வைஷூ எங்கோ காணாமல் சென்று விட்டாள்.
எங்கடி போயிட்ட வைஷு வைஷு என்று துலாவினான் இந்த குழந்தையை போல்.
திலீப் இரு நான் வந்திருந்துடுறேன். ஐஸ்கிரீம் வாங்க வந்திருக்கேன் என்று ஐஸ்கிரீம்மோடு வந்து சேர்ந்தாள்.
அடியே இது புது ஊரு. ஐஸ்கிரீம் வேணும்னு கேட்டு இருந்தா நானே அவங்க கடைக்கிட்ட நிறுத்தி இருப்ப இல்ல. ரொம்ப பயந்து போயிட்டேன் தெரியுமா உனக்கு. யாரும் தெரியாத ஏரியால ஏண்டி இப்படி என்னை பயப்படுத்துற?
அச்சோ, என்னோட குழந்தை பயந்து போச்சு. சாரிடா செல்லம் இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன் என்று இந்த குழந்தையிடம் குழந்தையின் தாய் வைஷூ சொல்வது, அன்று தனது வைஷூ சொன்னது போன்றே இருக்க அதை பார்த்து கண் கலங்கிவிட்டான்.
அன்றைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவனுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் அவனை தட்டி எழுப்பியது.
அனைவரும் காரில் இருந்து வா போகலாம். ஏன் இன்னும் அங்கே நின்னுட்டு இருக்க திலீப் என்று அழைத்த போது தான் தன் அருகாமையில் சில்வியா மட்டும் தான் உள்ளால் என்பதை அறிந்து கொண்டான்.
திலீப் என்று மென்மையாக அவள் அழைக்கவும்
நீ ஏன் இப்படி நிக்கிறேன்னு எனக்கு தெரியும். அக்கா எங்கிட்ட அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க.
எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்க உன்கிட்ட. அவ இல்லாம அந்த ஒரு நொடியே நான் எப்படி தவிச்சேன்னு சொல்லியும் கூட அவ இந்த உலகத்துலையே இல்லாமல் பண்ணிட்டியேடி என்று அவளை நொந்து போன மனதுடன் பேசிவிட்டு காரை எடுக்கக் கிளம்பினான்.
இதுவரை சிரித்த முகத்துடன் இருந்தவளக்கு இப்போது அவன் பேசிய அந்தச் சொற்கள் அவளுக்கு வலியை ஏற்படுத்தியது.
அந்த தப்பு நடந்து முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆயி கூட உன்னால மறக்க முடியவில்லை. அவளுக்கு மேல நான் உன்னை காதலிச்சேன் திலீப். உனக்கும் என் அக்காவ தான் பிடிக்கும்னு தெரிந்த அப்போ என்ன கண்ட்ரோல் பண்ணிக்க உன்ன மாதிரி தான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.
உன் மேல இருக்க காதல் அதிகமாகும் போதெல்லாம் என் பிஞ்சு விரல்களை கடிச்சு நான் சமாதானப்படுத்தி கொண்டேன். இப்போ நீ என்ன பேசிப் பேசி நீ உன்னையே சமாதானப்படுத்துகிற. எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கூட கிடைக்கலையே என்று நினைத்தவள் அவன் காரோட வந்த ஹாரன் சவுண்ட் கொடுக்கவும் தான் நிகழ்வுகளுக்கு வந்தாள்.
காரில் எஏறி அமர்ந்தவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அடுத்த ஜுவல்லரி கடைக்கு சென்றார்கள்.
அதே நேரம் மதியின் தோழியும் வந்துவிட இப்போது அனைவரும் ஒற்றுமையாக உள்ளே நுழைந்தார்கள்.
திலீப்பின் வருகை அறிந்த கடை ஓனர் கூட முன் வாசலில் வந்து வரவேற்றார்.
வாங்க,வாங்க எல்லாரும் வாங்க என்று வரவேற்றதோடு நகைகளையும் அணிகலன்களையும் எடுத்து காட்டினார்கள்.
நீங்க மதிங்கிற ஒரு பொண்ணுக்கு மட்டும் காட்டுங்க இவங்க வந்து திலீப்போட வைஃப் இதெல்லாம் போட மாட்டாங்கனு நினைக்கிறேன் என்று மதியின் தோழி விஷாக்கா சொல்லவும் அதென்ன என் மனைவி போட மாட்டாள் என்று இவள் சொல்கிறாள் என்று உருத்து கவனித்தான் திலீப்.
எங்க திலீப் சார் உங்க வைஃப்க்கு நகை மேல இன்டெரெஸ்ட் இல்லனு ஒரு வீடியோல நான் பார்த்தேன் அதை தான் சொல்றேன். அது கரெக்ட் தானே!…
ஓ இது இவள் இன்ஸ்டாகிராமில் போடப்பட்ட ரீல்சில் ஒன்று போல என்று நினைத்தவன் அப்படி எல்லாம் இல்லையே சில்வியா இந்த திலீப் என்ன சொன்னாலும் கேட்பாள் என்று முற்றுப்புள்ளி வைத்தான்.
அதேபோல இந்த கடையிலேயே ரொம்ப காஸ்ட்லியான டைமண்ட் நெக்லஸ் எடுத்து காட்டுங்க. எடுத்துக்காட்டுவது மட்டும் இல்ல அதுக்கு மேட்சிங்கா இருக்க பேங்கிள் ரிங்,கொலுசு,மூக்குத்தி,இயரிங்னு எல்லாம் பக்காவா மேட்ச் ஆகனும் என்று ஆர்டர் செய்தான்.
டைமண்ட் வெகுமதிப்பு மிக்க பொருள் தான். அனைவரும் அந்தக் கடையில் இருக்கும் கலெக்ஷனில் ஒன்று திரட்டி இரண்டு மணி நேரத்தில் அவர்களின் கையில் ஒப்படைத்தார்கள்.
அதே நேரத்தில் மதிக்கும் அவர்கள் தங்கம் மற்றும் டைமண்டில் தேவையான அணிகலன்களை எடுத்துக் கொண்டார்கள்.
இவ்வாறு பேசினால் மட்டுமே திலீப் தனது அக்காவிற்கு உடையும் அணிகலன்களையும் வாங்குவான் என்று அறிந்திருந்தவள் அழகாக காயினை நகற்றி தன் மாமாவிற்கு தன்னால் செக் வைத்தாள்.
அவள் எண்ணியது போலவே அன்று அனைத்தும் நடந்து விட விஷாக்கா விடமும் நன்றி தெரிவித்தாள் அவள்.
இப்படி எப்பவுமே பர்ஃபெக்ட்டா ஆளுங்கள கோபப்படுற மாதிரி பேசுறதுல நீ கில்லாடினு ப்ரூப் பண்ணிட்ட – மதி
போதும் போதும் புகழாரம் பேசுவதை விட்டு ஐயாயிரம் ரூபா காசு எடு என்றளை முறைத்தாள் மதி.
நீ பண்ண வேலைக்கு ஐந்தாயிரம் இல்ல ஒரு ஜுவல்லரியே வாங்கி தரலாம். சந்தோசமா வாங்கிட்டு போ என்று அவளும் சொல்லி சிரித்தார்கள் இருவரும்.
இவ்வாறு இவர்கள் பேசியது என்னமோ திலீப்பின் செவியை எட்டி விட்டதை போல திலீப் மதியையும் விஷாக்காவையும் முறைத்தான்.