எல்லாம் பொன் வசந்தம்…(22))

4
(2)

அத்தியாயம் 22

 

காதல் என்பது கல்யாணமாக மாறி பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது எல்லாம் ஒரு வரம்.

 

விஷாகாவும் மதியும் தனியே நின்று உரையாடிக் கொண்டுள்ளார்கள் என்று மட்டும் முறைத்தபடி வந்தான் திலீப்.

 

என்ன விஷக்கா சொன்ன? என் வைஃப் ஜுவல்லரி போட மாட்டாங்கன்னா சொன்ன. அங்க பாரு நான் சொன்ன புடவையும், ஜுவல்லரியையும் போட்டு எப்படி ஜொலிக்கிறான்னு பாரு என்று அவன் காட்ட உண்மை தான் இதற்காக தான் வந்துள்ளான் என்று நிம்மதி அடைந்தார்கள்.

 

இருவரும் பார்த்துவிட்டு ஆமாம் என்று கூறி வாயை பிழைந்து நின்றார்கள். அவ்வளவு அழகாக இருந்தாள் சில்வியா.

 

இதுக்கு மேல இந்த மாதிரி ஸ்டுப்பிட்டான டாக்ஸ் எல்லாம் என்கிட்ட வரக்கூடாது என்று விரல் நீட்டி மிரட்டினான் . வீடு திரும்ப தயாரானார்கள்.

 

இன்னும் உனக்கு தாலி செய்யற இடத்துக்கு போகவே இல்லையே குட்டிமா என்ற லோகேஷ் கேட்கவும் ரொம்ப டயர்டா இருக்கு அண்ணா நாளைக்கு போய்க்கலாம் என்று அதை மட்டும் குறிப்பாக தள்ளி வைத்தால் மதி.

 

பின் சில்வியாவும் திலீப்பும் உடன் இருப்பதனால் எப்படி அங்கு செல்ல இயலும்.

 

வீட்டிற்கு சென்று இருந்த களைப்பில் அவர் அவர்கள் உறங்கிவிட திலீப்பும் சில்வியாவும் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.

 

மத்தவங்க முன்னாடி என்ன பெருமையா காட்டணும்னு மட்டும் இவ்வளவும் பண்ணி இருக்க.

 

உன்னை பெருமையா காட்டணும்னு இல்லடி. என்னோட பெருமை கெட்டுப் போய்ட கூடாதுனு.

 

ஏன் நான் சிம்பிளா இருந்தா உன் பெருமை எந்த விதத்தில் கெட்டுப் போகுது.

 

ஏன் இன்னைக்கு உன்னோட தங்கச்சியும், தங்கச்சியோட வருங்கால புருசனும் பேசின பேச்சு எல்லாம் மறந்து போச்சா?

 

அவங்க சின்ன பிள்ளைங்க அதுக்காக எனக்குன்னு ஒரு ஹோட்டல் ஒரு பொட்டிக் இதெல்லாம் அவசியமா?

 

அதே மாதிரி இந்த உலகத்துல எத்தனையோ சின்ன பொண்ணுங்க இருக்காங்க. உன்னை பத்தி ஒருத்தவங்க அவதூரா பேசுறாங்கனா அப்ப நீ என்னோட மனைவியா இருக்கக்கூடாது.

 

அதுக்கான ஏற்படும் தயாராகிட்டு தான் இருக்கு. அத முதல்ல தயார் பண்ணி கொண்டு வா சைன் போட்டு தரேன் என்று கோபமாக பேசிவிட்டு தங்களது அறையில் உடை மாற்றுவதற்கு தயங்கி நின்றாள்.

 

பின்பு எப்படியும் இருவரும் ஷேர் செய்யும் அறை அது. நான் வெளியே சென்று மட்டுமே உடைகளை கலட்ட இயலும்.

 

முதல்ல வெளியே போ. நான் டிரஸ் மாத்தணும்.

 

நான் எதையும் பார்க்க மாட்டேன் நீ வேணும்னா தைரியமாக மாற்றலாம்.

 

உன்ன வச்சுக்கிட்டு நான் எப்படி இங்க டிரஸ் மாத்த முடியும்.

 

என்னடி உன்னோட புருஷன் தானே என் முன்னே மாற்றுவதற்கு என்ன. என்னமோ ஓவரா சீன் போடுற.

 

என்னைக்கா இருந்தாலும் நீ என் புருஷன் இல்லன்னு மாறப்போறது உண்மைதானே. வார்த்தைக்கு ஒருமுறை டிவோர்ஸ் பண்றேன் டிவோர்ஸ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்குற உன் முன்னாடி எப்படி என்னால டிரஸ் மாற்ற முடியும்.

 

ஓ இப்போ இது தான் உனக்கு பிரச்சனை என்று மேவாயில் அந்த பெரிய விரால் நீவியபடி கேட்டவன் அவளை சுவற்றோடு சுவற்றாக ஒட்டி நிறுத்தினான்.

 

நீ நிம்மதியா இருக்க இடம் எதுவாக இருந்தாலும் அதை நான் கெடுத்துருவேன். நீ இந்த சாரியை போட்டுட்டே இன்னைக்கு தூங்கு என்று அவன் சொல்லிவிட்டு அதே அறையில் படுத்தும் கொண்டான்.

 

அதிக விலை கொண்ட இந்த புடவையை குளியலறையில் சென்று மாற்றும் அளவிற்கு அவளுக்கு மனது ஒப்பவில்லை. இந்தக் குறும்புக்காரனுக்கு அவளின் நிலையும் புரியவில்லை.

 

இவனையெல்லாம் இவங்க அம்மா என்ன மைண்ட் செட்டில் பெத்தாங்களோ தெரியல. குரங்கு கையில மாட்டிக்கிட்ட குதிரை கொம்பா போச்சு என் வாழ்க்கை. ஒரு டிரஸ் மாத்திரத்துக்கு கூட காலில் விழுந்து கெஞ்சனும் போல.

 

என்று அவள் பாட்டுக்கு உளறிக்கொண்டு இருக்க ஆமா என்ம் காலில் விழுந்து கெஞ்சு நான் வெளியே போறேன்.

 

என்று சொல்லிவிட்டு மெத்தையில் படுத்து இருந்தவன் எழுந்து கால் மீது கால் போட்டு அமர்ந்து உட்கார்ந்தான்.

 

வாட்ரோப்பில் உடையை தேடிக் கொண்டிருந்தவள், அவனை திரும்பி முறைத்து விட்டு நான் குளியலறையில் போய் மாத்திப்பேன் என்று சொல்லிவிட்டு உதட்டை இடவலதாக கோணித்தாள்.

 

பிறகு உன் இஷ்டம் என்று தனது தோலை சிலுப்பி விட்டவன் படுத்துக்கொண்டான்.

 

இவன் கிட்ட கெஞ்சரதுனால குறைஞ்சு போயிட மாட்டோம் என்று நினைத்தவள், அவனது காலை தொட்டு தயவு செஞ்சு வெளிய போயேன் என்று கெஞ்சினாள்‌.

 

இப்போ தான் யாரோ பாத்ரூம்ல போய் மாத்திக்கிறேன்னு சட்டம் பேசினாங்க.

 

யாரோ இல்லை நான்தான் ப்ளீஸ் இப்போ நானே தானே கெஞ்சுறேன் கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோ என்று கேட்பதற்கும் தயாரிப்பாளர் ராஜு பாய் என்ற பெயர் பொருந்திய அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

 

இப்ப நீ தப்பிச்சிட்ட நான் வரதுக்குள்ள நீ மாத்திடு என்று சொல்லிவிட்டு மொபைலோடு பால்கனிக்கு சென்றான்.

 

ஹலோ திலீப் சார் நான் ராஜு பாய் பேசுறேன். ஆல்ரெடி புக் பண்ணி இருந்தா மூவிய இப்ப நம்ம மேக் பண்ண ரெடி ஆகலாம்னு நினைக்கிறேன்.

 

அப்படிங்களா எத்தனை நாள் சூட்

வேணும்னு சொல்லுங்க.

 

உங்க சூட் ஒரு ட்டுவள் டேஸ் இருந்தா போதும். மீதி எல்லாம் ஹீரோயினியோட பார்ட் என்றவரிடம் அடுத்த பன்னிரண்டு நாட்களுக்குள் நடித்துக் கொடுக்கிறேன் என்று வாக்களித்தவன் மறுநாளே பட தயாரிப்பிற்காக சென்றான்.

 

இந்தப் படத்தில் முக்கியமான ரோல் ஹீரோயினி தான். அதை இம்முறை சில்வியா என்பவள் தட்டிச் செல்கிறாள் என்று அங்கிருந்து அனைவரும் உரையாடிக் கொண்டிருந்ததை கேட்டு திலீப் ஏனோ அக்கணம் மகிழ்ச்சி தான் அடைந்தான் .

 

இப்படப்பிடிப்பு ஒரு புறம் சென்று கொண்டிருக்கும் போது மதியின் திருமண நாட்களும் நெருங்கிக் கொண்டிருந்தன.

 

இந்தப் படத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினர் வகுத்து உள்ளார்களோ அதை எதிர்த்து வெளி உலகிற்கு வரும் பெண் எப்படி சாதிக்கிறாள் என்பதுதான் மையக்கருத்து.

 

அப்பாவை போல இருந்து சாதிக்கு பெண்ணாக மாற வேண்டும்.

 

இவளின் முக பாவனைக்கு ஒற்று போவதால் இதோ அந்த கதை நாளை அடுத்த நாள் முடியவிருக்கும் தருணத்திற்கு வந்துவிட்டார்கள்.

 

அடுத்து படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே மதியின் திருமணம் வேறு.

 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இப்படப்பிடிப்பை இருவரும் நடத்திக் கொடுக்க வேண்டுமா எல்லாம் சிந்திக்காமல் அவர்களின் வேலை துறையில் கனகச்சிதமாக தன் பணியினை மேற்கொண்டார்கள்.

 

மதி அதன் பின் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க எத்தனையோ முறை போராடியும் இருந்தாள்.

 

திலீப்பிற்க்கு முன் போல எல்லாம் சில்வியாவின் மீது அருவெறுப்பு இல்லை. ஏனென்றால் தான் மற்றவர்களின் முன்பு அவளை மட்டமாக நடத்துவதனால் தான் மற்றொருவர்களும் நடத்துகிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.

 

வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் இப்போது அவன் அவளை பணிவாக நடத்தினான்.

 

ஆனால் வீட்டில் நுழைந்த அடுத்த கணம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக நடந்து கொள்வான்.

 

உன்னுடைய இந்த முகத்தை பார்த்து பார்த்து எனக்கு அருவருப்பா இருக்குடி என்று ஒரு ஒரு நாளும் சொல்லி சொல்லி அவளை வேதனையில் மூழ்க வைத்து தான் ரசிப்பான்.

 

இப்படி இவன்கிட்ட பேச்சு வாங்கிட்டு இருக்குறதுக்கு இவன் கிட்ட இருந்து விடுதலை வாங்கிட்டு போயிடலாம்.

 

இவளும் இவ்வாறு இத்தோடு எத்தனை முறை நினைத்து விட்டாள்.

 

இவ்விருவரும் சண்டையிடும் நாட்களையும் எண்ணி காலம் சிரித்துக்கொண்டிருந்தது.

 

இன்றும் அது போல தான் படப்பிடிப்பினை முடித்து விட்டு வந்து தனது காலணியை வீட்டின் முன்புறம் விட்டாள்.

 

காலணி வீட்டு வாசலில் விடுவாங்களா அறிவு கெட்ட மூதேவி.

இப்படித்தான் உன்னை வளர்த்தாங்கலோ என்று இம்முறை அவளது பெற்றோரை குறை கூறினான்.

 

நீ என்னை என்ன வேணாலும் பேசு திலீப் கேட்டுப்பேன். பொறுத்து கூட போவேன் என் பெத்தவங்கள பத்தி நீ பேசாத. அதுக்கு உனக்கு தகுதி கிடையாது. உன்னை மாதிரி ஒரு ராட்சசனையே பெத்து வளர்த்திட்டாங்க. என்னை பெத்து வளர்த்த என் அப்பா அம்மாவை பத்தி நீ ஒன்னும் குறை சொல்லாதே.

 

என்று அவளும் அவனது பெற்றோரை இழிவு படுத்தினாள்.

 

என்னடி சொன்னா என்னடி சொன்ன என்று அவள் முன்பு எகிரிக் கொண்ட அவன் வரவும் உண்மையை தானே சொன்னேன் என்று அவளும் எகறினாள்.

 

உனக்கு என்னடி தெரியும் என் வளர்ப்பை பத்தி ஒழுங்கு மரியாதையா பேசு என்று அவன் வார்த்தைகளை அடுக்க திலீப்பின் பெற்றோர் அவர்களின் அறையில் இருந்து வெளியே வந்து என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள்.

 

ஆமாம் நல்லா வளர்த்து இருக்காங்க. வண்டி ஓட்ட சொல்லி தரேன்னு கூட்டிட்டு போய் உன் தம்பியை கொன்றவன் தானடா நீ என்று சொல்லவும் அவனுக்கு கோவம் வெடித்து விட்டது. அவளது கழுத்தைப் பிடித்து நெருக்கி சுவற்றோடு சுவற்றாக நிறுத்தி விட்டான் அவன்.

 

என்னடி சொன்ன என்ன சொன்ன நடந்த உண்மை என்னன்னு தெரியாம வாய் பேசக்கூடாது நீ. யார் என்ன சொன்னாலும் உண்மைனு நம்பிருவியா உனக்கு என்னடி தெரியும் அவன் எப்படி இறந்தான்னு.

 

உன்னை மாதிரி ஒரு கேவலமான ஜீவனுக்கு அதை புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த வீட்ல இருக்கிற கொஞ்ச நாளும் வாய மூடிட்டு அமைதியா இருந்து பழகு. என்னோட மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காத.

 

திலீப்பின் பெற்றோர் அவன் செய்த இந்த காரியத்தினால் அதிர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவனது கையினை தட்டி விட்டார்கள்.

 

டேய் இறக்கி விடுடா அந்த பொண்ண…

 

உனக்கு மூளைல கொஞ்சமாவது அறிவு இருக்கா அந்த பொண்ணை கீழ விடுடா என்று அவனது தாயும் அவனது முதுகில் போட்டு அடித்தார்கள்.

 

அவள் பேசின பேச்சு புரியுதா மா உங்களுக்கு. இதே என்னோட வைஷூவா இருந்தால் இவள மாதிரி என்னை குத்திக்காட்டி பேசிருப்பாளா.

 

என்றுமே அமைதியாகச் செல்லும் சில்வியா இன்று அதீத கோபத்தில் நிற்க காரணம் அவன் தனது பெற்றோரை குறை பேசியதுதான்.

 

சாரி திலீப் நான் எதோ கோபத்துல என்று ஆரம்பிக்கவும்,

 

உன் மண்ணாங்கட்டி கோவத்தை கொண்டு போய் குப்பையில் போடுடி என்று நரநர வென்று பற்களை கடித்தவன், அம்மா இவள் இனிமேல் இந்த வீட்ல இருக்க கூடாது. ஸ்நோபர் எங்க இருக்கானோ அந்த இடத்துக்கு இந்த நாயை தள்ளுங்க என்று சொன்னவன் மறுகணமே தனது தாயிடம் இருந்து அறையைப் பெற்றான்.

 

நாங்களும் பொறுத்து பொறுத்து போயிட்டு இருந்தால் என்னடா ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க. அந்தப் பொண்ணை நீ தானே புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உங்க அப்பா கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்த. இப்ப என்னமோ வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிற. நீ இங்க கூப்பிட்டு வந்து இவ்வளவு சித்திரவதை பண்றேன்னு இவள் அவங்க பெத்தவங்க கிட்ட சொல்லி இருந்தால் என்னடா பண்ணுவ. அதைவிட முக்கியமா என்னை என் கணவர் ரொம்ப டார்ச்சர் பண்றாருன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்தால் என்னடா உன்னால பண்ண முடியும். உன் கரியர்ல நீ சம்பாதித்து வச்ச சொத்து மட்டும் இல்லை, நீயும் இல்லாம போயிடுவ டா. ஒரு பொண்ணை எப்படி மதிக்கணும் அறிவு கூட உனக்கு இல்லை. நான் உன்னை அப்படியா வளத்தேன்.

 

அவள் பேசுனதுல என்னடா தப்பு இருக்கு. உன் தம்பி சாவுக்கு காரணம் நீ தானே. அதை எப்படி உன்னால மறக்க முடியும். நீயும் அவனும் வண்டி மட்டும் பழகுறேன்னு போய்தானே அவன் அடிபட்டு விழுந்தான்.

 

இப்பொழுது திலீப்பின் தாய் அவனை பேசியது அவனுக்கு வலியை கூட்டியது.

 

அனைவரிடமும் இதை மட்டும் கூறியவனுக்கு தனது தம்பி கேசவ் இறந்த தருணம் அவன் மட்டுமே அறிவான். தனது பெற்றோர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று மறைத்து வைத்திருந்த திலீப்பிற்கு இம்மாதிரியான சொற்கள் நெஞ்சு கூட்டில் சென்று வலியை ஏற்படுத்தியது.

 

வாய் திறந்து பதில் பேசு திலீப் என்று அவனது தந்தையும் அவனை உலுக்கினார்.

 

இல்லை எங்களிடம் இருந்து நீ எதையாவது மறைக்கிறியா என்று சரியாக திலீப்பின் தந்தை கேட்டுவிட்டார்.

 

அவரையே உற்று கவனித்த அவனுக்கு அன்று நடந்த அனைத்தும் கண் முன் வந்து சென்றது.

 

கேசவ்வின் பிளட் குரூப் என்ன என்பதை அறியத்தான் அங்கு சென்று இருந்தார்கள். ஆனால் அவனுக்கு கிடைத்த பரிசு எச்ஐவி பாசிட்டிவ் என்ற செய்தி.

 

இச்செய்தியை அறிந்த பின்னுமா அவன் வாழவேண்டும் என்று நினைப்பான்.

 

பெருசா ஒன்னும் இல்லடா பாத்துக்கலாம் என்று திலீப் சமாதானம் செய்துவிட்டு மருந்துகளை வாங்க சென்ற சமயம் நடுரோட்டில் வந்து நின்று

லாரி மோதி தூக்கி வீசப்பட்டு இறந்த தனது தம்பியின் பிம்பம் அவனது கண் முன் வந்து சென்று அவனுக்கு அழுகையை மூட்டியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!