எல்லாம் பொன் வசந்தம்…(23)

4.5
(2)

அத்தியாயம் 23

 

காதலித்தவன் கண் கலங்கும் போது எந்த பெண்ணாலும் அதன் வலியை ஏற்றுக்கொள்ளவே இயலாது.

 

திலீப் திலீப் ஏன் இப்படி அழறீங்க. ச்சே அவர் மறந்து இருந்த விஷயத்தை நானே கிளறி விட்டுட்டேனே. திலீப் அழுகாதீங்க ப்ளீஸ். நீங்கள் அழுவது என்னால ஏத்துக்க முடியல. 

 

திலீப்பின் பெற்றோர்களும் அவனை சமாதானம் செய்து அவனது அறைக்கு கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு சென்று அடைக்கலம் ஆகி கொண்டார்கள். 

 

அவன் இறந்ததில் இருந்து திலீப் மீண்டும் வருவதற்கு எத்தனை துயரப்பட்டான் என்பதை அறிந்ததினால் மேலும் அவனை எந்த கேள்வியும் கேட்காமல் அனுப்பி வைத்தார்கள்.

 

நம்ம பையங்கிட்ட இப்படி பேசி இருக்க கூடாதுங்க. அவனுக்கு மறுபடியும் பழசு எல்லாம் ஞாபகம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். அதான் இப்படி அழறான்.

 

திலீப் ஒன்றும் மற்ற சகோதரர்கள் போல அடம்பிடித்து, அடித்தும், சந்தோசமாகவும் வாழ்ந்த குழந்தைகள் அல்ல.

 

பெற்றோர் இருவரும் வேலைகள் என்று சென்றபோதில் வீட்டு வேலைகளையும் அவர் பெற்றோர்களுக்கு உதவுவதிலும் மும்முரமாகி தனது சிறு பிள்ளைத்தனங்களை இழந்த குழந்தைகள். 

 

கேசவ் எப்பொழுதும் அண்ணனுடன் மட்டுமே அத்தனை நேரத்தையும் செலவிடுவான்.

 

காலை கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் சமயம் வரை அனைத்திலும் திலீப்பும் கேசவ் மட்டுமே அந்த வீட்டில் நிறைந்து இருப்பார்கள்.

 

உணவு சமைப்பது பாத்திரம் கழுவுவது வாசல் கூட்டுவது வாசல் துடைப்பது வீட்டினை சுத்தம் செய்வது துணி துவைப்பது தண்ணீர் பிடிப்பது சமையல் வேலைகளில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி அதை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று அனைத்து வேலைகளையும் அந்த சின்ன பிஞ்சுங்களே செய்து கொண்டு பெற்றோர்களுக்கு உதவியாக இருந்ததன் பலன் தான் இப்போது அவர்கள் இத்தனை பெரிய பணக்காரர்களாக நிற்க காரணம்.

 

அவர்கள் நடுத்தர வர்க்கம் குடும்பத்தினரை விட கீழ் நிலையில் இருந்து இப்பொழுது பணக்கார குடும்பத்தின் செழுமையில் செழித்து இருப்பவர்கள்.

 

அரும்பாடு பட்டு அனைவரிடமும் அவச்சொல் வாங்கி இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வருவதற்கு இவர்கள் பட்ட அத்தனை துயருமும் இப்போது திலீப் என்ற நாயகனால் மாற்றப்பட்டது.

 

குழந்தைகளை அப்போது வளர்ப்பதற்காக அவர்கள் பட்ட பாடுகளை இன்னும் அவன் மறவான். 

 

இருந்தும் தன் தம்பியை கொன்ற பாவி நான் தான் என்று அவன் நொடிக்கு ஒரு முறை சிந்திப்பதற்கு காரணம் பிளட் டெஸ்ட் எடுப்பதற்கு அழைத்துச் சென்றது அவனே . அதனால் அவனை குற்றம் சாட்டிக் கொள்கிறான்.

 

அவனின் இந்த நிலையை கண்டு தன்னை காயப்படுத்திக் கொண்டாள் சில்வியா.

 

என்னை மன்னிச்சிடு என்னை மன்னிச்சிடு இப்படி நீ அழாதே என்னால தாங்க முடியல என்று அவனது கையை எடுத்து தன் முகத்தில் அடித்துக் கொண்டாள். 

 

உன்னை சொல்லி தப்பில்லை டி. எல்லாம் என்னால நடந்தது தான் இன்று அவளிடம் மட்டும் அன்று நடந்ததை மறக்காமலும் மறைக்காமலும் கூறிவிட்டான்.

 

இப்படிப்பட்டவனையா தம்பியை கொன்ற பாவி என்றேன் என்று அவளும் நொந்து கொண்டாள். 

 

என்ன மன்னிச்சிடுங்க நீங்க உண்மையிலேயே ரொம்ப தங்கமான மனுஷன் என்று சொல்லிய அடுத்த கணமே உன்னோட இந்த போலியான ஆறுதல் எனக்கு தேவையில்லை. 

 

நீ சொன்னது போலவே தான் நான் மனசாட்சியே இல்லாத ஆள். ஏன் அப்படி சொல்றன்னு பாக்குறியா இந்த பெட்ல எண்ட்ல ஒரு பேப்பர் இருக்கும் பாரு போய் எடுத்துட்டு வா. 

 

அவளும் அவன் சொன்னதை போலவே வேகமாக அதைச் சென்று எடுத்து வர, இந்த பேப்பர்ல சைன் பண்ணி கொடு என்று காட்டினான்.. 

 

என்ன என்பதைப் போல பார்த்த அவளுக்கு அதில் டிவோர்ஸ் என்று இருக்க, தலை சுற்றி விட்டது. 

 

என்ன இது என்று அவள் அழுத்தமாக கேட்க, 

 

ஏன் உனக்கு படிக்க தெரியாதா? 

 

தெரியுது ஆனா இப்ப கூட இதுக்கு நமக்கு என்ன அவசியம். 

 

என்ன அவசியமா உன்னை எனக்கு இப்போ புடிச்சிருக்குன்னு யார் சொன்னா?

 

இப்போ மட்டும் இல்லை எப்பவுமே உன்னை எனக்கு சுத்தமா பிடிக்காது. ஒரு ப்ரண்டா என் லவ்வரோட தங்கச்சியா இருந்து நீ எப்ப என்னுடைய காதலியா மனைவியா மாறனும்னு ஆசைப்பட்டாயோ அப்பவே உன் மேல எனக்கு வெறுப்பு வந்துருச்சு. 

 

அதுக்காக நீ செஞ்ச துரோகத்தை மறந்துட்டு உன் மேல காதல் வலையில் சிக்கிற ஹீரோ இல்ல நான்.

 

நான் சொல்றது எப்ப தான் நீ புரிஞ்சுக்க போற திலீப்.  

 

உன்னை ஏன்டி நான் புரிஞ்சுக்கணும். முட்டாள் மாதிரி பேசுன நஷ்ட ஈடு வழக்கு பதிவு பண்ணிடுவன் உன் மேல என்றவனை வெட்டவா குத்த வா என்று முறைத்தாள்.

 

அப்போ அன்னைக்கு மத்தவங்க முன்னாடி என்ன சந்தோஷமா வச்சுக்கிட்டது எல்லாம் பொய்யா? 

 

பொய்தான். அன்னைக்கு ஒரு நாள் நீ சந்தோசமா இருந்தியா. அதனால இனிமே வாழ்க்கை முழுக்க நீ கஷ்டப்படனும் இல்ல. அதுக்கு தான் இந்த டிவேர்ஸ் பேப்பர்.

 

சைன் பண்ணி கொடுடி. ரொம்ப ஓவரா சீன் போடாத இதுக்கு தான நீ காத்திட்டு இருந்த. இப்ப என்னமோ நீ விரும்பாதத நான் பண்ணிட்ட மாதிரி ஆக்ட் பண்ற. நீயும் கூட நடிக்க வந்ததால் இப்போ பயங்கரமா நடிக்கிற என்று அவன் பாட்டிற்கு அவளை பேசிக்கொண்டே இருந்தான்.

 

நீ என்ன வேணா பேசு திலீப் ஆனா நான் இதில் சைன் பண்ண போறது இல்லை. 

 

ஏன்? 

 

அதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. 

 

ஓ நான் சந்தோசமா நிம்மதியா வாழ கூடாதுன்னு நீ நினைக்கிற. அதுக்காக தான் இதுல சைன் பண்ண மாட்டேங்குற. எப்படி சில்வியா இப்படி ஒரு கேவலமான புத்தி உனக்கு என்று அப்போதும் அவளை திட்டினான்.

 

நீ என்னை எப்படியாவது பேசி இதுல சயின் வாங்கலாம்னு நினைக்கிற ஆனா கண்டிப்பா அதை பண்ண மாட்டேன். 

 

அச்சோ கடவுளே இந்த பொண்ணுக்கு பொறுமையா சொன்னா புரியவே புரியாது போல. இங்க பார் நான் உன்னை இந்த உலகத்திலேயே அதிக அளவு வெறுக்கிறேன். அதிக அளவு வெறுக்குற உயிரும் நீதான். அதிக அளவு கோபப்பட வைக்கிற ஜென்மமும் நீதான். அதிக அளவு என் சந்தோஷம் பாதிக்கிறது உன்னால் தான் என்று அவன் ஒவ்வொரு வார்த்தையும் உன்னால் உன்னால் என்று கூறும் போது முழுவதுமாக உடைந்து போனாள்.

 

அப்படின்னா உனக்கு என் மேல ஒரு துளி கூடவா அன்பு இல்லை என்று மீண்டும் அவள் கேட்க, யார்ரா இவள் ஓட்டைப்பானையில் தண்ணீர் போன மாதிரி ஒரே கேள்வி கேக்குறா.

 

இல்லை இல்லை அன்பு இல்லை,அக்கறை இல்லை காதல் இல்லை, கல்யாணம் பண்ணினேங்கிற பெயரில் எந்த பாசமும் இல்லை. முதலில் என்னை விட்டு ஓடிடு. அதான் எனக்கு வேணும். உன் மூஞ்ச இனிமேல் என் வாழ்நாளில் நான் பார்க்க கூடாது.

 

திலீப் 

 

இப்ப ஷைன் போட போறியா இல்லை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகட்டுமா? 

 

எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.

 

எதுக்கு சைன் பண்றதுக்கு ரெண்டு நிமிஷம் ஆகுமா 

 

அதுக்கு இல்ல சைன் பண்ணலாமா வேணாமானு யோசிக்கிறதுக்கு. 

 

ஓ சரி என்னை விட்டு எப்படியும் ஒழிய போற எடுத்துக்கோ எத்தனை நாள் டைம் வேணுமோ அத்தன நாள். நாள் கணக்கு மாதமா மாறுறதுக்குள்ள இதுல நீ சைன் போட்டு என்னை விட்டு ஓடி போயிடு.

 

நீ கேட்ட அனைத்தும் நடைபெறும் என்று மனதிற்குள் நினைத்தவள் எச்சிலை விழுங்கி கொண்டு அவனைப் படுத்து உறங்கு என்று சொல்லிவிட்டு தனது உடையை மாற்றிக் கொண்டு வந்து அவளும் படுத்து உறங்கினாள் தரையில். 

 

ஒரே அறையில் தான் இருக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு இடத்தில். காதலில் அவளோ முழுவதும் அவனை மட்டுமே நிரப்பி உள்ளாள். காதல் என்று ஒன்று அவளின் மீது மட்டும் அவனுக்கு இல்லவே இல்லை. 

 

அடுத்த நாள் அந்த படத்தின் இறுதி காட்சி அழகுற முடிந்தது. சாதித்து முடித்த பெண்ணிற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவிப்பது போல கதை முடிக்கப்பட்டது. 

 

இந்த ரோல் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்குதும்மா என்று சொன்ன ராஜு பாய் திலீப்பிடம் ஒரு பென்டிரைவ் வினை கொடுத்தார்.

 

நீ இந்த பென் டிரைவரை முதலில் பார் உன் வைஃப் மேல எந்த தப்பும் இல்லன்ற உண்மைய புரிஞ்சுக்கோ. இதை பார்த்தால் ஆவது புரியும் சில்வியா எந்த தப்பும் பண்ணலனு புரியும்‌.  

 

எங்கு சென்றாலும் அவளது ஒப்பாரியை போட்டு அவள் பக்கம் அனைவரையும் இழுத்து விடுகிறாள் என்று அந்த பென் டிரைவை எடுத்து அவர் அறியா வண்ணம் தூக்கி எறிந்து விட்டு சென்றான் இதற்காக அவளிடம் கத்த,

 

அவளோ அனைவரிடமும் பாராட்டு பெற்றுக் கொண்டிருந்தாள். சில்வியா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொன்ன மறு கணமே அனைவரிடமும் விடை பெற்றவள் அவனிடம் வந்து நின்றாள்.

 

சொல்லு திலீப் மனசு மாறிட்டியா என்று அவள் ஆர்வத்துடன் கேட்க,

 

மனசு மாற்ற அளவுக்கு நீ அப்படி எதுவும் பண்ணியது இல்லையே. 

 

உன் ராமாயண கதையை எல்லார்கிட்டயும் சொல்லி என்னை இராவணனா மாத்தலாம்னு முடிவு பண்ணி எல்லார்கிட்டயும் எதையாவது சொல்லிட்டு இருக்கியா என்று பத்து நிமிடமாக சத்தம் இட்டான்.

 

இவன் பேசுவது எதுவும் புரியாமல் அவள் அமைதியாக நின்றாள்.

 

இவன் என்ன உளறுகிறான் என்று உள்ளுக்குள் நினைத்தாலும் அவனிடம் சொல்லி மேலும் அவன் கோபத்தை அதிகப்படுத்த விரும்பவில்லை ‌..

 

அவள் அமைதி காத்துக் கொண்டே இருக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போய் விட உடனே அங்கிருந்து புறப்பட்டவன் தங்களின் வீட்டிலும் வந்து அடைப்பட்டுக் கொண்டான் அவனது அறையில்.

 

இவளால எப்படி வைஷூ இப்படியெல்லாம் இருக்க முடியுது. இவ்வளவு கேவலமான வேலையை செஞ்சுட்டோம்னு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் என் கூடவே சேர்ந்து நடிச்சுட்டு எல்லார்கிட்டயும் நாடகம் ஆடிட்டு இருக்கா. தயவு செஞ்சு என்னை உன்கிட்டே கூட்டிட்டு போய்டு. இப்பேற்பட்ட ஜென்மத்து கூட இனிமே ஒரு நொடி கூட என்னால இருக்க முடியாது என்று அவன் வந்த வேகத்தில் சமையலறை இருந்து ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு தான் தனது அறைக்குள் வந்தான்.

 

அந்த கத்தியினை கொண்டு தனது கைகளில் வருக் வறுக்கு என்று கிழித்துக்கொள்ள ரத்தமும் ரூமினை தாண்டி வெளியே வந்தது. 

 

கதவை சாய்ந்து அமர்ந்து வைஷுவின் போட்டோவை பார்த்து பேசிக்கொண்டு இருந்தவன் மயங்கி விழுந்தான் அதே இடத்தில். 

 

எதற்காக இப்படி பேசி விட்டு வந்தான் என்று தெரியாத சில்வியா அவன் பின்னரே ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்ந்தால் கொஞ்சம் தாமதமாக.

 

வேகவேகமாக மாடிப்படி ஏறியவளுக்கு மனதில் ஏதோ பாரமாக தான் இருந்தது. இவன், இப்போது என்ன கத்த போகிறானோ என்ற பயத்தில் தான் அவள் மேலே ஏறி வந்தாள்.

 

ஆனால் மாடிப்படி ஏறி அறையின் வெளியே ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை பார்த்து அஆ என்று கத்தினாள்.

 

பதற்றத்தில் அவள் கத்திய சத்தத்தினால் வீட்டிலிருந்த திலீப்பின் பெற்றோரும் ஒரு வேலையாட்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். 

 

ஏன்மா இப்படி கத்துனே என்று சொல்லிக் கொண்டே வந்த திலீப்பின் தந்தை மாடிப்படி முழுவதும் ஏறி முடித்ததும் ரத்தம் கசிவதை பார்த்து விட்டுப் பதறி தவித்து போய்விட்டார்.

 

பின்பு அவனது தாய் வந்து அதிர்ச்சியில் நின்று இருக்க, திலீப்பின் தந்தை வேகவேகமாக கதவினை அடித்து உடைத்தார்.  

 

தன் மகனுக்கு இந்த சோதனை எதற்கு. எல்லாம் இவளால் என்று சில்வியாவை பார்த்து முறைத்து கொண்டு இருந்தார் அவனது அம்மா.

 

அம்மா அவரு ஆக்டிங் முடிஞ்சி என்கிட்ட சத்தம் போட்டுட்டு வந்தாருமா. நானும் ஏன் இப்படி சத்தம் போட்டார் என்று கேட்கலாம்னு வேக வேகமா ஆட்டோ புடிச்சு வரதுக்குள்ள இப்படி ரத்தம் வெளியே வந்துட்டு இருக்கு. பயமா இருக்குமா யாராவது ஏதாவது என் வீட்டுக்காரரை பண்ணிட்டாங்களோனு.

 

வேற யாருடி பண்ண போறாங்க. உன்னால தான் என் மகனே இந்த முடிவுக்கு வந்திருப்பான். தயவு செஞ்சு அவனை விட்டு போயிடு. அவன் வாழ்க்கையில அவன் சொல்ற மாதிரி அவனுக்கு பிடிச்சு ஏழரை நீ. உன்னால் அவன் இழந்த சந்தோஷம் எத்தனை தெரியுமா? அன்னைக்கே நீ அவனை சத்தம் போட்ட போதே உன்னை அறைந்து இருந்தால் நீ திருந்தி இருப்பியோ என்னவோ!

 

தயவு செஞ்சு என் மகனோட வாழ்க்கையிலிருந்து ஒட்டு மொத்தமா விட்டுட்டு போயிடு.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!