அத்தியாயம் 24
காதலில் ஒருவருக்கு ஒருவரை பிரிய காரணம் ஒருவர் மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டும் தான்
திலீப்பின் தாய் சொல்வது போல அவனை விட்டு நான் விலகி இருந்தாலாவது அவன் சந்தோஷமாக வாழ்வானா என்று அப்போது அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.
திலீப்பினை மருத்துவமனையில் அட்மிட் செய்தவர்கள் நீ இங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட அவள் மருத்துவமனைக்கு செல்லவில்லை .
ராஜு பாய் கொடுத்த பென்டிரைவை பார்த்திருந்தால் இருவருக்குள்ளும் இப்படிப்பட்ட நிலை வந்து இருக்காது என்பது தான் நிதர்சனம்.
அதனால் ஒரு முடிவு எடுத்தவள் யாரிடமும் பேசாமல் அமைதியாக மதியின் திருமணத்தை காண சென்றிருந்தாள்..
மதி – என்ன அக்கா நீ மட்டும் வந்திருக்க. எங்க மாமா என்று குசலம் விசாரிக்க நடந்த அனைத்தையும் அவளிடம் ஒன்று விடாமல் கூறினாள்.
மதி இதை பெற்றோரிடம் தெரிவிக்க உடனே அவர்கள் மருத்துவமனைக்கு புறப்பட்டு மாப்பிள்ளை எப்படி உள்ளார் என்பதை கவனித்தார்கள்.
இப்போது கொஞ்சம் அவனது நிலை பரவாயில்லை என்றனர் மருத்துவர்கள். பின் மோகனும் செல்வியும் அரும்பாடு பட்டு தனது மாப்பிள்ளையான திலீப்பை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் திருமணத்தை காண வேண்டும் என்று.
திலீப்பும் தன் தந்தை தாயிடம் சரி என்று ஒப்பு கொண்டதனால் அவனை அங்கே அழைத்து வந்தார்கள்.
அவனுக்கு தேவைப்பட்ட உணவு தேவைப்பட்ட தண்ணீர் என்று அனைத்தையும் அவன் முகத்தைப் பார்க்காமல் சில்வியா தான் அவனுக்கு உதவினாள்.
அவளின் இந்த ஒதுக்கம் அவனது மனதிற்குள் ஏதோ சுணுக்கு என்று வலியை கொடுத்தது.
என்னடி என் மூஞ்ச பார்த்து பேச முடியலையா.
அவனும் அவளிடம் சீண்டிப் பார்த்தான்.
அவளிடம் இருந்து அதற்கும் எந்த பதிலும் இல்லை.
ஏய் ஏய் என்று அவன் அழைத்தும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
என்னடி உன் வீட்டுக்கு வந்து இருக்கனு உனக்கு ஏகத்தாலமா போச்சா என்றதற்கு மட்டும் இல்லை என்று பதில் அளித்தாள்.
பொத்தாம் பொதுவாக அவள் பதில் அளிக்கவும் அவனுக்கு வருத்தமாக இருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறான் பின்பு எதற்காக இந்த வருத்தம். அவள் தன்னிடம் பேசாமல் இருப்பதால் ஏன் இந்த முக வாடல் சில்வியாவின் மனசாட்சி அவளிடம் பேசியது.
அவனின் காதல் இப்போது சில்வியாவின் புறம் திரும்பி உள்ளது என்பதை கூட அறியாத பேதை அவன்.
தயவு செஞ்சு சாப்பிட்டு அமைதியா படுங்க என்று மட்டும் கூறியவளை ஏன் இவ்வளவு அமைதியா பேசுற என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
என்ன தான் அவன் கேள்வி எழுப்பினாலும் அதெல்லாம் அவளது செவிக்கு எட்டவில்லை. அவளுடைய செவியில் அவனது தாய் பேசிய வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒழித்துக் கொண்டிருந்தது.
அவள் அமைதியாக இருக்கவும் இதற்கு மேல் அவளிடம் கேட்கக் கூடாது என்று அவனும் உணவை மட்டும் உண்டு விட்டு அமைதியாகி விட்டான்.
மறுநாள் விடியல் கோலாகலமாக ஆரம்பித்தது. மணப்பெண் பட்டுப்புடவையில் அலங்கரிக்கப்பட்ட பூமாலைகளோடு சேர்த்து பூ போல் வந்து கொண்டிருந்தாள்.
மணமகனும் பெண் அவளின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தான்.
இவ்விருவரும் இந்நேரத்திலும் கூட திலீப்பையும் சில்வியாவில் சேர்த்து வைக்க போட்டிருந்த திட்டத்தை நிறைவேற்ற போகிறார்கள்.
எல்லோருக்கும் வணக்கம் என்று வணக்கம் செய்தவள் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும் நடிகர் திலீப் தான் எங்க அக்காவோட வீட்டுக்காரர்னு. தொலைக்காட்சி மூலமா மட்டுமே ஒரு செய்தியா கேள்விப்பட்ட உங்க எல்லோருக்கும் இது ஒரு நிகழ்வா செய்யனும்றது தான் எங்களுடைய ஆசை.
அதனால எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்காங்க என்று அவள் ஆரம்பித்தாள்.
அப்பொழுது என்ன நடக்கிறது என்று புரியாமல் திலீப் வியந்து நின்றான்.
திலீப் மாமா அவர்கள் வெறும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ஸில் மட்டுமே தனது அக்காவை திருமணம் செய்து உள்ளார். வேள்வி போட்டு குண்டங்களை தாண்டி எல்லாம் இதுவரை அவர் செய்ததில்லை என்பதனால் எங்கள் திருமணத்தோடு இன்று அவளுக்கும் திருமணம் நடக்கும் என்றாள் மதி.
இது சில்வியா மற்றும் திலீப் கூட அறியாத உண்மை.
மோகனும் செல்வியும் தனது மாப்பிள்ளையிடம் மன்றாடி கேட்டுக்கொள்ள அவனும் சரி என்று வேறு வழி இல்லாமல் ஒப்பு கொண்டான்.
சில்வியாவும் சரி என்று ஒப்புக் கொண்டாள் தனது கல் மனதோடு.
அனைவரின் முன்பும் இவ்வாறு கேட்டால் அவர்களால் தடுத்துவிட இயலாது என்று தருண் சொன்ன ஐடியா தான் இது. அவன் சொன்னது போலவே அன்று இருவரும் ஒரு சேர தங்களது துணையை தன்னவளாக்கி கொண்டார்கள்.
இதோ திலீப் அவளின் வாடிய முகத்தை கண்டதோடு அவன் முகம் சுருக்கத்தோடும் அந்த தாலியினை அவள் கழுத்தறுகில் கொண்டு சென்று மூன்று முடிச்சை கட்டி முடித்தான் .
மறுபுறம் தருணும் தனது காதலியை இப்போது மனைவியாக்கி கொண்டிருந்தான். அவளின் இந்த இன்முகத்தோடு இனிமே வாழ்க்கையில நமக்கு சந்தோஷம் மட்டும்தான் டா என்று அவனது செவியில் கூறினாள்.
ஆமா ஆமா என்று தலையாட்டி அவன் மூன்று முடிச்சையும் போட்டு முடித்தான்.
மற்ற சடங்குகளும் எந்த தங்கு தடையும் இன்றி முடிந்து விட அந்த இரு திருமணமும் சந்தோஷமாக முடிந்தது.
செல்வியும் மோகனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மோகன் தான் மருமகனின் அருகில் வந்து நீங்க இதுவரைக்கும் தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்து இப்பயாவது சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்ன மாமா சொல்றீங்க?
உங்க பட தயாரிப்பாளர் ராஜு பாய் கொடுத்த பென் டிரைவை நீங்க பார்தீங்களா? இல்லையா? மாப்பிள்ளை என்று அவர் நினைவு கூறும்போது தான் ராஜு பாய் கொடுத்த பென் டிரைவை அதே இடத்தில் போட்டு வந்த நினைவு வந்தது திலிப் குமாருக்கு.
திலீப்பின் முன் வந்த மதியும், கண்டிப்பா நீங்க என் மேல கோவமா இருக்கீங்கன்னு தெரியும் மாமா. ஏன்னா உங்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையவே சீரழிச்சது நான் தான்.
இந்த பென் டிரைவ்ல இருக்க விஷயம் எல்லாமே உண்மைதான். நீங்க சில்வியா அக்காவை ஒவ்வொரு முறை பேசும்போது அதை என்னால தடுக்க முடியாது. ஏன்னா அவள் என்கிட்ட இதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டாள்.
இப்ப கூட நான் அந்த விஷயத்தை சொல்லல உங்களுக்கு பென் டிரைவர் மூலமா தான் தெரியப்படுத்துறேன். என்ன மன்னிச்சிடுங்க மாமா. உங்க வாழ்க்கையில எந்த ஒரு பெண்ணை உச்சத்துல வச்சிருந்தீங்களோ அவங்களோட தங்கச்சி இப்படி பண்ணுவாங்கன்னு நீங்க நினைச்சு இருக்க மாட்டீங்கிறது எனக்கு புரியுது. ஆனால் நடக்க வேண்டியது நடந்து போச்சு.
இனிமே நடக்க இருக்கிறது நாமெல்லாம் நடத்திக்கனும் மாமா.
சில்வியா மேல எந்த தப்பும் இல்ல. நீங்க புரிஞ்சிருப்பீங்கன்னு நம்பி உங்க காலில் நான் விழுந்து கெஞ்சி கேக்குறேன் என்னையும் மன்னிச்சிடுங்க மாமா.
அவன் அந்த பென் டிரைவை பார்த்திருந்தால் தானே புரியும்.
அந்தோ பரிதாப சூழ்நிலை அவனுக்கு.
செல்வியும் கூட தனது இளைய மகளுக்காக அவளை மன்னிச்சிடுங்க தம்பி என்றார்.
இவனும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பித் தவித்தான்.
இவர்கள் பேசுவது எல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால் அந்த பென்டிரைவை நான் தேடி கண்டுபிடித்தாக வேண்டும்.
வேகவேகமாக சில்வியாவினை அழைத்துக் கொண்டு திலீப் தனது படப்பிடிப்பு ஏரியாவிற்கு புறப்பட என்ன வீட்டில் விட்டுருப்பா ரொம்ப டயர்டா இருக்கு என்று சொன்னாள்.
சரி என்று ஆமோதித்தவனும் அவளை வீட்டில் விட்டுவிட்டு படப்பிடிப்பு ஏரியாவிற்கு நுழைந்தான்.
அந்நேரம் பார்த்து வேறு ஒரு படத்தில் முக்கிய சீன் எடுக்கப்பட்டு கொண்டிருந்ததனால் ஒரு மணி நேரம் அவனை அமர்ந்திருக்கும் படி சொன்னதனால் படப்பிடிப்பு நிலைமை புரிந்த காரணத்தினால் அவனும் அமைதியாக அமர்ந்தான்.
படப்பிடிப்பு முடிந்ததும் துலாவ ஆரம்பித்தவனுக்கு மூன்று மணி நேரம் தேடிய பின்னரும் அது கிடைக்கவில்லை .
என்ன திலீப் சார் என்னை நியாபகம் இருக்குதா என்று ஒரு பெண் பேசும் குரல் கேட்க அவன் நிமிர்ந்து பார்த்தான் .
அவள் சாட்சாத் மாலினி தான்!
அதுக்குள்ளேயே இப்படி தெருவுல பொருக்குற அளவுக்கு வருவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.
உன்கிட்ட இந்த மாதிரி பேசி நேரம் கடத்துறதுக்கு எனக்கு டைம் இல்ல.
அப்போ இப்ப எந்த பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கலாம் என்று ஏதோ ஒரு பொருளை தேடிட்டு இருக்கீங்க.
நீ உன் வேலைய பாத்துட்டு கிளம்பு சும்மா என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்காத.
அச்சச்சோ ஒரு நல்ல பட நடிகர் இப்படி கண்ட இடத்துல கைவைத்து துலாவுறாரே. அவருக்கு என் கையில் இருக்கிறதை கொடுத்து உதவி பண்ணலாம்னு நினைச்சு உங்க கிட்ட வந்து நான் நின்னது தப்பா போச்சு போல என்று அவள் சொல்ல அவள் கையில் இருந்த பென் டிரைவை அவன் பார்த்தான்.
ஏய் அது என்னுடையது கொடு என்று சொல்ல,
இந்த பென் டிரைவ் உங்களதுன்னு என்ன பெயரா எழுதி வச்சிருக்கு.
இப்ப நீதானே கொடுக்கணும்னு சொல்லிட்டு இருந்த.
பட் நீங்க அதுக்கு எனக்கு ஒரு ஃபேவர் பண்ணுமே
என்ன என்பதைப் போல அவன் உறுத்து கவனிக்கவும் முதல் படம் உங்களுக்கும் எனக்கும் மோதல்ல் ஆரம்பிச்சிருச்சா, அந்தப் படத்துல நான் சொன்ன அத்தனையும் உண்மைன்னு நீங்க ஒத்துக்கணும் .
முக்கியமா என்கிட்ட நீங்க தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுனீங்கனு நான் சொன்ன விஷயம் உண்மைதான்னு நீங்க ஒத்துக்கிட்டா மட்டும் தான் இந்த பென் டிரைவை உங்ககிட்ட என்னால தர முடியும்.
திஸ் இஸ் ரெடிகுலர்ஸ் என்றான் திலீப்.
வேணாட்டி போங்க என்று பென் டிரைவை தனது உடையுள் ஒளித்துக்கொண்டாள் மாலினி.
இவளை என்னதான் பண்றது நேரம் காலம் புரியாமல் என்று பற்களை நரநரவென்று கடித்தவன் கண்டிப்பா உனக்கு நான் அந்த மாதிரி ஒரு வீடியோ தயார் பண்ணி அனுப்பி விடுறேன் தயவு பண்ணி இப்ப அந்த பென் டிரைவை என்கிட்ட குடு என்றான்.
சாரி சார் நீங்க சொன்னதெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் சில்வியா என்கிற மடச்சி இல்லை. “மாலினி”. இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சரில் ரொம்ப முக்கியமான இடத்தை பிடிச்சவ. உங்களோட சித்து விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது.