எல்லாம் பொன் வசந்தம்…(3)

5
(3)

அத்தியாயம் 3

 

யுத்த சமயத்தில் அமைதி மிகவும் ஆபத்தானது!…

வெறும் சண்டையில் அமைதியான விலகல் கூட அழகானது!…

 

ஒரு மாதத்தில் முழு திரைப்படமும் தயாரான சமயத்தில் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள் இருவரும்.

 

டீசர் வெளியான போது கிடைத்த ஆரவாரமும் ஆர்பரிக்கும் சத்தமும் இந்த படத்தின் வெற்றி சதவீதம் நூறு என்பதை சொல்லாமல் சொன்னது.

 

அறிமுக நாயகியான சில்வியா பலரது கிரஷ் என்ற பட்டியலில் முதல் இடத்தை அபகரித்து கொண்டதோடு தனது டைலாக்கால் அனைவரையும் ஆழுமை செய்திருந்தாள்.

 

அதிலும் “நீயும் நானும் நிஜமற்ற நிழல் எனில் இந்த வையக வாழ்வு கூட வீண்”,என்ற டைலாக் டீசரில் இடம் பெற்ற சமயத்தில் இருந்து இப்போது வரை ட்ரெண்டிங் ரீலில் தனது பங்களிப்பை சொல்லொண்ணா சிறப்பில் இடம்பெற்றது என்பது அவளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அத்தோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் ரீலிலும் இந்த டயலாக்கை மற்ற பற்பல பெண்கள் நடிப்பது போன்று ரீல்சோடு சேர்த்து அப்லோட் செய்திருந்தார்கள்.

 

படம் எடுக்கும் சமயத்தில் கேரளாவில் சுற்றியுள்ள பெரும் பகுதியில் லோகேஷும்,சில்வியாவும் சென்று அங்கு அவர்களின் நினைவுகளை புகை படங்களாக்கி கொண்டார்கள்.

 

சில்வியாவும் தந்தைக்கு அடிக்கடி அழைத்து தானும் அண்ணனும் நலம் என்பதோடு அருமை தங்கை கல்லூரி செல்கிறாளா?…இல்ல வாலுதனம் பன்னிட்டு இருக்காலா? வேணும்னா நாலு பன்னி வாங்கிட்டு வரவா என்று கேட்டு அவளின் அருமை தங்கை மதியிடம் வாங்க கட்டி கொள்வாள்.

 

ஏய் நம்பர் ஒன் ஹீரோயினி லிஸ்ட்ல இருக்க என்ன திட்டாதடி. ரெக்கார்ட் போட்டு உன்னை என்னோட பேன்ஸ்கிட்ட கொடுத்தேன் உன்ன உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க என்று சிலாகித்தாள் சில்வியா.

 

எல்லாம் இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு தான்டி.  அதுக்கு அப்புறம் வாடிப் போன அப்பளம் மாதிரி தான் நீ இருந்த இடம் தெரியாமல் போய்டுவ…அதுக்குள்ள இவ்வளவு சீன் தேவையில்லை என்று அவளும் பதில் வாதம் மேற் கொள்ள,

 

மதி அப்படி நெகடிவ்வா பேசக்கூடாது என்று அதட்டினார் மோகன். 

 

உண்மைய தான்பா அவ சொல்றா. புது ஹீரோயின் எல்லாம் வந்த வேகத்துல மறஞ்சிடுவாங்க.இதுல நான் எல்லாம் எம்மாத்திரம்…

 

சில்வியாவும் தந்தையிடம் நிதர்சனத்தை புரிய வைத்தாலும் கூட மனதில் ஏதோ ஒரு நெருடல் வருடியது.

 

படப்பிடிப்பு முடிந்ததோடு திலீப் அவளிடம் முகம் கொடுத்து கூட பேசுவது இல்லை.

 

கல்லூரியில் தொடங்கிய காதல் கதையானது ஒருவரின் மூர்க்கமான தனத்தால் பிரிய போகும் தருணத்தில் தவறை புரிந்து இணைந்து கொள்வதை கதையாக கொண்டு தழுவிய அந்த படம் ஏதோ சில்வியாவுக்கு திலீப்போடு அவளது காதல் உணர்வுக்கு தீனி போட்டது போல் ஆகியது.

 

 என்ன தான் முப்பது நாள் ஆசை உலகம் என்று அவள் மனதை தேற்றி கொண்டாலும் அவற்றுள் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் அவள் உணர்ந்து அவனுக்காக ஊர்ந்து எழுதியது.

 

அப்படி இருந்தும் பேசப்படும் வசனங்களும், பார்வை சலனங்களும் வெறும் திரைப்பட காட்சி தான் என்பதை நெற்றியில் அடித்தாற் போல புரிய வைத்த திலீப் படப்பிடிப்பின் இறுதி நாளில் இத்தோட உன்னோட கோட்டா முடிஞ்சது. இனிமே நீ எந்த மூவி, எந்த டைரக்டர் அண்ட் எங்க வேணாலும் நீ ஒர்க் பண்ணலாம். 

 

ஏன்னா நம்ம பிரிவுக்கு அப்புறம் காசு வேணும்னு நீ எங்கிட்ட கை ஏந்திட்டு வரக்கூடாதுல்ல என்று ஒரு நக்கலுடன் சொல்லி விட்டு சென்றவனின் மனதில் கிஞ்சித்தும் தான் இல்லை என்பதை உணர்ந்தாள்.

 

சில்வியாவிற்கு இந்த விவாகரத்தில் விருப்பம் என்றாலும் அவன இன்றி பிரிந்து வாழ அவள் மனம் இன்னும் உவந்து போகாமல் இருக்கிறதே!…

 

இவளின் முழு ஆக்கிரமிப்பு கவனத்தையும் பெற்றவன் அவள் யோசனை கொஞ்சமும் இன்றி பட வெற்றிக்கு முன் கொண்டாட்ட திகைப்பில் குதூகளித்து கொண்டிருந்தான்.

 

குடி குடியை கெடுக்கும் என்ற பொன் எழுத்தக்கள் எல்லாம் திரைப்பட முகப்பில் வைக்கும்படும் சூனிய பொம்மைகள் தான்‌.  அதில் இருக்கும் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் அவை பொருட்டல்ல…

 

பீர்செல் என்ற கிளப்பில் கலர் கலர் மின்மினி வண்ண லைட்டுகளின் பிரதிபலிப்போடு பாப் வகை பாடல்களும் அதற்கு போடப்பட்ட குத்தாட்டங்களும் ஒன்றுக்கு ஒன்று குறைவில்லை.

 

இந்த படமும் வெற்றி என்ற ஆணவம் அவனை தலைக்கு மேல் குடி போதையில் ஆழ்த்தியது.  நடிகை என்ற பட்சத்திலும் இது போன்ற கசகச ஏரியாவில் இருப்பது அவளை பொருத்தவரை எரிச்சலூட்டும் செயல் என்பதால் அவளும் லோகேஷும் இதை தவிர்த்து விட்டு வேறொரு திரைப்படத்தை காண சென்றிருந்தார்கள்.

 

துணை நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் தயாராளிப்பாளரின் உறுதுணையோடு மற்ற துணை தயாரிப்பாளர்கள் கூட போதையில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

 

ப்ரொடியூசர் ராஜூபாய் அவர் இந்த திரைப்பட டீசரில் கிடைத்த பேர் ஆதரவை பார்த்து உனது கணிப்பு தவறு என்று உன்னிடம் சண்டையிட்டது தவறு என்றும் திலீப்பிடம் பெருமிதத்தோடு மன்னிப்பு கேட்டவரும் கிளப்பில்  அவர்களோடு அடக்கம்.

 

இன்னைக்கு ட்ரீட் இந்த மூவியோட ப்ரொடியூசர் சாரோடது என்ற கூடுதல் தகவலோடு அங்கிருந்து அனைவரும் சந்தோஷத்தில் திளைத்த வண்ணம் மது அருந்தி கொண்டிருந்தார்கள்…

 

மதுவின் வீரியம் திலீப்பின் தலைக்கு அதிக அளவில் ஏறிக் கொண்டே இருந்தது.  அனைவரையும் காட்டில் ஏதோ ஒரு பரிதவிப்பில் அன்றைய தினம் கூடுதலாக மதுவினை அருந்தி கொண்டே இருந்தான்.

 

மிஸ் யூ மை ஸ்வீட் ஹார்ட்… என்னோட வருகைக்காக நீ கண்டிப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு நான் நினைக்கிறேன்… பட் இந்த மூவிஸ் இந்த பிரபலம் இந்த திலீப் இந்த பெயர் எல்லாம் என்னை இங்கேயே இருக்க வச்சுடுச்சு… பட் டெபனட்லி  ஒன் டே ஐ வில் மிஸ் யூ… அன்னைக்கு தான் என்னோட வாழ்க்கையில ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் நான் பார்ப்பேன்… ப்ளீஸ் செல்லம் எனக்காக நீ வெயிட் பண்றியா என்று மதுவினை அருந்தியவன் தனது வாய்க்கு தகுந்தவாறு உலறிக் கொண்டிருந்தான்…

 

நேரமும் பன்னிரண்டை தாண்டி நழுவிக் கொண்டிருந்தது… படத்திற்குச் சென்றிருந்த அண்ணனும் தங்கையும் அறை வந்து சேர்ந்த போதிலும் ,திலீப் குமார் இன்னும் அங்கு வந்து சேரவில்லை என்பதை அறிந்தும் அவரவர் இடத்தில் அடங்கினார்கள்.

 

திரைப்படம் தயாரித்து முடிந்து விட்டால் அதில் உள்ள எடிட்டிங் அனைத்து வேலையும் அவன் செய்து விடுவான் இவன் கவனித்துக் கொள்வான் என்று விட்டேத்தியாக விட்டுச் செல்பவன் திலீப் அல்ல!…

 

அனைத்திலும் பொறுப்பாக இருந்து, டயலாக் டெலிவரி ஆன விதம் முதல் அனைத்தையும் சரிபார்த்தவன் மூன்று நாட்களாக உறக்கம் இல்லாமல் எடிட்டிங் செய்து முடித்துவிட்டு எத்தனை பேர் திரைப்படத்தில் பணியாற்றி உள்ளார்கள் என்ற பெயரை ஒரு பெயர் இன்றி வரிசை கட்டி அழகு படுத்தி விட்டவன் மறந்து போன அந்த மாலினியின் பெயர் அவனுக்கு மறுநாள் விடியலினை பறித்து செல்வாள் என்று தெரிந்திருந்தால் இம்மூன்று நாட்களும் உறங்கி இருந்திருப்பானோ என்னவோ!…

 

கிளப்பிலே ஒரு சோபாவில் படுத்து உறங்கிய அவனை ப்ரொடியூசர் லோகேஷின் அழைப்பிற்கு அழைத்து ரெசார்ட்டில் வெளியில் தான் உள்ளேன் வந்து திலீப்பை பிக்கப் செய்து  கொள்ளுமாறு அன்போடு வேண்டுதல் வைத்த வரை இன் முகத்தோடு அனுசரித்து விட்டு திலீப்பை அழைத்துச் சென்றான் லோகேஷ்.

 

மூன்று நாள் உறக்கம் இல்லாத அவனது விழிகளும் இன்று அதன் கடமையை சரி என செய்தது.

 

மறுநாளின் தொலைக்காட்சி பெட்டிகளிலும் செய்தித்தாள்களிலும் பரபரப்பான செய்தி பரவிக் கொண்டிருந்தது ஒன்று.

 

இத்தனை படம் தயாரித்தும் நம்பகத்தன்மையற்றவராக இருக்கிறார் திலீப் குமார் என்று கொட்டை எழுத்துக்கள் இடம் பெற்றிருக்க பின் இசைகள் பரபரப்பாக இயங்குவதோடு காட்டுவதாக இருந்தது.

 

திலீப் குமாரின் இருபதாவது படத்தில் நடந்த ஆள் சூட்சி மாற்றத்தினால் அந்தப் படமே ஒத்தி வைக்கப்படுமா என்ற சந்தேகம் இங்கே திரைப்பட குழுவினர் இடையே பரவி வருகிறது என்ற செய்தியாளரும் ஒப்பித்து கொண்டிருந்தார்…

 

செய்தியாளர் மட்டும் அல்ல செய்தித்தாள்களும் செவ்வன அன்றைய தினத்திற்கான தலைப்புச் செய்தியாக திலீப் குமாரின் இருபதாவது படம் ஆள் மாற்றத்தால் தான் நிகழ்ந்ததாம் என்ற பெரிய பாண்ட் இடம்பெற்ற வரிகளும் கட்டாயம் இடம் பிடித்திருந்தன.

 

திலீப்பின் எண்ணிற்கு வெகு நேரமாக அழைத்துக் கொண்டிருந்த ராஜு பாய் லோகேஷுக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் திலீப்பை எழுப்பி நடந்து கொண்டிருக்கும் விசயத்தை விபரமாக எடுத்து சொல்லி கொண்டிருந்தான்.

 

இந்தப் படத்துக்கு நாயகியாக கையெழுத்து இட்டிருந்த மாலினியை அவள் முழு தொகையாக இருபத்து ஐந்து லட்சம் தராததால் தான் திடீர் நாயகியாக சில்வியா அறிமுகமானார் என்று மாலினி கொடுத்திருந்த கேஸ் தான் இன்றைய பரபரப்பான இந்த நியூசிக்கு காரணம்.

 

காலையிலிருந்து எந்த தொலைக்காட்சி பெட்டி எடுத்தாலும் மாலினியின் அழு முகம் தான் இருந்தது.  முதல் பட ஜான்ஸ்னு நானும் அவர் கிட்ட என்னோட எல்லா பணத்தையும் கொடுத்துட்டேன்.

 

 அவர் என்னை இப்படி நடு ஆற்றில் கொண்டு போய் நிறுத்து வாருன்னு நான் கனவில் கூட நினைச்சு பார்க்கல. திலீப் சார் மேல நான் எவ்வளவோ மரியாதை வச்சிருக்க.

 

அவரு அதை டோட்டலி டிசபாய்ன்டட் டு மீ என்று ஆங்கில வார்த்தைகளையும் தமிழ் வார்த்தைகளையும் இலகுவாக அவற்றிற்கே வலித்து விடும் என்ற அளவில் பேசி தொலைக்காட்சிகளுக்கு செய்தியை பரப்பிக் கொண்டிருந்தால் அந்த மாலினி.  

 

அப்படி என்றால் அந்த திடீர் விபத்தும் ஏற்பட்டிருந்த காயங்களும் ஒரு சதி திட்டம் என்பதை லோகேஷூம் திலீப்பும் அறிந்து கொண்டார்கள்.

 

நம்ம இந்த மாலினிய ரொம்ப சிம்பிளா எடுத்துக்கிட்டம் லோகி… இவ ரொம்ப சீரியஸா இருக்கா… நம்மகிட்ட ஆக்சிடென்ட்ன்னு டிராமா மேக் பண்ணிக்கிட்டு இப்ப படம் ரிலீஸ் ஆகுற டைம்ல நான் தான் கையெழுத்து போட்டேன்னு டைமிங்ல அடிக்கிற பாத்தியா… 

 

இதை இத்தனை பாலோவர்ஸ் வைத்திருக்கும் போதே எவ்வளவு குறுக்கு புத்தி யூஸ் பண்ணி இருப்பாளள் என்று நம்ம யோசிச்சிருக்கணும்… நம்ம போய் அவளோட  வலையில சிக்கிடோம்டா… இப்ப இவளுக்கு என்ன வேணும்னு கேட்டு செட்டில் பண்ணா இவ சொல்ற விஷயம் உண்மைன்னு ஆயிடும்… சரி இவள கண்டுக்காம மத்தத பாக்கலாம்னா அவ இதுக்கு கட்டாயம் வழி விட மாட்டா… இப்ப என்னடா பண்றது என் மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு…

 

திரைப்படம் தயாராகிவிட்டது அனைவரிடமும் ஒப்பிகையும் வாங்கியாகிவிட்டது… அதன் பின்னர் என்ன  டீசர் ரிலீஸ் ஆகி அதுவும் ஓஹோ என்று வரவேற்பை பெற்றுவிட்டது… இதன் பின்னர் திரைப்படம் வெளியாகிவிட்டால் இந்த வருடத்தின் பெஸ்ட் மூவி என்ற இடத்தில் கட்டாயம் இப்படம் இடம் பிடிக்கும் என்பது திலீப் குமார் எண்ணிக்கொண்டிருந்த காட்சி பிம்பங்கள்.

 

படப்பிடிப்பு முடிந்து படம் தயாராகி டீசர் வெளியான போதே திட்டம் தீட்டிக் கொண்டிருந்த மாலினிக்கு அந்த திரைப்படம் நாளை மறுநாள் வெளியேறப் போகிறது என்ற செய்தி கேட்ட நொடி அவளது ஆட்டத்தை தொடர்ந்து விட்டாள்.

 

நான் நடிக்க வேண்டிய படம் என்ற விதத்தில் அவள் கோபப்படவில்லை… இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் என்ற விதத்தில் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட சம்பளம் வெறும் நான்கு லட்சம்…

 

இது எனக்கு பத்தாது என்று ஆரம்பத்தில் சொன்ன மாலினியிடம் இந்த படம் இப்போதைக்கு லோ பட்ஜெட்டில் ரெடியாகிறது மேடம்… பெரிய ஹிட் அடிச்சுதுன்னா கண்டிப்பா உங்களுக்கு இதுல  ஷேர் நாங்க தரலாம்னு இருக்கோம் என்று லோகேஷ் பொய்யாக கொடுத்த ஒரு வாக்குறுதி இப்போது எத்தனை பிம்பம் எடுத்து வந்து நிற்கிறது.

 

 

திலீப்குமார் இவ்வளவு தான் சம்பளம் என்று மாலுனியிடம் அடித்து பேசி இருந்த சமயம் கையெழுத்திட்டவள் இந்தப் படத்தை நீ எப்படி ரிலீஸ் பண்ணிறனு நான் பார்க்கிறேன் என்று சபதம் எடுத்ததன் பின் விளைவு தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் இவை அனைத்தும் அவள் ஆட்டி வைக்கின்ற கையாட்டி பொம்மையாகும்.

 

என்னோட ஒரு ரீல்சோட வேல்யூ என்னன்னு தெரியாத இவங்க எனக்கு ஃபோர் லேக்ஸ் சம்பளம் தருகிறார்களாம்… இதெல்லாம் வெறும் எனக்கு டூ டேஸ் ஸ்னாக்ஸ் சாப்பிடுற மாதிரி… இதுக்காக நான் முப்பது நாள் மெனக்கிடனுமா என்ன?..

 

திலீப் குமாரோட படத்துல ஹீரோயினியா நடிக்கிறாங்கன்னா அவங்க கண்டிப்பா ரொம்ப ஃபேமஸ் ஆகிடுவாங்க. சோ நீங்க இந்த படத்துக்கு கட்டாயமா ஓகே சொல்லி தான் ஆகணும் மாலினி என்று திலீப் கேட்ட விதம் அவளுக்கு ஆச்சரியத்தை கூட்டி இருந்தாலும், திலீப் குமாரின் படம் என்று அவன் அழுத்தி கூறியிருந்ததில் அவள் கவனித்தது திலீப்பின் முக்கியத்துவத்தை…

 

அந்த முக்கியத்துவம் பாசிட்டிவாக வந்தால் என்ன நெகட்டிவாக வந்தால் என்ன? வந்தால் போதும் என்று தீர்மானித்த சமயத்தில் தான் விபத்து ஏற்பட்டது என்று பொய்யாய் கூறியவள் ரீல்ஸ் ஒன்றை எடுத்து போட்டுவிட்டு அடுத்த படத்திற்கு சைய்ன் செய்தவள் அதில் அவளது சம்பளம் நாற்பது லட்சத்தை தாண்டி இருக்கவும் அமைதியாய் தனது பணியை செய்து கொண்டிருந்தாள்.

 

திலீப் குமாரின் பெயரை பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் இந்த மாலினியின் இந்த மூர்க்கமான எண்ணத்திற்கு ஒரு திரைப்படம் பலியாகி போகுமா?…

 

 

     தொடர்வேனே!…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!