அத்தியாயம் 5
தொடர் நினைவுகளின் பிம்பம் தான் காதலாக பிரதிபலித்து அவர்கள் மீது அலாதி அன்பை கொடுக்கும்!…
அனைவரின் வாழ்த்து குவியல்களிலும் செழித்து கொழுத்து கொண்டிருந்தான் திலீப்குமார். நித்தம் உந்தன் கனா படத்தின் நூறு நாள் வெற்றி விழாவில் மற்றவர்களிடம் இருந்து பெற்ற பாராட்டுகளை ஜீரணித்து கொண்டு சந்தோஷத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் உலாவிக் கொண்டு இருந்தான்.
உங்க ஒரு ஒரு படமும் நல்ல கான்செப்ட் அண்ட் ஹீரோக்கு முக்கியத்துவம் கொடுக்குற மாதிரி ஜூஸ் பண்றிங்க அதுக்கான காரணம் என்ன சார்?…
நீங்க எப்பவும் ஒரு குட் ஹீரோவா தான் நடிக்கிறீங்க…இந்த படத்துல கூட ஒரு நல்ல மனிதனா இருக்க கதாபாத்திரத்த தேர்ந்தெடுத்து இருக்கீங்க…ஏன் சார்?…
இந்த பட ஹீரோயினி புது அறிமுக முகம். அவங்கள ஹீரோயினியா போட்டு மாலினிய பின்னுக்கு தள்ளி இருக்கீங்க…அப்படின்னா இந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் எதாவது சொந்தம் இருக்கா சார்?…
தொடர் கேள்விகளுக்குப் பின்பும் கொடுக்கப்படும் சார் அவன் சேமித்த மரியாதை ஆகும்.
நாட் பேட் ஆல் கொஸ்டின்க்கும் நான் பதில் சொல்லுவேன் பொறுமையா ஒரு ஒருத்தரா கேள்வி கேளுங்க.
சார் சார் அப்படின்னா இதுக்கு ஃபர்ஸ்ட் பதில் சொல்லுங்க சார்… சில்வியா இந்த ஃபர்ஸ்ட் மூவில சைன் பண்ணும் போது உங்க மைண்ட் செட் என்ன?…
ஓகே அவங்களும் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறாங்கன்னு நெனச்சேன்…
அவங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தா போதும் என்று ஏதாவது நீங்க நிர்ணயிச்சிங்களா?…
என்ன பொறுத்த வரைக்கும் டைரக்டரும் ஹீரோவும் தனித்தனி… ஹீரோவா கேட்டா அவங்களுக்கான வேல்யூவ அவங்க கேட்கலாம் நான் பதில் சொல்லுவேன்… டைரக்டரா யோசிச்சா இந்த படத்துக்கு இப்போ இருக்க மவுஸ்க்கு அவங்களுக்கு லாக்ஸ்மேல கொடுக்கலாம்… பட் அவங்க ஒத்துழைக்கிறது பொறுத்தும் அவங்க நடிக்கிறதை பொறுத்தும் தான் முன்ன பின்ன மாறும்…
சார் மாலினி நீங்க ரிஜெக்ட் பண்ண அதற்கான மெய்ன் ரீசன் என்னன்னு நீங்க சொல்லலாமே?..
அவங்கள நான் ரிஜெக்ட் பண்ண ஒரே ரீசன் காலதாமதம்… எனக்கு நேரம் தாழ்த்துறது சுத்தமா பிடிக்காது…
அப்ப சில்வியா கரெக்ட் டைம்க்கு வந்துட்டாங்கனு நீங்க சொல்ல வரீங்களா?..
உங்களுக்கு பதில் சொல்லணும்னா அவங்க நான் எதிர்பார்த்த டைம் விட முன்னாடியே வந்துட்டாங்க..
இந்த படத்தோட வெற்றியை நினைச்சு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க சார் நாலு வரி…
இந்தப் படம் நாங்கள் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதற்கான பிரதிபலன் என்று நான் நினைக்கிறேன்… ஒரு முப்பது நாளா நாங்க கேப் கூட விடாம ஓடி ஓடி உழைத்ததற்கான பலனாக நான் இதை நினைக்கிறேன்… டைரக்டரும் சரி அசிஸ்டன்ட் டைரக்டர் ப்ரொடியூசர் கேமரா மேன் அண்ட் டைலாக் ரைட்டர் அண்ட் ஹீரோயினி அண்ட் காமெடியன், மியூசிக் இன்னும் நிறைய பேர் இவங்களோட ஒத்துழைப்பு ஒத்துமையா இருந்ததால மட்டும் தான் நாங்க நிர்ணயிச்ச டைம்க்கு உள்ள இந்த மூவி எங்களால் முடிக்க முடிஞ்சது… கண்டிப்பா இந்த வெற்றி அவங்க எல்லாருக்கும் சமர்ப்பணம்!..
சார் இப்ப நீங்க மாலினி மேல கொடுத்திருக்க கேஸ் வாபஸ் வாங்குவீங்களா மாட்டீங்களா?…
இந்த பதில் கேட்ட ரிப்போர்ட்டர் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?..- இது திலீப்குமார்.
திலீப் குமார் அந்த ரிப்போர்ட்டரரை நன்றாக உற்று கவனித்து விட்டு அவரிடமே கேள்வி கேட்டான்… உங்க அம்மாவை ஒருத்தர் தப்பா பேசிட்டு அவங்கள ஜெயில்ல போட்டதுக்கு அப்புறம் நீங்களே ரிலீஸ் பண்ணுவீர்ங்களா?…
கண்டிப்பா மாட்டேன் சார்…
சேம்…
எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் எவராலும் சார் என்று அழைப்பை தவிர்த்து மற்ற சூழ்நிலைக்கு கொண்டு செல்லாமல் தன்னை நகர்த்திக் கொண்டான் திலீப்குமார். அவன் அருகே வந்து பொம்மை போல நின்று கொண்டிருந்தால் சில்வியாவும்.
இப்போது ரிப்போட்டர்கள் அனைவரும் சில்வியாவிடம் தாவினார்கள்.
உங்களோட முதல் படமே இவ்ளோ சக்சஸ் ஆனதுக்கு என்ன காரணம் மேம்… சார் கூட நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு எப்படி இருந்தது… அவர பத்தியும் உங்கள பத்தியும் இந்த படத்துல இருக்குற கேரக்டர் எப்படி உங்களுக்கு உங்க லைஃப் குள்ள மெர்ஜ் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லுங்க…
முதல்ல எல்லாருக்கும் வணக்கம்… இந்த படம் எனக்கு பெரிய சக்சஸ் கொடுத்திருக்கு… இது வந்து என்னோட நடிப்புக்காக வெளிய வந்த முதல் படம்னு மட்டும் சொல்லலாம்… திலீப் சார் கூட நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் எக்சலெண்ட்…. அவருக்கும் எனக்கும் இருக்க பந்தம் திரைப்படத்தில் இந்த படம் நடிக்கிற ஒரு ஹீரோ ஹீரோயினி அவ்வளவு தான்… அதைத் தாண்டியும் என்றால் நான் ஒரு டயலாக் ரைட்டர் அவ்வளவு தான் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் மனப்பாடம் செய்தது போல தேவைக்கு ஏற்ப பதில் அளித்து விட்டு புன்னகையை சிந்தினாள்.
திலீப்குமாரும் சில்வியாவும் சேர்ந்து நின்று கொண்டிருப்பது போலவும் இருவரும் பேசுவது போலவும் ஆன புகைப்படங்கள் எடுக்கப்பட்டு திரைப்பட சக்ஸஸ் என்றும், ட்ரெண்டிங் பேர் என்றும் தொலைக்காட்சி பெட்டகங்களில் வலம் வந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
இசையமைப்பாளர்களின் வரவேற்பும் இப்படத்தில் மிகுதியாக இருக்க திலீப் குமாருடன் இணைந்த இசையமைப்பு குழு என்ற பெரும் பட்டத்தையும் பெற்றுவிட்டார்கள் அவர்கள்.
சில்வியாவின் தங்கை கூட ஒரு இசையமைப்பாளனியாக இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்த சமயம் அது.
கல்லூரி முடித்த பின் ஒரு மியூசிக் டைரக்டர் ஆகி என்னோட மியூசிக்கால இந்த உலகத்தையே கட்டி போடுவேன் என்ற தன் தங்கை சொன்னதும் கன நேரத்தில் வந்து மறைந்தது சில்வியாவுக்கு.
தொலைக்காட்சி பெட்டியில் அக்கா கொடுத்திருந்த இன்ஸ்டர்வியூவை மதியும் மோகனும் சிரித்து பேசிய படி பார்த்தார்கள். பின் என் மக முத படமே எவ்வளவு பெரிய வெற்றி… சும்மாவா என்று சில்வியாவை பெற்ற தாயான செல்வி புகழாரம் பூசிக்கொண்டு இருந்தார்.
உறவுகளிடம் பேசிய போதெல்லாம் இத்தனை மணிக்கு இந்த சேனலில் என்று சொல்லி புகழாரம் சூட்டி கொள்ளும் சராசரி தாய் தான் அவர்.
அதன் பின் மற்றவர்களிடமும் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒளிபரப்பானது…இதில் லோகேஷ் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தி விட அதிக கரகோஷம் எழுந்தது.
அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக கடந்து செல்ல இருந்த சமயத்தில் தான் மாலினி அந்த அரங்கை ஆக்கிரமித்து இருந்தாள்.
அழையா விருந்தாளியாக இடம்பெற்றவளை அங்கே உபசரிக்க யாருமற்ற அனாதை போல நின்றாள்.
என்ன திலீப் படம் ஓவர் சக்ஸஸ் போல…
மற்றவர்கள் கவனம் முழுவதும் அவள் பக்கம் திரும்ப ” உன் பொண்டாட்டி ஒரே படத்துல ஓஹோன்னு வரனும்னா இத்தனை ட்ராமா பண்ண, நீயே விலக சொன்ன, நீயே உன் மேல கேஸ் கொடுக்க சொன்ன, இப்ப நீயே என் மேல கேஸ் ஃபைல் பண்ணிருக்க, இதுல சக்ஸஸ் மீட்டப்….இந்த நூறு நாள் நான் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பன்னு யோசிச்சையா?…
உன்னோட வெற்றிக்காக யாரோட வாழ்க்கையிலும் கூட நீ விளையாட தயாரா இருக்க என்று அந்த அரங்கமே அதிரும் அளவிற்கு கோபத்தில் கத்தினாள்…
ஏதோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பிதற்றுவது போல இப்பொழுதும் பிதற்றுகிறாள் என்று அனைவரும் அவளை லேசாக எடுத்துக் கொண்டார்கள்.
இங்க இருக்க யாரும் என்ன நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆமா இந்த சில்வியா தான் இந்த திலீப்குமார் ஓட மனைவி… இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது… இன்ன வரைக்கும் இவங்க சீக்ரெட்டா இந்த ரிலேஷன்ஷிப்ப வச்சிருக்காங்க . அதுக்கு முக்கியமான காரணம் இவங்களோட பணத்தாசை…
கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சிருச்சுன்னா ஹீரோவோட மவுஸ் கொறஞ்சு போயிடும்னு திலீப் சார் நம்புராரு… அதே மாதிரி தான் சில்வியாவும் என்றவளை முறைத்துக் கொண்டிருந்தான் லோகேஷ்.
என்னம்மா உனக்கு இந்த படம் ரிலீஸ் ஆகின்ற அப்பயும் வயித்தெரிச்சல் சக்ஸஸ் ஆகுறப்பயும் வயித்தெரிச்சலா… திலீப் தான் அப்படி போய் பேசினானா சில்வியா பொய் பேச என்னம்மா காரணம்… ஷி இஸ் தி ஒன் ஆஃப் ஃபேமஸ் ரைட்டர்… உனக்கு நல்லாவே தெரியும்… அவளுக்கு ஹீரோயினி என்கிற பட்டத்தை தாண்டி ரைட்டர்ங்குற ஒரு கர்வம் தான் அவளை நிலைச்சு நிறுத்துதுன்னு… இதுல பணத்தாசை வேற…
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட திலீப்க்கும் என்னோட சில்வியாக்கும் பணத்தாசை கிடையாது….
இப்ப பணத்தை ஆசையோ பேரும் முக்கியம் இல்ல மிஸ்டர் லோகேஷ்… அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா இல்லையா?…
இப்போது அரங்கத்தில் உள்ள அனைவரின் கேள்வியுமே அதுதான்..
ஏன் ப்ரொடியூசர் முதற்கொண்டு யாரும் அறியாத உண்மை அது… இம்மூவருக்கும் மட்டும் தெரிந்த உண்மையும் அது…
ஆமா திலீப் என்னோட மச்சான் தான். என் தங்கச்சி சில்வியாவ தான் அவன் கல்யாணம் பண்ணி இருக்கான்… லோகேஷ் சொல்லி முடித்து தனது தங்கையையும் திலீப்பையும் பார்த்து எச்சில் விழுங்கினான்.
லோகேஷ் சொல்லி முடித்த அடுத்த நொடி மாலினி பீறிட்டு சிரித்தாள்… பார்த்தீங்களா நான் சொன்ன எல்லாமே உண்மை… இவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் என்பதையும் சேர்த்து!….
இந்தப் படம் ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணப்ப எனக்கு சைன் பண்ண சொன்னாங்க… அதுக்கப்புறம் நீங்க ரெண்டு நாள் தள்ளி வாங்கன்னு என்கிட்ட போன் பண்ணி லோகேஷ் பேசினார்… அதுக்கப்புறம் பார்த்தா திடீர்னு ஹீரோயின் சேஞ்ச் பண்ணிட்டாங்க… சரி நம்ம கேஸ் போட்டா இதுல நமக்கானா நியாயம் கிடைக்கும் அப்படின்னு பார்த்தால் அதுக்கு இன்னொரு நான்சென்ஸ் ஆடியோவை ரெடி பண்ணி என் மேலயே கேச திருப்பி விட்டுட்டாங்க இவங்க ரெண்டு பேரும்…
இவங்க ஒன் இயரா ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்பா இருக்காங்கிற இந்த நியூஸையே இவ்வளவு சீக்ரெட்டா வச்சிருக்காங்கன்னா மத்ததெல்லாம் எவ்வளவு சீக்கிரெட்டா வச்சிருப்பாங்க… சோ என் பக்கம் இருக்க நியாயத்தையும் நீங்க எல்லாம் கொஞ்சம் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்…
இப்ப இவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா இருக்கறதுனால உனக்கு என்ன பிரச்சனை.
நீங்க கேள்வி கேட்டாலும் கணவன் மனைவியா இருக்கு இரண்டு பேரும் கணவன காப்பாத்துறதுக்காக ஏன் இந்த மாதிரி ஒரு ஆடியோவை ரெடி பண்ணி என் மேல பொய்யான கேஸ் போட கூடாது அப்படிங்கிறது தான் உங்க மூலமா நான் இந்த உலகத்துக்கு தெரிய வைக்க முயற்சி பண்றேன்… பிகாஸ் இன்ஸ்டால் மூலமா பேமஸ் ஆன நான் அதே இன்ஸ்டால் மூலமா ரொம்ப கேவலமா நடத்தப்படுகிறேன்…
இதோ இந்த உத்தமர் திலீப் சொன்ன மாதிரி நான் இருந்த இடம் தெரியாம அழிஞ்சு போயிட்டேன். அதுக்கு ஃபுல் காரணமும் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து போட்ட நாடகம் தான்…
எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்… ஒரு இன்ஸ்டால் இன்ஃப்ளூயன்சரா இருந்தாலும் கூட எனக்காக நியாயம் கிடைக்காதா? நீங்க எனக்காக போராட மாட்டீங்களா என்று ஏதோ சட்டசபை வாதாடும் அமைச்சர்கள் போல வாதாடி விட்டு அந்த அரங்கத்திலேயே அமர்ந்து கொண்டாள்.
வெறும் அரை மணி நேரத்தில் இத்துணை நாள் சேர்த்து வைத்த மொத்த மரியாதையையும் குழி தோண்டு புதைக்கும் அளவிற்கு நிலை மாறிப்போனது திலீப் குமாருக்கு…
திருமணம் நடந்த செய்தியை யாரிடமும் சொல்லாமல் அவன் மறைத்ததை இப்போது கிடைத்திருந்த அனைத்து படங்களையும் மட்டுமின்றி அவனுக்கு வாய்த்து இருந்த அனைத்து ப்ரொடியூசர்களும் மாறி மாறி அழைத்து படங்களை கேன்சல் செய்து கொண்டார்கள்.
நித்தம் உன் கனா என்ற படத்தின் வெற்றி விழாவில் திலீப் குமார் என்ற திரைப்பட நடிகருக்கு முழுவதுமாக பெரிய பேரிழப்பை கொடுத்து விட்டால் இந்த மாலினி.
தொடர்வேனே!…..