எல்லாம் பொன் வசந்தம்…(7)

5
(3)

அத்தியாயம் 7

 

 

காதலின் அளவு என்பது இருவரிடமும் இருத்தல் அவசியம்.  ஒருவரிடம் மட்டும் இருந்தால் அது வெறுப்பை உமிழத் தொடங்கி உறவை வேரறுத்து விடும்.

சில்வியாவும் மதியும் மூன்று மணி நேர உரையாடல் பின் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட இன்னும் இரு தினங்களுக்கு பின் சூட்டிங் ஸ்டார்ட் சொல்லி அட்வான்ஸ் அமௌண்டையும் சில்வியாவிடம் கொடுத்து அனுப்பினார்.

முதல் பட வருமானம் என்பதால் பெரிதளவில் சந்தோஷம் அடைந்தாள்.  அந்த பத்து லட்சம் மதிப்பை கொண்ட பணத்தை பார்த்து சந்தோசம் அடைந்தால் என்பது தான் மெய்.

இருவரும் நேராக கிளம்பி திலீப்பின் வீட்டிற்கு சென்றார்கள். சென்றதும் அவனிடம் விவரம் அனைத்தும் தெரிவித்து ” நான் இந்த படத்துல நடிக்க சைன் பண்ணட்டுமா திலீப்” என்று உரிமையோடு கேட்ட அடுத்த நொடி அவளது தலையை இழுத்து பிடித்தான் மதியின் முன்னமே.

நீ என்ன வேணா பண்ணு…அதுல என்ன கூட்டு சேர்க்காத …. உன் கூட கூட்டு சேர்ந்த ஒரு காரணத்துக்காக என் கரியர் போச்சே தெரியலையா? கரியர் மட்டும் போயிருந்த கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஒட்டுமொத்த வாழ்க்கையோட சந்தோஷத்தையும் நீ கொலைச்சவடி என்று திட்டி தீர்த்தான்.

மதியோ தனது மாமாவை சமாளிக்க முயன்று அவனது விரலில் உள்ள நகத்தால் கீரலை தான் வாங்கினாள்.

அவனது கையில் இருந்து தனது கையை விடுவித்தவள் ஏன் மாமா இப்படி மிருகம் மாதிரி பண்றிங்க… அவளுக்குன்னு ஃபீலிங்ஸ், அவளுக்குன்னு ஆசாபாசம், அவளுக்குன்னு கொஞ்சூண்டு அன்பான வார்த்தைகள்னு எதாவது பேசுறிங்களா?….எப்ப பாரு அவள் ஒரு விஷ பூச்சி மாதிரி ட்ரீட் பண்றீங்க…அவள மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கனும் மாமா என்று விரல் நீட்டி மிரட்டினாள் மதி.

கொடுத்து வச்சிருக்கனுமா…ஹாஹாஹா சத்தமாக பீறிட்டு சிரித்தவன் கெடுத்து வச்சவளே அவ தான்மா என்று அவளது விரலை மடக்கி பிடித்து பதிலளித்தான்.

இல்ல இல்ல மாமா… நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க…நடந்தது என்னன்னா….என்று இழுத்தவளை போதும் அக்காவும் தங்கச்சியும் டிராமா பண்ணாதீங்க என்று சொல்லிய படி அவனது அறைக்குள் நுழைந்தார்கள் கிருஷ்ணரும் ராஜேஸ்வரியும்.

அதே நேரம் லோகேஷூம் வந்திருக்க என் தங்கச்சிங்க நாடகம் ஆடி எந்த பயனும் இல்லை…முதல்ல அவங்களை பேச விடுங்க… அப்புறம் என்ன வேணா பேசிக்கலாம் என்று இருவருக்காகவும் பேசினான்.

நடந்த உண்மைய முதல்ல என்னன்னு சொல்லு மதி…அப்போதாவது இந்த மதி கெட்ட திலீப்க்கு உண்மை புரியுதான்னு பார்ப்போம் என்று இரு தங்கைகளையும் தன் தோளோடு சாய்த்து நிறுத்தி கொண்டான்.

கலைந்த தலை முடியோடு அண்ணா அதுலாம் வேண்டாம்மே என்று சொல்ல வந்த சில்வியாவிடம் சும்மா இரு நீ. எல்லா நேரமும் நீ திட்டு வாங்குறத பாக்குறதுக்கா உன்ன கல்யாணம் பண்ணி வச்சோம் என்று கேட்க அவளோ அமைதி காத்தாள். எப்ப பாரு உன்ன இப்படி முடிய புடிச்சு இழுக்கிறது செவுத்துல முட்டுவது என்று பார்த்து பார்த்து மன வேதனைப்படுது குட்டிமா. தயவுசெஞ்சு அமைதியா இரு. நீ சொல்லு மதி நடந்த உண்மைய கொன்னு விடாமல் சொல்லு. அதைத் தாண்டி இவனுக்கு புரியவில்லை என்றால் நாம் சில்வியா அழைச்சுட்டு போயிடுவோம்.

ஐந்து வருடங்கள் முன்னர்

மதராசு பட்டினம் என்று பழங்கால சுவடுகளையுடைய சென்னையின் அழகு கூடிய இடம் தான் நாகலாபுரம்.  இங்கே பாய்ந்து செல்லும் அருவிகளும் காத்தாடும் மரங்களும் மனதிற்கு இதமானதாக அமையும்.

நாகலாபுரம் அருவியை ஒட்டியே விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி தான் மோகன். அவரது சரிபாதியான செல்வி வழக்கம் போல பிதற்றலுடன் வந்து அவரிடம் அமர்ந்தாள்.

இந்த பெரியவ எப்ப பாரு வெளிய போய்டு வரேன்னு வீடே தங்க மாட்டுறா…இந்த சின்னதுங்க இரண்டும் வீட்டுக்குள்ளையே விளையாடிட்டு வெளியவே வர மாட்டங்கதுங்க…இதுல நான் பெத்த மவனும் பெரியவளோட கூட்டு களவாணி வேற என்று தனது முந்தாணையை கொண்டு வாயை துடைத்து கொண்டு மோகன் அருகே அமர்ந்தவர் உழுத்தங்கஞ்சியை ஊற்றி கொடுத்தாள்.

ஏலே சில்வியா இந்தா வந்து  வந்து உளுந்தங்கஞ்சியை எடுத்துட்டு போ…

தோ வரேன்மா…என்று பன்னிரண்டாம் வகுப்பை முடித்த சில்வியா பாவாடை சட்டையோடு வந்து எடுத்து கொண்டு அறைக்குள் மீண்டும் நுழையவும் ஏன் அந்த மகராசி வெளியே வந்து எடுத்துட்டு போக மாட்டலாமா என்று பேசினாள்.

ஏண்டி எப்ப பாத்தாலும் புள்ளைங்கள வந்துகிட்டே இருக்க.  சும்மா இருடி என்று செல்வியின் புறம் சொன்னவர் நீ போடா தங்கம் என்று அனுப்பி வைத்தார்.

நீங்க உங்க பிள்ளைக்கு  ரொம்ப செல்லம் குடுக்குறீங்க ஒரு நாள் அதுவே உங்களுக்கு வினையா வந்து நிக்க போது பாருங்க…

இங்க பாருடி வினை,கினைனு பிள்ளைங்க முன்னாடி பேசி பிள்ளைங்கள கெடுத்துப்பிடாத…

மகாராஜா நீங்க பண்றது எல்லாம் பெருசா தெரியல. நாங்க பண்றது தான் குத்தமா தெரியுமா என்று இருவரும் எப்பொழுதும் போல சண்டையிடும் சமாதானமாகி கொண்டும் அவரது பணிகளை செய்து கொண்டிருந்தார்கள்.

வெளியே சென்று இருந்த லோகேஷூம் வைஷியாவும் வந்துவிட, என்னடா நெனச்சிட்டு இருக்க. நீயும் உங்க அக்காவும் எப்ப பாத்தாலும் வெளியே ஊர் சுத்திட்டு இருக்கீங்க. ஊரு காரங்க என்ன பேசுவாங்கன்னு தெரியுமா தெரியாதா?…

ஊர்க்காரங்க பேசுறதுக்கெல்லாம் நான் ஏம்பா பயந்துக்கணும். நீ வேணா பயந்துட்டு இரு… அவங்களுக்கு பயந்து நான் என்னோட வேலைய பார்க்க முடியாது -இது வைஷியா..

ஆணுக்கு நிகரான உயரத்தோடு கூர் விழிகளை அங்கும் இங்கும் ஒருத்தி கொண்டு வெளியுலக வாழ்க்கையை ஓரளவிற்கு அறிந்து கொண்டோம் கிராமப்புறங்களில் அவற்றை போதிக்காமல் தனக்கு மட்டும் செய்து கொண்டு மட்டும் வாழும் ஒரு தைரிய பெண்.

இதனை சில்வியா கிட்ட  சொன்னா கூட சரின்னு கேப்பா…. யாருகிட்டம்மா நீ சொல்றது நம்ம வைஷூகிட்டையா நெவர் சான்ஸ்… என்று தனது தோளை உலுக்கி விட்டவன் நீ போய் பார்க்க வேண்டிய வேலைய என்னனு பாரு என்று அனுப்பி வைத்தான் லோகேஷ்.

ஆமாண்டா இந்த வீட்ல மட்டும் தான் பொம்பள பிள்ளைங்க பொம்பளைங்க மாதிரி இருக்காங்க…. நல்லது சொன்னாலும் இந்த ஆம்பள பசங்க நம்மள அடக்கி வைத்து விடுவார்கள்…. போற இடத்துல இவ பண்றதுக்கு எல்லாம் அவங்க மாமியா என்ன மட்டும் தான் கடிச்சு கொட்ட போறாங்க…

என்னமா போற இடத்துல போற இடத்துல சும்மா மாமியார்காகவே வாழ்க்கையை ஓட்ற சாதாரண பெண் இல்ல நான்… இனிமே திட்டனும்னா உனக்கு புடிக்கலனு உன்னோட மனசுக்கு சரியில்லைன்னா திட்டு, என் மாமியார நீ ஒன்னும் திட்டாத என அம்மாவிடம் சண்டை இட்டவள் நேராக தனது அறையில் போய் அடைந்து கொண்டாள்.

பின்னர் எந்த தாயாக இருந்தாலும் மாமியாரை காரணம் காட்டியே மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஏம்மா இப்ப தான் வைஷூ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வரா… அவ சினிமால காட்டுற இன்ட்ரஸ்ட எப்படியோ பேசி அவளுக்கு புரிய வைத்து சமாதானம் பண்ணி இப்ப இந்த ஆபீஸ் இன்டர்வியூ அனுப்பியிருக்கேன் நீ காரியத்தை கெடுத்து விடாதே என்று கையெழுத்து கும்பிட்டவன் போய் அவளை சமாதானப்படுத்தி இன்று அனுப்பி வைத்தான் வைஷூவின் தம்பி லோகேஷ்.

வைஷூவிற்க்கும் லோகேஷிற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது வித்தியாசம் மட்டுமே! அதே போல லோகேஷ்க்கும் சில்வியாவுக்கும் ஒரே வயது தான் வித்தியாசம்… கடைக்குட்டி மதி மட்டும் மூன்று வருடம் வித்தியாசத்திற்கு பின் பிறந்தவள்… இரு அக்காகளுக்கும், ஒரு அண்ணனுக்கும் செல்ல குழந்தை வேறு அவள்.

இது வேண்டும் என்ற அவள் சொல்லி விட்டாலே போதும் அண்ணனும், அக்காக்களும் அடித்து பிடித்து எப்படியாவது வாங்கிக் கொடுத்து விடுவார்கள் அவளுக்கு.

தினமும் சில்வியாவும் மதியும் கொல்லை பிரியகாரார்கள்.  ஈருடல் ஓர் உயிர் என்று சொல்லும் பழமொழிக்கு பிறந்த சகோதரிகள் என்றும் சொல்லலாம்.

அதே நேரம் லோகேஷின் மொபைலுக்கு அழைப்பு வந்த நேரம் திலீப் என்ற பொன் எழுத்துக்களை அவனது மொபைல் தாங்கியதோடு வந்து நின்று கொடுத்தால் வைஷியா.

டேய் இந்தா உன் பிரண்ட் கால் பண்றாங்க…

சொல்லு மச்சி என்ன ஆச்சு எப்போ? எங்க? இதோ உடனே வரண்டா…. என்ன குரூப்டா…பீ நெகட்டிவ்வா..அது எங்க மதிக்கு தான் இருக்கு. சரி நான் அவ கிட்ட பேசிட்டு என்னன்னு கூப்பிறன்டா…

என்னடா ரொம்ப பதட்டமா பேசுற – இது வைஷியா வின் வினா…

என்னோட ப்ரண்டு திலீப் இருக்கான்ல அவனோட தம்பிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்… ப்ளட் ஓவரா லாஸ் ஆனதால்ல ப்ளட் ஏத்த   சொல்லிட்டாங்க… இந்த ஊர்ல அவனுக்கு நான் தான் நல்ல பழக்கம். அதுதான் கால் பண்ணி இருக்கான்… நம்ப மதிக்கும் அவங்க தம்பிக்கும் ஒரே குரூப். இப்பதான் சொன்னா பீ நெகட்டிவ்… பிளட் கொடுத்துட்டு வந்துடலாமா அக்கா…

அதுல என்ன இருக்கு… அதை விட நமக்கு வேற வேலை என்ன..என்றவள் தானும் தயாரானாள்.

மூவரும் இருவரும் என்று ரெடியாவதை பார்த்ததும் நானும் தான் வருவேன் என்ற படம் பிடித்தாள் சில்வியா.

செல்லும் பல்சரில் மூவர் அமர இடம் பிடிப்பதே பெரிய விஷயம் . இதில் நீ எங்கே சக்கரத்தில உட்காருவாய் என்று வைசியாவை கலாய்க்கவும் முகத்தை துவங்கி வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டாள்.

சில்லுமா நாங்க ஒன்னும் விளையாட்டுக்கு போகல நாங்க ஹாஸ்பிடலுக்கு போறோம் சோ அங்க எல்லாம் உனக்கு ப்ளேஸ் செட் ஆகாது….

மதிக்கு செட் ஆகும் போது எனக்கு செட் ஆகாதா…நீங்க ரொம்ப ஓவரா பண்றிங்க…. பன்னிரண்டாம் வகுப்பு விளையாட்டு குழந்தையாக அவள் பேசுவதை பார்த்து லோகேஷும் வைசியாவும் சிரித்த படியே பல்சர் ரோடு சேர்ந்து ஸ்கூட்டியையும் எடுத்துக்கொண்டு நால்வரும் கிளம்பினார்கள்.

எப்படியாவது தான் அடம் பிடிப்பதை சாதித்து விட வேண்டும் என்பதில் சில்வியா வெற்றி கொடியை நாட்டி விட்டது பின்னர் வரும் நாட்களில் அவள் பிடிக்கும் அட வாதத்திற்கு அடித்தளம் இட்டது தான் முதல் காரணமாக அமைந்தது.

சில்வியாவின் இந்த அடவாதத்தை மற்று மூவரும் விளையாட்டுப் பிள்ளையின் குறும்பு என்று நினைத்து அவளை தங்களோடு அழைத்துச் செல்லவே விதி விளையாட்டை புள்ளி வைத்து கோலம் போட ஆரம்பித்தது.

தொடர்வேனே!…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!