அத்தியாயம் – 4
“ரிஷி சாப்ட்டு காலேஜ் கிளம்பு.. உனக்கு பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் ரெடி பண்ணி இருக்கேன்” குரல் கொடுத்தபடியே தாய் சரஸ்வதி சாப்பாடு மேசையில் உணவை எடுத்து வைத்தார்.
கருப்பு சட்டை வெள்ளை பேண்டில் டக்கராக கிளம்பி வந்த ரிஷி, “இவ்வளவு சீக்கிரம் எழுந்து எதுக்கு மாம் கிட்சன்ல நின்னு கஷ்டப்படுறீங்க.. அதான் சமைக்க குக்ஸ் இருக்காங்கல்ல” தாயிடம் பேசியபடியே உண்ண அமர்ந்தான்.
“அது எப்டி ரிஷி, பெத்த பிள்ளைக்கு சமைக்கிறது கஷ்டமாகும்.. என்ன தான் குக்ஸ் இருந்தாலும் குடும்பத்துக்காக சமைக்கிற கை பக்குவம் வீட்ல உள்ள பொம்பளைங்களுக்கு தானே தெரியும், குக்ஸ்கிட்ட அந்த பக்குவத்தையும் பாசத்தையும் உணர முடியுமா சொல்லு..” உபதேசம் பேசிய அத்தை சோபனா ஒய்யாரமாக அமர்ந்து அவனுக்கு முன்னவே ஆறு பூரியை விழுங்கியவராக,
“அண்ணி இன்னும் ஒரு பூரி சூடா வைங்க, அப்டியே கிழங்கும் வைங்க” என குரல் கொடுக்க, ரிஷி முகம் அஷ்டகோணல் ஆனது.
“உண்மையா எனக்கு தான் பூரி பிடிக்கும்னு செஞ்சீங்களா மாம்..” சலிப்பாக கேட்ட ரிஷி, தாய் வைத்த பூரியை பிய்த்து வாயில் போட்டான்.
“வேற யாருப்பா இந்த வீட்ல பூரி சாப்பிடுவா உனக்கு தான் அண்ணி ஆசையா செஞ்சாங்க..” மீண்டும் குறுக்கே புகுந்த சோபனா, “அண்ணி இன்னொரு பூரி” என்றிட, அன்னையை முறைத்தான் ரிஷி.
“நான் சாப்பிடுற மூணு பூரிக்கு, கால் கடுக்க நின்னு முப்பது பூரி சுட்டிங்களா மாம்..”
“டேய் ஒழுங்கா தட்ட பாத்து சாப்டு.. உன் அத்தை தானே கண்டுக்காத” அவன் தோளை தட்டி மெல்ல கிசுகிசுக்க,
“நீங்க முதல்ல அவங்கள கண்டுக்காம விடுங்க மாம்.. விருந்தாளியா வந்தவங்க குடும்பத்தோட இங்கேயே செட்டில் ஆகி உங்கள வேலைக்காரியா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க..” நிதர்சனத்தை எடுத்து சொன்னதும் மகனை முறைத்த சரஸ்வதி,
“அவளும் இந்த வீட்டு பொண்ணு தான் ரிஷி.. அவளுக்கு இங்க இல்லாத உரிமையா.. என்ன கொஞ்சம் செல்லமா வளந்தவ மத்தபடி அவளும் நல்லவ தான்.. அதுவும் இல்லாம அவ உன் அத்தை கண்டபடி பேசாதே” அதட்டிய தாயின் வெகுளி குணத்தை எண்ணி தலையினை உளுக்கிக்கொண்ட ரிஷி.
“ம்க்கும் ரொம்ப ரொம்ப நல்லவங்க.. உங்கள வேலைக்காரியா நடத்துறாங்க அது தெரியாம, அத்தை சொத்தைனு எல்லார்க்கும் பாவம் பாருங்க..” என முணுமுணுத்தபடியே சோபனாவை முறைத்து வைத்தான்.
“சரசு எனக்கு இட்லிய வை ஆபிஸ்க்கு டைம் ஆச்சி” பரபரப்பாக வந்த திவாகர் உண்ண அமர, கணவருக்காக தனியே அவித்த இட்லியை வைத்து, காரம் இல்லாத சாம்பாரை ஊற்ற, ரசித்து உண்டார் மனிதன்.
“ஆஹா.. பிரமாதம் சரசு.. உன் கையாள பச்சை தண்ணி குடிச்சாலும் அமிர்தம் தான்..” ஒவ்வொரு நாளும் கணவனிடம் கிட்டும் பாராட்டில் நெஞ்சி நிறைந்து போகும் மனைவிக்கு.
“ஆனாலும் ரொம்ப தான் ஐஸ் வைக்கிறீங்க டேட்.. எப்டி எப்டி அம்மா கொடுத்தா பச்சை தண்ணி கூட அமிர்தமா உங்களுக்கு” நக்கலாக கேட்ட மகனை புன்சிரிப்போடு கண்டார்.
“எனக்கு என் பொண்டாட்டிய பாத்தாலே போதும் சகலமும் கிடைச்ச உணர்வு தோணும்.. அவ அக்கறை கலந்த காதல் பார்வை ஒன்னு போதும், என் உயிர் நீடிச்சி வாழ.. அப்டித்தான் உன் அம்மாக்கும்.. அனுபவத்தால உணராத வரைக்கும் உனக்கு இதெல்லாம் காமெடியா தான்டா தெரியும்..
காதலிச்சி பார் அப்பா சொல்றது புரியும்..” என்றவராக, “சரசு கரெக்ட் டைம்க்கு சாப்ட்டு ரெஸ்ட் எடுமா, ஈவினிங் என் பிரண்ட் மகளுக்கு ரிசப்ஷன் இருக்கு தயாரா இரு..” மனைவிக்கு தகவல் சொன்னபடி உண்டவர்,
“சோபா, எங்கே ஷர்மிய காணல” தங்கை மகளை விசாரித்தார்.
“எக்ஸாம் நெருங்குறதால நைட்டெல்லாம் கண் விழிச்சி படிச்ச அசதில தூங்குறா அண்ணே” என்ற சோபாக்கு தானே தெரியும், இரவெல்லாம் மகள் பப் பார்ட்டி என கூத்தடித்து குடித்துவிட்டு வந்து குப்புற கவிழ்ந்து உறங்கும் செய்தி.
“படிப்பு முக்கியம் தான் அதுக்காக பொம்பள புள்ள இவ்வளவு நேரமா தூங்குறது.. நைட் கண் விழிச்சி படிக்கிற படிப்ப காலைல எழுந்து படிச்சா இன்னும் நல்லா மனசுல பதியுமே! நாளைல இருந்து காலையில எழுந்து படிக்கிற பழக்கத்துக்கு பக்குவ படுத்து சோபா” என்றவரும் தன் பிள்ளைகளை அப்படித்தான் இதுநாள் வரை வளர்த்து இருக்கிறார்.
“சரி அண்ணே, அவகிட்ட சொல்லிடுறேன்” எனும் போதே, பள்ளி சீருடை அணிந்து குதுகலிக்கும் மயிலாக ரெட்டை ஜடை பின்னலில் பேக்கோடு ஓடி வந்தாள் ரிதன்யா. ரிஷியின் தங்கை அவள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி.
“குட் மார்னிங் டேடி, நான் ரெடி ஒரு ஃபை மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, சாப்ட்டு வந்திடறேன்.. மாம் சீக்கிரம் ஊட்டி விடுங்க டேடிக்கு டைம் ஆகிடும்” வந்த வேகத்தில் தந்தை கன்னத்தில் முத்தமிட்டு அவருக்கு அருகிலேயே அமர்ந்த மகளுக்கு, சரஸ்வதி உணவை ஊட்டி விட, ரிஷிக்கு வயிறு புகைந்தது.
“நானுக் உன் ஸ்கூல் தாண்டி தான் காலேஜ் போறேன் ரித்து, என்கூட வந்தா ஆகாதா.. உன்ன பத்திரமா கொண்டு போயி விட மாட்டேனா.. டேடிய எதுக்கு தொல்லை பண்ற..
ஏன் மாம் அவளுக்கு கை இல்லையா, அதென்ன தினமும் ஊட்டி விடுற பழக்கம்.. இன்னும் சின்ன குழந்தையா அவ” உதட்டை வளைத்தவனும் பார்க்கும் போதெல்லாம் இக்கேள்வியினை கேட்டு அலுத்து விட்டான்.
“எனக்கு கை இருக்கு ஆனா அம்மா ஊட்டி விட்டா தான் எனக்கு வயிறு நிறையும்.. அதுவும் இல்லாம உன்னோட நான் ஸ்கூல்க்கு போறதுக்கு நடந்தே போலாம் அண்ணா, நீ பைக் ஓட்டுற ஸ்பீட் இருக்கே ஷபா.. நெஞ்செல்லாம் பதறி போகும்..
அதுகூட பரவால்ல, என் கிளாஸ்மேட்ஸ் பிரண்ட்ஸ் எல்லாம் காதுல பிளட் வர்ற அளவுக்கு உன்ன புகழ்ந்து பேசும் போது வரும் பாரு எரிச்சல்..” ரித்து இப்போது உதட்டை வளைக்க, ரிஷி உதட்டில் கர்வப் புன்னகை.
“உன்ன விட நான் அழகா இருக்கேன்னு உனக்கு பொறாமை டி..” என்ற அண்ணனை ரித்து முறைக்க, மகன் மகளின் செல்ல சண்டையை பெற்றோர் ரசிக்க என காலை வேளையில் குடும்பமாக அமர்ந்து சிரித்து பேசுவது அன்றாட வழ்க்கம் அவ்வீட்டில்.
நாம் இருவர் நம்மக்கிருவர் என்று திவாகர் சரஸ்வதி தம்பதியினர் தாங்கள் குடும்பத்தின் நலனை மட்டும் பார்த்திருந்தால் பின்னாலில் நன்றாக இருந்திருப்பார்களோ என்னவோ!
கணவனை இழந்த தங்கை என பரிதாபப்பட்டு விஷ ஜந்து ஒன்றையும், அதனோடே அவள் பெற்ற சீமப்புத்திரியையும் உள்ளே இழுத்து விட்டது தான் பெருந்தவராகி போனது.
குடும்பமே கலகலத்து ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிந்து மகிழ்ச்சியாக இருப்பதை எல்லாம் எம்மாதிரி உணர்வில், சோபனாவின் கண்கள் பார்த்தனவோ! ஆனால் அண்ணன் சொத்து மீது மட்டும் தீராத ஆசை உண்டு. ஒன்றுமில்லாத வீட்டில் இருந்து வந்த சரிஸ்வதி அதற்கு எஜமானி என நினைக்கும் போது வயிறு எரிகிறது.
தன் தகுதிக்கு கீழ் உள்ள அண்ணியை மனசு நோகாது வேலைக்காரியாக மாற்றி வைத்திருக்கும் வல்லமை சோபனாவையே சேரும். சமயம் பார்த்து சொத்து முழுக்க ஆட்டைய போட காத்திருக்கும் ஒட்டுண்ணியின் எண்ணங்கள் பலித்ததா?
** ** **
செவ்வானம் பூத்து கிடக்கும் அந்தி மாலை நேரம், ராகவ் தங்கை மகன் இருவரையும் வீட்டில் அழைத்து வந்து வீட்டில் விட்டு மீண்டும் கிளம்பி இருக்க, ஆரு தன் புது தோழி சொன்ன ஐஸ்கிரீம் பார்லருக்கு ஷாமை அழைத்து சென்றாள்.
“அத்தை இந்த கடைல தான் இன்ஸ்டன்ட் ஐஸ்க்ரீம் செய்து தராங்களா!” ஒடிசல் இல்லாத அந்த தார் சாலையில், ஆருவின் கை பிடித்து க்யூட்டாக நடந்து வந்தான் ஷாம்.
“ஆமா டா, என் காலேஜ் பிரெண்ட்ஸ்லாம் இங்க தான் வந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவாங்கலாம்.. ரொம்ப நல்லா இருக்கும்னு ஜான்சி சொன்னா.. அதை கேட்டதுல இருந்தே எப்படியாவது இங்க வரணும்னு நினச்சேன், இன்னைக்கு தான் டைம் கிடைச்சிது ஷாம்” பதில் சொன்ன ஆருக்கு ஷாம் கையில் இருந்தால் போதும், உலகத்தையே சுற்றி வந்து விடுவாள் அசால்ட்டாக.
“சூப்பர் அத்தை, எனக்கு மேங்கோ ஃலேவர் வேணும்.. உங்களுக்கு ஸ்ட்ராபெரி தானே அத்தை”
“இல்ல ராஸ்பெர்ரி ரிப்பில் (Raspberry Ripple) ட்ரை பண்ண போறேன் டா.. சீக்கிரம் வா வாங்கிட்டு போலாம்.. அண்ணா காதுக்கு போனா ஏன் தனியா போனீங்கனு திட்டுவார்” என்றவளும் வேகவேகமாக ஷாமை அழைத்துக்கொண்டு கடைக்குள் செல்ல, அங்கிருந்தவனை கண்டதும் ஒரு நொடி ஸ்டன் ஆகிவிட்டாள்.
அங்கு ஏற்கனவே நண்பர்களோடு கொட்டம் அடித்தபடி பனிகூழை ருசித்துக்கொண்டிருந்த ரிஷியும், நிச்சயமாக ஆருவை இங்கு எதிர்பார்க்கவில்லை. அரை ஷணம் தான் அவன் திகைப்பு, “ஹேய் ஆரா..” சிறுவனாக உள்மனம் துள்ளி கூத்தாடியது.
அதுவரை உருகாது வைத்திருந்த குவாலிட்டி வால் பாப்ஸ்டிக்கை அவளை பார்த்தபடியே உதட்டில் கவ்வி நாவால் ருசிக்க, ஆருவின் தேகம் ஒருமாதிரி சிலிர்க்க செய்து குறுகுறுபூட்டவும், அவனை பாராது தாண்டி சென்றவளின் பூ மேனி வாசம் கிளுகிளுப்பு கூட்டியதோ ஆணுக்கு!
“அண்ணா, மேக் ஒன் மேங்கோ ஐஸ்க்ரீம் அண்ட் ஒன் ராஸ்பெர்ரி ரிப்பில்” ஆர்டர் கொடுத்து விட்டு அங்குள்ள சாய்வு இருக்கையில் ஷாமோடு அமர, அவளுக்கு எதிர் இருக்கையில் வாகாக அமர்ந்து சைட் அடித்தான் ரிஷி.
“டேய் சபரி என்னடா உலக அதிசயமே தரை இறங்கி தனியா நடந்து வந்திருக்கு.. செக்யூரிட்டி கார்ட் எங்க காணல” ராகவ் உடன் வராததால் ஆருவை பார்த்தபடியே ஒரு மார்க்கமாக இழுக்க, ஷாமின் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஆரு, ரிஷியை பலமாக முறைத்தாள்.
“நீ அவகிட்ட வாங்கி கட்டிக்காம இடத்தை காலி பண்ண மாட்ட போல டா.. பாரு எப்டி முறைச்சி பாக்குறான்னு.. காலேஜ்லயும் அவளை விழுங்குற மாதிரி அப்படி பாக்குற.. இங்கேயும் வந்து ஏன்டா இப்டி வெக்கமே இல்லாம பாத்து வைக்கிற.. பாவம் டா அந்த புள்ள உன்னால அன்கம்ஃபர்டபிளா பீல் பண்ணுது போல..” ஆருவின் அசோகர்யமான முகம் மாற்றத்தை கண்டு சபரிக்கே பாவமாய் போனது.
“ப்ச் இதையெல்லாம் கண்டுக்காத மச்சாஇது எனக்கும் அவளுக்குமான பார்வை போர்.. பாரேன் நான் பாக்குறேன்னு தெரிஞ்சே அவ என்ன ஓரக்கண்ணால பாக்குறா.. கண்ணு படபடக்குறா.. முகத்துல தழுவாத முடிய அடிக்கடி காதோரம் ஒதுக்கி விடுறா.. இந்த ஃபீல் கூட டிஃபரண்டா நல்லா இருக்கு மச்சா..
எவ்வளவு தூரம் போகுதுன்னு பாக்கலாம், நீ அமையா இந்த ஐஸ முழுங்கு” ரிஷி நண்பனின் வாயை அடைத்து விட்டவனாக, மீண்டும் ஆராதனை பெண்ணை விழுங்க விழுங்க பார்க்க, பெண்ணின் மனமோ படபடப்பில் மூழ்கியது.
“அத்தை எனக்கு பிடிச்ச மேங்கோ ஐஸ் ரெடி, இப்ப உங்களுக்கு தான் ராஸ்பெர்ரி பிரிப்பேர் பண்றாங்க” குட்டி பையன் உற்சாகமாக சொன்னது, ரிஷி செவியை அடைந்ததுவோ!
“எனக்கு கூட ராஸ்பெர்ரி ரொம்ப பிடிக்கும் மச்சா.. அந்த கலர், அது டெக்ஸ்ச்சர் ப்பா சான்ஸே இல்ல.. நானும் ரொம்ப நாளா வெறிச்சி வெறிச்சி பாக்குறேன், வாங்க தான் முடியல” பிளவு மொழியால் காதல் வசனத்தை பெண்ணுக்கு கடத்த, ஆராவின் விழிகள் அவனை நோக்கி முறைத்தாலும், செவ்விதழ் கடித்து உள்ளுக்குள் நாணமுற்றது நங்கை மனம்.
“ஏன் அங்கிள் வாங்க காசில்லையா.. வேணும்னா எங்க அத்தைகிட்ட சொல்லி காஸ் தர்ற சொல்றேன், ஒரு ஐஸ் தானே வாங்கிக்கிறீங்களா” பொடியனுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் என்பதால், தானாக தலையை விட்டு அத்தையை கோர்த்து விட்டது விபரம் புரியாமல்.
“ஹை தானா ஒரு சான்ஸ் ஆராவ நெருங்க கிடைச்சிருக்கு, வாய்ப்ப பயன்படுத்திக்க டா ரிஷி..” ரிஷி மனம் துள்ளாட்டம் போட, ஆரா திகைத்து விழித்தாள் அண்ணன் மகனின் கூற்றில்.
“தேங்க்யூ டியூட்.. எனக்கு ஓகே தான், உன் அத்தைக்கு சம்மதமானு கேட்டு சொல்லு..” சிறு நகைப்புடன் சொன்னவனை வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் ஆரா.
“இதுல கேக்க என்ன இருக்கு, எங்க அத்தைக்கும் சம்மதம் தான் அங்கிள்” விபரம் அறியாமல் பேசும் பொடியன் வாயை லபக்கென மூடிய ஆரு,
“டேய் ஷாம் சும்மா இரு.. உன் இஷ்டத்துக்கு வாய திறந்து வச்சா அடி விழும்.. வா வீட்டுக்கு போலாம்..” என்றவளாக ஷாமை அழைத்து செல்ல முனைய,
“அத்தை உங்களுக்கு ஐஸ் வாங்கல” என்றான் கூச்சலிட்டு.
“உனக்கு வாங்கியாச்சில்ல அதுவே போதும்..” ரிஷியின் பார்வை தாக்கம் தாங்காது, ஏசியிலும் வியர்வை பூத்தது பெண்ணுக்கு.
“அப்போ உங்களுக்காக பிரிப்பேர் பண்ண ஐஸ்க்ரீம் வேஸ்டா போகுமே, முன்னாடியே காசும் கொடுத்துட்டீங்க தானே..”
“அதுனால என்ன வா போலாம்..”
“இல்ல அத்தை பாவம் அந்த அங்கிள்கிட்டயும் காசு இல்ல, ஐஸ் சாப்பிட ஆசைப்பட்டுட்டார்.. அதுனால அந்த ஐஸ வேஸ்ட் பண்ணாம, அந்த அங்கிளையே வாங்கிக்க சொல்லிடுறேன்” என்ற பொடியன், ஆரு சொல்ல சொல்ல கேளாமல்,
“அங்கிள் எங்க அத்தையோட ஐஸ நீங்களே வாங்கி சாப்பிடுங்க.. அவங்களுக்கு வேண்டாமாம்” ஷாம் கத்திக்கொண்டே செல்ல, ஆரு ருசித்து உண்ண வேண்டியது இப்போது அவன் உதடு நிதானமாக ருசி பார்த்தது.
அன்றைய நாளுக்கு பிறகு அடிக்கடி அவளை பார்க்கும் இடமெல்லாம் பார்வையாலே வம்பு பண்ணினான் ரிஷி. ஆடவனின் ஆழ்ந்த பார்வையில் எப்படி உணர்ந்தாளோ! நித்தமும் அவன் நியாபகத்தில் சுற்றி திரிந்தாள் பருவ மங்கை.
அன்று கல்லூரியில் நியூ இயர் கொண்டாட்டம். பெண்கள் அனைவரும் வண்ண வண்ண புடவையில் தேவதையாக ஜொலிக்க, ஆண்களும் அவர்களுக்கு ஈடான அழகில் ஷெர்வாணி, குர்த்தா பைஜாமா, தோத்தி என கலக்கலாக வளம் வந்தனர்.
லைட் வெயிட் மஞ்சள் வண்ண பேன்சி சேலை ஆருவின் எலுமிச்சை நிறத்துக்கு எடுப்பாக இருக்க, அடியில் விரித்து விட்ட கார்கூந்தலின் நடுவே வைத்திருந்த மஞ்சள் ரோஜா அச்சிறு பெண்ணின் அழகை மேலும் அழக்கூட்டி காட்டியது.
சும்மாவே ரிஷி கண் பார்வை ஆருவையே வட்டமடித்து அவளை குறுகுறுக்க வைக்கும். இப்போது சொல்லவா வேண்டும்! மஞ்சள் காட்டு மைனா அசைந்தாடும் அழகினை சொட்டு விடாது பார்வையால் பருகினான் பருவக்காதலன்.
“ஆரு, அங்க பாரேன் சீனியர் உன்னையே பாக்குறார்” தோழி ஜான்சி அவள் தோளை இடிக்க, அப்போது தான் ஆரு அவனை ஆஆ.. வென பார்த்தாள்.
அறிந்தோ அறியாமலோ, ஆருவின் புடவைக்கு மேட்ச்சாக அவனும் லைட் மஞ்சள் வண்ண பிளைன் சட்டை வேஷ்டியில், நெற்றியில் சந்தன கீற்று மிளிர, மாப்பிளை கணக்காக கண்ணில் கூலருடன் நிற்பவனை கண்டு, பெண்ணின் மனதுக்குள்ளும் வண்ண வண்ண மத்தாப்பு சிதறியதோ!
“அழகன் தான்” தனக்குள்ளே சொல்லி அவனுக்கு திருஷ்டி கழித்தாள் பாவை.
“என்ன டி அடிக்கடி சீனியரை திரும்பி திரும்பி பாக்குற.. ட்ரெஸ் கோட் வேற ஒரே மாதிரி இருக்கு.. எனக்கு தெரியாம உங்களுக்குள்ள எதுவும் தனி ரூட் ஓடுதா” ஜான்சி கிண்டலடிக்க,
“ச்சீ.. ச்சீ.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல டி.. எதர்ச்சியா ட்ரெஸ் கலர் மேட்ச் ஆகிருக்கும்.. அதுவும் இல்லாம அடிக்கடி பாக்குற அளவுக்கு எல்லாம் அந்த சீனியர் அவ்வளவு வர்த் இல்ல” உதட்டை வளைத்து கேலி பேசிய ஆரு தோழிகளோடு ஒரே அரட்டை தான்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மதியம் வரை நேரம் போனதே தெரியவில்லை.
மதிய உணவு கும்பலாக உண்டு முடித்ததும், அடி வயிற்றில் அசோகர்யமாக உணர்ந்தவளாக, ரெஸ்ட் ரூம் நோக்கி தனியாக நடை போட்டவளின் சேலை கிழிந்து அளங்கோலமாகிய நிலையில், கண்ணீரில் நடுங்கி நின்றாள்.
தொடரும்.