Home Novelsஒரே காதல் ஒரு மணிநேர காதல் (OKOK)

ஒரே காதல் ஒரு மணிநேர காதல் (OKOK)

1) ஒரே காதல் ஒரு மணி நேரகாதல் (OKOK)

by Kowsalya Velmurugan
4
(2)

இன்னைக்கு இந்த ஊரில் மிகவும் ஃபேமஸ் ஆனது மாம்பழம். எந்த மூல முடுக்குக்கு போனாலும் இந்த ஊர் அப்படிப்பட்ட ஊர் என்று பெருமையா பேசுற அளவுக்கு மாம்பழம் நம்மை செழுயா வச்சிருக்கு. சோ நம்ம சேலத்து காரங்கன்னு சொல்றதுல ரொம்ப பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

 

அதே மாதிரி வளர்ந்து வர நம்ம சேலத்துல இப்ப கரண்ட்ல ஃபேமஸா இருக்கிறது ஃபுட். சோ இன்னைக்கு ஆன டாபிக் நம்ம சேலத்துல கிடைக்கிற வெரைட்டியான ஃபுட்ஸ் தான்.

 

முதல் ஃபுட் என்னனா ஃபிரைட் ரைஸ். இது என்னமா அதிசயம் எல்லா ஊர்லயும் இருக்குன்னு நீங்க நினைக்கலாம். பட் வெரைட்டி ஆஃப் ஃப்ரைடு ரைஸ் நம்ம ஊருல மட்டும் தான் கிடைக்கும்.

 

தாபா ஸ்டைல் ஒன்னு, ஹோட்டல் ஸ்டைல் ஒன்னு ,ரோட்டு கடை ஸ்டைல் ஒன்னு, சில்லி கடை ஸ்டைல் ஒன்னுன்னு மொத்தம் நாலு வெரைட்டிக்கு மேல கொண்டு வந்து இருக்காங்க. அதை விட பிரைட் ரைஸ் வெஜ்ஜிலும் கூட ப்ரிப்பேர் பண்றாங்க.

 

இன்னும் ஏதாவது வெரைட்டி உங்களுக்கு தெரிஞ்சா எங்களோட எனஃப் எம் க்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணுங்க.

 

இப்போ உங்களுக்கு பிடிச்சமான பாடலை உங்களுக்காக போடுறேன் இந்த ஆர்.ஜே அர்ச்சனா.

 

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க கேட்டு முடிச்சிட்டு வந்து பிரைட் ரைஸ் ஓட வெரைட்டிய எனக்கு சொல்லுங்க.

 

இதோ திறந்த வாயினை மூட விடாது பேசுவதில் வல்லமை படைத்தவள் தான் இந்த அர்ச்சனா. அப்படி இல்லை என்றால் இந்த ஆர் ஜே பதவி அவளை எவ்வாறு தேடி வந்திருக்கும்.

 

கல்லூரி காலகட்டத்தில் அவள் மேடை ஏறிப்போய் பேசும் விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பு தான் இப்போது அவளை ஆர் ஜே அர்ச்சனா என்ற இடத்தில் அமர வைத்துள்ளது.

 

என்ன ஷாலினி அர்ச்சனா பேச்சு எப்படி? என்று தனது காலரை தூக்கி விட்டாள்.

 

உன்னோட பேச்ச குறை சொல்ற அளவுக்கா நாங்க வளர்ந்து இருக்கோம். நீங்க எங்க ஹெச்.ஆர் வரைக்கும் பிடிச்ச ஆர்.ஜே அர்ச்சனா. நைட் ஏழு மணி சோனாலும் சரி மார்னிங் ஏழு மணிக்கு ஷோவா இருந்தாலும் சரி வேகமா உன்ன தான கூப்பிடுறாங்க.

 

தனது கலைந்த முடியினை தனது வாயிலிருந்து எடுத்த‌சிறிய கேட்ச் கிளிப்பினால் சீர் செய்து அதை அடக்கினாள் அர்ச்சனா. விழிகள் பார்க்க மீன் போன்று இருந்தாலும் உள்ளே இருக்கும் கருவிழிகள் பூனைக்கு உரிய பிரவுன் வண்ணத்தில் காணப்படும்.

 

உதட்டுச் சாயங்கள் அவளின் பேச்சுகளுக்கு எடுப்பாக அமையும் வண்ணம் பூசப்பட்டிருந்தது. காலர் வைத்து அணிந்திருந்த அவளின் பச்சை வர்ண டாப்பும் அதற்கு எடுப்பாக இருக்கும் வண்ணம் வெள்ளை நிற ஜெகினும் அணிந்து தனது இடையைத் தாண்டி காணப்படும் முடியை விரித்து கேட்ச் கிளிப்பில் அடக்கியபடி இருந்தவளை காணும் கண்களுக்குள் வைத்துக் கொள்ளலாம் போல தோன்றும்..

 

என்னடி இன்னைக்கு ரொம்ப ஓவரா ஐஸ் வைக்கிற.

 

அது ஒன்னும் இல்லடி இன்னைக்கு தானே ஃப்ரை டே. சோ இன்னைக்கு ஐஸ் வச்சா நீயே காளான் சாப்பிட கூப்பிட்டு போயிடுவல்ல.

 

சிரித்த வண்ணம் வெள்ளிக்கிழமை வந்துட்டாலே ரெக்கை முளைத்துவிடுமே சின்ராஸுக்கு என்று ஷாலினியை கலாய்த்தால் அர்ச்சனா.

 

அர்ச்சு என்ன விட்டுட்டு நீங்க கிளம்பிடாதீங்க. அப்புறம் இந்த தேவன் கிட்ட மாட்டிகிட்டு நான் முழிக்க வேண்டியது தான் – இது மையூரி.

 

அர்ச்சனாவின் இன்னொரு தோழி. தேவன் இவளுக்கு ரூட் விடும் நபர்.

 

அர்ச்சனாவும் மையூரியும் தான் ஒன்றாக அங்கு சேர்ந்தார்கள். அர்ச்சனாவின் பேச்சு திறமையாலும், மைக்கை கையாளும் விதத்திலும் இப்பொழுது அவள் ஆர்.ஜே என்னும் இடத்தை தன் வசம் ஆக்கி கொண்டாள்.

 

அவளுக்கு அடுத்தபடி மையூரியும் இருந்தாள்.

 

ஓகே ஓகே இன்னிக்கி ஆஃப்டர்நூன் என்ன டைப் நூடுல்ஸ் என்றான் விக்ரம். டெய்லி நூடுல்ஸ் பார்ட்டி அர்ச்சனா.

 

என்னடா விக்ரம் உனக்கு வாய் ஓவரா போயிடுச்சு. நூடுல்ஸ்ஸ கிண்டல் பண்ண அதுவும் இல்லாம பண்ணிடுவேன் என்றால் அர்ச்சனா. தினமும் அவள் நூடுல்ஸ் கொண்டு வந்ததனால் அவளுக்கு சூட்டப்பட்ட செல்லப்பெயர்

 

அவனும் அங்கே பணிபுரியும் ஒருவன் தான். அர்ச்சனாவிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வம்பு இழுப்பவன். நொடிக்கு ஒருமுறை அர்ச்சனாவிடம் வாங்கி கட்டிக் கொள்வான் அவனும்.

 

இது உனக்கு தேவையா? வந்து கப்ல இருக்க நூடுல்ஸ்ல ரெண்டு வாய் போட்டமானு போய்க்கிட்டே இருக்கணும். அத விட்டுட்டு வாய் ஓவரா போச்சு அந்த பின்ச் நூடுல்ஸையும் நாங்களே சாப்பிட்டு விடுவோம்டா – மையூரி.

 

அவளே போனா போதும்னு ரெண்டு ஸ்பூன் தருவா. அதிலேயே நீ கண்ணு வைக்கிறியேம்மா இதெல்லாம் நியாயமா உனக்கு – விக்ரம்

 

சரி சரி இந்த சாங் முடிஞ்சு போச்சு நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடுறேன் வெயிட் பண்ணுங்க எல்லாம்.

 

ஹாய், ஹலோ ,வணக்கம்.. நீங்க கேட்டுக் கொண்டிருக்கிறது பிரியா எஃப்.எம் பேசிக் கொண்டுள்ளது ஆர்

ஜே அர்ச்சனா. இன்னைக்கான டாபிக் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஒரு காலர் லைன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க நம்ம நேரடியா போயிடலாம்.

 

வணக்கம் சார்.

 

வணக்கம் மா.

 

நீங்க எந்த மாதிரியான வெரைட்டி ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு இருக்கீங்க சார்.

 

நான் காளான்ல வெரைட்டியான ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு இருக்கம்மா. அச்சு அசல் அப்படியே

சிக்கன் ரைஸ் போலவே இருக்கும். இது எங்கனா தாரமங்கலம்ல உள்ள அம்மன் வீட்டு சமையல் அப்படிங்கிற ஒரு சின்ன இடம்தான்.

 

அவங்க பெரிய ஹோட்டல், தாபாலாம் வச்சிருக்கல. சிம்பிளா வீட்டு சமையல் யார் யாருக்கு பிடிக்குமோ அவங்களுக்காக அவங்க தயாரிக்கிறாங்க. அதுவும் வெஜிடேரியன்களுக்காகவும் பார்த்து பார்த்து செய்றாங்க. நான் வந்து சிவ பக்தர். அங்க சாப்பிட அந்த காளான் பிரைட் ரைஸ் சிக்கன் ரைஸ் போலவே இருக்குன்னு என்னோட ஃபிரண்ட் சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல ஒர்க் பண்றதுனால ஒன்னா தான் போவம். அதனால தான் நான் அவரையும் மென்ஷன் பண்ணேன்.

 

வாவ்! சூப்பர் சார் வீட்ல செய்யுற விதத்துல கூட நீங்க ரசித்து சாப்பிட்டு இருக்கீங்க. அண்ணா நீங்க சாப்பிடறத ரசித்து ரசித்து சாப்பிடுறீங்க. உங்கள போலவே எல்லாரும் சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டா எந்த பிரச்சினையும் கிடையாது. கண்டிப்பா நாங்களும் ஒரு நாள் அங்க போய் சாப்பிட்டு ரிவ்யூ குடுக்குறேன் சார். உங்களோட அழைப்புக்கு நன்றி என்று சொன்னவள் நம்ம ஊர்ல இருக்க இடம் நமக்கே தெரியலையா? என்று யோசித்தாள்.

 

பின்னர் பாடலிசைக்க நால்வருமாக உணவு அருந்திவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்கள்.

 

பேருந்து நிறுத்தத்தில் அவள் ஏறும் பேருந்தில் மட்டும் ஏனோ அத்தனை கூட்டங்கள். சோ அப்பா இன்னைக்கும் நின்னுட்டு தான் போகணுமா?..

 

ஹலோ மேடம்,” கொஞ்சம் உள்ள தள்ளி நில்லுங்களேன் இங்க ஆம்பளைங்க தொங்கிட்டு இருக்கமே தெரியல”.

 

எவன் அவன் என்னும் விதத்தில் திரும்பி பார்த்தால் அர்ச்சனா.

 

அவன் பெயர் தான் விஸ்வாமித்திரன். பெயருக்கு ஏற்றார் போலவே பொறுப்புகள் அவனுக்கு ஏராளம். எந்த செயல் எடுத்தாலும் பொறுப்பாக பொறுமையாக செய்யும் குணம் கொண்டவன் அவன். ஆளுமை திறன் அவன் புருவ உயர்விலே தெரியும். கொஞ்சம் உள்ள தள்ளி நில்லுங்கன்னு சொன்னேன் என்று அவன் சொல்லவும் அவளை அறியாமலே அவள் நகர்ந்து நின்றாள்.

 

என்னடி ஆச்சு பையன பார்த்ததும் பயந்து நடுங்குறியா? – ஷாலினி

 

இல்ல இல்லடி அவனோட புருவம் உயர்வு பாரு கத்தி மாதிரி சார்ப்பா இருக்கு என்று அவனைப் பற்றி குசலம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

இருக்கும்டி இருக்கும் நாமளே தொங்காத நிலையில் நின்னுட்டு இருக்கம். நம்மள உள்ள போ உள்ள போனு உசுர வாங்குறான். உனக்கு அவன் புருவம் பெருசா இருக்ககிறது தான் இப்ப பெரிய விஷயமா என்றாள் மையூரி.

 

ஏ அவன் வாய்ஸ் தான் ரொம்ப கரடு முரடா இருக்கே தவிர அவன் புருவமும் சரி முகமும் சரி என்ன பேச விடவே இல்லடி.

 

போதும் போதும் ரொம்ப நேரம் அவன உத்து பார்த்துட்டு இருந்தீனா வலியுதுன்னு அதுக்கும் சண்டைக்கு வருவான் கொஞ்சம் முன்னாடி மட்டும் ஸ்டெப் ஏறி நில்லு – ஷாலினி

 

டெய்லி ஏதாவது ஒரு பையன் இவளுக்கு மாட்டிக்கிறான். அவன் கண்ண பாரு அவன் மூக்க பாருனு வேற நமக்கு கமென்ட்ரி. இப்படி பார்த்து கண்டெக்டர கரெக்ட் பண்ணா கூட நமக்கும் யூஸ் ஆகும்.

 

இது வாடிக்கையானது தான். மூவரும் சேலத்தில் உள்ள பிரியா என்ற எஃப் எம் எல் வொர்க் செய்கிறார்கள். அர்ச்சனாவும் மையூரியும் தியாகராஜன் என்ற கல்லூரியில் படித்தவர்கள். ஷாலினி எஃப் எம்மில் பழக்கமானவள். இருந்தும் மூவரும் ஒரே வயதை ஒத்தவர்கள் என்பதனால் பேச்சில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதும் அடித்து பேசிக் கொள்வதுமாக இருப்பார்கள். இதில் அர்ச்சனா பேச்சில் மட்டும் இல்லை செயல்களிலும் துடுக்கான பெண். இப்போது கூட பார்த்தீர்கள் அல்லவா சைட் அடிப்பதில் கூட அதீத புத்திசாலி அவள்.

 

ஏய் நல்லா இருந்தால் எவனா இருந்தாலும் பாராட்டணும் அவ்வளவுதான் என்னோட பாலிசி.

 

சரிடி ஆத்தா நீ யார வேணா எப்ப வேணா பாரு பாராட்டு . எங்களையும் கொஞ்சம் பாரு என்றால் மையூரி.

 

பிறகு சேலத்தில் ஏறியவர்களுக்கு கே ஆர் தோப்பூர் என்ற ஏரியாவினை தாண்டிய பிறகு தான் சீட் கிடைத்தது.

 

அப்பாடா என்று மூவர் அமரும் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள இவர்கள் பின்னே தொங்கிக் கொண்டிருந்தவர்கள் நிற்க மட்டுமே முடியும் அளவிற்கு தான் அந்த பேருந்தில் இடம் இருந்தது.

 

அர்ச்சனாவிடம் வாயாடியவன் இந்த பேக்கை கொஞ்சம் வச்சுக்குறீகளா?.. ரொம்ப வெயிட்டா இருக்கு என்றான்.

 

அப்ஃகோஸ். இதுல என்ன இருக்கு கொண்டு வாங்க என்றால் அர்ச்சனா சிரித்த வண்ணம்.

 

அவனும் பத்து கிலோ பேக் முழுவதும் நிரப்பி விட்டு அவளை தள்ளி விடும் அளவிற்கு மாத்திரைகளை வைத்திருந்தான்.

 

எப்பா நீ என்ன பார்மசிக்காரனா?

 

நோ நோ நான் மாத்திரைகளை சேல்ஸ் பண்றேன். இப்ப ஒரு பார்மசி இதை ஆர்டர் பண்ணி இருக்காங்க. சோ அத நான் கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்.

 

ஓ அப்படியா. ஆனா இவ்ளோ வெயிட்டா இருக்கறத நீ எப்படி ஒரே ஆளா தனியா தூக்கிட்டு போயிடுவ.

 

இல்ல இல்ல நான் தனியாலாம் தூக்க மாட்டேன். எனக்குனு அசிஸ்டன்ட் ஒருத்தன் இருக்கான். இந்த பேக் தூக்குறது, எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இந்த மாதிரி சின்ன சின்ன வேலை எல்லாம் அந்த பொடி பையனை வச்சு பண்ணிக்குவேன்.

 

அப்படியா நீ நடத்து நீ நடத்து என்றால் அர்ச்சனா.

 

ஏண்டி இவனே பார்க்க பொடி பையன் மாதிரி தான் இருக்கான். இவன் ஒருத்தனை பொடி பையன்னு சொல்றான் என்றால் ஷாலினி.

 

இவள் கூட பரவாயில்லை இவளைத் தாண்டி மையூரி ஒன்று சொல்லவும் அவர்களுக்குள் சிரிப்பலைகள் மூண்டது. பார்மசிக்கு கூட அசிஸ்டன்ட் இருக்காங்கடி ஆனா நமக்கு அடிச்சு போட்டா கூட ஆள் இல்லையே என்றாள்.

 

தாரமங்கலம் என்ற இடத்தினை அடைந்ததும் இன்னைக்கு பேசியவர் இந்த இடத்தில் தானே அந்த வீட்டு சமையல் ஏரியா இருக்குன்னு சொன்னாரு. ஒரு நாள் நாம எல்லாம் போய் சாப்பிட்டு வரலாம் டி என்றால் அர்ச்சனா.

 

அது ஒரு நாள் சாப்பிட்டுக்கலாம் இன்னைக்கு வாங்கி தரவேண்டிய காளான மறந்து விடாம வாங்கித்தா போன வாரம் ஏன் டர்ன் முடிஞ்சிருச்சு.

 

இது வாராவாரம் அவர்களுக்குள் ஒருவர் மூவருக்கும் காளான் வாங்கித் தரும் வழக்கம்.

 

பேசாம நாம ஏன் இந்த பிரைட் ரைஸ் சாப்பிட்டு போயிடக் கூடாது.

 

நல்ல ஐடியா தாண்டி, அப்ப இறங்கு என்றால் மையூரி.

 

எப்பா பெரியவரே இந்தா உன் பேக்கை நீயே வாங்கிக்கோ நாங்க இறங்கப் போறோம் என்றால் அர்ச்சனா.

 

பேருந்தின் மேற்புறத்தில் உள்ள கம்பியை பிடித்திருந்த அவனுக்கோ திடுக்கென்றானது. என்ன சொன்ன என்று அவனது உறுத்த விழிகளால் அவளை கேள்வி கேட்டான்.

 

அவளோ பயந்து போய் விட்டால் அவனது பார்வையால்.

 

அப்படி என்ன தவறாக கேட்டு விட்டோம் என்று மூவரும் கோரசாக கேள்வி கேட்டார்கள்.

 

என்ன பார்த்தா பெரியவர் மாதிரியா இருக்கு உங்களுக்கு. ஐ அம் ஜஸ்ட் டுவென்டி செவன் என்றவன் முதல்ல எழுந்திரிங்க. நின்னு நின்னு கால் எல்லாம் வலிக்குது. இவ்வளவு நேரம் ஒரு மனுஷன் நிக்கிறானே கொஞ்சம் இடம் விடலாம்னு யோசிச்சீங்களா. அத விட்டுட்டு பெரியவராம் பெரியவர் என்று முணுமுணுத்தான்.

 

அத்தனை வெய்டையும் இவ்வளவு நேரம் சுமந்து வந்தவள் நான். ஆனால் என்னிடமே கோபப்பட்டு விட்டான் இந்த முட்ட கண்ணன் என்று திட்டியபடி அந்த பேருந்தில் இருந்து இறங்க தயாரானால் அர்ச்சனா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!