அரை மணி நேரத்திற்கும் மேலாக தேடி கண்டுபிடித்தார்கள் அந்த வீட்டு விருந்து சமையல் இடத்தை. வேகமாகச் சென்று மூன்று காளான் ரைஸ் ஆர்டர் செய்தவர்கள் திரும்பி கை கழுவி விட்டு வருவதற்குள் தயாராகி இருந்தது.
கமகமவென்று வந்த வாசனையில் தங்களது மூக்கினை கொண்டு முகந்தார்கள். அப்படியே அதை எடுத்து வாயில் வைத்த போது அந்த அழைப்பர் சொன்னது போலவே சிக்கன் ரைஸ் போலவே இருந்தது அவை.
சொன்ன மாதிரி பக்கவா இருக்குடி – மையூரி
உண்மைய சொன்னா அதுக்கு மேல டேஸ்டா கூட இருக்கு – ஷாலினி
வாய் திறந்து பேசும் அளவிற்கு அவளுக்கு நேரமில்லை. முழுவதுமாக உண்டு விட்டுதான் பேசுவேன் என்று மும்முரத்தில் இருந்தால் அவள். உண்மையில் அவர் சொல்லும்போது கூட நான் நம்பவில்லை.
இப்ப சாப்பிட்டப்ப தான் தெரியுது மறுபடியும் என்னைக்கு சாப்பிட வரலாம்னு தோன்ற வைத்து விட்டது இந்த ருசி என்றாள் அர்ச்சனா.
சரிடி மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் எல்லாரும் தயாராகுங்கள் என்றதும் கை கழுவி விட்டு கிளம்பினாள்.
பின்பு சொந்த ஊருக்கு செல்வதற்கான பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் மூவரும் காத்திருந்தார்கள்.
ஜலகண்டபுரம் என்ற ஊரில் தான் மூவரும் இருந்தார்கள். ஆனால் மயூரி அதற்கு முன்பு உள்ள காட்டம்பட்டி என்ற ஸ்டாபிலும், ஷாலினி செலவடை என்ற ஸ்டாப்பிலும் இறங்கிக்கொள்வார்கள். இவர்கள் மூவருக்கும் கிட்டத்தட்ட ஓர் இரண்டு கிலோமீட்டர் தொலைவுகள் மட்டும் தான்.
ஜலகண்டபுரம் என்றால் ஜலம் கண்ட புறம் என்று அர்த்தம். நாளடைவில் இப்ப இப்பெயர் பெற்றது..
நல்ல வேலையாக மையூரியும் ஷாலினியும் மழை பொழிய ஆரம்பிப்பதற்குள் பேருந்தில் இருந்து இறங்கி விட்டார்கள் அவர்களது ஸ்டாப்பில்.
ஆனால் அர்ச்சனால தான் மழையில் மாட்டிக் கொண்டால் ஜலகண்டபுர பேருந்து நிறுத்தத்தில். அதே இடத்தில் மழை வந்து விட்டதனால் ஒதுக்கத்திற்காக வந்து நின்றான் முன்பு பார்த்திருந்தால் அந்த முட்ட கண்ணன்.
ஏ பொண்ணு நீ இன்னும் வீட்டுக்கு போய் சேரலையா?
இல்ல இல்ல.
ஆமா இந்நேரத்துக்கு நீ எங்க போயிட்டு வர?
நான் ஒர்க் போயிட்டு வரேன்.
அப்படி என்ன ஒர்க் போறீங்க?
நான் பிரியா எப்எம் ல ஆர்.ஜேவா இருக்கேன்.
பாரப்பா. என்கிட்டயே இவ்வளவு வாய் நீ துடுக்க பேசும் போதே நினைச்சேன் ஏதாவது வாய் பேசுற வேலையா தான் இருக்கும்னு.
ஏன் நீ மட்டும் என்ன கொறச்சலாவா பேசுறீங்க. அது மிரட்டுற அளவு ரவுடி பையன் மாதிரி.
அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இந்த மருந்தெல்லாம் விக்கணும்னா அன்பா பாசமா பேசினாலாம் யாரும் வாங்க மாட்டாங்க. கொஞ்சம் கெத்தா பில்டப்பா பேசுனாதான் என்னால பிசினஸ் பண்ண முடியும்.
ஓ அப்படியா…
ஆமா நீ எனக்கு ஒரு உதவி பண்றியா?
தன்மையாக கேட்டவனிடம் என்ன என்பது போல புருவம் உயர்த்தினாள்.
என்னோட பிசினஸ்க்கு ஒரு விளம்பரம் தேவைப்படுது. அது நீ நாளைக்கு பண்ற ஷோ மூலமா எனக்காக பேச முடியுமா?..
இதோ ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவள் ரசித்தவன் ஆயிற்றே. கேட்ட பின்பும் மாட்டேன் என்று சொல்வாளா?…
சரி சரி பண்ணி தரேன் ஒரு மணி நேரம் பேசணும்னா ஐநூறு கொடு.
ஐயோடா இது என்ன பகல் கொள்ளையா இருக்கு
இப்ப ஒன்னும் பகல் இல்ல இது ராத்திரி கொல்லைனு கூட வச்சுக்கோ முதல்ல ஐநூறு கொடு.
கண்டிப்பா நாளைக்கு நான் என்னோட சோல நான் உன்னோட பிசினஸ் பத்தி சொல்றேன் நம்பர் நோட் பண்ணிக்கோ டீடைல்ஸ் நான் உன்கிட்ட கேட்டுக்குறேன் என்று அவளது மொபைல் நம்பரை பகிர்ந்தாள்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு கண்டவனிடம் ஏன் தனது நம்பரை பகிரும் அளவிற்கு தோழமை ஆகினாள். அதுதான் அவளது இயல்பான குணம்.
ஜலகண்டபுரத்தில் உள்ள அண்ணாநகர் என்ற ஏரியாவில் தான் அவளது இருப்பிடம் உள்ளது.
ஜலம் கண்டபுரம் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஜலத்திற்காக அங்கு பல போராட்டங்கள் நடக்கும்.
முன்பு போல அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பியெல்லாம் காணப்படுவதில்லை. வற்றாத நீர் இருக்கும் அளவிற்கு மட்டுமே அங்கு நீர்கள் இருக்கும் மற்றபடி வேண்டும் போதெல்லாம் நீர் கிடைப்பதில்லை.
அண்ணா நகர் என்ற ஏரியாவில் பேருந்து நிறுத்தம் ஏற்பட அங்கு இறங்கியவள் தனது ஹேன்ட் பேகை மாற்றிக் கொண்டு விசிலடித்த வண்ணம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.
ஆம்பள பசங்க மாதிரி திமிரா நடந்தா எவ்வளவு சந்தோசமா இருக்குது.
என்ன பண்றது இன்னும் நாலு எட்டுல அதெல்லாம் மறந்துட்டு வாசலோட குழி தோண்டி மறைச்சிட்டு போகணுமே என்று குழம்பிக் கொண்டு அவளது வீட்டு முன் வாசலில் நுழைந்தாள்.
ஆள் உயர கேட்டின் ஓபன் கிளட்சை ஓபன் செய்தவள், அங்கிருந்த காலணி விடும் பகுதியில் தனது செருப்பை விட்டு விட்டு உள்ளே நுழைய ஆரம்பித்தாள்.
என்னல பேசுற. காதல் கத்திரிக்காய் நீங்க யாராவது வந்திங்க கண்ணம் ரெண்டும் பழுத்திடும். இந்த பொண்ண வெரஸா யாருக்காவது பேசி முடிச்சுடுங்கடா இல்லனா உங்களுக்கு தான் அவமானம். பொண்ணுங்கனா பெத்த அப்ப என்ன சொல்றானோ அதைக்கேட்டு நடந்துக்கணும். இப்படி ஊதாரி தனமா கண்டதும் கலுசங்களை காதல் பண்றேன்னு பண்ணி எங்க மானத்தை வாங்க கூடாது.
இதோ வரா பாரு அர்ச்சனா. வேலை செய்ற இடத்துல கூட ஒரு ஆம்பள இல்லாத மாதிரி பார்த்து அனுப்பி இருக்கேன். என்ன பாத்து பொண்ணு வளர்த்துறது எப்படின்னு கத்துக்கோங்க டா என்று சொல்லிவிட்டு தனது மீசையை திருகிக்கொண்டார் அந்த ஊரில் பஞ்சாயத்தில் முக்கியமானவர்.
கோபாலகிருஷ்ணன் ஐம்பதுகளை தாண்டியவன். பெண் பிள்ளைகள் என்றால் ஆணவர்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் உடைய ஆண்களில் இவரும் ஒருவர்.
சரிதாம்பா சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தவள் பேக்கினை தொப்பென்று எரிந்து விட்டு பேருந்தில் வந்த களைப்பில், அம்மா எனக்கு ஒரு டீ போட்டு தரீங்களா என்று தாயிடம் கெஞ்சினாள்.
உனக்கான வேலையை நீயே செய்யணும்னு நான் எத்தனை டைம் சொல்லி இருக்கேன் அர்ச்சனா. நீயே போட்டு குடி. தந்தை மட்டும் அல்ல தாயாரும் அதே எண்ணம் உடையவர்.
தங்கச்சி இடமாவது கேட்கலாம் என்றால் எனக்கும் சேர்த்து போட்டு குடுடி என்று அவள் கெஞ்சினாள்.
பின்னர் என்ன அர்ச்சனாவே போட்டு கொடுத்துவிட்டு மிடறு மிடறாக அந்த டீயினை தனக்குள் இறக்கினாள்.
பின்னர் பேருந்தில் ஏற்பட்ட புழுக்கத்தின் காரணத்தோடு மட்டுமல்லாமல் மழையில் நனைந்த காரணத்தினாலும் அவள் குளித்துவிட்டு ஊதா வண்ண பட்டியாலாவும் அதற்கு சிறிதும் பொருந்தாத அளவு பிளாக் கலர் டி-ஷர்டிலும் குளியலறையில் இருந்து வெளிவந்தாள்.
அந்த சமயம் தான் பஞ்சாயத்து முடிந்து அனைவரும் கிளம்பினார்கள். பொம்பள புள்ளைங்க வளத்தனா கோபாலகிருஷ்ணன் அய்யா மாதிரி தான் வளர்க்கணும். கண்ணு திரும்பி பார்த்தாலே அவர் சொல்றத புரிஞ்சிக்கிற பொண்ணுங்க அவங்க. ஒன்னுக்கு ரெண்டுமே பிள்ளைகளா போன போதும் எவ்வளவு அற்புதமா வளர்த்துறாரு பாருங்க என்று சொல்லிக் காட்டிக் கொண்டு சென்றான் குமாரன் ஒருவன்.
டேய் நீங்க வேற ஒன்னும் புரியாம உளறிட்டு திரிகிறார்கள் என்று நினைத்தபடியே தந்தையைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றாள்.
அர்ச்சனா… என கோபாலகிருஷ்ணன் சத்தமிடமும் அமைதியாக அவரிடம் வந்து நின்றாள்.
சொல்லுங்கப்பா என்று மென்மையான குரலில் ஆர் ஜே அர்ச்சனா என்பதை மறந்துவிடும் விதமாக அவள் பேசினாள்.
ஊதாக்கும் பிளாக்கும் சுத்தமா செட் ஆகலமா. வேற கலர் டி-ஷர்ட் போடு என்று சொன்னதோடு வீட்டுக்கு வந்தா நைட்டி போட்டு பழகு. இந்த கைக்குட்டையும் கால் டிரவ்சரும் போட்டுட்டு இருந்தால் வீட்டுக்கு வரவங்க என்ன பத்தி என்ன பேசுவாங்க.
சரிங்கப்பா நான் போய் நைட்டி போட்டுக்கிறேன்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் ரகம் அல்ல அர்ச்சனா. அவரது பேச்சுக்கு மறுப்பேச்சோ அல்லது அவர் சொன்னதை கேட்காமல் போய்விட்டாலோ அந்த வீட்டில் அன்று ரணம் ஏற்படும். எதற்கு இந்த விளைவு தேவையே அல்ல என்று அவள் உடையை மாற்றிக் கொண்டாள்.
அந்த நேரம் பார்த்து விசஷ்வாமித்திரன் அழைப்பு வரவும், அதை எடுக்க முடியாமல் தவித்தாள் அர்ச்சனா.
கோபால கிருஷ்ணனும் அவளது தாயான மதுமிதாவும் என்னடி ஃபோன் அடிச்சுட்டு இருக்கு எடுக்க மாட்டேங்கற. முதல்ல கொண்டா யாருன்னு பார்க்கலாம் என்றார்கள்.
அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. இல்லமா ஃபோன் அடிச்சது என் காதுல கேக்கல. கண் அசந்து போயிட்டேன். நானே பேசிக்கிறேன் என சொன்னவள் அவளது ஃபோனை எடுத்துக் கொண்டு அவளது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
என்ன மதுமிதா பொண்ணோட சுபாவத்துல மாறுபாடு ஏற்படுகிறது.
அப்படிலாம் இல்லைங்க என்ற மதுமிதாவை முறைத்தே அடக்கி விட்டார் கோபாலகிருஷ்ணன்.
வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் ஃபோன் பண்ண கூடாதுன்னு நான் சொன்னனா இல்லையா விஷ்வாமித்திரன். அதான் உன் பார்மசி பத்தி நாளைக்கு நான் பேசுறேன்னு சொல்லிட்டல்ல இப்ப எதுக்கு தேவ இல்லாம நொய் நொய்ன்னு கால் பண்ணிட்டு இருக்க.
இல்லைங்க பஸ் வந்துருச்சுன்னு குடையை என்கிட்டையே கொடுத்துட்டு போயிட்டீங்க. இது நான் உங்ககிட்ட திரும்ப எப்படி கொடுப்பது என்று கேட்பதற்காக தான் கால் பண்ணேன்.
இப்ப இது ரொம்ப அவசியம் முதலில் ஃபோன வை. நாளைக்கு பேசிக்கலாம் என்று அழைப்பை துண்டித்தாள்.
மறுகணமே மையூரிக்கு அழைத்து அங்கு என்னடி மழையா என்று விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அவள் மொபைலை வைத்து விட்டு சென்ற ஐந்தே நிமிடத்தில் அவளது சகோதரி ரிதன்யா அந்த மொபைலை எடுத்துப் பார்த்து அழைத்தது யார் என்று அறிந்து கொண்டு தந்தையிடமும் தாயிடமும் சென்று கூறினாள்.
நான் தான் சொன்னேன்லங்க அவ பிரெண்டுல மையூரி இல்லைன்னா ஷாலினி ரெண்டு பேரு தான் ஃபோன் பண்ணுவாங்க அவளுக்கு.
என்ன இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருக்கணும் டி. நாம பெத்து வச்சிருக்கிறது பொண்ணு என்று புருவத்தை உயர்த்தி பேசிய கோபாலகிருஷ்ணனுக்கு பெண் பிள்ளைகள் என்றால் சந்தேகம் தான்.
ஓடிப்போய் தொலைஞ்சிடுச்சுன்னா ஊர்ல எனக்கு இருக்கிற நல்ல பேரு கெட்டுப் போயிடும் என்று புலம்பினார்.
இந்த தாய்க்கிழவியையும் தகப்பனையும் மாற்றவே முடியாது என்ற முணுமுணுத்த படி தனது அறையில் படுத்து உறங்கி விட்டாள்.