பரபரப்பாக இருந்த அந்த ஹோட்டலில் முன்பாக நின்ற பெண்கள் இவன் வருவானா இல்ல ஏமாற்றி விட்டானாடி என விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் ஒரு பெரிய பெட்டியுடன் வந்து சேர்ந்தான் அர்ச்சனாவினால் முட்டை கண்ணன் என்று அழைக்கும் விஷ்வாமித்திரன்.
வரும்போது என்ன பாகுபலி மாதிரி பெட்டி தூக்கிட்டு வர – ஷாலினி
வேல இருக்கு அப்புறமா வந்து பேசுகிறேன் என்று எங்களை கழட்டி விட்டுட்டு போயிட மாட்டியே – அர்ச்சனா
நாங்க வேற இன்னிக்கு ஒரு நல்ல புடின்ற மைண்ட் செட்டில்ல வந்துட்டோம் மேன் ஏமாத்திடாதே – மையூரி.
மையூரியினோட தொற்றிக் கொண்டான் தேவனும்.
என்னப்பா பட்ஜெட் எனக்கு பத்தாது போல என்று தனது நிலையை உரைத்தவனை,
பின்ன ஆர் ஜே அர்ச்சனா கிட்ட உதவி கேட்டால் சும்மாவா பண்ணி கொடுக்க முடியும். இதுவரைக்கும் அவ யாருக்குமே உதவி பண்ணதில்லை தெரியுமா உனக்கு என்று மையூரி சொல்லவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அப்படின்னா நீ எங்களுக்கு பல்கா தான் பண்ணி ஆகனும் என்று அவனை தோளோடு அணைத்து கொண்டு உள்ளே நுழைந்தான் தேவன்.
அன்றைய தினம் கூடுதல் பரபரப்பாக இருந்தது அந்த ஹோட்டல். இவர்களின் இரவு சிற்றுண்டி எப்போதும் இங்கு தான்.
“இப்பவே கொண்டு வந்துடுறோம் சார”,
கூடுதல் கவனிப்போடு ஒரு டேபிளில் உள்ள ஒரு ஆணவன் கவனிக்கப்பட்டு கொண்டிருந்தான்.
யாராக இருக்கும் என்று மையூரி எட்டி பார்க்க நினைத்த போது, உக்காருடி யாரா இருந்தால் என்ன நமக்கு. நம்ம வந்தமா சாப்பிட்டமானு இருக்கனும். இல்லைனா இதான் சாக்குனு முட்டைக்கண்ணன் ஓடுனாலும் ஓடிருவான் என்றாள் அர்ச்சனா.
ஆமாடி நடந்தாலும் நடக்கும் என்று அவளும் அமர்ந்து கொள்ள, அந்த ஆணின் முகத்தை பார்க்காமலே தவிர்த்து விட்டார்கள் அந்த பெண்கள்.
ஒரு வேலை அவனை பார்த்திருந்தால் பின்னால் அனைத்தும் சுமூகமாக முடிந்து இருக்குமோ என்னவோ!
எப்போதும் போலவாமா இல்ல ஸ்பெஷாவா என்று ஒருவன் ஆர்டர் எடுக்க வர,
அதே அதே ராமையா. பட் அப்போலாம் வெஜ். இன்னைக்கு நான் வெஜ்.கீரை காய்கறிலாம் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு. சோ எல்லா நான்வெஜ்லையும் ஒன் ப்ளேட் என்றாள் அர்ச்சனா.
இது அடுத்த டேபிளில் அமரந்திருந்தவனுக்கு நன்றாக கேட்டது.
நம்மளோட காசுனா சிக்கனமா இருக்கலாம். இவன் தான வாங்கி தரான் இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டிடலாம் என்க இவளின் முதுகுபுறம் இருந்தவன் தனது கைகளை மடக்கி எழ போக, அவனது முறுக்கிய கையினை தன் கையால் அழுத்தி நிறுத்தினாள் தியா.
அது அவங்க விஷயம். நீ சாப்பிடு நம்ம கிளம்பலாம் என்றவனுக்கு அவள் மீது சந்திக்காமலே கோபம் மூண்டது.
ஏங்க பாத்து பண்ணுங்கன்னு சொன்னதுக்கு என் சம்பளத்துக்கு உலை வச்சிடுவிங்க போல என்ற விஸ்வாமித்திரனிடம் இதுலாம் ஆர்மபம் தான். இன்னும் இருக்கு. நீ பொறுத்து தான் போகனும் மேன் என்றாள் அர்ச்சனா. நீ கேட்ட அப்போ நான் உனக்கு மறுக்காமல் உதவி பண்ணனா இல்லையா. சோ நீ இதெல்லாம் வாங்கி கொடுத்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்.
விஸ்வாமித்திரனும் வேறு வலியற்று போனான்.
கோழி முதல் நண்டு, இறால் வரை வந்து குவிந்த டேபிளினை வாசம் பிடித்தாள் அர்ச்சனா.
என்ன சுவை! இப்படி சமைக்குற ஆளுக்கு மோதிரமே வாங்கி போடனும் என சொன்னபடி உண்டாள்.
ஒரு ஆண்மகனின் சந்தோஷத்தை பறித்தா இப்படி சந்தோஷப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த டேபுளுக்கு ஆகுற மொத்த செலவையும் இந்த பத்தாயிரத்துல எடுத்துக்கோங்க. மீதியை விஸ்வாமித்திரன்ற பேர் கொண்டவன் கிட்ட கொடுத்துடுங்க என்று கொடுத்தவன்,
பெண்கள் மூவரையும் தன் கண்களில் நிரப்பி கொண்டு நகர்ந்தான்.
ஆனால் அர்ச்சனாவின் முகம் மட்டும் தெளிவாக தெரியாமல் போக வெளியே வந்து தன் காரினுள் ஏறியவன் ஸ்கிலட்சில் அடித்தான்.
யாரோ ஒருத்தனுக்காக நீ தேவையே இல்லாமல் கோபப்படுற மாதிரி இருக்கு. அது அவன் பிரச்சினை. நம்ம பிரச்சனை இப்ப தலைக்கு மேல் இருக்கு. அவனுக்கு நீ உதவ வேண்டிய அவசியம் என்ன இருக்கு சொல்லு.
அவனும் நான் உன்கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி ஒரு பணப்பேய்கிட்ட மாட்டிக்கிட்டான் என்றவனை முறைத்தாள் பாடகி சைலு. உலகம் அறிஞ்ச பணக்காரனாக இருந்தும் நீ கேட்குறத என்னால வாங்கி கொடுக்க முடியாம நானே திணறுறன். அவன் பாவம்டி என்றான் கதையின் நாயகனும் பாடகனுமான சிவசங்கரன். சைலுவின் காதல் கணவன்.
என்ன சொன்ன
உண்மையாகவும் அவ அப்படி தான் இருக்கா. நீ விட்டு இருந்த அவள நான் ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பன் என்றான்..
தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காமல் இருப்பது உனக்கு நல்லது சங்கரா”.
“அத நீ எனக்கு சொல்ற”
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட போதிலும் மன ஒவ்வாமையினால் இன்னும் சில நாட்களில் பிரிவிற்கு காத்திருக்கும் காதலர்கள். இதில் தேவையற்ற பிரச்சனையில் நுழைய வேண்டாம் என்பது சைலுவின் எண்ணம்.
ஆனால் அர்ச்சனாவும் இவளை போன்று இருக்க சிவசங்கரனுக்கு கோபம் வந்துவிட்டது.
ஏய் சும்மா சொன்னம் நாங்களும் பே பண்றம் விஷ்வா நீ பயந்துறாத என்று அவனை பதட்டத்தல் இருந்து மீட்டாள் ஷாலினி. சும்மா உன் கூட விளையாண்டு பாக்கலாம்னு அர்ச்சனாதான் சொன்னா அதான் அப்படி என்கவும் தான் அவன் முகத்தில் சிரிப்பு.
“என்ன எல்லாரும் ரொம்ப பயமுறித்திட்டீங்க”
அவனுடைய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவனுக்கு இந்த செலவு தேவையற்றது.
இஞ்சி திண்ண மாதிரி மாறுன முகத்தை பார்த்தே நாங்க கண்டு பிடிச்சிட்டோம் என சொல்லி விட்டு சிரித்தாள் அர்ச்சனா.
என்னோட சூழல் அப்படி என்றவன் பல்லை காட்டினான்.
தேவன் தான் எது நம்ம காசு கொடுக்கனுமா என்று திகைத்தான்.
அனைவரும் ஒரு மணி நேரத்தில் உண்டுவிட்டு பில் பே பண்ண செல்லும் போது உங்க பில்ல ஆல்ரெடி பே பண்ணிட்டாருமா.
யாரு ராசப்பா பாடகர் சிவசங்கரன் என்றான்.
வீட்டில் தொலைக்காட்சியோ அல்லது பெரிய மொபைலோ இல்லாமல் போனதால் அர்ச்சனா அவனை அறியவில்லை.
ஓஓஓஓ அவர் நம்பர் இருந்தால் கொடுங்க நாங்க காசு கொடுக்கனும்ல என்றவள் யார் அவன் என்பதை சிந்திக்காமல் இல்லை.
மற்றவர்க்கு அவனை பற்றி தெரிந்து இருந்தாலும் யார் மூலமாகவுய் அறிய அவளுக்கு எண்ணமில்லை.
பின் அழைத்து பேசும்போது அவனை பற்றி பேசி வீட்டில் மாட்டி கொண்டாள் . அதனாலே அவனை பற்றி விசாரிப்பதை தவிர்த்து விட்டாள் அவள்.
போதும் அவன பத்தி பேசுறது விட்டு வீட்டுக்கு புறப்படலாம் என்றவள் வீடு வந்து சேர்ந்ததும் அவனை பற்றியெல்லாம் சிந்திக்க நேரமற்று போனது.
வந்தததும் வராததுமாக எப்போதும் இல்லாமல் இன்று கோபால கிருஷ்ணன் வா தங்கம் என்று அவளை அணுசரனையோடு அழைத்தார்.
நீ வேலைக்கு போய் கழச்சி போய் இருப்ப இந்தா டீ என்ற சகிதம் வந்தாள் மதுமிதா.
ரிதன்யா தான் முக கலக்கத்துடன் இருந்தாள்.
அர்ச்சனா என்ன என்பது போல ஒருவரை ஒருவரை பார்த்து விட்டு தனது அறைக்கு டீ-யோடு சென்றாள்.
உடை மாற்றி விட்டு வந்து விடலாம் என்று சென்றவளுக்கு அங்கே கண்ணம்மா அமர்ந்திருந்தது அதிர்ச்சி தான்.
காலையிலேயே நான் உங்க சித்தி மதுமிதா கிட்ட பேச போனா கண்ணு. எங்க வீட்டு விவகாரத்தில் நீ தலையிடக்கூடாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டாங்க. அதனால நான் உங்ககிட்ட எதுவும் பேச முடியல.
இப்ப கூட எல்லாரும் உன்கிட்ட சந்தோசமா அனுசரணையா பேசி இருப்பாங்களே. அதெல்லாம் போலி கண்ணு. சந்திரிகாவும் அவங்க வீட்டுக்காரர் சுந்தரும் நம்ம வீட்டுக்கு வந்து உன்ன பேசி முடிச்சுட்டு போயிருக்காங்க கண்ணு.
எனது விருப்பம் இல்லாமலே இவை எல்லாம் நடந்துள்ளது என்று அதிர்ந்து நின்றவளுக்கு கை சுட்டு விட டீயினை தொப்பு என்று கீழே விட்டாள்.
அதனால்தான் மதுமிதா டீயோடு வந்து சேர்ந்தாரா என்று அர்த்தம் எழுந்தது அவளுக்கு.
தந்தையை அனுசரிப்போம் தாயின் அன்பும் இம்மாதிரியான சூழ்நிலையில் தான் கிடைக்க வேண்டுமா?
நீ நினைக்கிற மாதிரி உன் அம்மாவும் உன்னோட சித்தியும் ஒன்னு இல்ல கண்ணு. ஆயிருந்தா இருந்தாலும் அம்மா அம்மா தான். சித்தி சித்தி தான். அவங்களுக்கு இவ ஒரு துளி கூட வரமாட்டா.
வீட்டில நடக்கும் சின்ன சின்ன விஷயத்துல கூட என்னோட விருப்பத்தையும் கேட்ட அவங்க எங்க கண்ணு.
வீட்டு விஷயத்துல மூக்க நுழைக்காதன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசின மது எங்க கண்ணு.
வளர்ப்பு தாயாக இருந்தாலும் தன் மீது பாசம் இருக்கும் என்று இருந்தவள் எண்ணம் முழுவதும் இப்போது தவறு என உணர்ந்தாள்.
சித்தி தான் அப்படி என்றால் தந்தைக்கு என் மீது அன்பு இல்லையா
உன் அம்மாவ கொல்லனும்னு உங்க சித்தி சொன்ன அப்பவே உன் அப்பா அத தடுக்கல . நீயெல்லாம் யாரு கண்ணு அவங்களுக்கு.
நீதான் உன் வாழ்க்கையை முடிவு எடுக்கனும். மத்தவங்க இல்ல. புரிஞ்சு நடந்துக்க.
கண்ணம்மா சொல்வதும் சரி தான். இனிமேல் தாயாய் கருதிய சித்தியை நம்புவது தவறு என்றால் தன் தந்தையை நம்புவது கண் இருந்தாலும் குருடன் ஆன கதையாகும்.
கண்ணம்மா எதுக்கும் அப்பாகிட்ட ஒருவாட்டி பேசி பாக்கவா? – அர்ச்சனா
திரும்ப என்னால சொல்ல முடியாது கண்ணு. அது உன் விருப்பம் என்றவர் கிளம்ப நினைக்க, அவளை குழப்பத்துடன் பார்த்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அதே நேரம் கிருஷ்ணன் அழைக்க என்ன என்று பார்க்க சென்வளிடம் ராஜேஷ்க்கு உன்ன பேசி முடிச்சிட்டம். அடுத்த பதினைந்தாவது நாள் கண்ணாலம். நீ உன் வேலைய விட்டுறனும்னு உன் வருங்கால மாமியார் நினைக்குறாங்க. அதுக்கு ஆக வேண்டிய வேலைய பாரு.
கல்யாணம், வேலைய விடு என்று கட்டளையிடும் இனி தன் தந்தையிடம் பேசுவது சுவற்றில் முட்டிக்கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்தாள்.
பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள் இந்த பொறுக்கிய நான் கல்யாணம் பண்ணனுமா?
உன் வருங்கால புருசன மரியாதையா பேசு…
யாரு அந்த பொம்பள பொறுக்கி எனக்கு புருசனா?
அப்படி சொல்லாதனு நான் சொல்லியும் அப்படியே சொல்ற என்று தனது நாற்காலியில் இருந்து கிருஷ்ணர் எழுந்து வந்து அவளை அறைந்தார்.
அப்போதும் அவள் நிறுத்தாமல் அந்த பொம்பள பொறுக்கிய நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்படி பண்ண சொன்னால் நான் செத்து போயிடுவன் என்றவளை மீண்டும் அறைந்தாற் கோபாலகிருஷ்ணன்.
ஒரே காதல் ஒரு மணி நேரகாதல்(OKOK)
4) ஒரே காதல் ஒரு மணி நேரகாதல் (OKOK)
99
previous post