அதிக சனத்திரள் நிறைந்த மும்பை மாநகரின் பத்து மாடியில் உயர்ந்து நிற்கிறது மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன். மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு கன்ஸ்ட்ரக்ஷன், ஃபுட், ஹோட்டல், ஷாப்பிங் மால் என பல துறைகளில் தனது கால்தடத்தை அழுத்தமாகப் பதித்து நிற்கிறது.
காலையில் இயந்திரத்தனமாக தத்தமது வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர் மக்கள். அதே நேரத்தில் மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷனில் ஐந்தாவது தளத்தில் தனது வழமையான வேகமான நடையில், கண்களுக்கு ஸ்டைலாக கண்ணாடி அணிந்து ஒரு கையால் தன் தலைமுடியை கோதியபடி, உள்ளே வந்தாள் மலர்னிகா.
அவள் உள்ளே வந்ததும் பின் டிராப் சைலன்ட்டாக இருந்தது. எதுவும் பேசாமல் எழுந்து நின்றனர். அவர்களுக்கு தலையசைத்து விட்டு தனது கேபின்க்குள் சென்றாள். அவளது அறையில் அன்றைய தினம் மலர் (மலர்னிகா) சைன் பண்ண வேண்டிய ஃபைல்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள், அவளின் பி. ஏ நிஷா.
மலர் உள்ளே வந்ததும், அவளது இடத்திற்கு வந்தவள், “குட் மார்னிங் மேம்..” என்றாள். அவளுக்கும் தனது தலையசைப்பையே பதிலாக கொடுத்துவிட்டு, மேசையில் இருந்த ஃபைல்களைப் பார்த்தாள். பின்னர் நிஷாவை திரும்பி அழுத்தமாக பார்க்க, அவளது பார்வையை உணர்ந்த நிஷாவும் அன்றைய நாளுக்கான ஷெட்யூலை அவளிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
“மேம் டுடே மார்னிங் உங்களுக்கு எந்த விசிட்டும் இல்லை…. ஈவ்னிங் த்ரீ ஓ கிளாக் ஒரு கவர்மென்ட் டென்டர் இருக்கு… அதுக்கு போகணும்… அதுக்கு அப்புறம் ஃப்ரீ…” என்றாள். அவள் கூறி முடித்ததும், மலரை பார்க்க அவள் அனைத்தையும் கேட்டுவிட்டு மௌனமாக இருந்தாள்.
ஃபைல்களை செக் பண்ணிக் கொண்டு இருக்கும் போது, ஒரு ஃபைல்லைப் பார்த்து தனது கருவிழிகளை சுருக்கினாள். அதைப் பார்த்த நிஷாவிற்கு, “சரி இன்னைக்கு யாரோ மேம்கிட்ட செம்மையா வாங்கிக் கட்டிக்க போறாங்க….” என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, மலர் “கால் சுவாதி….” என்றாள்.
உடனே நிஷா போனை எடுத்து சுவாதியை உள்ளே வரச் சொன்னாள். அதைக் கேட்ட சுவாதி, “சரி இன்னைக்கு நான் செத்தேன்…. என்னலாம் கேட்க போகுதுனே தெரியலையே…..” என மனதிற்குள் மலருக்கு அர்ச்சனை செய்தபடி, “மே ஐ கம் இன் மேம்….?” என அனுமதி கேட்க, அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே சென்று தலைகுனிந்தவாறு நின்றாள்.
எங்கும் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள். சலசலவென்று ஓடிக் கொண்டிருக்கும் அருவிகள். உழைப்பை முதலீடாக கொண்டு உழைக்கும் உழைப்பாளிகள் என தேன்சோலையூர் ஊரே உற்சாகமாக இருந்தது.
அந்த ஊரின் நடுவில் கம்பீரமாக காட்சி தந்தது பல தலைமுறைகளை பார்த்த அன்பு இல்லம். பெருந்தேவனார் இந்த வீட்டின் ஆணிவேரே இவர்தான். இவரின் சொல்லுக்கு அன்பு இல்லம் மட்டுமல்ல இந்த ஊரே கட்டுப்படும். இவரது மனைவி விசாகம். இருவரும் மணமொத்த தம்பதியினர்.
பெருந்தேவனார், விசாகம் தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். முதல் இருவரும் ஆண்கள் கடைசி பெண் பிள்ளை. முதல் மகன் ராமச்சந்திரன். இவர் ஊரில் ரைஸ் மில், வைத்திருக்கிறார். பெற்றோர் நல்ல பெண்ணாக பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவள் குணவதி. பெயருக்கேற்ற மாதிரியே இருந்தார். ராமச்சந்திரன், குணவதிக்கு மகன் ஒன்று, மகள் ஒன்று.
மகன் சபாபதி. இவன் வீட்டில் ஒருமாதிரி நல்லவனாகவும் வெளியே ஒரு மாதிரியும் இருப்பான். படித்த பட்டதாரி இவன். சென்னையில் ஒரு ஐடி கம்பனியில் வேலை பார்க்கிறான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊருக்கு வந்து செல்வான். அடுத்தது மகள் காமாட்சி. இவள் பக்கத்து ஊரில் உள்ள காலேஜ்ஜில் தமிழ் ஸ்பெஷல் படித்துக் கொண்டு இருக்கிறாள். மிகவும் சாதுவானவள்.
ராமச்சந்திரனின் தம்பி தேவச்சந்திரன். தமையன் சொல்லலை தட்டாத தம்பி. தமையன் என்ன சொன்னாலும் அதை செய்து விட்டே மறு பேச்சு பேசுவார். இவருக்கு குணவதியின் தங்கையான நேசமதியை திருமணம் செய்து வைத்தனர். இவரும் குணவதியை போன்றே அனைவருடனும் அன்பாக இருப்பார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன். பெயர் காளையன். இவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, செய்யாத தவறுக்காக வாத்தியார் அடித்தார். அன்றுடன் பள்ளிக்கூடத்திற்கு ஒரே முழுக்கு போட்டு விட்டான்.
யார் சொல்லியும் கேட்கவில்லை. கல்வி அறிவை விட அனுபவ அறிவு அவனுக்கு அதிகம். சிலம்பாட்டம், குத்துச் சண்டை என அத்தனையும் அத்துப்படி. குடும்பத்தில் உள்ளவர்கள் மீது மிகவும் பாசமானவன். அதே நேரத்தில் மிகவும் கோபக்காரன். குடும்பத்திற்கு ஒன்று என்றால் துடித்து விடுவான். அவனது கோபத்தை இதுவரை வீட்டில் உள்ளோர் பார்த்தது இல்லை.
வீட்டிலுள்ளோர் என்ன சொன்னாலும் கேட்பான். செய்வான். அவன் இதுவரை அவர்கள் கேட்டு செய்யாதது படிக்காதது மட்டுமே. ரைஸ் மில், தோட்டம், வயல், சக்கரை மில் என அனைத்திலும் பெரியப்பாவிற்கும், அப்பாவிற்கும் உதவியாக இருப்பான்.
பெருந்தேவனார், விசாகத்தின் கடைசி பிள்ளை. வீட்டின் செல்லப் பிள்ளை துர்க்கா. இவரும் காலேஜ் போய் படித்தவர். இவருக்கும் நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவர் இனியரூபன். இருவரும் மணமொத்த தம்பதியினராய் வாழ்ந்தனர். இனியனுக்கு பிஸ்னஸ் செய்வதில் ஆர்வம் இருந்தது. அதனால் அனைவரிடமும் சொல்லி அனுமதி கேட்டு துர்க்காவையும் அழைத்துக் கொண்டு சென்னை சென்று விட்டார். சென்ற புதிதில் அடிக்கடி ஊருக்கு வந்து சென்றனர். பின் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டனர். காலப்போக்கில் இவர்களுக்கிடையிலான தொடர்பு விடுபட்டு போய் விட்டது.
இவர்களும் அவர்களை பற்றி யார் யாரிடமோ விசாரித்தனர். அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் தங்கை என்றால் ராமச்சந்திரனுக்கும் தேவச்சந்திரனுக்கும் உயிர். துர்க்காவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஊரில் உள்ளவர்களுக்கு அன்னதானமும், ஆடையும் தானமாக கொடுப்பார். அவர் சென்றதில் இருந்து இன்று வரை அது நடந்து கொண்டிருக்கிறது.
மும்பையில் ஒரு பெரிய வீட்டில் இருந்து ஒரு புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தார் துர்க்கா. தனது அண்ணன்கள், அண்ணிகள், அப்பா, அம்மா, அண்ணன்களின் பிள்ளைகள் என இவர்கள் சென்னை வருவதற்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. புகைப்படத்தில் அவரது கண்ணீர் துளி விழுந்தது. “அம்மா அப்பா உங்களை ஒரு தடவையாவது பார்க்கணும்னு மனசு தவிக்குது….” என்று வாய்விட்டு அழுதார்.
கண்களை துடைத்துக் கொண்டு, புகைப்படத்தை அலமாரியில் வைத்து விட்டு வெளியே வந்து, அந்த வீட்டில் வேலை செய்யும் செல்வியை அழைத்தார். “செல்வி மலர் எங்க? சாப்பிட்டாளா……?” என கேட்டார்.
அவரிடம் செல்வ, “அம்மா, சின்னம்மா சாப்பிடாமலே ஆபீஸ்க்கு போய்டாங்க…..” என்றார். இதைக் கேட்ட துர்க்கா “இவ எப்பவுமே இப்படித்தான்…. நேரத்துக்கு சாப்பிடுறதே இல்லை…. சாப்பிடாம வேலை செய்து உடம்புக்கு சரியில்லாம போனா என்ன செய்றது….?” என புலப்பியவாறு வந்தவர், மகளுக்கு போன் பண்ணினார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Arambamey kalakkal divi