மலர்னிகா சொன்னதற்கு பிறகு நிஷா வேறு எதுவும் பேசவில்லை. மலர்னிகா கம்பனி பற்றி கேட்க, நிஷாவும் அது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தாள். பின் ஞாபகம் வந்தவளாக நிஷாவிடம் தனது போனை கேட்க, “மேடம் ஆக்ஸிடெண்ல உங்களோட போன் உடைஞ்சு போச்சு. ஆனால் உங்களோட பழைய போன் மாதிரி ஒரு புது போன் வாங்கி பழைய போன்ல இருந்த எல்லாவற்றையும் இந்த புது போன்ல அப்டேட் பண்ணிட்டேன்.” என்று சொல்லி மலர்னிகாவிடம் புது போனை குடுத்தாள். மலர்னிகாவும் நிஷாவுக்கு நன்றி சொன்னாள்.
போனை பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு ஒரு கால் வந்தது. அதை எடுத்துப் பேசிய மலர்னிகாவின் முகம் கோபத்தில் சிவந்தது. உடனே ” ஏய் நீ என்னை பயமுறுத்தலாம்னு பார்க்கிறாயா? நான் மலர்னிகா என்னை உன்னால எதுவும் செய்ய முடியாது. நீ உன்னோட ஆளுங்களை வைச்சி என்னோட காரை அடிச்சிச்சது , ஏன் ஹாஸ்பிடல்ல என்னை கொல்ல பார்த்த ஆனால் எதுவும் நடக்கலை. நீ பண்ண எல்லாத்துக்கும் பதில் சொல்ல தயாரா இரு.” என்றாள் கோபத்துடன்.
அந்தப் பக்கத்தில் இருந்த முகேஷ் சத்தமாக சிரித்தான்.”என்ன மலர்னிகா மேடம் சத்தம் அதிகமா இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான் என்னோட ஆளுங்களை வைச்சி என்னால ஒண்ணும் செய்ய முடியாது. ஆனால் உன்னோட ஆளை வைச்சி என்னால என்ன வேணாலும் செய்ய முடியும். இப்போ நான் சொல்ற மாதிரி நீ நடந்துக்க வேணும். இல்லைனா உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.” என்றான்.
மலர்னிகாவின் கோபம் அதிகரித்துக் கொண்டு இருந்தது.” என்ன குடிச்சிருக்கிறியா? உன்னோட உளறல் எல்லாம் கேட்கிற நிலமையில நான் இல்லை. சும்மா போன் பண்ணாமல் வேலையை பாரு.” என்று போனை கட் பண்ணப்போனாள்.
ஆம், மலர்னிகா வீட்டிற்கு வந்ததும். அருகில் உள்ள கோயிலுக்கு அவளது பெயரில் அர்ச்சனை செய்யச் சென்ற துர்க்காவை வழியிலேயே வைத்து கடத்தி விட்டான் முகேஷ். அவனுக்கு தெரியும் மலர்னிகாவை மெண்டலி டார்ச்சர் கொடுக்கணும்னா அதுக்கு அவளுக்கு இருக்கிற ஒரே உறவான அம்மாவை கடத்தணும்னு முடிவு எடுத்தே அவரைக் கடந்தினான்.
துர்க்கா தன்னை விட்டுவிடுமாறு முகேஷிடம் கத்திக் கொண்டு இருந்தார். தனது தாய் அவனிடம் இருப்பதை அறிந்த மலர்னிக்கா முதல் முறையாக கலங்கினாள். அவன் ஒரு சைக்கோ என்று தெரியும். அவனிடம் இருந்து தாயை எப்பிடி மீட்பது என்று யோசித்தாள்.
மலர்னிகா எதுவும் பேசாமல் இருப்பதை நினைத்து சிரித்தான் முகேஷ், “என்ன மலர்னிகா, உன்னோட அம்மாவை எப்படி காப்பாத்தலாம்னு நினைக்கிற போல. நீ ரொம்ப எல்லாம் யோசிக்காத, அதுக்கும் நானே வழியை சொல்றன். நீ என்ன பண்ற, உன்னோட பேர்ல இருக்கிற எல்லா சொத்தையும் என்னோட பேர்ல எழுதி வைச்சிட்டு உன்னோட அம்மாவை கூட்டிட்டு, இந்த மும்பையை விட்டே போயிடணும். அப்படி செய்ய மாட்டேன்னு நீ சொன்னா, உன்னோட அம்மா உயிரோட இருக்க மாட்டாங்க. நீ போலிஸ்ல சொல்லலாம்னு மட்டும் நினைக்காத, உன்னோட அம்மா எங்கிட்ட இருக்கிறதை மறக்கமாட்டேன்னு நினைக்கிறன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட மலர்னிகா சிறிதும் யோசிக்காமல்,” சரி நான், என்னோட சொத்து எல்லாத்தையும் உனக்கே எழுதிக் குடுத்திடுறன். என்னோட அம்மாவை விட்டுடு.” என்றாள். பக்கத்தில் இருந்த நிஷா அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்.
மறுபக்கம் இருந்த முகேஷ், மலர்னிகா இவ்வளவு எளிதில் தனது சொத்துக்களை அவனுக்கு எழுதி வைப்பாள் என்று நினைக்கவே இல்லை. சரி என்னோட ஆளு ஒருத்தன் டாக்குமெண்ட் எடுத்திட்டு வருவான். அதிலை சைன் போட்டு அனுப்பு. அதுக்கு அப்புறம் உன்னோட அம்மாவை அனுப்பி வைக்கிறன்.” என்றான். அவளும் சரி என்று சொல்ல, போனை வைத்தான்.
சபாபதியும் மோனிஷாவும் சேர்ந்து கேசவனை பார்க்க வீட்டிற்குச் சென்றனர். ஹாலில் இருந்து போன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது சபாபதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வரும் தன் மகளைப் பார்த்தவருக்கு புன்னகை வந்தது. தனது மகள் தாயில்லாத பிள்ளை என்பதால் அவளுக்கு பிடித்தது கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் கேசவன்.
சபாபதியின் கைகளை விட்டு ஓடி வந்து தந்தையை அணைத்துக் கொண்டாள். “நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறன். நீங்க எனக்கு அப்பாவா கிடைச்சது நான் செய்த புண்ணியம். நான் விரும்புற எல்லாத்தையும் எனக்காக குடுக்கிற உங்களை என்ன சொல்றதுனு தெரியலை அப்பா. லவ் யூ சோ மச்.” என்றாள்.
மகளின் மலர்ந்த முகத்தைப் பார்த்து சந்தோசப்பட்டார் கேசவன்.” நீ எப்பவும் இப்பிடியே சிரிச்சிட்டு இரு மோனி. உன்னோட சந்தோசம்தான் இந்த அப்பாக்கு வேணும். அதுக்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன். நீ போய் சபாபதிக்கு ஜீஸ் போட்டு எடுத்திட்டு வா. ” என்றார். சரி என்று அவரிடம் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் மோனிஷா.
அங்கேயிருந்த சபாபதியிடம் பேச ஆரம்பித்தார் கேசவன்.” என்னோட பொண்ணு எப்பவும் இப்படி சந்தோசமா இருக்க வேண்டியது உங்களோட பொறுப்பு சபாபதி. அப்புறம் உங்ககிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். நீங்க சொல்லியிருந்தீங்க நான் வந்து உங்க வீட்ல மாப்பிள்ளை கேட்கணும்னு. நானும் முதல்ல அப்பிடி செய்யலாம்னு நினைச்சேன். ஆனால், நீங்களே ஏன் என்னோட பொண்ணை விரும்புறதையும் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதையும் ஏன் நீங்க உங்களோட குடும்பத்துக்கிட்ட சொல்லக்கூடாது? அப்பிடி நீங்க சொல்லி அவங்க அதை மறுப்பாங்களா என்ன? ” என்றார்.
இதைக் கேட்ட சபாபதிக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. அவனது வீட்டில் பெருந்தேவனாரும் விசாகமும் பார்த்துதான் இதுவரை எல்லோருக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள். காதல் கல்யாணம் நடந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது இவன் காதலிப்பதை வீட்டில் சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியாது. தனது பதிலை கேட்க கேசவன் காத்திருப்பதைப் பார்த்தவன், “நான் வீட்டுக்கு போயிட்டு பேசுறன்.” என்றான். கேசவனும் சிரித்தார்.
மோனிஷா மூவருக்கும் ஜீஸ் எடுத்து வந்தாள். பின்னர் மூவரும் அதைக் குடித்து விட்டு பேசிக் கொண்டு இருந்தனர். கேசவன் வேலை இருப்பதாக உள்ளே செல்ல, தனக்கும் வேலை இருப்பதாக மோனிஷாவிடம் சொல்லி விட்டு சென்றான் சபாபதி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊