பெருந்தேவனார் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்த சபாபதிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே அதை கேசவனுக்கு போன் போட்டு சொன்னான்.
“சார் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நீங்கதான் எப்பிடியாவது அதற்கு மோனிஷாவை சம்மதிக்க வைக்கணும்.” என்றான்.
அதற்கு கேசவனும், “என்ன முடிவு சபாபதி?” என கேட்டார். தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், “எங்க வீட்டில காதல் கல்யாணத்திற்கு என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு தெரியாது. அதனால நான் முதல்ல மோனிஷாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, அப்புறம் வீட்டில சொல்லலாம்னு இருக்கிறன்.” என்றான்.
அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு, “எப்பிடியோ என் பொண்ணுக்கு நீங்க கிடைச்சா சரிதான். நான் நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு மோனியை கூட்டிட்டு வர்றன்.” என்று அவனது யோசனைக்கு சம்மதம் சொன்னார்.
“ரொம்ப நன்றி.” என்று சொல்லி போனை வைத்தவன், அதன் பின்னரே நிம்மதியுடன் தூங்கினான்.
துர்க்காவும் மலர்னிகாவும் ஊருக்குச் செல்வதற்காக தயாராகும் போது, நிஷாவும் அவர்களுடன் வருவதற்காக அனுமதி கேட்டாள். “அம்மா நானும் உங்ககூட ஊருக்கு வரலாமா? எனக்குன்னு இங்க யாரு இருக்கிறாங்க? இத்தனை நாள் உங்களோடயே இருந்திட்டேன். அங்க வந்து ஒரு ஓரமா கிடைக்கிற எந்த வேலையையாவது பண்ணிட்டு இருக்கேன் அம்மா” என்றாள் நிஷா.
அதைக் கேட்ட துர்க்கா அவளை அணைத்துக் கொண்டு, “நீயே இங்க இருக்கப்போறேன்னு சொன்னாலும் நாங்க உன்னை விட்டுட்டு போகமாட்டோம். மலர் எப்படியோ அப்படித்தான் எனக்கு நீயும். அதனால எங்ககூட நீ தாராளமா வரலாம். ” என்றார்.
நிஷாவும் மகிழ்ச்சியாக அவளது பிளாட்டிற்கு சென்று சில பொருட்களை எடுக்க வேண்டும் என்றாள். அவளை தனியாக விடுவது சரியல்ல என்று நினைத்த மலர்னிகா தாயை நிஷாவுடன் அனுப்பி வைத்தாள். தனது அறைக்கு வந்து, மிகவும் முக்கியமானது என நினைத்தவற்றை மாத்திரம் எடுத்து வைத்தாள். அப்போது அவளது அறையில் யாரோ நுழையும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்க்க அங்கே கண்கள் சிவக்க நின்றிருந்தான் முகேஷ்.
மிகவும் அருகில் அவனை திடீரென பார்த்த மலர்னிகாவிற்கு படபடப்பாக இருந்தது. “ஏய் அதுதான் நீ கேட்ட எல்லாவற்றையும் குடுத்திட்டன்ல. இப்போ எதுக்காக இங்க வந்த. மரியாதையா வெளியே போயிடு.” என்றாள்.
அதற்கு அவளைப் பார்த்து சிரித்தான் முகேஷ். “எனக்கு உன்னோட சொத்துலதான் குறி. உன்னோட தைரியத்தை எப்பிடியாவது உடைக்கணும் நினைச்சேன். அதுதான் உன்னோட அம்மாவை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கினேன். அதோட உன்னை விட்டுடலாம். உன்னோட தைரியம் உன்னை விட்டு போயிடலாம்னு நினைச்சேன். ஆனால் நீ திரும்ப வந்தால் உன்னால இழந்ததை சாதிக்க முடியும்னு சொல்லிட்ட. அது என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்திச்சி. உன்னோட தைரியத்தை அழிக்கணும்னு வந்திருக்கிறன். ” என்றவன் அவளை நெருங்கினான்.
முகேஷிடம் இருந்து தப்பிக்க தடுமாறினாள் மலர்னிகா. அவளை பிடித்து இழுத்து ஒரு அறை விட்டான். விபத்து நடந்ததால் பலவீனமாக இருந்த மலர்னிகா, அவனது ஒரு அறையில் தடுமாறி கட்டிலில் விழுந்தாள்.
கட்டிலில் விழுந்தவளைப் பார்த்தவன், தனது போனை எடுத்து வீடியோவை ஆன் பண்ணி மலர்னிகா தெரியும்படி வைத்தான். பின் அவளை நெருங்கினான். அவள் தடுத்தும் கேட்காமல் அவளது உடைகளை களைந்தான். மலர்னிகா அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் கதறுவாள் என்று நினைத்த முகேஷ் தோல்வியுற்றான்.
“என்ன உன்னை ரேப் பண்ணிடுவன்னு நினைச்சியா? அதுதான் இல்லை. உன்னை இப்ப நான் தொடப்போறது இல்லை. உன்னோட துணி கூட இல்லாமல் இருக்கிற இந்த உடம்ப எதுவும் செய்ய மாட்டேன். நீ இப்பிடி ஒரு ஆம்பளை முன்னாடி நின்னதை நினைச்சி நினைச்சி தினமும் சாகணும். கட்டிக்கப்போறவன் மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை வேறொருத்தன் பார்த்ததை எந்த பொண்ணாலையும் தாங்கிக்க முடியாது. இது உன் தைரியத்தை அழிச்சிடும். வரட்டா “என்றவன் தனது போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் எழுந்த மலர்னிகா குளியலறைக்குசை சென்று தண்ணீரில் நின்றாள். பின் ஒரு கவுனை எடுத்து போட்டுக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். நிஷாவும் துர்க்காவும் வந்ததும் எதுவும் பேசாமல் அவர்களுடன் சென்றாள். துர்க்காவும் ஊருக்கு போவதால், அவள் இப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டார்.
மூவரும் பஸ்ஸில் ஏறினர். புதிய ஊரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மூவரும் அருகருகே இருந்தனர். யன்னலோரம் இருந்த மலர்னிகா கொஞ்சம் கூட கண்களை மூடாமல் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள்.
இரவு நேரத்தில் தனது வீட்டின் மொட்டை மாடியில் யோசனையுடன் நின்றிருந்தான் காளையன். அப்போது அவனுக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்தாள் காமாட்சி.
“அண்ணா பால்” என்றாள். அவளது சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், பால் கிளாஸ்ஸூடன் சிரித்த முகத்துடன் நிற்கும் தங்கை காமாட்சியை பார்த்தான். “பிடிங்க அண்ணா” என்றாள். அவளிடம் இருந்து பால் கிளாஸை வாங்கி குடித்தான்.
அவன் பாலைக் குடிக்கு வரை பேசாமல் இருந்தவள், கிளாஸை அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “அண்ணா நீங்க எதையாவது யோசிச்சிட்டு இருக்கிறீங்களா?” என கேட்டாள். அதற்கு காளையன் சிரித்தான். “அண்ணா நீங்க சரியாக சாப்பிடவே இல்லை. எதுவா இருந்தாலும் அதை யோசிச்சிட்டு இருக்காதீங்க. எல்லாம் சரியாகிடும்.” என்றாள். அவனும் தலையசைத்து விட்டு, “இங்க ரொம்ப குளிரா இருக்கு குட்டி. நீ உள்ளே போ.. “என்றான். அவளும் சரி என்று சொல்லிவிட்டு கீழே சென்றாள்.
காமாட்சி சென்ற பிறகும் நீண்ட நேரம் மொட்டை மாடியில் நின்ற காளையன் தனது அறைக்கு வந்து தூங்கினான்.
அடுத்த நாள் காலையில் நேரத்திற்கு எழுந்து வயலுக்குச் சென்று விட்டான். அவனையறியாமலே மனசு ஏதோ பாரமாக இருந்தது. யாரிடம் அதை சொல்வது என்று தெரியாமல், தவிப்போடு இருந்தான். இதுவரை அவனுக்கு இப்படி இருந்ததே இல்லை.
வாய்க்காலை வெட்டி வயலுக்கு நீர் பாய்ச்சி விட்டு வெளியே வர கதிர் வந்தான். “அண்ணே ஐயா உங்களை வீட்டிற்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றான். என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு அவனுடன் வீட்டிற்கு சென்றான் காளையன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀