காலையில் காளையன் வயலுக்குச் சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு, கோலம் போட அரிசிமாவை எடுத்து வந்தார் குணவதி. அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்து கையில் இருந்த அரிசிமா தட்டை தவறவிட்டவர்,ஓடிச் சென்று அங்கே நின்றிருந்த துர்க்காவை அணைத்துக் கொண்டு அழுதார். துர்க்காவும், “அண்ணி… அண்ணி” என்று அழுதார். வாசலில் காலை நேரத்தில் அழும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர் குடும்பத்தினர்.
வெளியே நின்றிருந்த துர்க்காவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். விசாகம், “அம்மாடி துர்க்கா.” என்றார். குணவதியிடம் இருந்து பிரிந்தவள் அங்கே நின்றிருந்த தாயின் காலடியில் விழுந்து அழுதாள். அவளை அணைத்துக் கொண்டு விசாகமும் நேசவதியும் அழுதனர். சிறிது நேரத்தில் தங்களைத் தேற்றிக் கொண்டு, துர்க்கா தனது மகள் மலர்னிகாவையும் நிஷாவை தனது வளர்ப்பு மகள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். எல்லோரும் அவர்களை வாஞ்சையுடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டனர். நிஷா அவர்களைப் பார்த்து சிரித்தாள். ஆனால் மலர்னிகாவோ உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாத பாவனையுடன் இருந்தாள்.
துர்க்காவின் கழுத்தில் தாலி இல்லாததை பார்த்த விசாகத்திற்கு ஏதோ புரிந்தது. குணவதியிடம் அதை சொல்ல, “அத்தை முதல்ல உள்ளே போகலாம்.” என்றார். அதற்கிடையில் பெருந்தேவனார் கதிரை அழைத்து காளையன் கூட்டிட்டு வருமாறு சொன்னார். நேசமதி ஒரு நிமிடம் நில்லுங்க என்று உள்ளே சென்றார். சில நிமிடங்களில் அவர் திரும்பி வரும்போது காளையன் அங்கே வந்திருந்தான்.
துர்க்காவைப் பார்த்தான்.” அப்பாடா அத்தை வீட்டிற்கு வந்திட்டாங்க. இனிமேல் இந்த வீட்டில இருக்கிற எல்லோரும் சந்தோசமாக இருப்பாங்க.” என நினைத்தவன் மலர்னிகக்காவிற்கு பின்பக்கம் நின்றான். மூவரையும் சேர்த்து வைத்து ஆர்த்தி எடுத்தார் நேசமதி. பின்னர் எல்லோரும் உள்ளே அவர்களை அழைத்துச் செல்லும் போது, மலர்னிகாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர கீழே விழப்போனாள். அவள் பின்னே வந்த காளையன், அவள் தடுமாறுவதை அறிந்து அருகில் வரவும் அவள் விழவும் சரியாக இருக்க, அவளை தாங்கிப் பிடித்தான்.
“பாட்டி எல்லோரும் கொஞ்சம் விலகுங்க. இந்த பிள்ளை விழுந்திட்டு.” என்றான். அவனது சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அவளை கையில் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து சோபாவில் படுக்க வைத்தான். “ஐயோ மலரு என்னாச்சிடி உனக்கு.?” என்று பதறினார்.
அவளின் அருகே வந்த விசாகம் பாட்டி பேத்தியின் தலையை வருடி விட்டு, அவளது கையில் நாடி பிடித்துப் பார்த்தார். அதைப் பார்த்த நிஷா அருகில் இருந்த துர்க்காவிடம், “அம்மா, பாட்டி எதுக்கு மேம்மோட கையைப் பிடித்து பார்க்கிறாங்க? “என கேட்டாள். அதற்கு துர்க்கா, “அம்மாக்கு வைத்தியம் பார்க்க தெரியும். நாடி பிடித்து என்ன பிரச்சனைனு கண்டுபிடிச்சிடுவாங்க.” என்றார். நிஷாவும் அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.
காலையிலேயே மோனிஷா மிகவும் உற்சாகமாக இருந்தாள். துள்ளலோடு கீழே இறங்கி வந்த மோனிஷாவை அழைத்து தனது அருகே இருக்கச் சொன்னார்.” மோனிமா அப்பா எது செய்தாலும் உன்னோட நல்லதுக்காகத்தான் இருக்கும். சபாபதி வீட்டில உள்ளவங்க கிராமத்து ஆளுங்க. அவங்க ஒருவேளை காதல் கல்யாணத்துக்கு ஒத்துக்கலனா என்ன செய்றதுனு பயமா இருக்குமா. நான் அதைப் பற்றித்தான் சபாபதிக்கிட்டயும் பேசினேன். அவரும் அதை நினைச்சி ரொம்ப பயப்படுறாரு. ” என்றார்.
அதற்கு மோனிஷா,” என்ன அப்பா இப்படி சொல்றீங்க? லவ் மேரேஜ்க்கு வில்லேஜ்ல சம்மதிக்க மாட்டாங்களா? அப்பிடின்னா இப்போ நாங்க என்ன செய்றது? ப்ளீஸ் அப்பா எனக்கு சபா வேணும். நான் அவரை ரொம்ப லவ் பண்றன். ” என்றாள்.
மகளின் சொன்னதைக் கேட்ட கேசவன்,” கவலைப்படாத மோனி. உனக்காக நான் மட்டுமல்ல சபாவும் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போக தயாராக இருக்கிறம். அவரும் உன்னை கல்யாணம் பண்ணணும்னு முடிவோட இருக்கிறாரு. அதனால நேற்று நைட் எனக்கு போன் பண்ணி ஒரு யோசனை சொன்னாரு. எனக்கு அது சரியாபட்டிச்சு. அதனால அவர் சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டேன். ஆனால் அவரு உன்னோட முடிவு என்னனு கேட்டாரு. நான் காலையில பேசிட்டு சொல்றன்னு சொல்லியிருக்கிறேன் மோனி.” என்றார்.
அதை கேட்டவள்,”என்ன அப்பா சொல்றீங்க சபா நைட் உங்களோட பேசினாரா? . சரி சொல்லுங்க அவரு என்ன சொன்னாருனு? “என கேட்டாள். அதற்கு கேசவன்,” உன்னை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணப்போறதா சொன்னாரு. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணினால் உன்னையும் அவரையும் பிரிக்க முடியாது என்று சொன்னாருமா. எனக்கும் அவர் சொன்னது சரியாகப்பட்டது. ஆனால் நீ என்ன சொல்லுவன்னு தெரியலை.” என்றார்.
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்று சபாபதி சொன்னதை கேசவன் சொன்னதும், மோனிஷா உடனே அதை மறுத்தாள்.” என்ன அப்பா, அவருதான் அப்பிடி புரியாமல் பேசுறாருனா, நீங்களும் அவர் சொன்னதுக்கு சரினு சொல்லியிருக்கிறீங்க? அவருக்கு அத்தனை சொந்தபந்தம் இருந்தும், இப்பிடி யாருமே இல்லாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு என்ன அவசரம் அப்பா? அப்பிடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணினால் அவங்க வீட்டில் எங்களை ஏத்துக்குவாங்களா அப்பா? அது இன்னும் பிரச்சனையைத்தானே கொண்டு வரும். “என்றாள்.
தனது மகள் சொன்னதை கேட்ட கேசவன்,”அப்பிடி பிரச்சனை வரணும்னு தானே நான் ஆசைப்படறேன். “என மனதிற்குள் நினைத்தார். வெளியே,” இல்லடா மோனி. நீ நாங்க சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்க. ஒருவேளை உங்களோட ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்தது தெரிஞ்சி உங்களை ஏத்துக்கிட்டு அவங்க முழு மனசோட உன்னை ஏத்துக்கலாம்ல.
அப்பிடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலனா, உனக்கும் சபாபதிக்கும் கல்யாணம் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கு. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டா, அவங்களை எப்பிடியாவது சமாதானப்படுத்திடலாம்னு சபாபதி நினைக்கிறாரு. எனக்கும் அவர் சொல்றது சரினுபடுது.” என்று பலவற்றை சொல்லிச் சொல்லி மோனிஷாவின் மனசை மாற்றி, அவளை ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஒத்துக் கொள்ள வைத்தார்.
எப்போ ரெஜிஸ்டர் மேரேஜ் என கேட்டவளிடம்,” இன்னைக்குதான் மோனி, போய் புடவை கட்டி ரெடியாகிட்டு வா. ” என்றார். அவளும் எல்லாவற்றையும் மறந்து தன்னவனை கடைபிடிக்கப் போகும் சந்தோசத்துடன் ரெடியாக சென்றாள். கேசவன் சபாபதியிடம் நடந்தவற்றை சொல்லி ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வரச் சொன்னார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀