ராமச்சந்திரனை சந்திக்க மில்லுக்கு வந்த காளையனுக்கு அவர்களின் சந்தோஷமான முகத்தை பார்த்ததும் அந்த போன் காலைப் பற்றி சொல்வதற்கு மனம் வரவில்லை. சரி எது வந்தாலும் பார்த்துக் கொள்வோமே. நினைத்துக் கொண்டு அங்கிருந்த வேலைகளை மட்டும் செய்து கொடுத்துவிட்டு வந்தான்.
அன்று இரவு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க கீழே வந்த காளையன், வீட்டுக்கு வெளியே நாய் குலைப்பதை பார்த்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். அப்போது அவர்கள் வீட்டின் முன்னால் உள்ள வேப்பமரத்தின் ஒரு கிளையிலிருந்து வீட்டின் மொட்டை மாடிக்கு செல்வதற்கு ஒரு உருவம் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் மெதுவாக மொட்டை மாடிக்கு சென்றான். அங்கே முகமூடி அணிந்து கொண்டு வந்த அந்த உருவம் நேராக மலர்மிக்காவின் அறையை நோக்கிச் சென்றது. மெதுவாக அந்த உருவத்தை பின்பக்கமாக இருந்து பிடித்த காளையன் தனது கையில் போட்டிருந்த காப்பினால் முகத்தில் அடிக்க தொடங்கினான்.
அவனிடம் தான் பிடிபடுவோம் என நினைக்காத அந்த உருவம் எப்படியாவது தப்பித்து விடுவதற்கு முயன்றது. காளையனின் கைகளைப் பிடித்து கடித்துவிட முயன்றது. காளையன் அதற்கு பிடி கொடுக்கவில்லை. அவனுடைய வயிற்றில் முழங்கையால் இடித்தது. அதில் காளையனின் பிடி சற்று விலக, வந்த உருவம் எப்படியாவது தப்பிப்பது புத்திசாலித்தனம் என்று நினைத்து காளையனை உதைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.
அதே நேரத்தில் மலர்னிகாவின் அறையில் சத்தம் கேட்டது தான் இந்த நேரத்தில் ஒரு பெண்ணின் அறைக்குள் செல்வது சரியல்ல என்று நினைத்த காளையன் அங்கிருந்து செல்ல முயன்றான். ஆனாலும் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நினைத்தவன் அரைமனசுடன் உள்ளே சென்றான்.
அங்கே கட்டிலில் மலர்னிக்காவை காணவில்லை. சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று பார்ப்பதற்காக அறையின் லைட்டை போட்டான். அறையின் ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு கால்களுக்கு நடுவில் முகத்தை வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தவாறு இருந்தாள். அவளை அவ்வாறு பார்த்த காளையனுக்கு பாவமாக இருந்தது. மெதுவாக அருகில் சென்றான்.
அவள் அருகில் போய் இருந்த காளையன், மெதுவாக அவளது தோளைத் தொட்டான். அவனை நிமிர்ந்து பார்த்த மலர்னிகா என்ன நினைத்தாளோ, அவனை தாவி அணைத்தாள். காளையனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனது நெஞ்சில் தலைசாய்த்துக் கொண்டாள்.
அவள் மிகவும் பயந்திருப்பது அவளது உடல் நடுக்கத்தில் தெரிந்தது. அவன் ஒரு தாய் எவ்வாறு பிள்ளையை தூக்கி அணைத்து இருப்பாளோ, அதேபோலவே அவளை அணைத்து இருந்தான். மலர்னிகா, “என்னை விட்டு போயிடாத என்கூடவே இரு என்று நடுக்கத்துடன் அவனது டி-ஷர்ட்னை நன்றாகப் பிடித்துக் கொண்டாள்.
காளையனும் அவளை சமாதானப்படுத்த எண்ணி,” உன்னை விட்டு நான் எங்க அம்மணி போக போறேன். பேசாம தூங்கு. உன்கூடவே தான் நான் எப்பவும் இருப்பேன். “என்று சொல்லி தலையை வருடிக் கொண்டிருந்தான். அவளும் அவனது கை தந்த வருடலிலும் அவனது நெஞ்சு தந்த சுகத்திலும் அவனது நெஞ்சிலே படுத்து தூங்கிவிட்டாள்.
காளையன் சிறிது நேரம் அவளை நெஞ்சில் தாங்கி வைத்திருந்தான். பின்னர் அவளை மெதுவாக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான். பெட்ஷீட் போர்த்திவிட்டு, அறைக் கதவை மெதுவாக சாத்திவிட்டு மீண்டும் ஒரு முறை அவளை திரும்பிப் பார்த்தான். குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள். மலர்னிக்காவிற்கு ஏதோ நடந்திருக்கு. ஆனால் அது அத்தைக்கு தெரியாமல் இந்த பிள்ளைக்கு நடந்திருக்கு. என்று நினைத்தான்.
அதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? மலர்னிக்காவின் பிரச்சனை என்னவென்று தெரிந்தால் மட்டுமே அவனுக்கு அதற்கான தீர்வினை காண முடியும் என்று தோன்றியது. காலையில் மலர்னிக்காவுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
தனது அறைக்குள் வந்தவனுக்கு தூக்கம் வரவில்லை. மலர்னிகாவின் அறைக்குள் நுழைய முயன்ற அந்த உருவம் யார்? மலர்னிக்காவிற்கு என்ன பிரச்சனை? தனது குடும்பத்தை சூழ்ந்துள்ள ஆபத்து என்ன? என்று பலவாறு யோசித்துக்கொண்டு படுத்தவன் நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தூங்கினான்.
அடுத்த நாள் காலை மலர்னிகாவின் கம்பெனிக்கு சென்றான் முகேஷ். என்னதான் அவன் மலர்னிகாவின் கம்பெனியை வாங்கி இருந்தாலும், அங்கு வேலை செய்பவர்களிடம் இருந்து அவனால் மதிப்பினை பெற முடியவில்லை. இவன் வந்தாலும் எழுந்து நின்று வணக்கம் கூறுவதில்லை. வருவார்கள் அவர்களது வேலையை முடிப்பார்கள் செல்வார்கள் என்று இருந்தார்கள்.
இதை பார்க்கும்போது முகேஷ்க்கு அளவு கடந்த கோபம் வந்தது. மலர்னிக்காவை சும்மா விடவும் மனம் வரவில்லை. அவனது கோபம் மலர்னிகா மீது திரும்பியது. அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முயன்றான்.
இதற்கிடையில் கேசவன் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார். காலையில் மோனிஷா எழுந்து கீழே வரும் போது, அவளது தந்தையும் வந்திருந்தார். இவ்வளவு நேரத்துடன் வந்திருக்கும் தந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தவள், “அப்பா என்னப்பா இவ்வளவு நேரத்தோட வந்துட்டீங்க? நான் நினைச்சேன் அண்ணா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வருவீங்கனு.” என்று கேட்டாள். அதற்கு கேசவன், “இல்லம்மா ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதுக்கு தான் போயிருந்தேன். மற்றதெல்லாம் முகேஷ் பார்த்துப்பேன்.
என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை? எப்போ உன்னோட ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண விஷயத்தை வீட்ல சொல்ல போறாராம் என்று கேட்டார். அதற்கு மோனிஷா,” கொஞ்சம் டைம் எடுக்கணும்னு என்று சொன்னார்.
அப்பா பார்த்து மெதுவா நேரம் வரும்போது சொல்றேன்னு சொன்னாங்க. ” என்றாள் மோனிஷா. “மோனிஷா நீதான் கவனமா இருக்கணும். அவரு உன்னை கல்யாணம் பண்ணதை சொல்ல கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தால் அவங்க வீட்டுக்கு போய் நம்ம பேசலாம் சரியா?” என்று மோனிஷாவிடம் சொன்னார் கேசவன்.
கேசவனிடம் மோனிஷா,” கொஞ்சம் டைம் கொடுப்போம் அப்பா. அப்படி சபா அவங்க வீட்டுல சொல்ல தயங்கினாரா இருந்தால், நம்ம நேரடியாக போய் பேசிடலாம். என்று சொன்னாள். அதன்பின் கம்பெனிக்கு நான் போக ரெடியாகுறேன்பா. ” என்று சொல்லி மோனிஷா செல்ல கேசவனும் சரிமா எனக்கும் சைடுல வேலை இருக்கு நானும் அதை போய் பார்க்கணும் என்று சொல்லிட்டு சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊