காளையனை இழுக்கும் காந்தமலரே : 04

4.5
(17)

காந்தம் : 04

சென்னையில் உள்ள கேசவனின் ஐடி கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த சபாபதியின் அருகில் வந்து நின்றாள் மோனிஷா. ஆனால் சபாபதியோ அவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்தான். அவன் அருகில் ஒரு கதிரையை இழுத்து போட்டுக் கொண்டு இருந்தாள். “சபா.. உன்னைத்தான், நான் வந்தது தெரியாமல் அப்பிடி என்ன வேலை செஞ்சிட்டு இருக்க….?” என்று கையை பிடித்தவளின் கையை தட்டி விட்டான். 

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….? எதுக்கு என் பின்னாடியே சுத்திட்டு இருக்க. என்னை என்னோட வேலையை பார்க்க விடு…..” என்று கத்தினான். அவன் கத்தியதில் அங்கிருந்தவர்கள் இவர்களை திரும்பி பார்த்தனர். எல்லோரும் தங்களை பார்ப்பதை உணர்ந்த மோனிஷா அங்கிருந்து சென்று விட்டாள். சபாபதியோ எதுவும் நடக்காதது போல தனது வேலையை செய்து கொண்டு இருந்தான். 

டென்டருக்கான மீட்டிங் நடக்கும் இடத்திற்கு அனைவரும் வந்ததன் பின்னர், ஒவ்வொரு கம்பனியும் அனுப்பிய கொட்டேஷனை பிரித்து படித்துக் கொண்டு இருந்தனர். முகேஷ் டென்ஷனாக அமர்ந்திருந்தான். இந்த டென்டர் அவனுக்கு தன்மானப் பிரச்சனையாக இருந்தது. எப்பிடியாவது மலர்னிகாவை தோற்கடிக்க வேண்டும் என்று தவிப்போடு இருந்தான். 

ஆனால் மலர்னிகாவோ மிகவும் கூலாக ஒரு காலுக்கு மேல் மறுகாலைப் போட்டு கண்களில் கூலரை மாட்டிக் கொண்டு, நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தாள். நிஷாதான் கடவுளே இந்த டென்டர் எங்களுக்கு கிடைக்கணும்னு வேண்டிக் கொண்டாள். 

இறுதியாக முகேஷ் மற்றும் மலர்னிகாவின் கொட்டேஷன் வாசிக்கப்பட்டது. முகேஷை கன்ஸ்ட்ரக்ஷனை விட வெறும் ஆயிரம் ரூபாய் குறைவாக கோட் பண்ணிய மலர் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு இந்த டென்டர் கிடைக்கிறது. என்று சொன்னவுடன், முகேஷ்க்கு கோபம் வந்தது. மலர்னிகாவோ கூலரை சற்று பதித்து முகேஷை நக்கலாக பார்த்து விட்டு சைன் பண்ணச் சென்றாள். 

எல்லாம் முடிந்து தனது காருக்கு அருகில் வந்த மலர்னிகா, அங்கிருந்த முகேஷை நோக்கிச் சென்றாள். முகேஷ், சொடக்கு போடும் சத்தத்தில் திரும்பிப் பார்க்க அங்கே கூலரை கழட்டி தனது ஷர்ட்டில் மாட்டியவாறு நின்றிருந்தாள் மலர்னிகா. “என்ன மிஸ்டர் முகேஷ்.. இந்த டென்டரை எடுக்க எவ்வளவோ குறுக்கு வழியில போனீங்க…. ஆனால் என்னாச்சினு பார்த்தீங்களா…….? உங்களோட குடும்பத்துக்கு குறுக்கு வழியில போறதை தவிர வேற எதுவும் இல்லையா….? அடுத்த தடவையாவது நேர் வழியில என்னை தோற்கடிக்க முயற்சி பண்ணுங்க….” என நக்கலாக கூறிவிட்டு நிஷாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். 

முகேஷ் கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘என்னை அவமானப்படுத்திட்டல. இதுக்கு உன்னை பழிக்கு பழி வாங்கல நான் முகேஷ் இல்லடி…’ என்று சூளுரைத்து விட்டு தனது காரில் ஏறிச் சென்றான். 

வேலுச்சாமியும், துரையும் கோபத்துடன் இருந்தனர். வேலுச்சாமியின் மனைவி சரஸ்வதி வாசலில் நின்றிருந்த மயிலைப் பார்த்தார். வெளியே சென்று அவளை வீட்டிற்குள் கூட்டி வந்தார். அதை வேலுச்சாமி தடுக்க நினைக்க, “பஞ்சாயத்து தீர்ப்பை நாம மீறினால் நம்மளை ஊரை விட்டு ஒதுக்கி வைச்சிடு வாங்க….. அதுக்காகத்தான் கூட்டிட்டு வந்தேன்…..” என்றாள். வேலுச்சாமியும் எதிலும் பேசாமல் இருக்க, சரஸ்வதி மயிலை உள்ளே அழைத்து வந்து அவளை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றார். 

தலைகுனிந்து நின்ற அவளது முகத்தை பிடித்தார். “அம்மாடி இங்க பாரு, என் பையன் செய்தது தப்புதான்…. அவனுக்கு பதிலாக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறன் மயிலு…. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழணும்… போய் குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிட்டு வா….” என்று அவளை குளிக்க அனுப்பினார். மயிலும் எதுவும் பேசாமல் அவர் சொன்னதை செய்ய சென்றாள். காமாட்சியை காலேஜ்ஜில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த காளையனை நிறுத்தினான் கணக்குப் பிள்ளையின் மகன் தியாகு. உடனே புல்லட்டை நிறுத்தி விட்டு “என்ன தியாகு….? எதுக்காக இப்போ வண்டியை நிறுத்தின….?” என்று கேட்டான். 

தியாகு தயக்கத்துடன், “அண்ணே இன்னைக்கு பஞ்சாயத்துல என்ன நடந்திச்சினா……” என்று ஆரம்பித்தவன் நடந்ததை சொன்னான். அதற்கு காளையன், “அந்த துரைக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பொண்ணு மேல கை வைச்சிருப்பான்……” என்று கோபப்பட்டான். 

தியாகுவோ மனசுக்குள், ‘இதை சொன்னதுக்கே அண்ணணுக்கு கோபம் வருது, இப்போ நம்ம சொல்லப்போறதை கேட்டா என்ன பண்ணணும்னு தெரியாதே..’ என்று யோசித்தவன் தலையில் தட்டிய காளையன், “என்னடா நடு ரோட்டில நின்னு யோசிச்சிட்டு இருக்க….?” என்றதும், நிதானத்திற்கு வந்த தியாகு, 

“அண்ணே, நான் சொல்றதை கேட்டு ரொம்ப கோபப்படாத.. அந்த துரை பெரியையாவை பார்த்து….” என்று அவன் சொல்லும் போது, காளையன், “என்னடா சொல்ற ஐயாவை பார்த்து என்ன சொன்னான் அந்த துரை….?” என்றான். 

உடனே கண்களை மூடிக் கொண்டு தியாகு, “அண்ணே பெரியையாவை பார்த்து, கைநீட்டி சவால் விட்டுட்டு போயிருக்கிறான் அண்ணே…” என்றான். சொல்லி முடிந்ததும் கண்களை திறந்தான். அங்கே கோபத்தில் கண்கள் சிவந்து நரம்பு புடைக்க நின்றான் காளையன். 

அவனை மெல்ல தொட்ட தியாகுவை ஒரு பார்வை பார்த்து விட்டு, புல்லட்டை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் சென்றான். 

வேலுச்சாமி அறையில் இருக்க, ஹாலில் போன் பார்த்துக் கொண்டு இருந்த துரையை எட்டி உதைத்தான் காளையன். திடீரென உதைத்தால் தடுமாறி சோபாவில் இருந்து கீழே விழுந்த துரை எழ முடியாமல் எழுந்து நின்றான். சத்தம் கேட்டு வெளியே வந்தனர் வேலுச்சாமி, சரஸ்வதி, மயிலு. 

எழுந்தவனை பிடித்து இழுத்து வந்தவன், “இங்க பாரு உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னோட ஐயாவை கை நீட்டி பேசியிருப்பது….? இந்த கையைத் தானே நீட்டி பேசின….” என்று சொல்லிக் கொண்டு அவனது கையை முறித்தான் காளையன். வலியில் துடித்தான் துரை. வேலுச்சாமி பயத்தில் எதுவும் பேசவில்லை. சரஸ்வதியோ செய்த தப்புக்கு அனுபவிக்கட்டும் என்று இருக்க, மயிலுதான், “அண்ணே தெரியாம செஞ்சிட்டாங்க, மன்னிச்சிடுங்க அண்ணே….” என்று அவனின் காலில் விழுந்து அழுதாள். 

அவளை பார்த்து விட்டு துரையை விட்டவன், “இங்க பாரு உனக்காக எங்கிட்ட பேச உன் அப்பாவோ, ஆத்தாவோ வரலை…. உன்னால அசிங்கப்பட்டவதான் வந்திருக்கா. அதுதான் பொண்டாட்டின்றவ….. என் ஐயாவை கை நீட்டி பேசினதாலதான் கையை முறிச்சேன்….. இந்த மயிலுவும் என்னோட தங்கச்சி மாதிரித்தான்…. அவளை ஏதாவது செய்யணும்னு நினைச்ச உடம்புல உசிரு இருக்காது…..” என்றவன், மயிலுவின் பக்கம் திரும்பி,” நல்லா இரு தங்கச்சி….” என்று விட்டு சென்று விட்டான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

1 thought on “காளையனை இழுக்கும் காந்தமலரே : 04”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!