சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 10
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த சுந்தர் தொடர்ந்து பேசினான்.. “என்னை எரிக்கற மாதிரி பார்த்த சித்தப்பா பக்கத்தில இருந்த ஸ்கேலை எடுத்து,” ஏன்டா.. என்ன திமிர்டா உனக்கு? எனக்கு போட்டியா தொழில் தொடங்குறியா.. சொல்லி கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கிறியா? இனிமே இந்தக் கடைப்பக்கம் வந்த அத்தோட உன்னை கொன்னுடுவேன்.. தனியா தெச்சு கொடுத்து ஏதோ பிச்சை காசு வாங்குற இல்ல.. அதை வச்சு சோறு தின்ன முடிஞ்சா தின்னு.. இல்ல பட்டினி கிடந்து சாவு.. ஆனா இந்த பக்கமே இனிமே வராதேன்னு சொல்லி என்னை அந்த கடையில் இருந்து அடிச்சு விரட்டினாரு ..
நான் என்ன சொல்ல வரேன்னு காதில வாங்க கூட ரெடியா இல்ல..அவரு.. அதுக்கப்புறம் பாவம் சித்தியும் எவ்வளவோ சித்தப்பா கிட்ட எனக்காக பேசி பார்த்தாங்க.. ஆனா அவங்களுக்கும் நான் தனியா தைக்க ஆரம்பிச்சதை சொல்லாம மறைச்சதுக்காக அவர்கிட்ட இருந்து அடிதான் பரிசா கிடைச்சது..
அதுக்குப் பிறகு கடையில வேலை செய்யறதை நிறுத்திட்டதுனால முழு நேரமும் என்னோட தையல் மெஷின்லயே வேலை செய்ய ஆரம்பிச்சேன்… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ப்ளவுஸ் எல்லாம் டிசைன் பண்ணறது.. குழந்தைகளுக்கு பாவாடை சட்டை தைக்கிறது.. யூனிபார்ம் செட்ஸ் தைக்கிறதுன்னு என்னோட தையல் வேலை சூடு பிடிக்க ஆரம்பிச்சது.. ஒரு கட்டத்துல என் ஒருத்தனால சமாளிக்க முடியாம போனப்போ இன்னும் ரெண்டு மூணு பேரை என்னோட சேர்ந்து தெக்கறதுக்கு நான் வேலைக்கு வச்சுக்கிட்டேன்.. கொஞ்ச நாள்ல வியாபாரத்தில நல்லா முன்னேறி அடமானத்தில இருந்த எங்க வீட்டையும் மீட்டேன்..” என்றான்..
சுந்தரியும் பாட்டியும் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து கண்ணை இந்த பக்கம் அந்தப் பக்கம் அசைக்காமல் அவன் கதையை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவன் கதையைக் கேட்க கேட்க சுந்தரிக்கு அவன் மேல் இருந்த மதிப்பும் அதனால் அவன் பால் உண்டான ஈர்ப்பும் வளர்ந்து கொண்டே போனது.. அவன் தொடர்ந்து பேச பேச அவனையே ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்..
“ஒரு பெரிய கடை வைக்கலாம்ன்னு தோணி அதுக்கப்புறம் மார்க்கெட்ல ஒரு கடையை வெலைக்கு வாங்கி அங்க என் கடையை போட்டேன்.. “சுந்தர் டெய்லர்ஸ்” – என்னோட மொதல் கடை..” என்று அந்த பெயரை சொன்னவன் முகத்தில் அவ்வளவு பிரகாசம் இருந்தது..
“அந்தக் கடையும் நாளுக்கு நாள் நல்லா ஓட ஆரம்பிச்சது.. மாசா மாசம் எங்க சித்தப்பாக்கு அந்த கடையில் வந்த லாபத்துல 10% அனுப்பிக்கிட்டு இருந்தேன்.. எங்க சித்தப்பா எனக்கு அந்த வேலை கொடுக்கலைன்னா நான் இந்த அளவுக்கு லைஃப்ல முன்னேறி இருக்க முடியாது.. அப்பவும் இப்பவும் நான் சம்பாதிக்கிற ஒவ்வொரு ரூபாயும் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த தொழில்னால வந்தது.. என்னதான் அவர் என்னை திட்டிக்கிட்டே இருந்தாலும் எனக்கு தொழில் சொல்லிக் கொடுத்த வாத்தியார் அவர்.. அதனால அவருக்கு செய்ய வேண்டிய கடமை ஒரு மாணவனா மட்டும் இல்லாம ஒரு பிள்ளையாகவும் எனக்கு இருந்தது.. இன்னி வரைக்கும் என் தொழில்ல கிடைக்கிற லாபத்துல 10% அவருக்கு அனுப்பிச்சுகிட்டு தான் இருக்கேன்.. இதுவரைக்கும் அவருக்கு அனுப்பின பணம் திரும்பி வர்றது இல்லை.. அதனால அவர் என்னை மன்னிச்சிட்டாருன்னு நான் நம்பிகிட்டு இருக்கேன்.. ஊருக்கு போய் அவரை பார்த்தா அந்த நம்பிக்கை உடைஞ்சு போய்டுமோனு ஒரு பயம் இருக்கறதுனால தான் நான் ஊருக்கு போனா கூட அவர் வீட்டுக்கு போறதில்ல.. அவரையும் சித்தியையும் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. அவங்களுக்குனு பிள்ளைங்க கிடையாது.. எனக்கு அப்பா அம்மா கிடையாது.. அவங்க எனக்கு அப்பா அம்மாவா இருப்பாங்கன்னா எனக்கு அதைவிட சந்தோஷம் வேற எதுவும் இருக்க முடியாது.. ஒரு வேளை இந்த ப்ரோக்ராமை அவங்க பாக்குறாங்கன்னா அவங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் மூலமா இதை சொல்லிக்க ஆசைப்படுறேன்.. உங்க பிள்ளையோட வந்து இருந்துருங்க சித்தப்பா சித்தி ” கண்கலங்க பேசினான் சுந்தர்..
பாட்டியோ அவனுக்கும் சுந்தரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததை போல் உணர்ந்தாள்.. தன் அக்கா ரதி அவளை எவ்வளவு தான் திட்டினாலும் அவளுக்கு எப்போதும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைக்கும் சுந்தரி.. அதே போல என்னதான் சித்தப்பா தன்னை அடித்து திட்டி இருந்தாலும் அவர் மேல் தான் கொண்ட பாசத்தை விடாமல் இருக்கும் பிள்ளையாய் சுந்தர்.. இவர்கள் இருவரும் வாழ்வில் நிச்சயமாய் ஒன்று சேர வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பாட்டி..
“நான் அப்ப வச்ச கடையில தெச்சுக்கிட்டு இருந்த நாலு பேர்ல ஒருத்தர் என்னை மாதிரி ரொம்ப டெடிகேட்டடா வொர்க் பண்ணாரு.. கொஞ்சம் பணம் சேர்ந்தப்புறம் அவர் கிட்ட கடை பொறுப்பை விட்டுட்டு நான் யுஎஸ் போய் எம்பிஏ பண்ணனும்னு முடிவு பண்ணேன்.. எஜூகேஷன் லோன் அப்ளை பண்ணவும் அதுவும் எனக்கு கிடைச்சிருச்சு..” என்று சொன்னான்..
“வாவ் உங்க ஸ்டோரியை நீங்க சொல்ல சொல்ல பயங்கர இன்ஸ்பிரேஷனலா போயிட்டு இருக்கு சார்.. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோல்வியை ஏத்துக்காம எப்படியாவது முன்னேறி நம்ப குறிக்கோளை ரீச் பண்ணிடணும்னு ஒவ்வொரு படியா பார்த்து பார்த்து எடுத்து வச்சிருக்கீங்க.. ஹேட்ஸ் ஆஃப் சார்” என்றாள் அந்த நிருபர்..
” தேங்க்யூ.. அதுக்கப்புறம் யு எஸ்ல ******* யுனிவர்சிட்டில எம்பிஏ பண்ண அப்ளை பண்ணேன்.. ஸ்காலர்ஷிப்போட அங்க எனக்கு அட்மிஷன் கெடைச்சுது.. அங்கேயும் ஒவ்வொரு நாளும் நான் பார்ட் டைம் ஜாப் பாத்துக்கிட்டே தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. பார்ட் டைம் ஜாபா அந்த யுனிவர்சிட்டிலேயே எனக்கு லெக்சரரா வேலை கொடுத்தாங்க.. அங்க என் ப்ரொஃபஸர்ஸ்கெல்லாம் என்னை ரொம்ப பிடிக்கும்.. அங்க நான் செஞ்ச ஒவ்வொரு ரிசர்ச் ப்ராஜெக்ட்லயும் எக்ஸலண்டா ஸ்கோர் பண்ணியிருந்தேன்.. எனக்கு ஒரு அவார்டு கூட கொடுத்தாங்க அந்த யூனிவர்சிட்டில… நீங்க பின்னாடி இருக்கிற இந்த ஷெல்ஃப்ல பார்த்தீங்கன்னா அந்த அவார்ட் தெரியும்..” என்றவனை தாண்டி பின்னே இருந்த அலமாரிக்கருகே சென்ற புகைப்படக்காரர் அங்கே பல விருதுகள் இருந்ததை பார்த்து சிரித்தார்..
“சார் இவ்வளவு விருதுல அந்த அவார்ட் எங்க இருக்குன்னு ரொம்ப தேடணும் போலியே சார்..” என்றார் அவர்..
அவருக்கு பதில் புன்னகையை உதிர்த்த சுந்தர் எழுந்து சென்று அந்த பல்கலைக்கழகத்தில் தனக்கு கொடுத்த விருதை காட்டினான்..
சுந்தரையும் அதையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர்.. “தேங்க்யூ சார்.. நீங்க உங்க பேட்டியை கண்டினியூ பண்ணுங்க.. நாங்க மத்த விருதுகள் பத்தியும் தெரிஞ்சுக்கணும்” என்றார்..
அழகாக சிரித்த சுந்தர் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து தொடர்ந்து பேசினான்..
“இப்போ இந்த அவார்டு எல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. ஆனா அப்போ இதெல்லாம் வாங்கறது அவ்வளவு ஈஸியான விஷயமா இல்ல.. நான் காலேஜ் படிக்கும்போதும் சரி யுஎஸ் போய் எம்பிஏ பண்ணும் போதும் சரி என்னை ஒரு கிராமத்தான்.. காட்டான்.. பட்டிக்காட்டான்.. நாட்டுப்புறத்தான்.. ஏன் .. சில சமயம் லோ க்ளாஸ் லோக்கல் இப்படியெல்லாம் சொல்லி என்னோட ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ்மேட்ஸ் மட்டும் இல்ல.. அங்க இருந்த அமெரிக்கன்ஸ் சில பேரும் எப்பவும் கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க.. அவங்க எல்லாம் என்னை பார்க்குற பார்வையே வேறயா இருக்கும்.. கேவலமா ஒரு பார்வை பார்ப்பாங்க.. இதுல இந்தியால காலேஜ்ல என்னோட படிச்ச சில ஃப்ரெண்ட்ஸும் அடக்கம்.. நான் எவ்வளவு முயற்சி செஞ்சு படிச்சு எவ்வளவு நல்லா பெர்ஃபார்ம் பண்ணினாலும் அதை எல்லாம் பாராட்டணும்னு அவங்களுக்கு தோணவே தோணாது.. என் நிறத்தை வச்சும் என்னோட ட்ரெஸ் பண்ற விதத்தை வச்சும் என்னை மட்டம் தட்டுறதுக்கு நிறைய பேர் இருந்தாங்க.. அவங்க அப்படி செய்ய செய்ய எனக்குள்ள ஒரு உத்வேகம் பொறந்தது.. எந்த மனுஷன் படிச்சு முன்னேறுறத்துக்கும் வாழ்க்கையில வின் பண்ணறத்துக்கும் நிறமோ, போடற ட்ரெஸ்ஸோ ஒரு அளவீடா இருக்காதுன்னு ப்ரூவ் பண்றதுக்காக கஷ்டப்பட்டு உயிரை கொடுத்து உழைச்சேன்.. எம் பி ஏ லயும் நல்லா ஸ்கோர் பண்ணி முடிச்சுட்டு இந்தியா திரும்பினேன்.. ” கொஞ்சம் தன் பேச்சை நிறுத்தினான்..
“திரும்பி இந்தியாவுக்கு வந்ததும் நான் கொடுத்துட்டு வந்த சுந்தர் டைலர்ஸ நடத்திட்டிருந்தவர் கிட்ட இருந்து அதை திரும்பி வாங்க எனக்கு மனசு இல்ல.. ஒருத்தர் ரெண்டு வருஷமா ஒரு இடத்துல உழைச்சிட்டு இருக்கும்போது அதை அவர்கிட்ட இருந்து பறிக்க கூடாதுன்னு நான் நினைச்சேன்.. அதனால இங்க சென்னையிலேயே ஒரு சின்ன இடம் வாடகைக்கு எடுத்து அங்கேயே என் கடையை ஆரம்பிச்சேன்..
ஏற்கனவே கிராமத்திலும் யூ.எஸ்.லயும் பட்ட அடிகள் எனக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுத்திருந்தது.. அதனால இந்த முறை என் கடையை நல்லவிதமா நடத்தறதுக்கு எனக்கு ரொம்ப நாள் ஆகல.. என் பிஸினஸ்க்கு தேவையான நெளிவு சுளிவுகள் எல்லாம் எனக்கு நல்லாவே புரிஞ்சது.. அதனால இங்க வந்து நாலே மாசத்துல என்னால ஒரு பொட்டிக் ஓபன் பண்ண முடிஞ்சது.. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஒரு வருஷத்துக்குள்ள நான் அதை ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷோரூமா மாத்தினேன்.. இந்த கார்மெண்ட்ஸ்சையும் சைடு பை சைடு பில்ட் பண்ணிட்டேன்.. இதுதான் என் கம்பெனி.. என் கடை.. இது ரெண்டும் உருவான கதை.. இந்த ப்ரோக்ராமை பார்த்து நான் பேசுறதை கேட்கிற யாராவது ஒரு இளைஞர் என்னை மாதிரி வாழ்க்கையில முன்னேறினார்னா அதைவிட சந்தோஷம் கொடுக்குற விஷயம் எனக்கு வேற எதுவும் கிடையாது.. அப்படி நடக்குதுன்னா அதுக்கு நான் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. தேங்க்யூ வெரி மச் ஃபார் சூஸிங் மீ ஃபார் த இன்டர்வியூ..( இந்த நேர்காணலை செய்ய என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி)” என்று கூறினான் தன்னடக்கத்துடன்..
“ஐயோ சார்.. என்ன அப்படி சொல்லிட்டீங்க? இந்த இன்டர்வியூ பண்ணறதுக்கு உங்களை விட ஆப்ட்டான ஒரு ஆளு வேற யாருமே கிடையாது.. உங்க கதையை கேட்கும் போது எங்களுக்கே வாழ்க்கையிலே இது மாதிரி சாதிக்கணும்.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அதை உடைச்சு முன்னேறனும்னு ஒரு உத்வேகம் வருது.. அப்படி இருக்கும்போது இந்த புரோகிராமை பார்க்கிற ஒவ்வொருத்தரும் நிச்சயமா அதே மாதிரி உணர்வு தான் அடைஞ்சிருப்பாங்கன்றதுல எந்த சந்தேகமும் இல்லை.. சரி.. ரொம்ப ஹெவியான விஷயங்கள் நிறைய பேசிட்டோம்.. கொஞ்சம் லைட்டான விஷயத்துக்கு வருவோமா? நீங்க ஒரு கார்மெண்ட்ஸ் வச்சிருக்கீங்க.. ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் வச்சிருக்கீங்க.. லைஃப்ல எப்ப செட்டில் ஆக போறீங்க? உங்க மேரேஜ்.. உங்க லைஃப் பார்ட்னர்.. இது பத்தி எல்லாம் உங்களுக்கு ஒரு கனவு இருக்கும் இல்லையா? அதை பத்தி எங்களுக்கு சொல்லுங்களேன்..” என்றாள் அந்த பெண் நிருபர்..
“இதுவரைக்கும் நான் இந்தியாவில் இருந்தபோதும் சரி ஃபாரின்ல இருந்த போதும் சரி பொண்ணுங்களோட பேசினாலே என் ஃப்ரெண்ட்ஸ் என்னை ரொம்ப கிண்டல் பண்ணினாங்க.. சில பொண்ணுங்க படிப்புல என்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அட்ராக்ட் ஆகி பேச வருவாங்க.. ஆனா நான் என்னைக்குமே ஒரு ஃப்ரெண்ட்ங்கறதை தாண்டி அவங்க கிட்ட கண்ணியம் தவறி பேசுனதோ நடந்துக்கிட்டதோ கிடையாது.. நான் இந்தப் பப்..( pub) டிஸ்கோத்தே இதுக்கெல்லாம் போக மாட்டேன்.. காலேஜ்ல பேசுவேன்.. படிப்புல டவுட் கேட்டா அவங்களுக்கு அதை முழு மனசோட சொல்லிக் கொடுக்கிறதுக்கு ட்ரை பண்ணுவேன்.. இன்னொரு விஷயமும் இருக்கு.. எனக்கு யாரை பார்த்தும் என்னோட லைஃப் பார்ட்னரா ஆக்கிக்கணும்னு தோணினதே கிடையாது இதுவரைக்கும்.. ”
பேசிக்கொண்டு இருந்தவனுக்கு ஏனோ சுந்தரியின் முகம் மனதில் நிழலாடியது.. கண்ணை மூடி திறந்து அந்த நினைவை தவிர்த்து விட்டு தொடர்ந்து பேசினான் சுந்தர்..
“அப்படி நான் அந்த கேர்ள்ஸ்கிட்ட கண்ணியமா நடந்துக்கறது கூட என் பிரண்ட்ஸ்க்கு கேலிக்கும் கிண்டலுக்குமான ஒரு விஷயமா தெரிஞ்சது.. போனா போகுதுன்னு பாவம் பார்த்து தானா வந்து பேசுற சில பொண்ணுங்களை கூட மடக்கி போட தெரியல.. நீ எல்லாம் எங்க வாழ்க்கையில தேற போற?ன்னு சொல்லி என்னை எப்பவுமே கிண்டல் பண்ணுவாங்க.. இவ்வளவு கருப்பா காட்டான் மாதிரி இருக்க.. ஒரு கோட்டு போட்டுக்கிட்டு கொஞ்சம் இங்கிலீஷ்சும் பேசிட்டா நீ அப்படியே ஹைஃபை பையன் ஆகிடுவியா? அந்த பொண்ணுங்களோட எல்லாம் பேசறதுக்கு கூட உனக்கு தகுதி கிடையாது.. இந்த பக்கம் உன்னோட பேசிட்டு அந்த பக்கம் போய் கருப்பன்னு உன்னை கிண்டல் பண்ணி சிரிக்க தான் போறாளுங்க.. பேசாம நீ ஊருக்கு போய் ஒரு நல்ல நாட்டுக்கட்டையா பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு பேசி பேசி ஒவ்வொரு முறையும் என்னை மட்டம் தட்ட ஆரம்பிச்சாங்க.. ஆனா அப்போ அதையெல்லாம் காதுல வாங்கிக்காம நான் நல்லபடியா படிச்சு டிஸ்டிங்க்ஷன்ல க்ளியர் பண்ணேன் என் கோர்ஸை.. ஆனா அப்படி அவங்க கிண்டல் பண்ணது என் மனசுல ஒரு காயத்தை உண்டாக்கிச்சு.. அந்த காயம் என் வாழ்க்கையில நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எப்படி இருக்கணும்னு நான் டிசைட் பண்ணறதுக்கு காரணமா அமைஞ்சது..”
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சுந்தரியும் பாட்டியும் உன்னிப்பாய் கேட்டார்கள்..
“ம்ம்ம்ம்.. இன்ட்ரெஸ்டிங்.. அப்போ நீங்க எப்படிப்பட்ட பொண்ணு உங்க லைஃப் பார்ட்னரா வரணும்னு ஏற்கனவே பிளான் பண்ணி வச்சிருக்கீங்களா?” ஆர்வமுடன் கேட்டாள் அந்த நிருபர்..
சிரித்தவன்.. “ஆக்சுவலா ஒரு சேலன்ஜே பண்ணி இருக்கேன் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட.. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை பத்தி..” புன்னகை மாறாமல் சொன்னான் அவன்..
அந்த பெண் நிருபர் அவன் சொன்னதை புருவம் உயர்த்தி கேட்கவும் சுந்தரியும் பாட்டியும் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து கண்ணை அகற்றாமல் அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதி