சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞

5
(12)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 15

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல? வேணும்னா அந்த பாட்டியை உங்க சித்தியை பாத்துக்க சொல்றேன்.. இந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுப்பா.. கல்யாணம் ஆகாத நீ உன் வீட்ல வயசு பொண்ணை வெச்சிருக்கே.. தப்பு பா சுந்தர்..”

சித்தப்பா சொல்ல சுந்தரி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்..

சுந்தரோ, “அப்பா.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. ஆனா அப்படியெல்லாம் சுந்தரிக்கு பதிலா பாட்டிக்கு அம்மா எல்லாம் செய்யட்டும்னு சொல்லி சுந்தரியை அனுப்ப முடியாது.. ” என்று சொல்ல இப்போதுதான் சுந்தரியின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது..

சுந்தருடைய சித்தப்பா சொன்னதை கேட்டு அவள் முகத்தில் ஒரு கலவரமே வெடித்திருந்தது.. இப்போது அவன் பேசியதை கேட்டதிலிருந்து சுந்தர் யார் தன்னை வெளியேற்ற சொன்னாலும்  அதை மறுத்துவிடுவான் என்று அவளுக்கு தைரியம் வந்தது..

“நான் ஏன் இப்படி சொல்றேன்னு உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்.. என்னை தப்பா நினைச்சுக்காதீங்க.. சுந்தரி பாட்டிக்கு இந்த வேலையெல்லாம் செய்ய யாரும் இல்லைங்கறதுக்காக ஒரு வேலையா நினைச்சு இதை செய்யல… சுந்தரி அவங்களோட சொந்த பாட்டிக்கு செய்ற மாதிரி இதை செஞ்சுகிட்டு இருக்காங்க.. வீட்ல அவங்க பாட்டி இருந்தா அவங்க எப்படி செய்வாங்களோ அதே மாதிரிதான் பாட்டியை பார்த்துக்கிட்டு இருக்காங்க.. அப்படி இருக்கும் போது அவங்க பாட்டிக்கு அவங்க எதுவும் செய்யக்கூடாதுன்னு நான் எப்படி சொல்ல முடியும்? அப்படி சொன்னா அது நியாயமும் கிடையாதுப்பா.. அப்படி நான் அவங்களை சொன்னேன்னா அவங்க எங்க இருக்க முடியுமோ அங்க வச்சு பாட்டியை பார்த்துக்கிறேன்னு சொல்லுவாங்க.. என்னால பாட்டியை நிச்சயமா அப்படி அனுப்ப முடியாது.. எனக்குன்னு யாருமே உறவுன்னு இல்லாதப்போ என் கூட இருந்த அந்த பாட்டிக்கு செய்யறது ஒரு பேரனா என்னோட கடமைன்னு நினைச்சு தான் நானும் இதெல்லாம் செய்றேன்.. அவங்களை என் சொந்த பாட்டியா தான் நினைக்கிறேன்.. அதனால சுந்தரியே பாட்டிக்கு செய்யட்டும்.. அது மட்டும் இல்லாம இப்பதான் நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கீங்கல்ல..? உங்க கூட தானே சுந்தரி இருக்க போறாங்க.. இப்போ நாங்க ரெண்டு பேரும் தனியா இந்த வீட்ல இல்லையே.. அதனால ஒரு பிரச்சனையும் வராது” சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்..

சுந்தரின் சித்தி “புரியுதுப்பா.. நீங்க ரெண்டு பேருமே அந்த பாட்டி மேல உயிரையே வச்சிருக்கீங்க… சுந்தரியே பாட்டிக்கு செய்யட்டும்.. நாங்க ரெண்டு பேரும் துணையா இருந்து பாத்துக்கறோம்.. உங்க சித்தப்பா ஏதோ புரியாம சொல்லிட்டாருப்பா..” என்றார்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நீங்க உலகம் தெரிஞ்சவங்க.. எங்களுக்கு தெரியாத சில விஷயங்களை நீங்க சொல்லும் போது அதை நாங்க கேட்டுக்கணும் தானே..?” 

“இவ்வளவு உயரத்துக்கு வந்தப்பறமும் எங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இன்னும் பொறுமையா அப்பா அம்மாவா நெனச்சு எங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்க இல்ல.. நீ தங்கமான புள்ளடா சுந்தர்..” என்று சொன்ன நடராஜன் கண்கலங்க அவனை ஆற தழுவிக் கொண்டார்..

சுந்தரிக்கோ சுந்தர் பேசியதை கேட்டு அவன் மேல் மேலும் மேலும் மதிப்பு உண்டாகியது..

“சரிங்கப்பா.. எனக்கு கார்மெண்ட்ஸ் போக டைம் ஆயிடுச்சு.. நான் கிளம்புறேன்.. சுந்தரி.. மாடியில இருக்கற அந்த ரூமுக்கு அவங்களை கூட்டிட்டு போங்க.. அவங்க அங்க தங்கிக்கட்டும்.. அவங்களுக்கு வேணும்ங்கறதெல்லாம் கொஞ்சம் பண்ணி கொடுக்க முடியுமா?”

“இதை நீங்க கேட்கணுமா? நான் அவங்களை நல்லா கவனிச்சுக்கிறேன்.. நீங்க போயிட்டு வாங்க.. ” என்றாள் சுந்தரி..

நேரே வந்து அவர்களுடைய பைகளை தூக்கியவள் “வாங்க மேடம்.. வாங்க சார்.. உங்களை ரூம்க்கு அழைச்சிட்டு போறேன்” 

அவர்கள் அவள் பின்னே சென்றார்கள்..

கார்மென்ட்ஸுக்கு வந்த சுந்தர் முதல் வேலையாக சுந்தரிக்கு துணி தைப்பதற்கான பொருட்களை அனுப்பி வைத்தான்..

அதன் பிறகு தன் அலுவலக அறைக்கு சென்றவன் ஷாலினியை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தான்..

பத்து மணி ஆகியும் ஷாலினி வராமல் போகவே “ஒரு வேளை இங்க வேலை செய்ய இஷ்டம் இல்லாம வரலையோ?” என்று யோசித்தவன் அவளை கைபேசி மூலம் அழைக்கலாமா என்று யோசித்து கைபேசியை எடுத்தவன் பிறகு ஏனோ வேண்டாம் என்று அந்த முடிவை கைவிட்டான்..

அடுத்த பத்து நிமிடங்களுக்கு பிறகு தன் அறை கதவை யாரோ தட்ட “எஸ் கம்மின்” என்றான்..

அப்போது ஷாலினி கருப்பு நிறத்தில் அவளுடைய அழகு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாய் அமையும் படி ஒரு உடையை அணிந்து கொண்டு “ஹாய் சுந்தர்” என்றபடி உள்ளே வந்தாள்..

“ஹலோ ஷாலினி.. யூ லுக் அமேசிங்.. ஆனா என்னோட ஒரு சின்ன சஜஷன் இருக்கு.. இங்க வேலை செய்றவங்களுக்கு இந்த மாதிரி டிரஸ் பண்றதை பார்த்து பழக்கம் இருக்காது.. இங்க ஆஃபீஸ்க்கு வரும்போது நீங்க வேற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தீங்கன்னா பெட்டரா இருக்கும்.. நம்ம எங்கேயாவது மீட்டிங்னு வெளில போகும்போது.. நம்ம சப்ளையர்ஸ் மீட் பண்ண போகும் போது.. க்ளையன்ட்ஸ் மீட் பண்ண போகும்போது.. நீங்க இந்த மாதிரி டிரஸ் பண்ணா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. சாரி.. நான் இப்படி உங்ககிட்ட சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க”

அவன் சொல்ல ஷாலினிக்கு எரிச்சல் கொடுத்தது அவன் பேச்சு..

“எவ்வளவு டிரெண்டியா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இருக்கேன்.. அதை அப்ரிஷியேட் பண்றதை விட்டுட்டு இவன் என்ன இப்படி பேசறான்”

பெருமூச்சு விட்டவள் பிறகு சமாளித்துக் கொண்டு சிரித்தாள்..

“எனக்கு புரியுது சுந்தர்.. இடத்துக்கு ஏத்த மாதிரி டிரஸ் பண்ண சொல்றீங்க.. ஓகே.. நாளைலிருந்து இங்க இருக்கிற லோ கிளாஸ் பீப்புள்க்கு ஏத்த மாதிரி சாரி இல்லன்னா சுடி போட்டுட்டு வரேன்..” என்று அவள் சொல்லவும் தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை அவள் லோ கிளாஸ் என்று குறிப்பிட்டது அவனுக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது..

ஆனால் அவள் அப்போதுதான் வந்திருக்கிறாள் என்பதால் தன் கைகளை இறுக்கி கோபத்தை அடக்கியவன் மேலும் பேசினான்..

“இன்னொரு விஷயம் நான் ரொம்ப பர்ட்டிக்குலரா இருக்கிற விஷயங்கள்ல ஒண்ணு பங்க்ச்சுவாலிட்டி.. நீங்க 10 மினிட்ஸ் லேட்டா வந்திருக்கீங்க.. இனிமே இப்படி பண்ணாதீங்க.. ஏன்னா என் கம்பெனியில் யாராவது லேட்டா வந்தாங்கன்னா நான் ரொம்ப ஸ்ட்ரிக்டா டீல் பண்ணுவேன்.. அவங்களை வேலை வாங்குற நாம நிச்சயமா அவங்களுக்கு எக்ஸாம்பிளா நடந்துக்கணும்… நம்மளே லேட்டா வந்தோம்னா அது ஒரு தப்பான மாடல் ஆயிடும் அவங்களுக்கு..” 

அவன் சொன்னதை கேட்டவள் “ஐயோ ஷாலினி.. உனக்கும் பங்ச்சுவாலிட்டிக்கும் ரொம்ப தூரம் ஆச்சே..” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு “சாரி சுந்தர்.. இன்னைக்கு லேட் ஆயிடுச்சு.. நாளையிலிருந்து இப்படி நடக்காது” என்றாள்..

“அதை விடுங்க.. நீங்க இன்னும் என் ப்ரொஃபைலை பார்க்கவே இல்லை.. என்னை இன்னும் வேலையில அப்பாயின்ட் பண்ணவே இல்ல.. அதுக்குள்ள மீட்டிங்க்கு எல்லாம் எந்த டிரஸ் போடணும்னு சொல்றீங்க.. அப்படின்னா..” என்று இழுக்க.. ” சரி.. உங்க ப்ரோஃபைல கொடுங்க” என்று சிரித்த படி சொன்னான்..

அவளும் அதை கொடுத்தவுடன் பார்த்தவன் “இம்ப்ரஸிவ்.. நல்லா இருக்கு ஷாலினி.. நீங்க இந்த நிமிஷத்திலிருந்து இந்த கம்பெனியோட காஸ்ட்யூம் டிசைனர் ஆயிட்டீங்க.. உங்களுக்கு உங்க பேமெண்ட்.. அப்புறம் உங்களோட வொர்க் டைமிங்ஸ்.. இது எல்லாமே சூப்பர்வைசர் கணேசன் சொல்லுவாரு.. வெல்கம் டு அவர் கம்பெனி.. உங்க டிசைன்ஸ்னால நீங்களும் வளர்ந்து எங்களையும் நல்லா வளர்த்து விடணும்னு உங்களுக்கு என்னோட பெஸ்ட் விஷ்ஷஸ்..” என்றான் தன் கையை நீட்டியபடி..

அவனோடு கையை குலுக்கியவளோ “ஓகே.. என்னோட சீட் எங்க இருக்கு” என்று அவளுக்கு கேட்க “ஒரு நிமிஷம்” என்றவன் அலுவலக தொலைபேசி எடுத்து மேற்பார்வையாளரை (சூப்பர்வைஸரை) அழைத்தான்..

கதவை தட்டி அனுமதி கேட்டு அங்கு வந்தவர் “சொல்லுங்க சார்..” எனவும் “மிஸ்டர் கணேசன்.. இவங்க நம்ம கம்பெனியோட காஸ்டியூம் டிசைனர்.. இப்பதான் அப்பாயின்ட் பண்ணி இருக்கேன்.. இவங்களுக்கு தனியா கேபின் ஃபிக்ஸ் பண்ணல.. அதனால இந்த ரூமுக்கு வெளியே சைடுல ஒரு டேபிளும் சேரும் இப்போதைக்கு போட்டு அவங்களுக்கு செட் பண்ணி கொடுத்துடுங்க.. அவங்களுக்கு ஒரு ஃபோன் கனெக்ஷன், சிஸ்டம் எல்லாம் ரெடி பண்ணி அந்த டேபிள்ல வச்சிருங்க.. இன்னைக்கு ஈவினிங்குள்ள இதெல்லாம் முடியணும்.. அப்புறம் இந்த வீக் என்ட்குள்ள இவங்களுக்கு ஒரு கேபின் கொடுத்துரலாம்..” 

ஷாலினியிடம் “சாரி ஷாலினி.. இப்போதைக்கு இந்த வீக் எண்ட் வரைக்கும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நெக்ஸ்ட் வீக்ல இருந்து உங்களுக்கு ஒரு கேபினை ஏற்பாடு பண்ண சொல்றேன்..” என்றான்..

“நோ ப்ராப்ளம் அட் ஆல் சுந்தர்.. ஐ கேன் வெயிட்.. நோ பிராப்ளம்.. என்னோட பிரயாரிட்டி( முதன்மையான விஷயம்) உங்களோட வொர்க் பண்றது மட்டும் தான்.. இந்த கம்ஃபர்ட்டு ( வசதிகள்) எல்லாம் செகண்டரி (இரண்டாம் பட்சம்) தான்..” என்றாள் ஷாலினி..

“தேங்க்யூ ஷாலினி.. நீங்க எவ்வளவு ஹம்பிளா ( பணிவாக) இருக்கீங்க.. நீங்க இப்போ கணேசனோட போயி நம்ம ஸ்டாஃப் எல்லாம் மீட் பண்ணுங்க.. அப்புறம் உங்க வேலைகள் எல்லாம் என்னென்னன்னு அவர் சொல்வாரு..  என்னென்ன மாதிரி ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் இப்ப நம்ம கார்மென்ட்ஸ்ல நடந்துகிட்டு இருக்கு.. அந்த ப்ராஜெக்ட்ஸ் பத்தின டீடெயில்ஸ் இதெல்லாம் அவர் சொல்வார்.. இதெல்லாம் கேட்டுட்டு நீங்க என் கேபின்லயே வந்து உட்கார்ந்துக்கலாம்… இன்னைக்கு உங்க டேபிளை செட் பண்ணிட்டு நாளையிலிருந்து உங்க இடத்திலருந்து நீங்க வொர்க் பண்ணலாம்.. வேற ஏதாவது டவுட்ஸ் இருக்கா உங்களுக்கு..?” என்று கேட்டான் சுந்தர்..

“அப்படியே இருந்தாலும் நான் மிஸ்டர்.கணேசன் கிட்ட கேட்டுக்கறேன் சுந்தர்.. தேங்க்யூ” என்றாள் ஷாலினி..

அதன் பிறகு கணேசனுடன் சென்று ஷாலினி அலுவலகத்தில் இருந்த அனைவரையும் சந்தித்து விட்டு அங்கு நடக்கும் வேலைகள் பற்றிய விவரங்களை அவரிடம் கேட்டு அறிந்தவள் மதியம் உணவு இடைவேளை வந்துவிட சுந்தரின் அறைக்கு வந்தாள்..

“எக்ஸ்க்யூஸ் மீ சுந்தர்..” என்று உள்ளே வந்தவளை “வாங்க ஷாலினி.. லஞ்ச் சாப்பிடலாமா?” என்று சுந்தர் கேட்க “நான் வெளியில போய் தான் சாப்பிடணும்.. இங்க கேன்டீன் ஏதாவது இருக்கா?” என்று கேட்டாள்..

“இன்னைக்கு நீங்க வரிங்கன்னு தெரியும்.. அதனால உங்களுக்கும் சேர்த்து தான் நான் வீட்டில இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன்.. எங்க வீட்ல சுந்தரின்னு ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க தான் சமையல் செஞ்சு கொடுத்திருக்காங்க.. நீங்க அவங்க சமையலை சாப்பிட்டு பாருங்க.. அப்புறம் நாளையில இருந்து உங்களுக்கும் ஒரு கேரியர் சாப்பாடு கொண்டு வர சொல்வீங்க என்னை..” அவன் பெருமையாக சொன்னான்..

“ஓ அப்படியா..? ஓகே .. அப்படின்னா நான் உங்களோடயே சாப்பிடுறேன்” 

இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.. 

சுந்தர் எழுந்து அவளுக்கு ஒரு தட்டை வைத்து தானே உணவை பரிமாறினான்.. ஒருவாய் எடுத்து வாயில் போட்டவளுக்கு புரை ஏறவும் அருகில் இருந்த தண்ணீர் எடுத்து வந்து தலையில் தட்டி தானே அவளுக்கு தண்ணீரை கொடுத்தான்..

“தேங்க்ஸ் சுந்தர்..” என்று அவனை பார்த்து புன்னகைத்தவளிடம் “இட்ஸ் ஓகே” என்று சொன்னவன் “மெதுவா சாப்பிடுங்க..” என்று சொல்லிவிட்டு தானும் போய் அமர்ந்து சாப்பாட்டை சாப்பிட துவங்கினான்..

இரண்டு வாய் சாப்பிட்டவள் “வாவ்.. செமையா இருக்கு சாப்பாடு.. உண்மையிலேயே ரொம்ப நல்ல குக்தான்.. அவங்க நம்பர் கொடுக்க முடியுமா? எங்க வீட்ல இருக்குற குக் ஒழுங்காவே சமைக்க மாட்டேங்குறாரு.. எங்க வீட்லயும் அவங்க வந்து சமைச்சா நல்லா இருக்கும்.. அவங்க எவ்வளவு கேட்டாலும் நான் பே பண்றேன்” என்று அவள் கேட்க சுந்தருக்கு ஏனோ அவள் சுந்தரியை அவள் வீட்டில் வேலை செய்ய அழைத்தது மனதுக்கு பிடிக்கவில்லை..

“இல்லை.. அவங்க ரெகுலர் குக் கிடையாது.. அவங்க எனக்காக எங்க வீட்டில மட்டும் சமைக்கிறாங்க.. ஒரு பாட்டி தான் முன்னாடி சமைச்சுக்கிட்டு இருந்தாங்க.. அவங்க உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையாயிட்டதனால அவங்களுக்கு பதிலா எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக சமைக்க வந்தவங்க இவங்க.. அதனால அவங்க வேற யார் வீட்டிலும் போய் சமைக்க மாட்டாங்க..” 

சுந்தருக்கு ஏனோ அவளை இன்னொரு வீட்டுக்கு சமையல் வேலை செய்ய அனுப்புவதில் இஷ்டமில்லை..

“ஓ.. ஐ அம் சாரி.. ஒருவேளை அவங்க உங்க ரிலடிவ்வா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அந்த பாட்டிக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க.. அவங்க வேலை பண்ண முடியாததனால அவங்களுக்கு பதிலா ஹெல்ப் பண்றதுக்காக இந்த வேலையை செய்ய வந்தாங்க.. அவ்வளவுதான்..” 

“ஓ அப்படின்னா இந்த குக்கிங் அவங்க ஹாபியா பண்றாங்களா? என்னை மாதிரி ஏதாவது ஒரு பிசினஸ் மேனோட பொண்ணா அவங்க?” 

ஷாலினி கேட்க “இல்ல இல்ல…. அப்படிலாம் இல்ல.. அவங்க ஒரு சாதாரண குடும்பத்தில இருந்து வந்தவங்க தான்.. இன்ஃபெக்ட் அந்த பாட்டி வீட்டு பக்கத்து வீட்ல இருந்தவங்க..” என்றான் அவன்..

“அப்புறம் என்ன சுந்தர்? அவங்க இவ்ளோ நல்லா சமைக்கிறாங்கன்னா அவங்க இன்னும் நிறைய பேர் வீட்ல சமைக்கலாமே.. அதனால அவங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் இல்லையா..? புவர் பீப்புள் தானே..? பணம் வருதுன்னா எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வாங்க.. பணம் இல்லாதவங்களுக்கு வாழ்க்கையில இந்த வேலை தான் செய்யணும் இதை செய்யக்கூடாது அப்படிங்கற சாய்ஸ் எல்லாம் இருக்க முடியாதே.. அவங்களுக்கு அடுத்த வேளை சாப்பிடணும்னா எந்த வேலையா இருந்தாலும் செஞ்சு தான் ஆகணும்.. நீங்க வேணா நீங்க கொடுக்கிற சம்பளத்தை விட நான் டபுளா கொடுப்பேன்னு சொல்லிப் பாருங்க.. எங்க வீட்டு வேலைக்கு நாக்கை தொங்க போட்டுட்டு வருவாங்க.. பணம்கறது ரொம்ப பவர்ஃபுல்.. பணத்தை விட்டு எறிஞ்சா நம்ம காலடியில இவங்க எல்லாம் காலத்துக்கும் விழுந்து கிடப்பாங்க” ஷாலினி சொல்ல அதைக் கேட்ட சுந்தருக்கோ அதிரடியாக கோவம் வந்தது அவள் வார்த்தைகளில்..

கைகள் இரண்டையும் இறுக்கியவன் பல்லை கடித்துக் கொண்டு “ஷாலினி.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று கத்தினான்.. 

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு

செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!