சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 20 ❤️❤️💞

4.8
(16)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 20

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

ஷாலினி சுந்தரியை அவமானப்படுத்துவது போல் பேசுவதை கேட்ட சுந்தர் அவள் பக்கம் திரும்பி “ஷாலினி.. சுந்தரி கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுங்க..” என்று கத்தினான்..

“இல்லை சுந்தர்.. ஆக்சுவலா இந்த மாதிரி காஸ்ட்யூம் டிசைன் பண்றதுக்கு தானே என்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்கீங்க.. இவ துணி ஸ்டிச் பண்ற ஒரு டெய்லர் தானே.. இவ அவ வேலையை பார்க்க வேண்டியது தானே..? எதுக்கு இந்த மாதிரி யூஸ்லெஸ் டிசைன் எல்லாம் செஞ்சு அதை துணில தெச்சு நம்ம நேரத்தையும் பணத்தையும் வேஸ்ட் பண்ணனும்..? சொல்லுங்க..” ஷாலினி கேட்க சுருக்கென தைத்தது சுந்தரிக்குள் அந்த வார்த்தைகள்..

அவளுடைய முக மாற்றத்தை கவனித்த சுந்தர் “ஷாலினி.. ஒரு வேளை உங்களுக்கு இந்த டிசைன் புடிக்கலைன்னா அதை சொல்ற விதம்னு ஒன்னு இருக்கு.. உங்களுக்கு பிடிக்கலங்கறதை நாசூக்கா சொல்லி இருக்கலாம்.. ஆனா என்ன விஷயம்னா இந்த டிசைன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. நிச்சயமா இந்த டிசைன் மார்க்கெட்ல நல்லா போகும்..” 

சுந்தர் சொன்னதை கேட்டு “சுந்தர்.. யூ ஆர் இன்சல்டிங் மீ” என்றாள் ஷாலினி கோவமாக..

“சுந்தரி செஞ்ச டிசைன் நல்லா இருக்குன்னு சொன்னது எப்படி உங்களை அவமானப் படுத்துற மாதிரி ஆகும் ஷாலினி..?” 

சுந்தர் கேட்க “நான் உங்க கம்பெனியோட காஸ்டியூம் டிசைனர்.. உங்க வீட்ல வேலை செய்ற ஆஃப்டர்ஆல் ஒரு வேலைக்காரி முன்னாடி நான் நல்லா இல்லைன்னு சொன்ன ஒரு ஒர்க்கை நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்? என்னை அவமானப்படுத்துறீங்கன்னு தானே அர்த்தம்?”  ஷாலினி படபடவென பொறிய ஆரம்பித்தாள்..

ஆனால் ஷாலினி சொன்ன “ஆஃப்டர்ஆல் வேலைக்காரி” என்ற சொல் சுந்தரின் மனதில் முள்ளாய் தைத்தது.. 

“ஷாலினி.. ஐ வார்ன் யூ.. நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருந்தேன் சுந்தரி பாட்டிக்கு இந்த மாதிரி ஆனதுனால ஒரு ஹெல்ப்பா தான் இந்த வேலையை செஞ்சு கிட்டு இருக்காங்க.. அப்படியே இருந்தாலும் அதென்ன ஷாலினி.. ஆஃப்டர்ஆல் வேலைக்காரி.. அவங்க ஒரு வீட்ல வேலை செய்யறது ஒன்னும் அவ்வளவு மோசமான விஷயம் இல்லை.. அவங்க சமயத்துக்கு பாட்டிக்கு பதிலா எனக்கு உதவி செய்ய வந்தவங்க.. இனிமே சுந்தரி கிட்ட இந்த மாதிரி ஹார்ஷா அவங்க மனசு நோகுற மாதிரி பேசாதீங்க..”

ஷாலினியிடம் சொன்னவன் சுந்தரி பக்கம் திரும்பி “சாரி சுந்தரி.. ஷாலினி சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவங்க பேசுனதை மறந்துடுங்க.. ஆமா இந்த டிசைனை எப்படி போடலாம்னு இருக்கீங்க? இப்படியே பிரிண்டா போட போறீங்களா இல்ல வேற ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா? டிசைன் ரொம்ப நல்லா இருக்கு..” என்று சுந்தரியிடம் நிஜமான ஆர்வத்துடன் கேட்டான் சுந்தர்..

சுந்தரியோ தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியை தயக்கத்துடன் பார்த்தவள் “அது… இந்த டிசைனை எம்பிராய்டரி போட்டு பண்ணலாம்னு இருக்கேன்.. இது சின்ன குழந்தைகளுக்கான ஃபிராக்.. அதனால எம்பிராய்டரி மெலிசா நூலில போட்டு உள்ள ஒரு லைனிங் கிளாத் குடுத்துட்டோம்னா குழந்தைகளுக்கு உறுத்தாம இருக்கும்..” என்றாள் சுந்தரி தயங்கி தயங்கி..

“ஆஸம் சுந்தரி.. எல்லா ஆங்கிள்லயும் யோசிச்சு இருக்கீங்க.. குழந்தை ஃப்ராக்கில போடுற மாதிரி அழகா ஃப்ளவர்ஸ் பட்டாம்பூச்சின்னு உங்க டிசைன் ரொம்ப அழகா இருக்கு.. நிச்சயமா இந்த சாம்பிளை யூஸ் பண்ணி ஃப்ராக் தைக்க சொல்லி நம்ம கடையில ஷோகேஸ்ல மாட்டிடறேன்” என்றான் சுந்தர்..

“திஸ் இஸ் டூ மச் சுந்தர்.. உலகம் டிஜிட்டலா எங்கேயோ போயிட்டு இருக்கு.. நீங்க இன்னும் கையால போடுற எம்பிராய்டரி.. பட்டாம்பூச்சி ஃப்ளவர்ஸ்னு பேசிக்கிட்டு இருக்கீங்க.. சிஸ்டம்ல அழகா ஒரு டிசைனை போட்டு அந்த ஃபிராக்ல பிரிண்ட் பண்ணி வெஸ்ட்டனைஸ்டா குடுக்குறதை விட்டுட்டு இது என்ன லோக்கல் டிசைன் போட்டு ஃபிராக் தைக்க போறேன்னு சொல்றீங்க?” என்று கேட்டாள் ஷாலினி..

“ஓகே ஷாலினி.. நீங்க சொல்றதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்.. உங்களுக்கு இந்த டிசைன் நல்லா போகாதுன்னு தோணுது.. இல்லையா? உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. நாளைக்கு நீங்க வரும்போது ஒரு சாம்பிள் கிளாத் இங்கே இருந்து எடுத்துட்டு போயி உங்களோட ஐடியால ஒரு டிசைன் பண்ணி எடுத்துட்டு வாங்க.. ஒரு 10 ஃப்ராக்ல அந்த டிசைன் வச்சு ஸ்டிச் பண்ணுவோம்.. சுந்தரி கொடுத்திருக்கிற டிசைன் வச்சு 10 ஃப்ராக் ஸ்டிச் பண்ணுவோம்.. நான் என் ஷோரூம்ல ரெண்டுத்தையுமே ஷோகேஸ்ல வைக்கிறேன்.. பாக்கலாம்.. ஒரு வாரம் வெயிட் பண்ணி எது நல்லா சேல்ஸ் ஆகுதுன்னு பார்க்கலாம்.. இந்த சேலஞ்ச் எடுத்துக்க நீங்க ரெடியா?” என்று கேட்டான் சுந்தர்..

“இன்ட்ரஸ்டிங்.. என்ன.. இந்த சுந்தரியோட நான் போட்டி போட போறதை நினைச்சா தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.. ஆனா நான் இந்த சேலஞ்சை எடுத்துக்கிறேன்.. என்னோட டிசைனுக்கு முன்னாடி இவளோட டிசைன் எவ்வளவு கேவலமா இருக்குன்னு ப்ரூவ் பண்றதுக்காகவே நான் இந்த சாலென்ஜ்ஜை எடுத்துக்கிறேன்” 

அவள் சொல்ல மறுபடி மறுபடி அவள் சுந்தரியை கேவலமாக பேசுவது சுந்தருக்கு வெறுப்பை தந்தது..

இருந்தாலும் அப்போதைக்கு அதைப் பற்றி பேசுவதை தவிர்த்தவன்.. “ஓகே அப்புறம் சுந்தரி..” என்று சுந்தரியை பார்த்து அழைத்தவனிடம் “சொல்லுங்க சார்” என்றாள் அவள்..

“நீங்க இந்த கிளாத்ல அந்த எம்பிராய்டரியையும் போட்டு நாளைக்கு நான் ஆஃபீஸ் போகும் போது கொடுத்து அனுப்புங்க.. நான் இதையும் எடுத்துட்டு போய் இதே மாதிரி எல்லாரையும் ஸ்டிச் பண்ண சொல்றேன்” என்றான் சுந்தர்..

“நாளை காலைலக்குள்ள நீங்க கேட்ட அந்த பத்து ஃப்ராக்கை நானே தெச்சு கொடுத்துடறேன் சார்.. எல்லாத்தையும் எம்பிராய்டரி போட்டு கொடுத்துடறேன்…” என்றாள் சுந்தரி.. 

ஷாலினி பேசியது எதையுமே மனதில் எடுத்துக் கொள்ளாமல் மறுநாள் அத்தனை ஃப்ராக்குகளையும் தைத்து எம்ப்ராய்டரி போட்டுக் கொடுக்கிறேன் என்று அவள் சொன்னது அவனுக்கு சுந்தரி மீது ஒரு மதிப்பை உண்டாக்கியது..

இவர்கள் பேசுவதையெல்லாம் பார்த்து எதிரே அமர்ந்திருந்த மேகலாவுக்கும் நடராஜனுக்கும் ஷாலினி மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.. ஆனால் சுந்தரின் நிறுவனத்தில் அவள் வேலை செய்பவள் என்பதால் தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பொறுமையாய்..

சுந்தர் அவளுக்கு தகுந்த பதிலடி கொடுத்துக் கொண்டிருக்க அதை பார்த்து இதழுக்குள் தங்கள் சிரிப்பை மறைத்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்..

“ஓகே சுந்தர்.. அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள் ஷாலினி..

“கெளம்பலாம் ஷாலினி.. அதுக்கு முன்னாடி பாட்டியை பாத்துட்டு போலாமா?” என்றான் சுந்தர்..

“ஷ்யூர்.. பாத்துட்டு போலாம் சுந்தர்..” என்றவள் பேருக்காக பாட்டியின் அறைக்குள் நுழைந்து சுந்தர் பாட்டியை அறிமுகம் செய்து வைக்க “ஹலோ பாட்டி.. சுந்தர் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காரு.. நீங்கன்னா அவருக்கு ரொம்ப உயிர்ன்னு சொல்லி இருக்காரு.. அதனாலதான் உங்களோட அந்த சின்ன வீட்ல இந்த ஜென்மத்துக்கும் கிடைக்காத வசதிகள் எல்லாம் உங்களுக்கு இங்க பண்ணி கொடுத்து ஆசையா வச்சி இருக்கிறார்.. எப்படி? இதெல்லாம் நல்லா சௌரியமா இருக்கா பாட்டி?” என்று அவள் கேட்ட கேள்வி பாட்டிக்கும் பிடிக்கவில்லை சுந்தரிக்கும் பிடிக்கவில்லை..

சுந்தரோ வெளியே சுந்தரியிடம் வேலைக்காரி என்று சொல்லி அவ்வளவு கோபமாக பேசியவள் பாட்டியிடம் நல்ல விதமாக பேசியது கேட்டு யோசனையில் இருந்தான்.. அதனால் அவள் பேச்சில் மறைமுகமாக பாட்டியின் ஏழ்மை நிலையை குத்தி காட்டியதை அவன் கவனிக்கவில்லை..

பாட்டியோ “என் வீட்ல இருந்தாலும் சரி.. இந்த வீட்ல இருந்தாலும் சரி.. இந்த சவுரியமெல்லாம் ஒரு விஷயமே இல்லம்மா.. சுந்தரோட அன்பு தான் முக்கியமான விஷயமே.. இந்த வீட்ல அது எனக்கு கிடைக்குது.. அதனாலதான் நான் இங்க அவனோட அன்புக்கு கட்டுப்பட்டு இருக்கேன்..” என்றாள்..

அவர் சொன்ன பதிலில் மூக்குடைந்து போன ஷாலினி “ஓகே சுந்தர்.. அப்ப கிளம்பலாமா? என்னை எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடறீங்களா?” என்று கேட்க “வாங்க போலாம்” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அவள் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் சுந்தர்..

கார் அவள் வீட்டை நோக்கி போய் கொண்டு இருக்கும்போது வழியில் திடீரென ஷாலினி சுந்தரிடம் “நிறுத்துங்க.. நிறுத்துங்க.. ஒரு நிமிஷம்..” என்றாள்..

“என்னாச்சு ஷாலினி?” என்று சுந்தர் கேட்க “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொன்னவள் கார் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.. 

அங்கே ஒரு வயதான அம்மாள் சாலையை கடக்க முடியாமல் சாலையின் ஒரு புறத்தில் நின்று கொண்டிருக்க நேரே சென்று அவர் கையை பிடித்தவள் அவர் காதில் ஏதோ சொல்லி அந்த சாலையை அவர் கடக்க உதவி செய்துவிட்டு எதிர்ப்புறம் வந்ததும் அந்த அம்மாள் நன்றி சொல்ல சிரித்து விட்டு மறுபடியும் வந்து காரில் ஏறினாள்..

“பாவம் அந்த அம்மா.. ரொம்ப நேரமா ரோடு கிராஸ் பண்றதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க.. அதை நீங்க கொஞ்சம் ஸ்லோவா வந்ததால நான் கவனிச்சிட்டேன்.. அவங்களுக்கு ரோட் கிராஸ் பண்ண ஹெல்ப் பண்ண தான் வண்டியை நிறுத்த சொல்லி உங்ககிட்ட சொன்னேன்..” என்று ஷாலினி சொல்ல “வாவ்.. ஷாலினி.. எவ்வளவு ஹெல்ப்பிங் மைண்ட் உங்களுக்கு.. ப்ளீஸ் எப்பவுமே இதை கண்டினியூ பண்ணுங்க..” என்று சொன்னவன் வண்டியை எடுத்து அவள் வீட்டுக்கு சென்றான்..

“நிச்சயமா சுந்தர்.. இந்த மாதிரி மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்” என்றாள் அவள்..

ஒரு ஒரு நேரம் அவள் ஒவ்வொரு மாதிரி நடப்பது எண்ணியவனுக்கு “இவளை பத்தி சரியாவே புரிஞ்சுக்க முடியலையே.. சில நேரம் எல்லாரையும் ரொம்ப மட்டம் தட்டி பேசுறா.. சில நேரம் திடீர்னு விழுந்து விழுந்து உதவி செய்யறா மத்தவங்களுக்கு.. இவ எப்படிபட்டவன்னு தெரியலையே..” புரியாத புதிராய் இருந்தது அவள் நடவடிக்கை..

யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தவன் அவள் வீடு வந்து விட்டது என்று அவள் சொன்னவுடன் “ஓகே நாளைக்கு பாக்கலாம் ஷாலினி.. அப்புறம் உங்க டிசைனை கொண்டு வர மறந்துடாதீங்க” என்று சுந்தர் சொல்லவும் “நிச்சயமா யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்” என்று சொன்னவள் இறங்கவும் “வாங்க சுந்தர் வீட்டுக்குள்ள வந்துட்டு போங்களேன்..” என்றாள்..

“இன்னொரு நாள் வரேனே ஷாலினி..” என்று அவன் சொல்ல “அது எப்படி? வீட்டு வாசல் வரைக்கும் வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போவீங்க? வாங்க வாங்க..” என்று சொல்லி அவனை கை பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்..

அவர்கள் உள்ளே நுழையும்போது வரவேற்பறையில் கதிரையில் மாதேஷ் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தான்..

“ஏய்..சுந்தர்.. ஹாய் ஷாலினி.. இவளை கொண்டு விட வந்தியா?” என்று கேட்க “ஆமா.. ஷாலினி இன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க.. அதான் மறுபடியும் கொண்டு வந்து அவங்க வீட்ல விட்டுடலாம்னு கூட்டிட்டு வந்தேன்..” என்றான் சுந்தர்..

“உக்காருங்க சுந்தர்.. உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்றேன்..” என்று ஷாலினி அவனிடம் சொல்லிவிட்டு உள்புறமாக ” அன்னம்மா..!! குடிக்க ரெண்டு ஜூஸ் கொண்டு வா..” என்று குரல் கொடுத்தாள்..

“ஐயோ.. ஷாலினி இருக்கட்டும்.. இப்பதான எங்க வீட்ல காபி குடிச்சிட்டு வந்தோம்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் கிளம்புறேன்..” 

சுந்தர் சொல்ல “என்ன சுந்தர்..? முதல் முதல்ல எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க.. எப்படி ஒண்ணுமே சாப்பிட கொடுக்காம அனுப்புறது.. ?”

“ஐ அம் வெரி சாரி ஷாலினி.. இன்னொரு வாட்டி வரும்போது சாப்பாடே சாப்பிடுறேன் உங்க வீட்டில..” என்றான் சுந்தர்..

அதற்குள் அன்னம்மா பழச்சாறு கொண்டு வந்திருக்க ஷாலினி “அன்னம்மா.. உன்னோட ஜூஸ்ல இருந்து இன்னைக்கு தப்பிச்சுட்டாரு சுந்தர்.. ஆனா இன்னொரு நாள் சாப்பாடு சாப்பிட்டு அவஸ்தைப்பட வரேன்னு சொல்லி இருக்காரு.. நீ சாப்பாடு பண்ற லட்சணம் தான் எனக்கு தெரியுமே” என்று அவள் பேச சுந்தருக்கோ அவ்வளவு வயதான அம்மாவை அவள் ஒருமையில் மரியாதை இல்லாமல் நீ வா போ என்று அழைத்ததே நெருடலாக இருந்தது..

“அப்படில்லாம் ஒன்னும் இல்ல ஷாலினி.. அன்னம்மா.. நான் நிச்சயமா உங்க சாப்பாட்டை சாப்பிடுறதுக்கு ஒரு நாள் வரேன்.. இவ்ளோ வயசானவங்க நீங்க.. உங்க சமையல் நல்லா இருக்கும்னு நான் நம்புறேன்..” 

அவன் சிரித்துக் கொண்டே கூற அந்த அம்மாள் “நிச்சயமா வாங்க தம்பி.. என் கையால உங்களுக்கு மணக்க மணக்க வித விதமா சமைச்சு போடறேன்” என்றார்..

“ஓகே ஷாலினி.. அப்ப நான் கிளம்புறேன்..” என்றவன் அங்கிருந்து கிளம்பி காருக்கு வந்தான்.. கார் கதவை திறந்தவன் அதன் உள்ளே ஷாலினியின் கைப்பையை அவள் மறந்து விட்டுப் போய் இருப்பதை அறிந்து அதை எடுத்துக் கொண்டு மறுபடியும் வீட்டிற்குள் சென்றான்..

அப்போது ஷாலினியிடம் மாதேஷ் “இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட எல்லாம் எதுக்கு சுத்திகிட்டு இருக்க? அவன் எவ்வளவு கருப்பா இருக்கான் பாத்தியா? அவனோட நீ சேர்ந்து வந்தா எது கூடவோ  எதுவோ வர மாதிரி இருக்கு.. உன்னோட ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி என்னை மாதிரி ஆளுங்க கூட பழகு.. பேசு..” என்று ஷாலினியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..

எப்போதும் போல மாதேஷ் தன்னை பற்றி தவறாக சொல்கிறான் என்று எண்ணியவன் இன்னமும் அவன் கொஞ்சம் கூட மாறவில்லையே என்று சிறிது வருந்தினான்.. ஆனால் ஷாலினி சொன்ன பதிலில் அப்படியே திக்குமுக்காடி நின்றான் சுந்தர்..

ஷாலினி “என்ன மாதேஷ்.. இப்படி சொல்ற? அவரு கருப்பா இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்காரு? அவரு உடம்பை எவ்வளவு ஃபிட்டா வச்சிருக்கிறாரு தெரியுமா?  அவரோட பிசினஸ் டேக்டிக்ஸ் எல்லாம் எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா? சுறுசுறுன்னு ஆக்டிவ்வா பிசினஸ் நடத்துறாரு… நிறைய பேருக்கு ஹெல்ப் பண்றாரு.. அவர் கருப்பா இருக்கிறதும் அவருக்கு ஒரு அழகை தான் கொடுக்குது.. என்னை கேட்டா ஒருவேளை எனக்கு இப்படி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கற சான்ஸ் கிடைச்சா அதை மிஸ் பண்ணவே மாட்டேன்.. உடனேவே ஓகே சொல்லிடுவேன்..” என்றாள் ஷாலினி..

தொடரும்…

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்

து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!