சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 21 ❤️❤️💞

4.7
(17)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 21

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

ஷாலினி மாதேஷ்க்கு சொன்ன பதிலில் அப்படியே திக்குமுக்காடி நின்றான் சுந்தர்..

ஷாலினி “என்ன மாதேஷ்.. இப்படி சொல்ற? அவரு கருப்பா இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்காரு? அவரு உடம்பை எவ்வளவு ஃபிட்டா வச்சிருக்கிறாரு தெரியுமா?  அவரோட பிசினஸ் டேக்டிக்ஸ் எல்லாம் எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா? சுறுசுறுன்னு ஆக்டிவ்வா பிசினஸ் நடத்துறாரு… நிறைய பேருக்கு ஹெல்ப் பண்றாரு.. அவர் கருப்பா இருக்கிறதும் அவருக்கு ஒரு அழகை தான் கொடுக்குது.. என்னை கேட்டா ஒருவேளை எனக்கு இப்படி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கற சான்ஸ் கிடைச்சா அதை மிஸ் பண்ணவே மாட்டேன்.. உடனேவே ஓகே சொல்லிடுவேன்..” என்றாள் ஷாலினி.. 

“என்ன..? சுந்தரை கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று மாதேஷ் கேட்க “நான் அப்படி சொல்லல..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் சுந்தர் தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்..

மாதேஷ் சட்டென அதிர்ச்சி அடைந்து எழுந்து நிற்க “நீ இன்னும் அப்படியே தான் இருக்க மாதேஷ்.. மாறவே இல்ல.. எப்பவும் போல தோல் நிறத்தையும் அவங்க பிறந்து வளர்ந்து வந்த பேக்ரவுண்ட்டையும் வச்சி ஒரு மனுசனை எடை போடுற.. அது ரொம்ப தப்புன்னு உனக்கு எவ்வளவு தரம் சொல்லி இருக்கேன்.. ஆனா உனக்கு புரிய மாட்டேங்குது.. ஆனா ஒரு சந்தோஷம் என்னன்னா உனக்கு ஃப்ரெண்டா இருக்கிற ஷாலினி நெறத்தை வெச்சும் என்னோட பேக்ரவுண்ட் வெச்சும் எடை போடாம என்னோட பர்சனாலிட்டி என்னோட பிசினஸ்ல என்னோட திறமை இதை வெச்சு என்னை எடை போடுறாங்க.. தேங்க்யூ ஷாலினி..” என்றவன் தன் புருவத்தை நீவிக்கொண்டான்..

“இதுவரைக்கும் எந்த பொண்ணும் என்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே இல்ல.. நீங்க தான் அப்படி சொன்ன முதல் பொண்ணு.. ரொம்ப தேங்க்ஸ்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. என் உருவத்தை வெச்சு இல்லாம என் உழைப்பை வெச்சு என்னை ஒருத்தர் எடை போடுறாங்கன்னு… அந்த விஷயத்துல நீங்க உங்க அப்பா மாதிரியே  இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. ஆனா இதே மாதிரி தான் சுந்தரியையும் அவங்க திறமையை வெச்சு எடை போடுங்க.. தயவு செஞ்சு அவங்க வேலையை வச்சு அவங்க தரத்தை நிர்ணயிக்காதீங்க.. அப்படி நீங்க சுந்தரியை பத்தி உங்க கண்ணோட்டத்தை கொஞ்சம் மாத்திக்கிட்டீங்கன்னா நான் இன்னும் சந்தோஷப்படுவேன்..” என்றான்.. 

ஒரு பெருமூச்சை விட்டவன், “எனிவேஸ்.. அந்த சேலஞ்ச் இன்னும் வேலிடா தான் இருக்கு.. நீங்க நாளைக்கு வரும்போது உங்க டிசைன் எடுத்துட்டு ஆஃபீஸ் வந்துருங்க.. பட் இப்ப நீங்க பேசுனது கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு.. யூ மேட் மை டே.. அப்புறம் உங்க ஹேண்ட் பேக்கை மறந்து வெச்சிட்டீங்க கார்லயே.. அதை கொடுத்துட்டு போலாம்னு தான் நான் வந்தேன்.. இந்தாங்க..”

அவள் கைப்பையை அவளிடம் கொடுத்தவன் அங்கிருந்து சந்தோஷமாக கிளம்பி வந்தான்..

சுந்தர் கார் கிளம்பியதை அறிந்த மாதேஷ் அந்த வீட்டின் வாயில் கதவை அடைத்து விட்டு வந்து ஷாலினியை இழுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டான்..

“ஐ மிஸ்ட் யூ பேபி.. இப்பல்லாம் நீ என்னோட இருக்குற நேரமே ரொம்ப குறைஞ்சு போச்சு… அந்த சுந்தரோட தான் நிறைய நேரம் சுத்திக்கிட்டு இருக்கே.. உன்னை இவ்வளவு நேரம் பார்க்காம என்னால இருக்கவே முடியல..” என்று சொன்னவன் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டு இருந்தான்..

“என்ன பண்றது? இப்பதானே நம்ம நினைச்ச மாதிரியே எல்லாம் போயிட்டு இருக்கு..” 

அவள் சொன்னதை கேட்டவன் சத்தமாக சிரித்தான்.. அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரிந்து கொண்டவள் அவளும் சேர்ந்து சிரிக்க “ஏய் மாதேஷ்.. சுந்தர் ஏண்டா இவ்வளவு ஸ்டுப்பிட்டா இருக்கான்? எப்படி எப்படி..?  மாதேஷ் நீ இன்னும் மாறல.. ஆனா உன் ஃப்ரெண்டு என் நெறத்தை வச்சு என்னை எடை போடல..” என்று சிரித்து கேலியாக அவன் பேசியது போலவே பேசி காட்டினாள் ஷாலினி..

“இவன் இவ்ளோ மொக்கை பீசா இருப்பான்னு நான் நினைக்கவே இல்ல.. சரியான லாகிருதம் புக்கு மாதிரி இருக்கான்டா அவன்.. தனக்குன்னு சில ரூல்ஸ் ரெகுலேசன்ஸ் எல்லாமே வச்சிருக்கான்.. ஆனா நான் சொன்னதுல ஒன்னு மட்டும் உண்மை.. அவன் பிசினஸ் டாக்டிக்ஸ் எல்லாம் ரொம்ப பக்காவா இருக்கு.. சூப்பரா பிசினஸ் மைண்ட்ல திங் பண்ணி செமையா அவன் புரோடக்ட்ஸை எல்லாம் கிரியேட் பண்றான்.. அவன் கிட்ட இருந்து நம்ம நிறைய கத்துக்கணும் மாதேஷ்.. அவன் பணத்தை எடுத்துக்கிட்டா மட்டும் போதாது.. அவனோட இந்த கிரியேட்டிவிட்டியையும் நம்ப கத்துகிட்டு வரணும்..” என்றாள் ஷாலினி..

“நீ மட்டும் அந்த பணத்தை வாங்கிட்டு வா.. அப்புறம் என் பிசினஸ் டாக்டிக்ஸ் எந்த லெவலுக்கு இருக்குன்னு பாரு..” 

மாதேஷ் சொல்ல “ஐயே.. ரொம்ப ரீல் ஓட்டாத.. உன் பிசினஸ் டாக்டிக்ஸ்.. உன் பிசினஸ் மைண்ட் பத்தி எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்..” 

அவன் தலையில் தட்டியவள் “இந்த இடத்துல ஒன்னும் கிடையாது.. சூப்பர் காலி.. நம்மகிட்ட ஒரு வீக்னஸ் இருந்தா அதை ஒத்துக்கணும்.. எதிராளியோட ஸ்ட்ரென்த்தை காலி பண்ணிட்டு வீக்னெஸ்ஸை அட்டாக் பண்ணணும்.. அதை விட்டுட்டு இந்த மாதிரி ஒன்னும் இல்லாததை வெச்சுக்கிட்டு எல்லாம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டா ரொம்ப நாள் அதை மெயின்டைன் பண்ண முடியாது.. சுந்தரோட ஸ்ட்ரென்த்.. அவனோட பிசினஸ்.. அவனோட வீக்னெஸ் அவனோட லைஃப் பார்ட்னர் பத்தின அவனோட கனவு” என்றாள் ஷாலினி..

“என்னடி.. நீ பேசுற பேச்சை பார்த்தா மொத்தமா அவன் பக்கம் சாய்ஞ்சிடுவ போல இருக்கு.. அந்த மாதிரி ஏதாவது தாட் இருந்தது இப்பவே மறந்துடு.. அப்படி ஏதாவது நடந்ததுன்னா உன்னை கொன்னுடுவேன் நானு..” என்றான் மாதேஷ்..

“டேய்.. அப்படித்தான் எனக்கு பண்ணனும்னா நான் இவ்வளவு தூரமே வந்து இருக்க மாட்டேன்.. முதல் நாளே அவன் கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணிட்டு இத்தனை நேரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வீட்டுக்கு போயிருப்பேன்.. மோரோவர் அந்த மாதிரி கருப்பா ஒரு ஆள் கூட அதுவும் ஸ்டேட்டஸ், சொசைட்டி இந்த வித்தியாசம் எல்லாம் பார்க்காம எல்லாரோடயும் அப்படியே இழைஞ்சுகிட்டு பழகுறான்.. ஃபர்ஸ்ட் என்னால அவனை டாலரேட்டே பண்ண முடியல.. ஏதோ இந்த அசைன்மென்ட் முடிக்கிற வரைக்கும் அவனை பொறுத்துக்கிட்டு இருக்கேன்.. அவ்ளோதான்..” என்றாள் ஷாலினி..

அவன் அவளை இன்னும் இறுக்க அணைத்து “எனக்கு தெரியும் பேபி உன்னை பத்தி.. நீ என்னை தவிர யாரையும் நினைக்க மாட்டே..” 

“அப்புறம் பிசினஸ்ல நீ எப்படியோ.. இந்த மாதிரி குறுக்கு வழி பிளான் பண்றதுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா.. அந்த லேடி ரோட் கிராஸ் பண்ற மாதிரி அனுப்பி வச்ச பாரு.. சான்ஸே இல்லடா.. அதுக்கப்புறம் என்னை கார்லயே பேக்க மறந்து வச்சிட்டு வர மாதிரி வர சொன்னே.. அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் இங்க பேசினது… நம்பவே முடியல.. பெஸ்ட் பிளான்.. என்ன நடிப்பு அவன் முன்னாடி..!! இப்பவே அந்த சுந்தர் பாதி கவுந்துட்டான்” என்றாள் ஷாலினி..

மாதேஷ் அவன் காலரை தூக்கி விட்டுக்கொண்டு “ஐயா அப்பி..டி… இந்த மாதிரி பிளான் எல்லாம் பண்றதுல..” என்று சொல்ல தலையில் அடித்துக் கொண்டாள் ஷாலினி..

“என்னை சொல்றயே.. நீ மட்டும் என்ன.. நடிப்புல அந்த சாவித்திரியையே தோக்கடிச்சுடுவ போல இருக்கு” 

“எப்படியோ நீ வாழ்க்கையில முன்னேறி என்னை ஹேப்பியா வச்சுக்கிட்டா சரி..” என்றவள் “நான் போய் கொஞ்சம் ஃபிரஷ் பண்ணிட்டு வரேன்.. உடம்பு எல்லாம் ஒரே கசகசன்னு இருக்கு.. அந்த ஆளோட வேற வந்தது என்னவோ போல இருக்கு.. அவங்க வீட்ல வேற ஒரு பரதேசி கூட்டமே தங்கி இருக்கு.. அவங்க சித்தப்பா சித்தியாம் அப்புறம் ஏதோ சமயக்காரப் பாட்டி அப்புறம் அந்த சுந்தரி.. அவ ரேஞ்சுக்கு  என்கிட்டல்லாம் பேசவே தகுதி கிடையாது.. காஸ்டியூம் டிசைன் பண்ண சொல்லி எனக்கே சேலஞ்ச் பண்றா அவ..” என்று ஷாலினி சொல்ல”என்ன சேலஞ்சா?” என்று அவன் விழித்தான்..

“ஆமா.. நான் இப்ப பிரெஷ் ஆயிட்டு வந்து அந்த டிசைன் தான் பண்ண போறேன்.. இந்த சேலஞ்சில எப்படி இருந்தாலும் நான் ஜெயிச்சு ஆகணும்.. அந்த சுந்தரியை ஜெயிக்கிறதுக்கு நான் விட மாட்டேன்.. அவளும் அவ ட்ரஸும்.. புவர் கண்ட்ரி கர்ள்..” என்று சொன்னவள் அவன் மடியில் இருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றாள்..

வீட்டிற்கு வந்த சுந்தருக்கு ஷாலினி பேசியது மறுபடியும் மறுபடியும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க மகிழ்ச்சியின் உச்சிக்கே போயிருந்தான்.. அன்று இரவு உறங்கும் போது கனவுகளில் மிதந்தவன் மறுநாள் எழுந்து உற்சாகமாக அலுவலகத்திற்கு கிளம்பினான்.. 

அப்போது அவனை அழைத்த சுந்தரி “சார் நேத்து நீங்க பத்து ஃப்ராக்ல எம்ராய்டரி போட சொன்னீங்க இல்ல..? இதோ ரெடி பண்ணி  வச்சிருக்கேன் சார்.. இதுல 20 ஃப்ராக்கு இருக்கு.. எல்லாத்தையும் எம்பிராய்டரி போட்டு முழு வேலை முடிச்சுட்டேன்.. நீங்க சொல்லாமலே எக்ஸ்ட்ரா பத்து ஃப்ராக்கு எம்பிராய்டரி பண்ணிட்டேன்.. மன்னிச்சிருங்க சார்.. ஏதோ ஒரு ஆர்வத்துல..” 

அவள் இழுக்க “அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சுந்தரி.. உங்க டிசைன் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.. நிச்சயமா நீங்க வேணா பாருங்க.. இந்த இருபது ஃப்ராக்கும் வித்து போய்  இன்னும் கொஞ்சம் நம்ம டிசைன் பண்ற மாதிரி தான் ஆகப்போகுது.. சரி.. நான் இதை வண்டியில எடுத்துட்டு போறேன்..” என்று அதை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்..

அங்கே அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு அன்று வந்திருந்த ஷாலினி “சுந்தர் இதுதான் என்னுடைய டிசைன்” என்று ஒரு காகிதத்தில் அவளுடைய வடிவமைப்பை வரைந்து அவனிடம் கொடுத்திருந்தாள்..

“அந்த சாம்பிள் க்ளாத்துல கூட நீங்க இதை பண்ணலையா?” என்று சுந்தர் கேட்க “அதனால என்ன சுந்தர்? நான்தான் இந்த டிசைன் போட்டு பேப்பர்ல குடுத்துட்டேன் இல்ல..? இதை பாத்து அப்படியே அந்த ஃப்ராக்கில் நேராவே பிரிண்ட் பண்ணிட சொல்லுங்க.. நம்ம வொர்க்கர்ஸ் கிட்ட சொன்னீங்கன்னா அவங்க பண்ணிடுவாங்க.. இல்ல..? அவங்களுக்கு இது தானே வேலை? என் வேலை டிசைன் பண்றது மட்டும் தானே.. நான் எதுக்கு உட்கார்ந்து மத்த வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கணும்.. இந்த துணி தைக்கிற வேலை பண்ற நேரத்துல நான் இன்னும் நாலு டிசைன்ஸ் பண்ணலாம் இல்ல..?” என அவள் சொல்ல சுந்தருக்கு இவள் ஏன் ஒரு ஒரு நேரம் ஒரு ஒரு மாதிரி பேசுகிறாள் என்று தோன்றியது..

“சரி சுந்தரி போல் அவள் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு  செய்ய மாட்டாள் என்பது தெரிந்த விஷயம் தானே” என்று எண்ணியவன் “சரி அந்த பேப்பரை குடுங்க.. நான் கொண்டு போய் நம்ம டெய்லர்ஸ் கிட்ட கொடுத்து இதை டிசைன் பண்ண சொல்றேன்..” என்று சொல்லி அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அதை செய்து முடித்தான்..

அப்போது அவன் அறையில் மேஜை மேல் சுந்தரி கொடுத்திருந்த 20  ஃப்ராக்குகளை பார்த்தவள் “நீங்க பத்து தானே பண்ண சொன்னீங்க.. ‌ இதுல நிறைய இருக்கும் போல இருக்கு..” என்று ஷாலினி கேட்க “ஆமா சுந்தரி ஏதோ பத்து எக்ஸ்ட்ரா பண்ணி இருக்காங்க போல இருக்கு.. அதுதான் இன்னைக்கு கொடுத்தாங்க..” என்று சுந்தர் சொல்லிவிட்டு மறுபடியும் தன் வேலையை பார்க்கலானான்…

“அவளோடது ஒரு பீஸ் கூட விக்கப் போறதில்ல… அப்புறம் எதுக்கு இப்படி 20 தெச்சி வேஸ்ட் பண்றா?” 

ஷாலினி சொல்ல அவளை கண்ணை மூடி திறந்து நிமிர்ந்து தீர்க்கமாய் பார்த்தவன் “ஷாலினி.. உங்களுக்கு நேத்தே சொன்னேன்.. ஒருத்தர் திறமையை குறைச்சு எடை போடாதீங்க.. அவங்க உருவத்தை வச்சும் சரி.. அவங்க செய்ற வேலையை வச்சும் சரி.. இதை இன்னும் நான் கடைக்கு கொண்டு போகல.. அதுக்குள்ள இது விக்கவே விக்காதுன்னு நீங்க எப்படி முடிவு பண்ணீங்க? உங்க டிசைனை பத்தி நான் அந்த மாதிரி சொன்னா உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? நான் தான் ரெண்டு பேர் டிசைன்ஸ் போட்ட பீஸஸ்சையும் கடையில ஷோரூம்ல வெக்க சொல்லி இருக்கேன் இல்ல? பார்க்கலாம்.. ரெண்டு ப்ராடக்டோட சேல்ஸும் எப்படி இருக்குன்னு.. அதுக்கு முன்னாடி நீங்களா முடிவு பண்ணி இப்படி எல்லாம் பேசாதீங்க..” என்றான் சுந்தர்..

“ஓகே சுந்தர்.. நீங்க எப்பவுமே அந்த சுந்தரிக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க.. நான் அவளை பத்தி உங்க கூட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.. நான் போய் இன்னும் வேற ஏதாவது டிசைன்ஸ் பார்க்க முடியுமான்னு பார்க்கிறேன்.. நான் என் டேபிளுக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி அவள் இருக்கையில் போய் அமர்ந்தாள்..

அதன் பிறகு நான்கு நாட்கள் ஓடியது.. அன்று அலுவலகத்திற்கு சென்று சுந்தர் ஷாலினியை தன் அறைக்கு அழைத்தான்.. 

அறைக்கு வந்த ஷாலினி “கூப்பிட்டீங்களா சுந்தர்?” என்று கேட்க “ஆமா ஷாலினி.. அந்த சேலஞ்ச் பண்ணீங்க இல்ல சுந்தரி கிட்ட.. அதை பத்தி தான் சொல்லணும்னு கூப்பிட்டேன்..” என்றதும் “என் ப்ராடக்ட்ஸ் எல்லாம் வித்துருச்சா? சுந்தரியோட பீஸஸ் அப்படியே இருக்கா? அது சொல்ல தானே கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள் ஷாலினி..

மேஜை மேல் ஒரு காகிதத்தை எடுத்து வைத்தவன் “இது உங்க சேலன்ஜோட ஃபர்ஸ்ட் டே நடந்த சேல்ஸ் ரிப்போர்ட்.. உங்க ரெண்டு பேரோட டிசைன்ஸ் இருந்த ட்ரஸ்ஸஸ் மட்டும் எவ்வளவு சேல் ஆகி இருக்குன்னு தனியா ரிப்போர்ட் பண்ண சொல்லி எடுத்துட்டு வந்து இருக்கேன்..” என்று சொல்லி அவளை அந்த காகிதத்தை எடுத்து பார்க்க சொன்னான்..

அதை எடுத்து பார்த்தவள் விழி விரிந்து இதழில் புன்னகை மலர்ந்தது.. அவளுடைய வடிவமைப்பில் இருந்த 2 ஆடைகளும்.. சுந்தரி தைத்த உடைகளில் ஒரு ஆடையும் முதல் நாள் விற்றிருந்தது..

தொடரும்…

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!