சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 58
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தரிக்கோ சுந்தர் பேசிய வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் அவள் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்க அப்படியே நின்று கொண்டிருந்தாள் அசைவு இல்லாமல் அவன் போன வழியை பார்த்துக் கொண்டு..
“நீ அப்படியே யாரையாவது விரும்புறேன்னு சொன்னாலும் நான் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. நான் உனக்கு மட்டும் தான் சொந்தம்…” அவன் சொன்ன வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் சுந்தரியின் காதில் விழுந்துக் கொண்டிருந்தன..
“என்ன செஞ்சுகிட்டு இருக்கேன் நான்.. அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவரை அவமானப்படுத்தும் போது அவர் கூட பலமா இல்லாம அவருக்கு துணையா இல்லாம நானும் சேர்ந்து அவரை பிரியுறேன்னு சொல்லி அவரை மேல மேல கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்.. இன்னிக்கி என்னை என் காலேஜ்ல அந்த தீக்ஷாவும் அவ ஃப்ரெண்ட்ஸும் அவமானப்படுத்துறாங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்வளவு தைரியம் கொடுத்து என் பலவீனத்தை எல்லாம் மாத்தி எவ்வளவு ஸ்ட்ராங்கா ஆக்கியிருக்கிறார் சுந்தர் என்னை… எனக்கு எவ்வளவு பக்கபலமா இருந்திருக்கிறார்.. இப்ப கூட என்னோட பலம், அமைதி, தைரியம் என்னோட மனசு, என்னுடைய காதல் எல்லாமே அவர்தான்னு புரிஞ்சுகிட்டப்பறம் கூட நானும் அவருக்கு இது எல்லாமா மாறனும்னு ஏன் எனக்கு தோணவே இல்லை..” புலம்பினாள் சுந்தரி…
“ஐயோ சுந்தரி.. எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டே.. சுந்தர் உனக்காகவே பிறந்தவர்.. அவரு வாயைத் திறந்து சொல்லிட்டு போயிட்டாரு.. எனக்கான அவர் காதலை.. எந்த சமயத்திலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டாரு.. ஆனா நான் எவ்வளவு ஈஸியா யாரோ ஏதோ சொன்னாங்கன்னு அவரை டிவோர்ஸ் பண்றேன்னு சொல்லி அவரை விட்டு கொடுத்துட்டேன்.. அப்படியே அவரோட ஃப்ரெண்ட்ஸ் அவர் போட்ட சவால்ல தோத்துட்டாருன்னு சொன்னா கூட அவரை வாழ்க்கையில ஜெயிக்க வச்சு அவங்களை எல்லாம் பேச விடாம இல்ல நான் பண்ணி இருக்கணும்..? ஆனா மேல மேல நான் அவர் காதலை கூட அவருக்கு கிடைக்க விடாம அவரை தோக்கடிச்சுக்கிட்டே இருந்திருக்கேன்.. இதுக்கு மேல அவர் பொறுமையை நான் சோதிக்க மாட்டேன்.. என்னால அவரு கஷ்டப்பட்டதெல்லாம் போதும்.. அவர்கிட்ட இன்னைக்கு என் காதலை சொல்லி அவரை ஜெயிக்க வெப்பேன்.. இனிமே எது வந்தாலும் அவரை நான் பிரிஞ்சு போக மாட்டேன்..” மனதிற்குள் முடிவு செய்து கொண்டாள்..
வெளியே வெற்றியாளர்களின் பெயர்களை அறிவிக்க தொடங்கி இருக்க அந்த அறையை விட்டு ஒரு முடிவுடனேயே வெளியே வந்தாள் சுந்தரி..
மேடையில் மூன்றாவது இடத்தை பிடித்தவரை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.. சுந்தரி படிக்கும் கல்லூரியிலேயே மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு மாணவருக்கே அது கிடைத்திருந்தது..
அடுத்து இரண்டாம் இடத்தில் ஏற்கனவே ஒரு உடை வடிவமைக்கும் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்த பெண்ணுக்கு கிடைத்தது..
“எல்லாரும் ஃபர்ஸ்ட் ப்ளேஸ்ல யார் வந்திருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலோட காத்துட்டு இருப்பீங்க.. இந்த முறை எதிர்பாக்காத மாதிரி யங்க் ஸ்டூடன்ட்ஸ் தான் அந்த டைட்டிலை தட்டிட்டு போறாங்க.. ஆனா அவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டோம்னா அதுக்கப்புறம் என்ன ஃபன் இருக்கு.. அதனால லெட்ஸ் பிகின் த கவுண்டன்.. 10 9 8 7 6 5 4 3 2 அன்ட் த வின்னர் இஸ் மிஸஸ் சுந்தரி சுந்தர்.. அண்ட் மிஸ் வனிதா சுதாகர்..” என்று அறிவித்தவர்
“மிஸ் வனிதா அண்ட் மிஸஸ்.சுந்தரி ப்ளீஸ் கொஞ்சம் மேடைக்கு வரீங்களா..?” என்று அவர்களை அழைக்க தான் ஜெயித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தவளை பின்னிருந்து சைத்ரா தள்ளிவிட வனிதா அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேடைக்கு ஓடினாள்..
அங்கு இருவருக்கும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.. அப்போது அந்தப் போட்டியை நடத்தும் பெரிய ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தை சேர்ந்தவர் பேச ஆரம்பித்தார்..
“எனக்கு மிஸ்.சுந்தரியை பத்தி கொஞ்சம் பேசணும்.. நம்ம ஊர்ல நல்லா ஃபேரா இருக்குறவங்க அப்புறம் ரொம்ப மாடர்னா இருக்குறவங்க அப்படித்தான் ஜெண்ட்ரல்லா ஃபேஷன் ஷோஸ்ல நம்ம நிறைய பார்க்கிறோம்.. ஆனா சுந்தரி ஒரு டஸ்கி டார்க் பியூட்டி.. அவங்க கொஞ்சம் டார்க் காம்ப்ளெக்ஷனோட இருந்தாலும் அது அவங்க கான்ஃபிடன்ஸ்ஸை கொஞ்சம் கூட குறைக்கலை.. அவங்களுக்கு அந்த டஸ்கி டார்க் காம்ப்ளெக்ஷன் தான் ஆக்சுவலா அழகையே கொடுக்குது… அதை புரிஞ்சுகிட்டு அதை நல்லா எக்ஸிபிட் பண்ற மாதிரி மேக்கப்.. அதை எக்ஸிபிட் பண்ற மாதிரி டிசைன் இதெல்லாம் போட்டு அவ்வளவு அழகா அவங்களை பிரசன்ட் பண்ணிக்கிட்டாங்க.. இந்த மாதிரி நிறைய பேர் முன்னால வரணும்னு நான் ஆசைப்படுறேன்.. தயவு செஞ்சு ஃபேர்னஸ் கிரீம் பின்னாடி ஓடாதீங்க.. சுந்தரி மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த ஃபீல்டுல இப்ப வர ஆரம்பிச்சுருக்காங்க.. இந்த மாதிரி ஷோஸ்ல வெளிய வந்து கான்ஃபிடன்டா கலந்துக்கணும்னு தங்களை தாங்களே உள்ள பூட்டி வச்சிருக்கற ப்ளாக் ப்யூட்டீஸ் கிட்ட கேட்டுக்குறேன்..” என்று பேசியவர்
“மிஸஸ் சுந்தரியோட ஹஸ்பெண்ட் மிஸ்டர் சுந்தரும் இங்கதான் இருக்கிறார்.. அவரை நான் மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்.. மிஸ்டர் சுந்தர் ப்ளீஸ் கம் ஆன் த டயஸ்..” என்று அழைக்க தன் மனைவியை பெருமையுடன் பார்த்தபடியே மேடை ஏறி வந்தான்.. சுந்தர்..
சுந்தர் சுந்தரி இருவருமே உணர்வு குவியல்களாய் இருந்தனர்.. மேடை ஏறி வந்தவன் நேரே சுந்தரியிடம் சென்று அவளை இறுகத் தழுவிக் கொண்டான்..
அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் “சுந்தரி நீ எனக்கு வைஃபா.. என் லைஃபா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..” என்று சொல்ல அந்தக் கூட்டமே அதிரடியாய் ஆர்ப்பரித்தது..
“மிஸ்டர் சுந்தர் வுட் யூ லைக் டு ஸே ஸம் வர்ட்ஸ் டு தி கிரவுட்..( இங்க இருக்கறவங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?)” என்று கேட்டார் அந்த அறிவிப்பாளர்..
“எஸ்..” என்றவன்
“எல்லாருக்கும் வணக்கம்.. எனக்கு உங்க கிட்ட எல்லாம் சொல்ல வேண்டியது ஒன்னே ஒன்னு தான்.. தயவு செஞ்சு ஒருத்தங்களோட நிறம் என்னன்னு பார்க்காதீங்க.. அவங்க மனசோட அழகை பாருங்க.. மனசு அழகா தூய்மையா இருந்தா முகம் எந்த நிறத்தில இருந்தாலும் அழகாத்தான் தெரியும்.. ஆனா மனசு அழுக்கா இருந்தா முகம் எவ்வளவு வெள்ளையா இருந்தாலும் அழுக்கா தான் தெரியும்.. இதை மட்டும் எப்பவும் ஞாபகத்துல வச்சுக்கிட்டு உங்க லைஃப்ல எல்லா முடிவுகளையும் எடுங்க.. மனசுன்னு பார்த்தா இந்த பிரபஞ்சத்திலேயே ரொம்ப சிறந்த அழகி என் சுந்தரி.. அவ மனசு அவ்வளவு தூய்மையானது.. அழகானது.. என்னோட கருப்பட்டி அழகி என் சுந்தரி..” சுந்தரியை பார்த்தவன் கண்கள் கலங்கி இருந்தன பெருமையில்..
“என் வைஃப் இந்த போட்டியில் வின் பண்ணதுக்காக அவளுக்கு இந்த உலகத்தையே கொண்டு வந்து கொடுக்கலாம்தான்.. ஆனா எனக்கு அவ்வளவு திறமை கிடையாது.. அதனால என்னால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு அவளுக்கு..” என்று சொல்லி
அவள் அருகே சென்று தன் கையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து அதில் இருந்த வைர நெக்லஸை எடுத்து அவள் கழுத்துக்கு மேலே வைத்தவன்
“உன் அழகுக்கு இந்த வைர நெக்லஸ் ரொம்ப கம்மியா தான் இருக்கு சுந்தரி.. ஆனா எனக்காக இதை போட்டுக்கிறியா?” என்று கேட்க
அவளோ சிரம் தாழ்த்தி அவன் கையை பிடித்து கழுத்தில் போட சொன்னாள்.. அவள் கழுத்தில் அந்த நெக்லஸை போட்டு விட்டவன் அது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்க பூரித்து போனான் மனதிற்குள்..
அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தியவன் அவ்வளவு கூட்டத்துக்கு நடுவில் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி “ஐ லவ் யூ சுந்தரி..” என்று சத்தமாக சொன்னான்..
அங்கு நிறைந்திருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆர்ப்பரித்து அவர்கள் மேல் ரோஜா பூக்களை எறிய சுந்தரியோ ஆனந்தத்தில் திக்கு முக்காடி போனாள்..
“இதுக்கப்புறமும் உன்னை நான் அவமானமா நெனப்பேன்னு நீ நினைக்கிறியா?” என்று கேட்டான் அவளிடம்.. அவள் கண்களிலே அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது..
அதற்கு மேல் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது சுந்தரை அணைத்து கொண்டு கரைந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்..
அப்போதே அவனிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று அவள் உதடு துடித்தது…
ஆனால் அன்று மாலை தனிமையில் அவர்களுடைய அறையில் அதை சொல்லி அவனை திக்கு முக்காட வைத்து அவனுக்கு இந்த உலகத்திலேயே யாரும் யாருக்கும் இதுவரை கொடுத்திராத காதல் இன்பத்தை தந்து அவனை திணற வைக்க வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருந்தாள்..
ஆனால் விதியோ வேறு விதமாக யோசித்து வைத்திருந்தது.. எல்லாம் முடிந்து வீட்டுக்கு போகும் சமயத்தில் சுந்தர் சுந்தரியை அழைத்துக் கொண்டு போக கிளம்ப அப்போது அவன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..
அவர் மருத்துவமனையின் பெயரை சொல்ல “சரி.. நான் உடனே அந்த ஹாஸ்பிடலுக்கு போறேன்.. நான் பாத்துக்குறேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தவன்
“சுந்தரி நீ இவங்களோட வீட்டுக்கு போ.. நான் கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் போகணும்.. நம்ம எம்பிளாயியை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க.. நான் போய் பணம் கட்டினா தான் அங்க ட்ரீட்மெண்ட் நடக்கும்..” என்று சொல்ல
அவளும் “ப்ளீஸ்.. உடனே போங்க சுந்தர்.. நானும் கூட வரட்டுமா?” என்று கேட்க
“இல்ல இல்ல நீ இந்த டிரஸ்ஸோட அங்க வரவேண்டாம்.. நீ அவங்களோட போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்படியே வீட்டுக்கு போயிரு.. நான் அங்க போயிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..
சுந்தரி.. வனிதா.. சித்தார்த்.. சைத்ரா.. நால்வரும் ஒன்றாக அங்கிருந்து கல்லூரிக்கு போய் விட்டு அங்கிருந்து சைத்ராவுடன் வனிதாவும் சுந்தரியும் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்தார்கள்..
சித்தார்த் சுந்தரியின் கண்ணை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டே திரிந்து கொண்டிருந்தான்..
சுந்தரி அவனிடம் சென்று “சித்தார்த் அது எதுவோ அந்த நிமிஷத்துல நீங்க பண்ணிட்டீங்க.. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க.. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கோங்க.. ஏன்னா நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்..” என்று சொன்னாள்..
“சாரி சுந்தரி.. இனிமே இப்படி நடக்கவே நடக்காது..” என்று சொல்ல சைத்ரா காரை ஓட்டிக்கொண்டு போக அனைவரும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு போனார்கள்..
அப்போது கார் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு வந்த சுந்தரி அந்த சாலையில் பக்கவாட்டில் ஷாலினி உலகத்தையே வெறுத்தது போல் நடந்து போய்க் கொண்டிருந்ததை பார்த்தாள்.. சிறிது தூரம் நடந்து கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி விழுந்திருந்தாள்..
அதை பார்த்தவள் “ஐயோ.. வண்டியை நிறுத்துங்க சைத்ரா..” என்று சொல்லி வண்டியை நிறுத்தியவுடன் இறங்கி வேகமாக ஓடினாள் ஷாலினியை நோக்கி..
வனிதாவுக்கும் சைத்ராவுக்கும் அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது..
“இவளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராதா? இந்த ஷாலினி எவ்வளவு பேச்சு பேசினா.. இப்ப அவளையே காப்பாத்த போறா.. இவ திருந்தவே மாட்டா..” என்றாள் வனிதா..
அதற்குள் சித்தார்த் “என்ன வனிதா இப்படி பேசுறீங்க..? அவங்க பாவம்.. மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.. என்ன பிரச்சனை இருந்தாலும் அதை இந்த மாதிரி நேரத்திலயா காட்டுவாங்க..? வாங்க நம்மளும் போய் ஹெல்ப் பண்ணலாம்..” என்று சொல்லி
அவள் அனுமதி இல்லாமலேயே அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போக “ஹலோ சித்தார்த்.. கைய விடுங்க..” என்று சொல்லிவிட்டு
“இப்பதானே சுந்தரி கிட்ட வாங்கினீங்க.. அதுக்குள்ள மறந்து போச்சா?” என்று சொல்ல
அவனோ “சாரி ஏதோ பதட்டத்துல கைய புடிச்சுட்டேன்..” என்று சொல்ல
“யார்கிட்டயோ தர்ம அடி வாங்க போறீங்க நீங்க..” என்று சொல்லி சிரித்தாள் வனிதா..
அதன் பிறகு காரிலிருந்து ஒரு தண்ணீர் குடுவையை எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டு வந்த சைத்ரா சுந்தரியிடம் அதை கொடுக்க ஷாலினியை தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தவள் அவள் எழும்பாமல் போகவே
“சரி கொஞ்சம் தூக்குங்க.. இவங்களை கார்ல ஏத்திக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்க்கலாம்..” என்று சொல்லி அவளை தூக்கிக்கொண்டு போய் காரில் கிடத்தினார்கள்..
“வனிதா என் ஃபோன்ல ஷாலினியோட அப்பா ரவிக்குமார் அப்பா நம்பர் இருக்கு.. அவருக்கு ஃபோன்ல விஷயத்தை சொல்லி உடனே இங்கே பக்கத்தில இருக்கிற ******** ஹாஸ்பிடல்க்கு வந்துட சொல்லு..” என்றாள்..
அதன் பிறகு பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் அவளை போய் சேர்க்கவும் மருத்துவர் வந்து பரிசோதித்தார்.. சுந்தரிக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன ஆயிற்று இந்த ஷாலினிக்கு.. ஏதோ உலகத்தையே வெறுத்தது போல் நடந்து கொண்டு வந்து இருந்தாளே என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்…
மருத்துவர் ஒரு ஊசியின் மூலம் மருந்தை செலுத்தியவர் வெளியே வந்து “அவங்களுக்கு சீரியஸா ஒன்னும் இல்ல பயப்படாதீங்க.. அவங்க கண்ணு முழிச்சுட்டாங்க.. அவங்களுக்கு என்ன பிராப்ளம்னு அவங்க கிட்ட சொல்லி இருக்கேன்.. அவங்க வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. உங்களுக்கு தெரியணும்னா நீங்க அவங்க கிட்ட தான் கேட்கணும்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டார்..
சுந்தரிக்கோ ஒன்றும் புரியவில்லை.. “என்ன.. நம்ம கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்களா..?” என்று யோசித்தவள் மற்றவர்களை வெளியே இருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று ஷாலினியை பார்த்தாள்..
சுந்தரியை பார்த்த ஷாலினி தலையை குனிந்து கொள்ளவும் “என்ன ஆச்சு ஷாலினி..? உங்களுக்கு ஏன் மயக்கம் வந்தது..? ரொம்ப நேரம் சாப்பிடாம இருந்தீங்களா? நான் ஏதாவது உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு வந்து கொடுக்கவா?” என்று சுந்தரி கேட்க அவளை கட்டிக் கொண்டு அழுதாள் ஷாலினி..
சுந்தரி “எதுக்கு ஷாலினி அழறீங்க?” என்று கேட்க
“சுந்தரி.. என் வயித்துல ஒரு குழந்தை வளருது சுந்தரி..” என்று சொன்னவளை அப்படியே விழி விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தாள் சுந்தரி…
ஷாலினி அப்படி அவளிடம் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே அந்த அறையின் வாயில் அருகே அதை கேட்டு சிலையாக நின்றார் ஷாலினியின் தந்தை ரவிக்குமார்..