சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 60

4.8
(17)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 60

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

ராகினிதேவி “என் ஹஸ்பண்டுக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு.. நாங்க ரெண்டு பேரும் இப்ப தனித்தனியா தான் இருக்கோம்.. சிருஷ்டி அவரோட தான் இருக்கா..” என்று கூற

அவளை அதிர்ச்சியுடனும் வருத்தத்தோடும் பார்த்தாள் சுந்தரி..

“என்ன சுந்தரி.. அப்படி பார்க்கிறே..?” என்று ராகினி தேவி கேட்க

 “இல்ல மேடம்.. நீங்க எவ்வளவு அமைதியா நல்லவங்களா எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. உங்களோட ஒருத்தரால வாழ முடியலன்னா என்ன காரணமா இருக்கும்னு யோசிக்கிறேன்..” என்றாள்..

மெலிதாய் புன்னகைத்த ராகினி தேவி “ரொம்ப நல்லவங்களா எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கற குணமே நம்ப லைஃப்ல பல நேரம் பிரச்சனைகளுக்கு காரணமா போயிடுது சுந்தரி.. எல்லாரும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளதான் நம்ம யோசிக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க.. அப்படி நம்ம பண்ணாதப்போ அவங்களுக்கு கோவம் வருது.. பிரச்சனை வருது.. சரி.. இப்ப இதெல்லாம் பேச வேண்டாம்.. ஷாலினிக்கு நியாயம் கிடைக்கறது என்னோட பொறுப்பு.. எல்லாரும் ஸ்ருஷ்டி அப்பாவை போய் பார்க்கலாம்.. அவர்கிட்ட விஷயத்தை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தறதுக்கு முயற்சி பண்ணலாம்..” என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு ரகுநந்தன் வீட்டுக்கு புறப்பட்டார்..

ஒரு மாளிகை போன்ற வீட்டின் முன் அவர்களுடைய கார் நின்றது.. அந்த வீட்டு வாசலில் “ஸ்ருஷ்டி ஸதன்” என்று போட்டிருந்ததை படித்துக் கொண்டே மூடி இருந்த பெரிய வாயிற்கதவருகே போக உள்ளிருந்து அந்த வீட்டின் காவலாளி ஓடி வந்தார்..

“மேடம்.. நீங்களா..? வாங்க மேடம் வாங்க.. ப்ளீஸ் உள்ள போங்க” என்று கதவை திறந்து விட்டார் பவ்யமாக.. அவர் முகத்தில் சந்தோஷ ரேகைகள்..

“இல்ல.. முதல்ல உங்க சார் கிட்ட நான் வந்து இருக்கேன்னு ஃபோன் பண்ணி சொல்லுங்க.. நான் அவரோட முக்கியமான ஒரு விஷயமா பேசணும்.. அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு அப்புறம் நான் உள்ள போறேன் இல்லன்னா அனாவசியமா உங்களுக்கு திட்டு விழப் போகுது..” என்றார் ராகினி தேவி..

“அதில்ல மேடம்.. உங்களை போயி சாரு..” என்று அவர் ஆரம்பிக்க

 “சொன்னதை செய்ங்க ப்ளீஸ்..” என்று அழுத்தி சொன்னார் ராகினி தேவி..

அவர் சொன்னபடி செய்ய அடுத்த இரண்டாவது நிமிடம் அவர்களை தேடி ரகுநந்தன் வந்தார்..

ராகினி தேவியின் அருகில் வந்தவர் “என்ன ராகிம்மா… நீ இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு நான் பர்மிஷன் கொடுக்கணுமா? இந்த வீட்டை விட்டு நான் உன்னை அனுப்பவும் இல்ல.. இந்த வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு அனுமதியும் தேவையில்லை.. நீ தான் இந்த வீட்டோட முதலாளி.. அதை என்னைக்குமே ஞாபகம் வச்சுக்கோ.. இந்தப் பழனி உனக்கு கதவை திறக்க மாட்டேன்னு ஒரு ரெண்டு நிமிஷம் லேட் பண்ணா கூட என் வீட்டுக்குள்ள என்னை விடுறதுக்கு உனக்கு எதுக்கு இவ்வளவு டைம் ஆகுதுன்னு அவனை திட்டுறதுக்கு கூட உனக்கு உரிமை இருக்கு.. சரி முதல்ல உள்ள வா..”

ராகினியின் கையை உரிமையாக பிடித்துக் கொண்டவர் அவரை அழைத்துக்கொண்டு இல்லை இல்லை இழுத்துக் கொண்டு உள்ளே போனார்.. அவர் முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது..

அவர் ராகினி தேவியை பார்த்த பார்வையிலேயே அவ்வளவு காதல் இருந்தது.. இவ்வளவு காதலோடு இருப்பவர்கள் நடுவில் ஏன் பிரிவு வந்தது என்று யோசித்தாள் சுந்தரி..

ராகினி தேவி உள்ளே செல்ல அங்கே வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஸ்ருஷ்டி ஓடிவந்து அவளை கட்டிக் கொண்டாள்..

“மாம்.. வாட் எ சர்ப்ரைஸ்..!! நீங்க இந்த வீட்டுக்கு வந்து இருக்கீங்களா..?‌ இங்கே எங்க கூடவே இருக்க வந்துட்டீங்களா? ப்ளீஸ் அப்படி சொல்லுங்களேன்..” என்று ஸ்ருஷ்டி சொல்ல

 “இல்ல ஸ்ருஷ்டி.. உன் விஷயமா தான் நான் பேச வந்திருக்கேன்.. பேசிட்டு நான் கிளம்பிடுவேன்..” என்றார் ராகினி தேவி..

“என் விஷயமாவா? என்ன விஷயம்..?” என்று கேட்டவள்

அவள் பின்னே வந்த சுந்தரி ஷாலினி ரவிக்குமார் மூவரையும் பார்த்து

“இவங்க எல்லாம்..” என்று யோசித்தவள் சுந்தரியை காண்பித்து

 “இந்த பொண்ணை நான் பார்த்து இருக்கேன்.. உங்க கடையில் வேலை செய்யறா.. மத்தவங்க எல்லாம் யாருன்னு எனக்கு தெரியல.. யாரு மாம் இவங்க எல்லாம்..? இவங்களை எல்லாம் எதுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க..?”

ஸ்ருஷ்டி கேட்க “சொல்றேன் ஸ்ருஷ்டி.. கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா?” என்று ரகுநந்தனை பார்த்து கேட்டார் ராகினிதேவி..

“ப்ளீஸ் எல்லாரும் உட்காருங்க..” என்று சொல்லி எல்லோரையும் அமர வைத்த ரகுநந்தன் தன் பக்கத்தில் அமர்ந்த ராகினி தேவியின் கையை பிடித்துக் கொண்டே “சொல்லு ராகி டியர்.. என்ன விஷயம்..?” என்று கேட்டார்..

“அது.. இந்த பொண்ணு பேரு ஷாலினி..” என்று ஷாலினியை காட்டி சொன்ன ராகினி தேவி

 “இந்த பொண்ணு இப்ப பிரக்னண்டா இருக்கா… இவளோட வயத்துல வளர்ற குழந்தையோட அப்பா மாதேஷ்..”

 விஷயத்தை சுருக்கமாகச் சொல்லி முடித்தார் ராகினி தேவி..

அவர் சொன்ன விஷயத்தை கேட்டு ஸ்ருஷ்டி “மாம்.. இதெல்லாம் சும்மா பணம் பறிக்கிறதுக்காக பண்ற வேலை.. மாதேஷ் அப்படி கிடையாது.. அவர் என்னை உண்மையா தான் விரும்புறார்..”

“ஒரு நிமிஷம் ஸ்ருஷ்டி.. இவங்க பணம் பறிக்கணுன்னு எந்த அவசியமும் இவங்களுக்கு இல்லை.. ஏன்னா அவர் ஒரு கோடீஸ்வரர்.. அவருக்கு ஒரு கம்பெனி இருக்கு…. அவரோட ஒரே பொண்ணு ஷாலினி.. அப்படி இருக்கும்போது மாதேஷ் தன்னை கெடுத்துட்டான்னு சொல்லி அந்த பொண்ணு எதுக்கு உன்கிட்ட இருந்து பணம் பறிக்கணும்..?”

ரகுநந்தன் சிருஷ்டியை பார்த்து “என்னம்மா சிருஷ்டி.. நீ அந்த மாதேஷை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவரு பிசினஸ் கொஞ்சம் லாஸ்ல போயிட்டு இருக்கு.. அதுக்கு ஹெல்ப் பண்ணா அவரு நம்ம வீட்டோட மாப்பிள்ளையா இருப்பாருன்னு சொன்னேன்னு நானும் சரி உனக்கு பிடிச்சிருக்குன்னு இதுக்கு ஒத்துக்கிட்டேன்.. இப்ப என்னடான்னா இந்த பொண்ணு இப்படி சொல்றா..?”

“டேட்.. இவங்க ஏதோ சதி பண்றாங்க.. மாம்மோட நல்ல மனசை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு மாதேஷ் பத்தி தப்பு தப்பா சொல்றாங்க.. நான் இவங்க சொல்றதெல்லாம் நம்ப மாட்டேன்..”  தீர்க்கமாக சொன்னாள் ஸ்ருஷ்டி..

“இவ வயத்துல இருக்குற குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ப்ரூவ் பண்ணா அப்ப நம்புவியா..?”

ராகினி தேவி கேட்க “மாம்.. நான் அவரை விரும்பறேன்னு சொல்றேன்.. கொஞ்சமாவது எப்படியாவது என் விருப்பத்தை நிறைவேத்தணும்னு யோசிக்கிறியா..? இப்ப கூட யாரோ சொல்றதை நம்பிகிட்டு என் வாழ்க்கையை கெடுக்க பாக்குறீங்களே..”

 ஸ்ருஷ்டி சொல்ல அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது சுந்தரிக்கு..

சுந்தரி ஸ்ருஷ்டியிடம் “தப்பு ஸ்ருஷ்டி மேடம்.. அவங்களுக்கு உங்க மேல அக்கறை இருக்கிறதுனால தான் உங்க வாழ்க்கை கெட்டு போய்ட கூடாதுன்னு உங்ககிட்ட பேசிட்டு இருக்காங்க.. உங்களுக்கும் மாதேஷ்க்கும் கல்யாணம் முடிஞ்சப்புறம் இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அந்த விபரீதம் நடக்கறதுல இருந்து தடுக்கணும்னு நெனைச்சு தான்..” என்று விளக்கியவளை இடை நிறுத்தினாள் ஸ்ருஷ்டி..

“நான் என் மாம் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.. நீ நடுவில் பேசாத..” என்றாள் கோவமாக‌.

“ஸ்ருஷ்டி டார்லிங்.. நீ எதுவும் கோவப்படாத.. அவங்க என்ன வேணும்னா சொல்லி உங்க அம்மாவை ஏமாத்தட்டும்.. ஆனா என்னை யாரும் ஏமாத்த முடியாது.. உங்க அம்மா எப்பவுமே இப்படித்தான்.. அடுத்தவங்களை நம்புவாளே தவிர நம்மளை நம்ப மாட்டா.. இப்போ அந்த லிஸ்ட்ல மாதேஷும் சேர்ந்து இருக்காரு..” என்றார் ரகுநந்தன்..

அவர் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதை உணர்ந்த ராகினி தேவி அவர் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள்..

“நீங்க இன்னும் மாறவே இல்லை.. மாறவும் மாட்டீங்க.. உங்களோட இந்த குணத்தினால தான் ஸ்ருஷ்டி இன்னைக்கு இப்படி இருக்கா.. இப்ப நான் சொல்றதை எப்பவும் போல நீங்க இக்னோர் பண்ணீங்கன்னா கெட்டுப் போக போறது நம்ம பொண்ணோட வாழ்க்கைதான்.. அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க.. நீங்க இந்த பொண்ணு சொல்றதை நம்ப வேண்டாம்.. ஆனா அட்லீஸ்ட் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்கிறதுக்காகவாவது இதை தீர விசாரிச்சிட்டு அதுக்கப்புறம் ஒரு முடிவு எடுங்க..”

“மாம்.. நெக்ஸ்ட் வீக் நாங்க மேரேஜ் வச்சிருக்கோம்.. நானே உங்ககிட்ட வந்து இதை பத்தி பேசலாம்னு நெனச்சேன்.. இப்போ போயி அந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்றீங்க..? ஏன் மாம் இப்படி பண்றீங்க? சின்ன வயசுலேர்ந்தே எனக்காக நீங்க யோசிச்சதே இல்ல.. அந்த வேலைக்கார பொண்ணு என்னை அடிச்சான்னு சொன்னப்போ நீ ஏதாவது பண்ணாம அவ அடிக்க மாட்டான்னு சொல்லி அவளுக்கு சப்போர்ட் பண்ணுனிங்க.. அதுக்கப்புறம் அந்த வேன் டிரைவர் என்னை ஸ்கூல் வேன்லேருந்து இறக்கும்போது கீழ தள்ளிவிட்டு கொல்லப் பார்த்தான்.. அப்ப டேட் அவனை அடிச்சப்போ நீங்க அந்த டிரைவருக்கு தான் சப்போர்ட் பண்ணுனிங்க.. அப்பா தன்னோட பிசினஸ்ஸை பில்ட் பண்ணறதுக்காக சின்ன சின்ன கம்பெனிஸ டேக் ஓவர் பண்ணப்போ அவங்க வாழ்க்கையை கெடுக்குறாருன்னு சொல்லி அப்பாவோட சண்டை போட்டீங்க.. அப்பா சில பிசினஸ் டாக்டிக்ஸ் யூஸ் பண்ணப்போ அதுக்கும் சண்டை போட்டீங்க.. ஒரு ஸ்டேஜ்ல ரெண்டு பேரும் பிரிஞ்சே போயிட்டீங்க.. உங்களோட நியாயம் தர்மம் கருணை இதெல்லாம் நம்ம வாழ்க்கையை தானே பாதிச்சிருக்கு..” ஸ்ருஷ்டி நியாயம் பேசினாள்..

“ஸ்ருஷ்டி.. என்னோட நியாயம் தர்மம் கருணை இதெல்லாம் நம்ம வாழ்க்கையை அழிக்கல.. நீயும் உங்கப்பாவும் நாம மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறீங்க பாரு.. அந்த குணம் தான் நம்ம வாழ்க்கையை அழிச்சிருக்கு.. பணத்தை வச்சு எதை வேணா பண்ணலாம்னு நினைக்கிறீங்க பாரு.. அதனாலதான் நாம இப்படி இருக்கோம்.. நம்ம இந்த சொசைட்டியில் ஒரு பார்ட்..  நம்ம நல்லா இருக்கறது மட்டும் இல்லாம அடுத்தவங்களும் நல்லா இருக்கிறதுக்கு ஏதாவது செய்யணும்.. அப்படி செய்யலைன்னா கூட பரவால்ல.. ஆனா அடுத்தவங்களை அழிக்கிற மாதிரி நம்ம சுயநலத்துக்காக விஷயங்களை செய்யறது ரொம்ப தப்பு.. உங்கப்பா அவரும் அப்படித்தான் இருந்தாரு.. உன்னையும் அப்படித்தான் வளர்த்தாரு.. நீ அந்த மாதிரி பணத்திமிர் புடிச்ச பொண்ணா ஆகுறதை என்னால கூடவே இருந்து பாக்க முடியல.. அதனால தான் நான் உங்களை விட்டுப் போனேன்.. ஆனா அச்சு பெசகாம உங்க அப்பா இப்ப அப்படித்தானே உன்னை ஆக்கி வெச்சிருக்கிறாரு.. அடுத்தவங்களோட நியாயம் இப்போ உனக்கு புரியல இல்ல..? அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா..? அவளோட உருகி உருகி காதல் வசனம் பேசி ஏமாத்தின மாதேஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்கறது எந்த விதத்தில நியாயம்…? சொல்லு ஸ்ருஷ்டி..”

“ஏன் மாம்.. நீங்க எப்ப பாரு அடுத்தவங்க சைடு தான் நியாயம் இருக்குன்னு ப்ரூவ் பண்ண ட்ரை பண்றீங்க..? எங்களை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா?”

விரக்தியாய் சிரித்த ராகினி தேவி “உங்க ரெண்டு பேரையும் நல்லா புரிஞ்சுகிட்டதனாலதான் நான் இப்படி பேசிகிட்டு இருக்கேன்.. அந்த வேலை செய்ற பொண்ணு கிட்ட நான் அதுக்கப்புறம் விசாரிச்சப்போ அவ கொடுத்த காபில கொஞ்சம் சர்க்கரை குறைவா இருந்ததுன்னு அவ அப்பா அவளுக்கு ஆசையா வாங்கி கொடுத்த தாவணில காபியை கொட்டி இருக்கே.. அந்த பொண்ணு அதை கேட்டதுக்கு என்னையே எதிர்த்து பேசுறியான்னு சொல்லி அந்த தாவணியையே கிழிச்சு போட்டுருக்கே.. அந்த பொண்ணு அதனாலதான் உன்னை அடிச்சிருக்கா.. ஆனா அது எல்லாத்தையும் மறைச்சு அந்த பொண்ணு அடிச்சதை மட்டும் வந்து சொன்னியே.. அப்போ நியாயம் உன் பக்கம் இருந்துதா..?

அடுத்து அந்த வேன் டிரைவர்.. அவரு உன்னை கீழே இறக்கும்போது உங்க அப்பாவை பார்த்த சந்தோஷத்துல அவர் கையில் இருந்து குதிச்சு உனக்கு அடிபட்டிச்சு.. ஆனா அவர் புடிச்சு தள்ளிவிட்டார்ன்னு உங்க அப்பாகிட்ட சொல்லி உங்க அப்பாவும் அவரை அடிச்சு அந்த வேலையை விட்டு அவரை எடுக்க வச்சாரு.. அவர் வாழ்க்கையே அழிஞ்சு போச்சு உங்களால.. இதுல யாரு பக்கம் நியாயம் இருந்தது..?

உங்கப்பா ஆரம்பத்துல தான் பிசினஸ்ல ஜெயிக்கணும்ங்கிறதுக்காக நேர்மையா உழைச்சு நிறைய விஷயங்கள் பண்ணி இருக்காரு.. நான் பிரமிச்சு கூட போயிருக்கேன்.. ஆனா சின்ன சின்ன கம்பெனிகள் எல்லாம் டேக் ஓவர் பண்ணி அவங்க கொடுக்க மாட்டேன்னு சொன்னப்போ மெரட்டி வாங்கி அவங்களை ஒன்னும் இல்லாம ஆக்குனாரு.. அவங்க எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறனும்னு முதல் அடியை எடுத்து வெச்சிருந்தாங்க.. அந்த முதல் அடியே இல்லாம பண்ணாரு உங்க அப்பா.. அதுக்காக நான் கோபப்பட்டேன்.. பிசினஸ் டாக்டிக்ஸ்னு அவர் பண்ண விஷயங்கள் எல்லாமே ரொம்ப அயோக்கியத்தனமானது.. இதையே ஒரு பணம் இல்லாதவன் பண்ணி இருந்தா அதை பிராடு வேலைனு சொல்லி உள்ள தூக்கி போட்டு இருப்பாங்க.. ஆமா இவ்வளவு தூரம் பேசுனியே.. நானும் உங்க அப்பாவும் ஏன் பிரிஞ்சோம்னு உனக்கு தெரியாதா..? அதை மட்டும் நீ சொல்லவே இல்ல..?” ராகினி கேட்க ஸ்ருஷ்டி தலை குனிந்தாள்..

ரகுநந்தன் “ராகினி.. தேவை இல்லாம பேசாத.. இதை பத்தி இதுக்கு மேல நம்ம பேச வேண்டாம்..” என்று மிரட்டினார்..‌ அவர் குரலில் பதட்டம் நிறைந்திருந்தது..

“அது எப்படிங்க..? இந்த நேரம் அந்த பொண்ணு சொன்னதை நம்ப மாட்டேன்னு சொன்னீங்க இல்ல..? அவ அப்பாவோட கஷ்டம் வலி இதெல்லாம் உங்களுக்கு புரியலை இல்ல..? உங்க பொண்ணு கஷ்டம்னா மட்டும் அந்த விஷயத்துல அவ செஞ்ச தப்பை மறைச்சு காப்பாத்த நெனைக்கறீங்க.. இப்படி நீங்க சப்போர்ட் பண்ணி சப்போர்ட் பண்ணி செல்லம் குடுத்து தான் அவ இன்னிக்கு இப்படி இருக்கா.. அன்னிக்கு அவ செஞ்ச அந்த தப்புக்கும் நீங்க இப்படி கண்மண் தெரியாம அவ மேல பாசத்தை வச்சு அவளுக்கு சப்போர்ட் பண்ணது தான் காரணம்” என்றாள் ராகினி..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!