“ஏன் சார்.. நான் அவ்வளவு தூரம் பாட்டியை பாத்துக்கறத்துக்கு நான் பணம் வாங்கமாட்டேன்னு சொல்லியும் எனக்கு சம்பளம் கொடுப்பேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? என் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்க மாட்டீங்களா? உங்களுக்கு உங்க வேலை நடக்கணும்ங்குறது மட்டும் தான் முக்கியமா?”
சுந்தரி கோவமாய் பொரிந்து தள்ள “நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்னேனே தவிர பாட்டியை பாத்துக்க பணம் கொடுக்கிறேன்னு சொல்லலையே சுந்தரி..” என்றான் சுந்தர்..
“என்ன..? பாட்டியை பார்த்துக்க சம்பளம் குடுக்கலையா? அப்படின்னா சும்மாவே பணம் குடுக்கறேன்னு சொல்றீங்களா? சாரி.. அப்பிடி எல்லாம் ஒரு வேலையும் செய்யாம யார்கிட்டயும் பணம் வாங்கற பழக்கம் எல்லாம் எனக்கு இல்ல.. அதுக்கும் பிச்சை எடுக்கறதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லன்னு நெனைக்கறவ நான்..!!” உறுதியான குரலில் அவள் சொன்னாள்..
அவள் மூச்சு விடாமல் பேசுவதை கேட்டவன் புருவத்தை உயர்த்தி.. “அப்பப்பா.. கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க சுந்தரி.. என்னை சொல்ல வந்ததை முழுசா சொல்ல விடுங்க.. அதுக்குள்ள நீங்களா ஒன்னை கற்பனை பண்ணி படபடன்னு பிச்சை.. அது .. இதுன்னு பேசிட்டே போறீங்க.. நீங்களே பிச்சை வாங்க ரெடின்னு சொன்னாலும் நான் உங்களுக்கு பிச்சை போடமாட்டேன்.. வேலை செய்ய தெம்பு இருக்கற யாருக்கும் பிச்சை போட்டு அவங்களை சோம்பேறி ஆக்கமாட்டேன்.. அவங்க பொழைக்கறதுக்கு என்னால முடிஞ்சா ஒரு வேலையை குடுப்பேன் இல்ல யார் கிட்டயாவது வேலை வாங்கி குடுப்பேன்.. இது என்னோட பிரின்சிபிள்..” என்றான் அவன் தன் மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து..
அவன் சொல்லியதை கேட்டு அவன் மேல் அவளுக்கு ஒரு பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது..
” அப்படின்னா..” என்று ஆரம்பித்தவளை நோக்கி “நிறுத்து..” என்பது போல் கையை விரித்துக் காட்டியவன், “நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்க.. நான் ஒரு கார்மெண்ட்ஸ் நடத்தறேன் இல்ல.. அதுல இப்ப புதுசா ஒரு கான்ட்ராக்ட் கெடச்சிருக்கு.. அதுக்கு நானே ஒரு எக்ஸ்ட்ரா டெய்லர் எடுக்கணும்னு நெனச்சிட்டிருந்தேன்.. இப்ப அந்த வேலையைத்தான் உங்களுக்கு குடுக்கலாம்னு நெனைக்கிறேன்..”
அவன் சொல்லி முடிக்கும்முன் வழமை போல் சுந்தரி இடையில் பேசத் தொடங்கினாள்..
“எவ்வளவு சொன்னாலும் நீங்க என்னை முழுசா பேச விட மாட்டீங்க இல்ல சுந்தரி?” என்றவன் சட்டென அவள் வாயை தன் கையால் மூடியவன் “நீங்க நான் இப்ப பேசி முடிக்கறவரைக்கும் வாயை திறக்கக் கூடாது..” என்றான்..
சுந்தரியோ ஆடவன் அவன் திடீர் தீண்டலில் விழியை அகல விரித்து உறைந்துவிட்டாள்.. அவளுக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது.. அன்று அவன் மார்பில் மோதி இதழ் பதித்த போதும் இதே நிலையையே பெண்ணவள் உணர்ந்தாள்..
அவனோ அவளுக்குள் தான் ஏற்படுத்திய அதிர்வு எதையும் பற்றி உணராதவன் பேசிக்கொண்டே போனான்..
“நீங்க கார்மெண்ட்ஸ்க்கு வரவேண்டாம்.. ஒரு வாரம் நீங்க தெக்க வேண்டிய துணி அப்புறம் அதுக்கான சாம்பிள் இது எல்லாத்தையும் கம்பெனி ஆளை விட்டு வார மொதல்ல உங்களுக்கு கொண்டு வந்து குடுத்துட சொல்றேன்.. வீட்ல இருக்கற மெஷின்ல அதையெல்லாம் வாரம் முழுக்க நீங்க தெக்கலாம்.. நடுநடுவுல பாட்டிக்கு எப்பெப்ப என்னென்ன வேணுமோ அதெல்லாம் செய்யலாம்… வாரம் முடிஞ்சதும் நீங்க தெச்சு முடிச்ச மெட்டீரியல்ஸ கம்பெனிக்கு எடுத்துட்டு போக சொல்லிடறேன்.. இந்த அரேஞ்ச்மென்ட் உங்களுக்கு ஓகேதானே? இப்ப நீங்க செய்யற வேலைக்கு என்கிட்ட சம்பளம் வாங்கறதுல உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே..?” என்று கேட்டான் அவன்..
அதுவரை தன் வாயை மூடியிருந்த அவன் கையை விலக்கியவள், “எ..எனக்கு.. இந்த அ..அரேஞ்ச்மென்ட் ஓகே தான்.. இ..துக்கு ந்..நீங்க சம்பளம் க்..குடுத்தா வ்..வாங்கிக்குறேன்..” என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்..
“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ஒரு மாதிரி படபடன்னு தடுமாறி பேசறீங்க? உடம்பு ஏதாவது சரியில்லையா சுந்தரி.?”
அவன் கேட்கவும் “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் வேற ஏதோ யோசனையில இருந்தேன்.. அதான்..” என்று சொல்லி சமாளித்தாள்..
“அப்படின்னா ஓகே..” என்றவன்.. “சரி.. நான் கார்மென்ட்ஸ்க்கு போயிட்டு வர்றேன்.. கதவை தாள் போட்டுட்டு பத்திரமா இருங்க.. ” என்று சொல்லி விட்டு கிளம்பினான்..
அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள் சுந்தரி.. ஒரு நிமிஷம் என்னை எப்படி கலவரப்படுத்திட்டான் என்று எண்ணினாள் அவள்.. இன்னும் கூட அவளுக்கு படபடப்பு அடங்கிய பாடாய் இல்லை.. ஒரு ஆடவன் தீண்டல் இப்படி ஒரு புயலை அவளுக்குள் கிளப்பிவிட்டதை எண்ணி அவளுக்கு வியப்பாய் இருந்தது..
தன் கார்மெண்ட்ஸ்க்கு சென்ற சுந்தர் வேறு எந்த நினைவும் இல்லாமல் வேலையில் மூழ்கி போனான்.. மதியம் உணவு இடைவேளையின் போது அவன் கைபேசி ஒலித்தது.. ஏனோ அவனுக்கு சுந்தரி தான் தனக்கு ஏதாவது விஷயமாக அழைத்திருப்பாளோ என்று தோன்ற அவசர அவசரமாக அந்த கைபேசியை உயிர்ப்பித்தான்..
ஆனால் அது ஒரு புதிய எண்ணாக இருக்கவே எடுத்து காதில் வைத்தவன் “ஹலோ..!! யாரு?” என்று கேட்டான்..
“ஹலோ சார்.. நாங்க ****** டிவியிலிருந்து பேசறோம்.. நாங்க ஒவ்வொரு வாரமும் இளம் தொழிலதிபர் ஒருத்தரை மீட் பண்ணி அவங்களோட பேட்டியை எங்க டிவில ஒளிபரப்பறோம்.. இந்த மாதிரி செஞ்சா முன்னேற துடிக்கிற நிறைய இளைஞர்களுக்கு அது வாழ்க்கையில ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்ன்னு நாங்க நம்புறோம்..
உங்க தொழில்ல நீங்க முன்னேறும் போது உங்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்தது.. அதை எல்லாம் நீங்க எப்படி எதிர்கொண்டீங்க? அதை தாண்டி வர நீங்க என்ன எல்லாம் செஞ்சீங்க? இந்த மாதிரி நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லி இந்த நிகழ்ச்சி மூலமா உங்களை மாதிரி முன்னேற துடிக்கற இளைஞர்களுக்கு நீங்க ஒரு வழி காட்டலாம்..
நிகழ்ச்சி முடிஞ்சதும் எங்க டிவி சார்பா உங்களுக்கு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் அப்படின்னு ஒரு அவார்டும் கொடுக்கறோம்.. இந்த நிகழ்ச்சிக்காக உங்களை இன்னைக்கு சாயங்காலம் ஒரு நாலு மணிக்கு நாங்க மீட் பண்ண முடியுமா..?” என்று கேட்டார் அந்தப் பெண் நிருபர்..
“இன்னிக்கு நாலு மணிக்கா? இவ்ளோ லேட்டா சொல்றீங்களே..” என்று சுந்தர் கேட்கவும் “ஐயோ.. சாரி சார்.. ஆக்சுவலா உங்க பேட்டி அடுத்த வாரம் எடுக்கணும்னு தான் இருந்தோம்.. இந்த வாரம் நாங்க பேட்டி எடுக்கிறதா இருந்த தொழிலதிபருக்கு திடீர்னு ஒரு பர்சனல் எமர்ஜென்சி ஆயிடுச்சு.. அதனால அவர் அடுத்த வாரம் மீட் பண்றேன்னு சொல்லிட்டாரு.. அதான் உங்களுக்கு டைம் இருந்தா மீட் பண்ணலாமேனு நினைச்சு கேட்டோம்.. உங்களுக்கு முடியாதுன்னா ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார்.. நாங்க இந்த வாரம் இந்த நிகழ்ச்சி வராதுன்னு ஒரு வருத்தம் தெரிவிச்சிடறோம்.. உங்களை அடுத்த வாரம் ப்ளான் பண்ணபடி மீட் பண்றோம்.. அந்த டைம் ஸ்லாட்டுக்கு வேற ஏதாவது ப்ரோக்ராம் போட்டுக்கிறோம்.. ஆனா உங்களால முடியும்னா கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க சார்.. எங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் சார்..” என்று அந்த நிருபர் கெஞ்சினாள்..
“அப்படியா.. சரி.. ஒன்னும் பிராப்ளம் இல்ல.. ஆக்சுவலா நான் எங்க கார்மென்ட்ஸ்ல யூஷூவலா அந்த டைம்க்கு இருக்க மாட்டேன்.. என்னோட கடையில தான் இருப்பேன்.. ஆனா நீங்க வாங்க.. நான் இங்கே வெயிட் பண்றேன்.. அப்புறம் உங்களுக்கு வேணும்னா நான் என் கடைக்கும் கூட்டிட்டு போயி காட்டறேன்.. அங்க இருக்குற என்னோட மெட்டீரியல்ஸயும் நீங்க பார்க்கலாம்..” என்றான் அவன்..
“தேங்க்யூ சார்.. திடீர்னு கேட்டாலும் உடனே முடியாதுன்னு சொல்லாம நீங்க ஒத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம் சார்.. நாங்க ஷார்ப்பா 3:30-க்கு உங்க கார்மெண்ட்ஸ் வந்துடறோம்” என்றாள் அந்த பெண் நிருபர்..
“ஓகே.. பை த வே.. உங்க பேர் என்ன?” என்றவன் கேட்கவும் “கயல் சார்.. அப்ப ஈவினிங் மீட் பண்ணலாம் சார்” என்று அவள் சொல்லி இணைப்பை துண்டித்தாள்..
வைத்த மறு கணமே அவன் கைபேசிக்கு இன்னொரு அழைப்பு வரவும் எடுத்து யார் என்று பார்த்தவன் திரையில் தன் நண்பன் மாதேஷின் எண்ணை பார்த்ததும் அவன் முகத்தில் புன்னகை பூத்தது..
இந்த மாதேஷ் கல்லூரியில் அவனுடன் படித்தவன்.. அதன் பிறகு இவன் யுஎஸ்க்கு சென்ற போது கூடவே வந்து மேல் படிப்பையும் ஒன்றாக படித்தவன்.. பணக்கார வீட்டில் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவன்.. சுந்தரின் நிறத்தைக் காட்டி கேலி செய்த நண்பர்களுள் இவனும் ஒருவன்..
இவர்களுக்கெல்லாம் எதற்குமே தன் நிறம் ஒரு தடையில்லை என்று புரிய வைக்க வேண்டும் என்பதே இவ்வளவு செய்த பிறகும் சுந்தர் அவர்களோடு தன் நட்பை இன்றும் தொடர்வதற்கு முக்கியமான காரணமாய் இருந்தது..
அழைப்பை ஏற்றவன் “ஹலோ மாதேஷ்.. சொல்லுடா.. என்ன திடீர்னு கால் பண்ணி இருக்கே?” என்று கேட்டான்..
“டேய் இன்னைக்கு என் ஃப்ரண்டு ஒருத்தவங்களோட பர்த்டே டா.. ஹோட்டல் ****** ல பார்ட்டி வெச்சிருக்கா.. அவ காஸ்ட்யூம் டிசைனிங் பண்றவ.. நீ உன் கம்பெனிக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனர் வேணும்னு கேட்டிருந்த இல்ல? நான் அவளை தான் உனக்கு இன்டரொட்யூஸ் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். இந்த பார்ட்டிக்கு நீ வந்தேன்னா நீ அவளை மீட் பண்ணறதுக்கு இது ஒரு பெஸ்ட் அக்கேஷனா இருக்கும்னு எனக்கு தோணுது.. சோ ஈவினிங் 6 ஓ கிளாக் ஷார்ப்பா அங்க வந்துடறியா டா?” என்று கேட்டான் மாதேஷ்..
மாதேஷ் பரம்பரை பணக்காரன்.. அவன் கல்லூரி படிக்கும் போதும் மேற்படிப்பு படிக்கும் போதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னைவிட சுந்தர் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொருவரிடமும் பாராட்டு பெற்றதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. பொறாமையில் வெந்து உள்ளுக்குள்ளேயே கருவினான்..
அவனை எப்படியாவது முன்னேறுவதில் இருந்து தடுத்துவிட வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து அவன் நிறத்தை பற்றி பேசி பேசி குத்தி காண்பித்து அவனை முன்னேற விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் கேலி கிண்டல் செய்ய சுந்தர் அவன் வாழ்க்கையிலும் படிப்பிலும் தொழிலிலும் சிறந்து செயல்படுவதற்கும் முன்னேறுவதற்கும் நிறம் ஒரு காரணியாக இருக்கவே முடியாது என்று அவர்களுக்கு நிரூபிப்பதற்காகவே உத்வேகத்தோடு படித்து முன்னேறி இன்று பெரிய தொழில் அதிபர் ஆகி இருக்கிறான்..
இப்படி அவன் வாழ்வில் முன்னேறியது பல பேரை பொறாமைக்குள் தள்ளியது.. அதில் ஒருவன் தான் இந்த மாதேஷ்.. மேற்படிப்பை முடித்து விட்டு தன் தந்தையின் தொழிலை தொடர்ந்து நடத்தியவன் அதில் முன்னேற முடியாமல் மேலும் மேலும் தன்னுடைய தொழில் சரிவை சந்தித்துக் கொண்டிருக்க சுந்தர் மட்டும் மேலும் மேலும் முன்னேறி கொண்டே இருக்க அவன் பொறாமை தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது..
தான் எப்படி முன்னேறுவது என்று யோசிப்பதை தவிர்த்து சுந்தரை எப்படி வீழ்த்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் மாதேஷ்.. இப்போது அவனுக்கு சுந்தருடைய சவால் ஞாபகம் வந்தது..
சுந்தர் தான் ஒரு நல்ல நிறமாகவும் ஆங்கிலத்தில் சரளமாக பேசி கூடியவளாகவும் மேற்கத்திய பாணியில் உடை அணிந்து உயர் தட்ட மக்களுக்கு ஏற்றார் போல் நடந்துக்கொள்ளும் பெண்ணை தன்னை காதல் செய்ய வைத்து தன் வாழ்க்கைத்துணை ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டிருந்தான்..
அதையே வைத்து அவனை வீழ்த்த வேண்டும் என்று எண்ணியவன் அதற்காக ஒரு திட்டத்தை தீட்டி இன்று அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருந்தான்..
மாதேஷ் கார்மெண்ட்ஸ் ஒன்றை வைத்திருந்தான் என்பதால் சுந்தருக்கு அவன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.. அவன் சொன்ன உடை வடிவமைப்பாளரை அன்று பார்த்துவிட்டு அவளால் தன் கார்மெண்ட்ஸ்க்கு சிறந்த உடைகளை வடிவமைத்து தர முடியும் என்றால் அவளை தன் கார்மென்ட்ஸில் உடை வடிவமைப்பாளராய் வைத்துக் கொள்ளலாமே என்று எண்ணினான் சுந்தர்..
“ஓகேடா மாதேஷ்.. நான் சாயங்காலம் கரெக்டா ஷார்ப்பா சிக்ஸ் ஓ க்ளாக் அங்க வந்துடறேன்..” என்று சொல்லிவிட்டு “அப்புறம் உன் லைஃப் எப்படி போயிட்டு இருக்கு? உன் கார்மெண்ட்ஸ் எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்டான் சுந்தர்..
“என் கார்மென்ட்ஸ் அதள பாதாளத்தில் போயிட்டு இருக்குன்னு தெரிஞ்சும் என்னை வெறுப்பேத்தறானே..” என்று மனதுக்குள் எண்ணியவன் “அதெல்லாம் ஓரளவுக்கு போயிட்டு இருக்கு.. சரிடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போய் பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்..
மாதேஷ் அழைப்பை துண்டித்ததும் சுந்தரின் மனதுக்குள் அந்த உடை வடிவமைப்பாளர் என்று அவன் அறிமுகப்படுத்தப் போகும் பெண் எப்படி இருப்பாளோ என்று ஒரு குறுகுறுப்பு தோன்றியது..
மாதேஷை சுற்றி இருக்கும் நண்பர்கள் எல்லோருமே மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றுபவர்களாகவே பெரும்பான்மையாக இருந்தார்கள்..
அதனால் அவனுக்கு ஏனோ அந்தப் பெண் தன் நண்பர்களிடம் தான் சவால் விட்டதற்கு ஏற்ப நல்ல நிறமாகவும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவளாகவும் மேற்கத்திய பாணியில் உடை அணிந்து உயர் தட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் கொண்டவளாகவும் ஒரு வேளை இருப்பாளோ என்று தோன்றியது..
அந்த எண்ணமே அவளை இன்று மாலை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவலை அவனுக்குள் விளைவித்தது..
தொடர்ந்து வருவார்கள்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு