“வணக்கம் சார்.. இன்னிக்கு நீங்க ரொம்ப பெரிய தொழில் அதிபர்.. ஆனா நீங்க எங்க பொறந்தீங்க? உங்க பூர்விகம் என்ன? இது பத்தி தெரிஞ்சுக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம்.. உங்களை பத்தி சொல்ல முடியுமா?”
அந்தப் பெண் நிருபர் கேட்கவும் சுந்தரிக்கும் அவனை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவே அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நான் மயிலாடுதுறை பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல பொறந்தவன்.. எங்க குடும்பத்தொழில் விவசாயம் தான்.. எங்க அப்பா ஒரு நல்ல விவசாயி.. கஷ்டப்பட்டு விவசாயம் செஞ்சு தான் என்னை படிக்க வெச்சாரு.. இப்பவும் எனக்கு ஊர்ல விவசாய நிலங்கள் இருக்கு.. அதை நான்தான் ஆளுங்கள வெச்சு பாத்துக்குறேன்.. நான் பிளஸ் டூ முடிக்கும் போது எங்க அம்மாவும் அப்பாவும் வெளியூர் போனவங்க அங்க நடந்த ஒரு பஸ் ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாங்க..” என்று சொன்னவன் கண்கள் பனித்தது..
“அதுக்கப்புறம் விவசாயத்தில எனக்கு சொல்லிக்கிற மாதிரி பெரிய லாபமும் எதுவும் கிடைக்கல.. தினமும் சாப்பாட்டுக்கே திண்டாடினப்போ வேற வழி இல்லாம ஒரு துணி தைக்கிற கடையில பார்ட் டைமா வேலை செய்யவேண்டியதாச்சு.. அங்க கொஞ்சம் கொஞ்சமா தைக்கிற வேலையிலிருந்த நுணுக்கத்தை எல்லாம் கத்துக்கிட்டேன்.. அங்க கிடைச்ச பணத்தை வெச்சு காலேஜ் ஃபீஸ் கட்டி ஈவினிங் காலேஜ்ல சேர்ந்து படிச்சேன்.. ” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பழைய ஞாபகங்கள் மனதிற்குள் ஓட சில நொடி அவற்றை நினைத்துக் கொண்டு மௌனமாய் இருந்தான்..
இங்கே சுந்தரிக்கு அவன் சிறு வயதில் கஷ்டப்பட்ட கதையை கேட்டு கண்கள் கலங்க ஆரம்பித்தது.. சுந்தர் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து அவனே பேசினான்..
“அதுக்கப்பறம் நானே ஒரு சின்ன தையல் மிஷின் வாங்கி எல்லாருக்கும் தெச்சு கொடுக்க ஆரம்பிச்சேன்.. கொஞ்சம் கொஞ்சமா புது வகையான டிசைன்ஸ் எல்லாம் போட்டு நான் தெச்சு கொடுக்க என்னோட தையல் மெஷினை மட்டுமே நம்பி நடந்துக்கிட்டிருந்த என் சின்ன தொழில் மூலம் ஒரு தையல் கடையை உருவாக்கினேன்.. அதுக்கப்புறம் ஒரு வருஷம் தான்.. அந்த தையல் கடையை இம்ப்ரூவ் பண்ணி சுந்தர் டெய்லர்ஸ்ன்ற பேர்ல என் கடைய பெரிசாக்கி கிட்டத்தட்ட நாலு டெய்லர்ஸை வேலைக்கு வெச்சு பிஸ்னஸை இன்னும் பெரிசா பண்ணேன்.. அந்த கடையில் கிடைச்ச லாபத்தை வச்சு கூட எஜுகேஷன் லோன் அப்ளை பண்ணி நான் யுஎஸ் போய் எம் பி ஏ படிச்சிட்டு வந்தேன்..
அந்த கடையில வேலை செஞ்ச ஒருத்தர் கிட்டயே அந்த தையல் கடையை அப்படியே கொடுத்துட்டேன்.. இப்பவும் அவர் அங்க இருந்து தையல் கடையை நடத்திக்கிட்டு தான் இருக்காரு.. அதுக்கப்புறம் யூ எஸ் ல படிப்பு முடிச்சுட்டு வந்த நான் சென்னையில சுந்தர் ஃபேஷன்ஸ்னு ஒரு சின்ன பொட்டிக்கோட சேர்ந்த டெய்லரிங் யூனிட்டை ஆரம்பிச்சு எல்லா வேலையும் நான் ஒருத்தனா கிராமத்துல எப்படி முதல்ல தெச்சுக் கொடுத்தேனோ அதே மாதிரி ஒரே ஒரு மிஷின் வச்சு தைச்சு கொடுக்க ஆரம்பிச்சேன்.. ” என்றான்..
“அப்போ சென்னையில நிறைய காம்பெடிஷன் இருந்திருக்குமே.. அப்படியும் நீங்க இங்க வந்த உடனே தைரியமா ஒரு சின்ன டெய்லரிங் யூனிட் வச்சு தைச்சு கொடுத்தேன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.. உங்க கான்ஃபிடன்ஸை நினைச்சு எனக்கு பிரமிப்பா இருக்கு சார்..” என்றாள் அந்தப் பெண் நிருபர்..
அதை கேட்டு புன்னகைத்தவன் “ம்ம்ம்ம்.. நிறைய கஷ்டங்கள் இருந்தது.. ஆனா அதையெல்லாம் கன்சிடர் பண்றதுக்கு கூட எனக்கு டைம் இல்ல.. கஸ்டமர் டிமாண்டுக்காக காஸ்ட்யூம் தைச்சு கொடுத்து கிடைச்ச லாபத்தில இனவேட்டிவ்வா நான் டிசைன் பண்ண ட்ரஸ்ஸஸ் சிலதை தெச்சு அதையும் டிஸ்ப்ளேல வச்சேன்.. அதை வாங்குறதுக்கு பெரிய கூட்டமே கூடிச்சு.. என்னோட டிசைன்ஸ் ட்ரெண்டியா இருக்குன்னு நெறைய பேருக்கு புடிச்சு போயி கொஞ்சம் கொஞ்சமா எனக்கு நிறைய கஸ்டமர்ஸ் சேர ஆரம்பிச்சாங்க.. அதுக்கப்புறம் ஒரு சின்ன கடையை வச்சி அந்த கடையிலிருந்து இப்போ இந்த பெரிய கார்மெண்ட்ஸாவும் இன்னும் பெரிய கடையாகவும் மாத்தறதுக்கு உதவுனது இந்த ரெண்டு வருஷம் நான் உழைச்ச உழைப்பு மட்டும் இல்ல.. என்னோட கூட சேர்ந்து ஒர்க் பண்ண என்னோட டீம்.. என்னோட டிசைன்ஸை ரியாலிட்டியாக்கின என்னோட டெய்லர்ஸ்.. அவங்களோட உழைப்பும் தான்..” என்று அவன் கூறவும் அவனையே பிரமிப்புடன் பார்த்து இருந்தாள் அந்த பெண் நிருபர்..
“ரொம்ப சின்ன தையல் கூடமா ஆரம்பிச்ச உங்க தொழில் இன்னிக்கு பெரிய கார்மெண்ட்ஸா வளர்ந்திருக்கறது உங்க டிடெர்மினேஷனாலயும் ஹார்ட் வொர்க்னாலயும் உங்களுக்கு சாத்தியமாயிருக்குன்னு எங்களுக்கு புரியுது.. ஆனா இந்த இமாலய வளர்ச்சி உங்களுக்கு அவ்வளவு ஈஸியா கிடைச்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.. இதை பண்ணும் போது ஒவ்வொரு படியிலயும் உங்களுக்கு பல சோதனைகள் வந்திருக்கும்.. உங்களுக்கு என்னென்ன எல்லாம் கஷ்டம் வந்தது? நீங்க ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர்ன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டோம்.. அப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர் எப்படி இப்படி ஒரு கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபாட்டோட உங்க தடைகள் எல்லாம் கடந்து முன்னேறி வந்தீங்கன்னு உங்களோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாத்தையும் எங்களோட ஷேர் பண்ணிக்கிட்டிங்கனா அது நிறைய இளைஞர்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்.. அது பத்தி உங்களால சொல்ல முடியுமா?” அந்தப் பெண் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்..
“நிச்சயமா சொல்றேன்.. ஒரு 18 வயசு பையனுக்கு தன்னோட அம்மா அப்பா இரண்டு பேரும் இறந்து போய் அனாதை ஆயிட்டோம்கிறது எவ்வளவு பெரிய இழப்புன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.. அதுவரைக்கும் என்னதான் நான் எங்க அப்பா கூட விவசாய நிலத்துல உதவி செஞ்சாலும் கஷ்டமோ நஷ்டமோ கடன் வாங்கியோ ஏதோ பண்ணி என்னை படிக்க வச்சுட்டு இருந்தாரு எங்க அப்பா.. அந்த 18 வயசு வரைக்கும் என்னோட எல்லா பொறுப்புகளையும் சுமந்துக்கிட்டிருந்த என் அப்பா… என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த என் அம்மா.. ஒரு நாள் திடீர்னு என் கூட இல்லைன்னு தெரிஞ்சப்போ எனக்கு உலகமே ஸ்தம்பிச்சு நின்னு போன மாதிரி ஆயிடுச்சு..” என்றவன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்..
இங்கே சுந்தரியின் கண்களிலும் கண்ணீர் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தது.. ஏனென்றால் அவள் வாழ்விலும் இதே வலியை அவள் உணர்ந்திருக்கிறாளே.. தன் கண்களை துடைத்துக் கொண்ட சுந்தர் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்..
“அந்த இழப்பில இருந்து என்னையே நான் மீட்டு வெளியே கொண்டு வர்றதுக்கு எனக்கு ரொம்ப டைம் கிடைக்கல.. ஏன்னா அடுத்தநாள் சாப்பாடு நான் சாப்பிடணும்னா நான் உழைச்சாக வேண்டிய கட்டாயம் இருந்தது.. இல்லைனா பட்டினி கிடந்து சாகுற நிலைமைதான் எனக்கு.. எங்க அப்பா அது வரைக்கும் ஊர் நிறைய கடன் வாங்கி வெச்சிருந்தார்.. பாவம்.. அவருக்கு என்ன தெரியும் தான் இப்படி அல்பாயுசுல போக போறோன்னு.. அந்தக் கடனை அடைக்கிறதுக்கும் விவசாயத்தை தொடர்ந்து நடத்தறதுக்கும் அங்க வேலை செஞ்சிட்டிருந்த ஆளுங்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் தேவையா இருந்துச்சு.. எங்க வீட்டை அடமானம் வச்சு அந்த பணத்தை வாங்கி பேங்க்ல போட்டு அந்த வட்டியை வச்சு இது எல்லாத்தையும் நான் சமாளிச்சிட்டு இருந்தேன்.. ஆனா என்னோட சாப்பாட்டுக்கு என்னோட படிப்பு செலவுக்கு வெறும் விவசாயத்தை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்.. ஏன்னா அதுல ஒரு முதல் போட்டா உங்களுக்கு மறுபடியும் போட்ட முதல்ல எடுக்குறதுக்கே சில மாசம் ஆகும்.. அதுவரைக்கும் என் தினசரி சாப்பாட்டு செலவுக்கும் துணிமணி செலவுக்கும் படிப்பு செலவுக்கும் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருந்தேன்..”
ஒரு பெருமூச்சை விட்டவன் தொடர்ந்து பேசினான்..
“அப்பதான் விதி எங்க சித்தி ரூபத்துல வந்தது.. அவங்களுக்கு நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன்.. இன்னிக்கு நான் இவ்வளவு வளர்ந்திருக்கேன்னா அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது அவங்களோட அன்புதான்.. எங்க ஊருலயே ஒரு தையக்கடை வெச்சி நடத்திட்டு இருந்தாரு நடராஜன் சித்தப்பா.. அவரு எங்கப்பாவோட சித்தப்பா மகன்தான்.. அவரு ரொம்ப கணக்கா இருப்பாரு.. ஆனா சித்தி ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவங்க.. என் கஷ்டத்தை பார்த்து அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம எனக்கு சாப்பாடு செஞ்சு போட கூட ஆள் இல்லைன்னு இரக்கப்பட்டு தினமும் எனக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுத்தாங்க.. அது ஏனோ எங்க சித்தப்பாக்கு தெரிஞ்சப்போ அவர் கண்ணை உறுத்துச்சு..” என்றவன் மடியில் கோர்த்திருந்த தன் கைகளை விரித்து உள்ளங்கையை பார்த்துக் கொண்டே தொடர்ந்து பேசினான்..
“ஒரு நாள் என்னை பார்க்க வந்தவரு ‘ஏண்டா ஒரு வேலையும் செய்யாம என் வீட்ல தண்டசோறு தின்னுட்டு இருக்க..? இதுக்கு என் கடைக்கு வந்தாவது கொஞ்சம் வேலை பார்க்கலாம் இல்ல? உழைச்சு சாப்பிடணும்டா.. இப்படி தண்டத்துக்கு உடம்பு வளர்க்க கூடாது…’ன்னு சொல்லி அவர் திட்டுனப்போ யாரோ கத்தியால குத்துன மாதிரி வலிச்சுது..”
“என் சித்தப்பாவே எனக்கு போடுற சாப்பாட்டுக்கு கணக்கு பார்த்தாரு.. ஆனா ஒரு நேரம் நினைக்கும்போது உழைச்சு வேலை பார்த்து சாப்பிட்டாதான் அந்த சோறு செரிமானம் ஆகும்னு எனக்கும் தோணுச்சு.. அதனால அவர் கடையில பகலெல்லாம் வேலை செஞ்சிட்டு ஈவினிங் காலேஜ்ல சேர்ந்து பிகாம் முடிச்சேன்.. நல்ல ஸ்கோரோட கோல்டு மெடலிஸ்டா.. ஆனா படிக்கும்போது ஒரு விவசாய குடும்பத்துல இருந்து வந்த நான் படிப்பில இவ்வளவு நல்லா பெர்ஃபார்ம் பண்ணதை பார்த்த நெறைய பேருக்கு பொறாமைல வயிறு பத்தி எரிஞ்சது.. ஆனா அவங்களால பொறாமை தான் பட முடிஞ்சுதே தவிர என் முன்னேற்றத்தை தடுக்க முடியலை..” கண்களில் பெருமை மிதக்க சொன்னான்..
“பி காம் முடிச்சப்புறம் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.. எனக்கு தெரிஞ்ச ரெண்டு தொழில் ஒண்ணு விவசாயம்.. இன்னொன்னு தையத்தொழில்.. ஆனா இந்த தெக்கிற வேலை முதல்ல நான் கட்டாயத்துக்காக செய்ய ஆரம்பிச்சாலும் போக போக அது எனக்கு ஒரு ஆர்வத்தை கொடுத்தது..”
“கடையிலேயே சின்ன பிள்ளைகளுக்கு சட்டை பாவாடை ஜாக்கெட் தைக்கும் போது அதுல சின்ன சின்னதா பூ எம்பிராய்டரி.. அப்புறம் பட்டாம்பூச்சி.. இப்படி ஏதாவது டிசைன் போட்டு கொடுத்துட்டே இருப்பேன்.. அதை வாங்கிட்டு போகும்போது எங்க சித்தப்பாவோட கஸ்டமர்ஸ் அவர்கிட்ட இந்த டிசைன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு புகழ்ந்து சொல்லிட்டு போவாங்க.. ஆனா ஒரு நாள் கூட அவங்ககிட்ட சித்தப்பா அது நான் பண்ணதுன்னு சொன்னது கிடையாது.. அவரே பண்ணதுன்னு தான் சொல்லிப்பாரு.. ஒரு மாசம் எங்க சித்தப்பா கடையில் இருந்த நான் ஏன் தனியா தைக்கிற வேலை ஆரம்பிக்க கூடாதுனு யோசிச்சேன்.. அதனால என்கிட்ட மிச்சம் இருந்த பணத்தை வச்சு முதல்ல ஒரே ஒரு தையல் மெஷின் வாங்கினேன்.. எங்க தெருவுல எங்க வீட்டுக்கு அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களுக்கு சின்ன சின்னதா தையல் வேலை பண்ணி கொடுத்தேன்.. அதிலேயே நான் முன்னாடி செஞ்ச மாதிரி சின்ன சின்ன எம்பிராய்டரி டிசைன் போட்டு கொடுத்தேன்..” என்று சிரித்தான்..
“அந்த தையல் மிஷினை வாங்கின நேரம் ரொம்ப நல்ல நேரம்.. என்னோட வேலை எல்லாருக்கும் ரொம்ப புடிச்சி இருந்தது.. அவங்க தெக்க கொடுத்ததும் இல்லாம அவங்க உறவுக்காரங்க தெரிஞ்சவங்ககிட்டல்லாம் சொல்லி அவங்க கிட்ட இருந்தும் எனக்கு துணி தைக்க வாங்கி கொடுத்தாங்க..
அதுல கிடைச்ச பணத்துல நான் ஹோட்டல்ல சாப்பிட ஆரம்பிச்சேன்.. சித்தி கிட்ட என் நிலைமைய சொல்லி மன்னிப்பு கேட்டேன்.. அப்போ அவங்ககிட்ட நான் சாயங்கால டைம்ல வீட்டிலேர்ந்தே தெக்கறதை பத்தி சொன்னேன்.. அவங்க ரொம்ப சந்தோஷ பட்டாங்க.. ஆனா சித்தப்பாகிட்ட அத பத்தி சொன்னா அவர் கோவிச்சிக்கிட்டு என்னை திட்டி தெக்கவிடாம செஞ்சுட போறாருன்னு சித்தப்பாகிட்டருந்து சித்தி இந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க.. இது எனக்கு தெரியாது.. சித்தப்பா கிட்ட சித்தி சொல்லி இருப்பாங்கன்னு நெனச்சுக்கிட்டு நானும் இதை பத்தி பெரிசா பேசல சித்தப்பாகிட்ட.. சித்தப்பா கடையில பகல்ல வேலை செய்வேன்.. சாயங்காலம் என்னோட தையல் மிஷின்ல தைச்சு கொடுத்து வேலை செய்வேன்.. இப்படி ஒரு நாலு மாசம் செய்ய செய்ய எனக்கு என் வேலைன்னால நிறைய பணம் கிடைச்சுது.. அதை வச்சு எங்க வீட்டிலேயே ஒரு ரூமை தையல் கடையா மாத்திட்டேன்.. ” என்றான் ஒரு பெருமூச்சோடு..
“ஆனா.. அப்பதான் ஒரு சோதனை வந்தது.. சாயங்காலத்தில என்கிட்ட வாடிக்கையா துணி தெக்க குடுக்கிற ஒரு அம்மாவோட புருஷன் சித்தப்பா கிட்ட வந்து ‘ஏன் நடராஜா.. உன் தத்து பிள்ளை உனக்கு போட்டியா கடையெல்லாம் ஆரம்பிச்சிருக்கான் போல’ ன்னு சொல்லி விஷயத்தை சொல்ல சித்தப்பா என்னை பார்த்த பார்வையிலேயே சித்தி அவர்கிட்ட எதுவுமே சொல்லலன்னு தெரிஞ்சுடுச்சு.. என்னை ஒரு புழுவை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருந்தாரு என் சித்தப்பா…” அந்த நொடி அந்த பார்வையை அனுபவிப்பது போல் முகத்தில் அத்தனை வேதனையுடன் சொன்னான் சுந்தர்..
சுந்தரிக்கோ அப்போது அவன் பக்கமிருந்து அவன் வேதனையை தான் அனுபவித்தது போல வலி எடுத்தது..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பா