செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(6)

கோயம்புத்தூரில் இருந்து நூற்று இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகிய செழிப்பான சுற்றுலா தளத்தில் யாவரும் அறிந்து திகைத்த பகுதி வால்பாரி.

 

பார்ப்பவர்களின் கண்களை வருடியதோடு தேயிலை தோட்டத்தில் விநியோகிக்கும் முறையையும் கொண்ட தளம் அவை.

 

நெழுநெழுவென இருந்த பாதைகளும் கூட வியக்க வைப்பதில் தவறில்லை. இயற்கையினிடையே வளைந்து செல்லும் நாகேந்திரன் போலவே அழகு வடிவமைப்பு கொண்ட வால்பாரி உலக அதிசயங்களில் ஒன்றாக கூட வைத்திருக்கலாம். ஆனால் ஏழாவது சொர்க்கம் என்று சொல்வதிலும் எந்த பிழையும் இல்லை.

 

அங்குள்ள ஷேக்கல்முடியில் ஆள் உயர கேட் அமைப்போடு ஊன்றிய வில்லா ஒன்றில் பச்சை வர்ண மழைகளை பொழிந்தவாறு புற்தரைகள் நுனிபனியால் நெளிந்து கொண்டிருந்தன.

 

அதன் உட்புறத்தில் ஆங்காங்கே பந்து வடிவிலான புதர் அமைப்புகளை கட் செய்து அலங்கரித்து அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்ற வண்ணமாக வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் அவற்றோடு உரையாடி கொண்டிருந்தன.

 

“இன்பரசன் இல்லம்” என்ற பெயர் பலகையோடு தாங்கிய இருந்த வில்லாவினுள் மெல்லிய கானக்குயில் இசையை வருடிக் கொடுத்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.  அந்த இசையோடு இரம்மியம் செய்ததோடு அமர்ந்திருந்த அந்த பெண்மணியின் வயது முப்பது.

 

இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவர்கள் குறித்த கணத்தில் இந்த உலகை காண ஆவலுடன் காத்திருந்த தனது ஒன்பது மாத குழந்தையை தன் வயிற்றோடு தொட்டுப்பார்த்து இரசித்து சிலாகித்து கொண்டிருந்தாள் அந்த முப்பது வயது நிரம்பிய நிறைமாத கற்பிணியான அன்பரசி.

 

நீயுமா நானும் நீலவானம் என்ற பாடலை முடித்து அடுத்த பாடல் இசைப்பதற்குள் அவளது மொபைலுக்குள் கிங்கினி சிரிப்போடு பார்ட்னர் என்ற சொல்லை தாங்கியதோடு அழைப்பு வந்தது.

 

அழைப்பை ஏற்றபோது “என்ன பண்ற அரசி. சாப்பிட்டு மாத்திரை போட்டையா?..வலி எதாவது இருக்கா?… இருந்தா உடனே கால் பண்ணு ஒடி வந்துருவேன்”… அன்பாக ஆரம்பித்தவர் ஆதங்கத்துடன் முடிவுரை கொடுத்தார்.

 

ஹப்பா இந்த போனுக்கு மட்டும் வாய் இருந்தால் கதறி அழுதிடும்.  இத்தோட இன்னைக்கே இந்த டையலாக் அஞ்சாவது தடவ ரிப்பீட் இன்பா.  எத்தன டைம் போன் பண்ணாலும் சொல்லி வச்ச மாதிரி அதே கேட்குறையேப்பா…போர் அடிக்கலையா?…சளித்து கொண்டாள் என்றாள் உண்மை.

 

அடிப்பாவி இந்த மாதிரி ஒரு பியூர் அக்மார்க் கோல்ட் புருசன பாக்க முடியுமா!..இதுக்கு நீ கோடி புண்ணியம் பண்ணிருக்கனும்…

 

க்கும் நீங்க தான் மெச்சிக்கனும்…நிரமாச பொண்டாட்டி கூட இல்லாமல்  வேல வேலனு இருந்துட்டு,  அக்மார்க் கோல்ட் புருசன்னு வேற பீத்தல்…..

 

அச்சோ பாய்ண்டா பேசுறாலே… வாயை மூடி சும்மா இருடா…என்று அவரே அவருக்கு சொல்லி கொண்டார்.

 

இப்ப என்ன டேப்லெட் போட்டனான்னு தெரியனும் அம்புட்டு தானே… சாப்பிட்டன் வைங்க… என்னோட பிள்ளங்கை கூப்பிறாங்க….

 

சொல்லியவள் அழைப்பை துண்டித்தாலும் அஞ்சு அறிவு ஜீவன் மேல அவ வைக்குற அளவு கூட நம்ம மேல பாசம் காட்ட மாற்றாலே… கள் நெஞ்சக்காரி… திமிரு பிடித்தவள்….

 

அவளை வசைப்பாடியவன் பின்னர் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து வாய் மீது அடித்து கொண்டான்…

 

தப்பு தப்பு என் பொண்டாட்டிய நான் எப்படி திட்டலாம்.  அவ என் மகராசி, என்னோட குலதெய்வம் என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டார் இன்பரசன்.

 

அதே நேரம் இன்பரசனின் அதட்டலையும் புகழ்ச்சிக்கும் உரித்தான அன்பரசி தனது கிளிப் பிள்ளைகளோடு தகிடுதத்தம் செய்து கொண்டிருந்தாள்.

 

பின்பற கூண்டுகளில் உள்ள கிளிகளுக்கு நறுக்கிய பழங்களோடு வேகவைத்த உணவுகளையும் தண்ணீர் குவளைகளையும் வைத்து விட்டு காத்திருந்தாள்.  முதலில் எடுத்துக் கொள்ளாத கிளிகள் அவள் முகத்தில் சோகம் பரவவும் சாப்பிட தொடங்கின.‌

 

தேங்க் யூ மம்மா…அழகாக செல்லக்கிளி ஒன்று சொல்ல சிரிப்போடு பின்புற வாசல் வழியாக உள்ளே நுழைந்து மீண்டும் இசையோடு குழலானாள்.

 

காதல் திருமணத்தின் பரிசு வெளிவர காத்திருக்கும் தருணம் அறிந்த தந்தையும் தாயும் அமைதியாக காத்திருந்த சுகமான வேதனை சுவடுகள்.

 

இன்பரசன் அவரது தொழிலான குடும்ப உணவகம் என்ற தங்களுடைய ரெஷார்ட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தருணம்.  இப்போது தொழில் மற்றும் குடும்பம் இரண்டையும் சரிசமமாக நிர்ணயிக்கின்றாறெனில் அரசியின் துணையும் அவருக்கு ஒரு பக்கபலம்.

 

பாலோடு அன்பரசியின் அருகில் வந்து

அமர்ந்து வயிற்றை தடவி பார்த்தாள் சங்கீதா.

 

தனது மனைவிக்காக பணியாள் வைத்து அவளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டு சென்றானே இன்பரசன்!.. நான்காம் வாரம் கற்பம் உறுதியான பொழுதே அவர் செய்த முதல் பொறுப்பு சங்கீதாவை வேலையில் அமர்த்தியது.  கூடுதல் அக்கறையாக கவனித்து கொள் என்று கட்டளையும் உண்டு அவளுக்கு.

 

ஏன்மா இன்பா ஐயா கால் பண்ணிட்டாரா?…

 

அதுலாம் பண்ணிடாரு கீதா.  மாத்திரை போட்டையா? …. வலிக்குதான்னு அதே டையலாக் ரெக்கார்ட்டர் தான்….

 

இருவரும் நகையாடிக் கொண்டிருந்தார்கள்

 

காலை கோலம் போடுவதில் தொடங்கி இரவு உணவு சமைப்பது வரை அனைத்தும் சீங்கீதாவின் கைவசம் தான் அங்கு.  இங்கே இருந்த நாட்களில் அன்பரசியும் சங்கீதாவும் சகோதரிகளாகவே மாறிப் போயினார்கள்.

 

அதுவும் சரிதான்மா… நம்ம குட்டி தம்பி வெளிய வந்ததுக்கு அப்புறமா உங்க அப்பா இந்த டையலாக்கதான் பேசி பேசி கடுப்பேத்துவாறுன்னு சொல்லி தம்பியோட சேர்ந்து சிரிக்கலாம்மா என்று சொல்லவும்,

 

தம்பி அப்பாக்கு சப்போர்ட்டா வந்துடு போறான் கீதா.  அப்புறம் நம்ம கட்டுற மனக்கோட்ட சரிஞ்சிட போகுது என்று பேசியவள் பாலை அருந்திவிட்டு உறங்கினாரெனில் அவளோடு கீதா என்ற சங்கீதாவும் உறங்கி விட்டாள்.

 

மாலை நேரத்தில் குளித்து முடித்த கையோடு வீட்டின் முன்வாசலில் அழுக்காக பொறுத்துப்பட்டிருத்த மீன் தொட்டிகளில் இருந்த மீன்களுக்கு உணவளித்து கொண்டிருந்தாள் அன்பரசி.

 

அதே நேரத்தில் அவர்கள் வீட்டின் நுழைவு வாயில் பெல் சத்தம் கேட்டதும் இருவரும் யாராக இருக்குமென யோசனையோடு கதவை திறந்தனர்.

 

வணக்கம்ங்க….சலாம்

 

என்று இரு சத்தமும் அங்கே ஒருமிதமாக ஒலித்தன.

 

வணக்கம் வாங்க உள்ள வாங்க…என அழைத்த அன்பரசியிடம்

 

இல்லைங்க இன்னைக்கு நாங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்திருக்கம்.  நாளைக்கு காலைல பால் காசிட்டு வாழ்க்கைய தொடங்கலாம்னு இருக்கம்.  நீங்க காலையில கண்டிப்பாக வரனும் என்று அன்பாக அழைத்து விட்டு விடைபெற்ற இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர்.

 

இரண்டு பேரும் வித்தியாசமா பேசிக்கிறாங்களேம்மா இவங்களும் வீட்ட விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க போல…கீதா அன்பரசியிடம் வினவினாள்.

 

அப்படிதான் எனக்கும் தோணுது கீதா… இருக்கட்டும் விடு…என்று சொல்லி விட்டு சாமியறையில் நுழைந்தார்கள் இருவரும்.

 

விளக்கேற்றி அன்பரசியோடு சேர்ந்து குட்டி தம்பி நல்லபடியா வெளியே வரனும் என்ற வேண்டுதலோடு கீதா சமையலறை நோக்கி சென்று விட , தொழில் வளமும் அனைவரின் உடல் நலமும் நன்றாக இருக்க வேண்டுமென வேண்டினாள்.

 

சரியாக காலை உதிர்த்த சூரியனின் ஓய்வு நேரம் வரும் சமயமான ஐந்தரைக்குள் அந்த வில்லாவின் கேட்டை திறந்து கொண்டு மாருதி சுசூகியில் வந்தார் இன்பரசன்.

 

காரின் இருப்பிடத்தில் அவற்றை நிறுத்தி பாதுக்காப்பு உடையை அணிவித்து விட்டு வந்தார்.  எதிலும் பொறுப்பானவர் என்று சொன்னாள் மிகவும் பொருத்தமானவர் அவர்.  ஆனால் என்ன அடிக்கடி கோபம் கொள்ளும் மானுட பிறவியில் அவரும் ஒருவர்.

 

வீட்டில் நுழைந்ததும் குளித்து முடித்துவிட்டு நடை பயிற்சி செய்து கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்து நின்றார் இன்பரசன்.

 

குழந்தையின் வெயிட்டோடு சேர்ந்து மனைவியின் கால் வீக்கமுற்று இருப்பதை கவனித்தார்.  பின்னர் முட்டியிட்டு அமர்ந்து தனது செல்லம் மகனுக்காக முத்தம் ஒன்றை கொடுத்தவர் அன்பரசியை காதல் கொண்ட கண்ணோடு நோக்கினார்.

 

அன்பரசி தனது குழந்தையை கொஞ்சும் தன் கணவனை குழந்தையாய் பாவித்து அவர் எழுந்த பொழுது அவரது நெற்றியில் முத்தம் ஒன்று இட்டாள்.

 

நடைப்பயிற்சியின் கலைப்பு அன்பரசியின் முகத்தில் தெரிய புல் தரைகளுக்கு இடையே போடப்பட்டிருந்த நாற்காலையில் அமர வைத்தான்.

 

இந்த வீட்டின் ஒவ்வொரு கட்டமைப்பையும் அமைத்து வைத்தது அன்பரசியின் தெள்ளத் தெளிவான முடிவுகள் மட்டுமே!..

 

இதே போலத்தான் தொழில் வளத்திலும் கணவர் கடின உழைப்பு வாய்ந்தவர் என்பதால் அறிவுரையோடு நின்று கொண்டு  உணவகம் ஆரம்பிக்கலாம் என ஊக்குவித்தவளும் அவள் தானே.

 

நாற்காலியில் அவள் அமர்ந்ததும் தனது தோளோடு சாய்த்துக் கொண்டவர் அரசி ரொம்ப வலிக்குதாடா என்று வார்த்தைகளுக்கே வழித்து விடும் போல மென்மையாக பேசினார்.

 

சில பெண்களும் கர்ப்ப காலத்தில் எதிர்பார்ப்பது இவை தானே.  கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல மற்ற காலத்தில் இப்படியே ஒரு கணவன் அமைந்து விட்டால் பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இல்லை பெண்களுக்கு.

 

பின்னர் மூவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு சங்கீதாவிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

 

என்ன கீதா காலையில பணம் கேட்டு இருந்த இப்ப மறந்துட்டியா?…

 

மீண்டும் நினைவு கூறாதவளின் மீது சிறிதலாக கோபத்தோடு அருகில் வந்தால் அன்பரசி.

 

கைகளில் நான்கு துணி பைகளோடு கீதாவின் கையில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட அதிர்ந்து நின்றால் அந்த வேலைக்கார பெண்.

 

அம்மா, ஐயா…

அதிர்ச்சியோடு நின்றாள் கீதா.

 

என்ன கீதா அப்படியே நின்னுட்ட நீ சொன்னதை நான் மறந்துவிடுவேன்னு நினைச்சிட்டையா.  நாளைக்கு உன் பொண்ணுக்கு பிறந்தநாளுன்னு சொன்னது எங்களுக்கு அதுக்குள்ளயா மறந்திடும்.  இந்தா இந்த துணியோடு சேர்த்து காசையும் வச்சுக்கிட்டு பர்த்டேவ நல்லா செலிப்ரேஷன் பண்ணிட்டு நீ அடுத்த நாள் வந்தா மட்டும் போதும் என டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தார்கள் அன்பரசியும் இன்பரசனும்.

 

மெத்தை மேல் உறங்குவதற்காக படுத்திருந்தவளின் காலை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கு கடினமாக இருந்தது. அவளது காலை மென்மையாக பிடித்து விட்டவர் அவளது காலுக்கு முத்தமிட்டார்.

 

என்ன பண்ற இன்பா..சின்னபிள்ள தனமாக பண்ணாத.  நமக்கு வயசு முப்பது ஆகுது….என கிசுகிசுத்தாள் அன்பரசி.

 

ஏன் இதுக்கு என்ன…இதுக்காக எனக்கு வயசு பதினெட்டுன்னா சுத்த முடியும்.  நான் இப்படிதான்.  என் மனைவிய கொஞ்சனும்னு தோணுற சாதாரண சின்னபிள்ள தான் நானு.  இப்ப மட்டும் இல்ல அரசி எனக்கு ஐம்பது ஏன் எண்பது ஆனாலும் இப்படிதான் உன்ன‌ நான் கொஞ்சுவேன் என்று சொல்லி அணைத்தவரின்‌ அணைப்பில் அடைக்கலம் ஆனாள் பெண்ணும்.

 

மறுநாள் காலை பொழுதில் சொதசொதவென மழை பொழிந்து கொண்டிருந்தது.  பெட் காஃபியோடு அன்பரசியை எழுப்பினார் இன்பரசனும்.

 

ஏங்க  இன்பா வயிரு ரொம்ப இருக்கி பிடிக்குதுங்க..

 

ஆரம்பித்த வலியோடு பத்தட்டமாக சொன்னாள் அன்பரசி.

 

என்னம்மா வலி எடுத்துகிச்சா…இரு இரு ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடுறேன் என்று தன் மொபைலை தேடி கலைத்து போய்விட்டான்.  நேற்று உணவகத்திலே விட்டு வந்துவிட்டது இப்போது நினைவு வர அன்பரசியின் மொபைலை தேடிப் பார்க்க அது சார்ஜர் அற்று செத்து போயிருந்தது.

 

நல்ல வேலையாக அந்நேரம் பார்த்த பால் காய்ச்சி முடித்துவிட்டு வந்திருந்த புதுமண தம்பதியர்கள் அங்கே வந்திருந்தார்கள்.  கேட்டை திறந்து வந்தவர்களை அழைத்து விவரத்தை கூறிவிட்டு மனைவியினை கையோடு தூக்கி கொண்டு காரில் அமர வைத்தார்.

 

ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில் முன்னதாகவே வலி பிறக்குமென அறியாதவர் தான்.  நால்வருமாக AVS என்ற பெரிய எழுத்தோடு பொழிந்த மருத்துவமனையில் அன்பரசியை பிரசவத்திற்காக அட்மிட் செய்தார்கள்.

 

வழக்கமாக பரிசோதனை செய்யும் இடம் என்பதால் பிரசவத்திற்காக அவளை தயார்படுத்தி கொண்டிருந்தார்கள்.

 

புதுமண தம்பதிக்கு பயம் இதயத்தை வெளியே அள்ளி தெறித்து விடும் அளவு இருந்தது.

 

இவர்கள் இருவரும் இருபத்து ஏழை தொட்டவர்கள்.  இருந்தாலும் பெற்றவர்களின் அரவணைப்புமாக இருந்தவர்களுக்கு பிரசவ வலி அவர்களை நினைவு கூர்ந்தது.

 

எங்க அம்மாவும் இப்படி தான் அழுதிருப்பாங்கள்ள பாஸ்கர்…

 

அவளின் கைகளை தன் கையோடு இறுக்கி கொண்டவர் இன்னும் ஏழு மாசத்துல நீயும் இப்படி அழுவனு நினச்சுதான் ஸ்ரீஜா என் மனசு வலிக்குதுடி என இவர்கள் இருவரும் வேறு உலகத்தில் பயணித்தனர்.

 

மூன்று மணிநேரமும் திக் பிரம்மை பிடித்த பொம்மை போல குறுக்கும் நெடுக்குமாக நடந்த இன்பரசருக்கு மருத்துவர் சொன்ன இன்பச் செய்தியால் தான் மீண்டும் ஜனித்தார்.

 

ஆம்‌!..அவருக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளதை சொல்லிவிட்டு கன்கிராட்ஸ் தெரிவித்து சென்ற மருத்துவர்களும் இவ்விரு தம்பதியரும் தெய்வம் அனுப்பி வைத்த காவலர்களாக தெரிந்தார்கள்.

செந்தனலா?…மழையா?…

 

கௌசல்யா வேல்முருகன் 💝..

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!