சோதிக்காதே சொர்க்கமே 8

5
(6)
மானசாவின் முன்பே வேற்றுடையை மாற்றினான் தீனா. இவள் அவனை பார்க்காமல் குழந்தையின் முகத்தை பார்த்தாள்.
உடை மாற்றிக் கொண்டவன் “எனக்கு வேலை இருக்கு. கிளம்புறேன்.. என் அம்மா உன்னை வெளியே துரத்த மாட்டாங்க. அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா வேற ஏதாவது தொந்தரவு பண்ணினா எனக்கு போன் பண்ணு. நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இவள் குழந்தையை பார்த்து கண்ணீர் வடித்தாள். குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அழதான் தோன்றியது. குழந்தையின் விதி இப்படி ஆகிவிட்டது என்று கதற தோன்றியது.
குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த அறைக்குள் அங்கும் இங்குமாக நடந்தாள்.
சற்று நேரத்தில் பசிக்கு அழ ஆரம்பித்து விட்டது. இவள் கைகளால் தாலாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
குழந்தையின் அறைக்கு சென்று பால் பவுடரை தேடினாள். அது அங்கே இல்லை. வெளியே ஹாலுக்கு வந்தாள்.
மாமியார் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அழுது அழுது அவளுக்கு தலைவலி வந்து விட்டது. கண்கள் கூட சிவந்து விட்டது.
குழந்தை அழுத சத்தத்தில் நிமிர்ந்தாள்.
குழந்தையை தன்னோடு இறுக்கமாக அணைத்திருந்த மானசா “குழந்தைக்கு பால் தீர்ந்துடுச்சி. பால் வேணும்..” என்று பால் புட்டியை நீட்டினாள்.
பணிப்பெண் ஒருத்தி பால் புட்டியை வாங்கிப் போனாள்‌.
சுலோச்சனா இவளை கேவலமாக பார்த்தாள். “அவனை கல்யாணம் பண்ண உனக்கு வெக்கமா இல்லையா? அவன் என்ன வேணா சொல்லி இருக்கட்டும். பிளாக் மெயில் கூட பண்ணியிருக்கட்டும். ஆனா எப்படி உன்னால இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடிஞ்சது?” என்று கேட்டாள்.
மானசாவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது. பிளாக் மெயில் செய்தால் கூட திருமணம் செய்து இருக்கக்கூடாது என்று சொல்லும் இந்த மாமியாரிடம் இவள் என்னவென்று விளக்குவாள்?
“உன்னை மாதிரி ஒரு எச்சையை பிடிக்காததாலதான் என் மருமக ப்ரீத்தி உன்னை பத்தி ஒரு வார்த்தையும் சொல்லாம இருந்திருக்கா. கர்மா உனக்கு பதில் சொல்லும்..” என்று சாபம் வைக்காத குறையாகச் சொன்னாள் சுலோச்சனா.
உண்மையில் நாம் கெட்டவள்தான். அதனால்தான் இப்போது இந்த திருமணத்தை செய்திருக்கிறோம் என்று நினைத்து தன்னை வெறுத்தாள் மானசா.
“என் பேத்தியை கொடுடி..” என்று மானசாவை நோக்கி நாற்காலியை தள்ளினாள் சுலோச்சனா.
மானசா முடியாது என்று தலையாட்டியபடி பின்னால் நடந்தாள். “என் குழந்தையை நான் தரமாட்டேன்..” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.
“உன் குழந்தையா? பாவி இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல?” என்று ஆத்திரத்தோடு திட்டினாள் சுலோச்சனா.
தன் மகனை கூட அவள் இருந்த அளவிற்கு திட்டி இருக்க மாட்டாள். மகன் ஏதோ கிறுக்குத்தனமாக மிரட்டிதான் இவளை திருமணம் செய்து இருக்கிறான் என்று தெரிந்திருந்தும் இவளையே திட்டினாள் சுலோச்சனா. ஏனெனில் சுலோச்சனாவுக்கு அவ்வளவு ஆதங்கம். ஒரு பெண்ணாக இதை ஏற்கவே முடியவில்லை.‌
பாலை கொண்டு வந்து கொடுத்தாள் பணிப்பெண். மானசா புட்டியை வாங்கிக்கொண்டு தீனாவின் ரூமுக்கே சென்று விட்டாள்‌. மாமியாரின் முன்னால் நிற்கவே குற்ற உணர்வாக இருந்தது. அதனாலேயே ரூமுக்குள் வந்து ஒளிந்து கொண்டாள்.
குழந்தைக்கு பாலை கொடுத்தாள். அது கொஞ்சம் குடித்துவிட்டு அழுதபடியே உறங்கி விட்டது.
குழந்தையை தொட்டிலில் கிடத்தினாள்.
அவள் அணிந்திருந்த பிளவுஸ் வேறு கொஞ்சம் டைட்டாக இருந்தது. அலமாரியை திறந்தாள். அலமாரி முழுக்க ப்ரீத்தியின் உடைகள் நிரம்பி இருந்தன. ஓரத்தில் இருந்த ஒரேயொரு அலமாரியில் மட்டும்தான் தீனாவின் உடைகள் இருந்தன. மீதி அனைத்துமே பிரீத்தியின் உடைகள்தான்.
அத்தனையுமே பிரீமியம் உடைகளாக இருந்தன. வீட்டில் ஓய்வெடுக்கும் போது கூட ப்ரீத்தி பளபளப்பான ஆடைகளை மட்டும்தான் அணிந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த உடைகளை எல்லாம் வாங்கி தருவான் என்று தவறாய் கணக்கு போட்டுதான் இவனை திருமணம் செய்தாயா பிரீத்தி என்று மனதுக்குள் கேட்டாள்‌. ப்ரீத்தியின் சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்தாள்.
அந்த சுடிதாரை அணிந்தவள் அதன் துப்பட்டாவை தேடினாள். அது மட்டும் அங்கே காணவில்லை.
ஒவ்வொரு உடையாக எடுத்துப் பார்த்தாள். மாட்டி இருந்த உடைகளை தள்ளி பார்த்தாள். துப்பட்டா கிடைக்கவில்லை.
மாறாக ஒரு மோதிரம் கிடைத்தது. ப்ரீத்தியும் இவளும் கல்லூரிக்கு சென்ற முதல் வருடம் ஆசையாய் வாங்கி அணிந்து கொண்ட ஜோடி மோதிரம். ‌ அதன் மற்றொரு ஜோடி இன்னமும் மானசாவின் விரலில் இருந்தது.
ப்ரீத்தியின் மோதிரத்தையும் எடுத்து தனது மற்றொரு விரலில் மாட்டினாள். அழுகையாக வந்தது.
தீனா வேலை முடிந்து மாலையில் வீடு வந்தான்.
 இவன் வந்தபோது மானசாவும் ‌ குழந்தையும் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவன் கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தான். குழந்தையை தூக்கி தொட்டிலில் கிடத்தி விட்டு மானசாவை பார்த்தான்.
அழகிய தேவதையாக அற்புத சிலையாக படுத்திருந்தாள் அவள்.
அவளின் சுடிதாருக்குள் நுழைந்து இடையை வருடியது அவனின் கரம்.
இவனின் தீண்டலுக்கு உடனே கண் திறந்து விட்டாள் அவள். அவனை பார்த்ததும் பயந்து எழுந்து அமர்ந்தவள் ஆவென்று கத்த போனாள்.
அவசரமாக அவளின் வாயை பொத்தினான் இவன். “நான்தான். உன் ஹஸ்பண்ட் தீனா..” என்றான் கிசுகிசுப்பாக.
இவள் வெறிக்க வெறிக்க பார்த்தாள்.
அவள் வாய் மீதிருந்து கையை எடுத்தான். தன் உதட்டின் மீது கை வைத்து “உஸ்ஸ்.. சத்தம் போடாத. குழந்தை எழுந்துடும்..” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
அவளை தலையணையில் தள்ளினான்.
“இந்த டாப்பை நான் கழட்டுறேன். இது உனக்கு வேணாம்..” என்றவன் உடையை மேலே நகர்த்தினான்.
தன் வயிற்றின் மீது கை பதித்தவள் “வேணாம். எனக்கு‌ பிடிக்கல..” என்றாள்.
அவளின் கை மீது முத்தமிட்டான். “இப்படி சொல்லாத. உனக்கு கண்டிப்பா பிடிக்கும்..” என்றான்.
அவளின் கையை விலக்கியவன் டாப்பை நகர்த்தி அவள் வயிற்றில் இதழ் பதித்தான். இவள் கூச்சத்திலும் பயத்திலும் நெளிந்தாள்.
“யூ ஆர் வெரி பிரிட்டி..” என்றவன் அவளின் மென்மையான மேனியை மயிலிறகு வருடுவது போல் வருடினான்.
அவளின் டாப்பை முழுமையாக கழட்டி விட்டான்.
“சாரி எனக்கு பயமா இருக்கு. என்னை விட்டுடுங்க..” என்றாள் மிரட்சியோடு.
அதிர்ந்தவன் “என்னை பார்த்து பயமா? நான் உன்னை எதுவும் ஹர்ட் பண்ண மாட்டேன் ஏஞ்சல்..” என்றான்.
அவளின் கையை பற்றி முத்தமிட்டான். “உன் மொத்த உடம்பையும் வெண்ணையை வச்சி செஞ்ச மாதிரி இருக்கு. நீ இவ்வளவு சாப்டா இருப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..” என்றவன் அவளின் இதழை திருட வந்தான்.
முகத்தை திருப்பிக் கொண்டவள் “ப்ளீஸ் வேணாமே!” என்றாள்.
இவனுக்கு கோபம் பொங்கியது. அவளின் தாடையை பிடித்து‌ தன் புறம் திருப்பியவன் “இந்த குழந்தையை மொட்டை மாடிக்கு கொண்டுப் போய் அங்கே இருந்து கீழே தூக்கி போட்டுட்டு வரேன்..” என்று எழுந்தான்.
அவசரமாக அவனின் கையை பிடித்தாள். “அப்படி பண்ண வேணாம் ப்ளீஸ்‌..” என்றாள்.
“அப்படின்னா எனக்கு ஓகே சொல்லு..” என்றான்.
இவளுக்கு விழிகள் கலங்கியது. “ப்ரீத்தி மேல உங்களுக்கு கொஞ்சம் கூட லவ் இல்லையா?” எனக் கேட்டாள்.
இவன் அதற்கு பதில் சொல்லாமல் தன் கையை பிடுங்கிக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கினான். தொட்டிலை நெருங்கியவன் குழந்தையை தூக்க முயன்றான். அதற்குள் மானசா ஓடி வந்து‌ அவனை கையை பிடித்தாள்.
“ப்ளீஸ் வேணாம்…” என்றாள்.
இவன் திரும்பி பார்த்து முறைத்தான்.
பயத்தில் வெளுத்தே விட்டாள்.
அவனின் முறைப்புக் கண்டு இவள் தலை குனிந்தாள். “சம்மதம்..” என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.
அவளை அள்ளி தூக்கினான்.
கட்டிலில் கிடத்தியவன் “நீயும் நானும் ரொம்ப வருசம் சேர்ந்து வாழணும்..” என்று சொல்லியபடி அவளின் மீது படர்ந்தான்.
கொஞ்சம் முன்னால் அவனிடம் இருந்த கோபம் இப்போது எங்கே சென்றது என்றே தெரியவில்லை.
அவளின் இதழில் முத்தமென்ற கவிதை எழுதினான். அவளுக்கு கண்கள் கலங்கியது.
அவளின் இதழை சில நொடிகள் உறிஞ்சி விட்டு நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான். “ஸ்வீட் ப்ரூட்ஸ் அத்தனைக்கும் நெக்டர் உன் லிப்ஸ்ல இருந்துதான் டிஸ்ட்ரிப்யூட் ஆகுதுன்னு நினைக்கிறேன்..” என்று சொல்லி அவளின் உதட்டை மீண்டும் கவ்வினான்.
அவன் பாராட்டதான் செய்தான். ஆனால் இவளுக்குதான் ஏற்க பிடிக்கவில்லை. இவனை இந்த நெஞ்சில் சுமப்பதற்கு பதிலாக செத்து போகலாம் என்று நினைத்தாள்.
அந்த முத்தத்தில் மென்மையும் வன்மையும் கலந்து இருந்தது. வலியும் சுகமும் சமமாக மேனி முழுக்க அந்த முத்தம் பரவியது.
அவன் தந்த முத்தத்திற்கு உடம்பு ரியாக்ட் ஆனது. இவளுக்கு அதுதான் அதிக வலியை தந்தது. ப்ரீத்திக்கு துரோகம் செய்வது அநியாயம்.
அவளின் கீழுதட்டில் அவனின் பற்கள் பட்டும் படாமல் மோதின.
அவள் அசைவற்று கிடந்தாள். தன் மூச்சு கூட அவன் மீது மோதி விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.
பிணத்தை போல் கிடக்க முயற்சித்தாள்.
அவள் திருப்பி முத்தமிடுவாள் என்று இவனும் எதிர்பார்க்கவில்லை. அவளின் மேனியை வருடி பார்த்தது கரம். திருடி பார்த்தது விரல்கள்.
எங்கே தொட்டாலும் பேரழகு. எப்படி பார்த்தாலும் தேரழகு.
அவளின் மேடு பள்ளங்களை முத்தத்தால் அளந்து அவளின் வளைவு நெளிவுகளை விரல்களால் கடந்தான்.
“யூ ஆர் வெரி ப்ரிட்டி..” என்றான்.
“வெரி செக்ஸி..” என்றான்.
நிறைய பாராட்டினான். நிறைய கொஞ்சினான். அவள் செவிகளில் விழுந்ததையும் கேட்கவில்லை. நெஞ்சுக்குள் புக முயன்றதையும் விடவில்லை.
கழுத்தை முத்த மழை நனைத்தது. நெஞ்சிலும் வயிற்றிலும் அந்த முத்தங்கள் கடல் போல் நிரம்பியது. இப்போதேதான் ஒரு பெண்ணை பார்ப்பது போல் மோகத்தால் ஆராதித்து கொண்டிருந்தான். முதல் முறை கலவி கொள்வது போல் கஷ்டத்தோடு இஷ்டப்பட்டு கொண்டிருந்தான்.
அவனின் முத்தத்தின் அழுத்தம் கூட கூட இவளுக்கு உணர்வுகளின் வேதனை கூடியது. உணர்வுகளை வெளிகாட்டாமல் இருக்க முயன்றதில் மனதினுள் இருந்த கடைசி துளி சுயமரியாதையும் செத்துப் போனது. அவளையும் மீறி கண்ணீர் ஆறு போல் பொங்கியது.
நிறைய முத்தங்களுக்கு பிறகு அவளின் மேனியோடு கூடினான். அவள் கேட்டது வலியை. ஆனால் அவன் தந்தது சுகத்தை. ஆனால் இந்த ஒரு நொடியில் அவன் தந்த சுகம் மொத்தமும் வலியாய் மாறிப்போனது. இந்த முறை தைரியமாய் அழுதாள். அளவுக்கு அதிகமாக அழுதாள்.
அவன் பதறி விட்டான். ஆரம்பித்த காரியத்தை பாதியில் நிறுத்திக் கொள்ளவும் மனம் வரவில்லை. அவளின் கண்ணீரை காணவும் விருப்பமில்லை.
“சாரி..” என்றவனிடம் “எதுக்கு சாரி கேக்குறிங்க? உங்களுக்கு தேவை இந்த உடம்புதானே? அதைதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே! அப்புறம் எதுக்கு சாரி கேட்டு நாடகம் ஆடுறீங்க? என்ன கருமம் தேவையோ அந்த கருமத்தை முடிச்சிட்டு என்னை விட்டு போங்க..” என்று வெறுப்போடு சொன்னாள்.
அவளின் தாடையை இறுக்கிப்பிடித்தது இவனின் கரம். “இந்த கோபத்தை எல்லாம் என்கிட்ட காட்டாத. நான் அவ்வளவு நல்லவன் கிடையாது..” என்று எச்சரித்தான்.
அவன் நல்லவன் இல்லை என்றுதான் இவளுக்கே தெரியுமே.
அவனின் கையை தட்டிவிட்டாள்.
கொட்டிக் கொண்டிருந்த கண்ணீரோடு அவனின் முகத்தை பார்த்தாள். அவனுக்கு நெஞ்சுக்குள் ஈட்டியை எடுத்து சொருகியது போல் வலித்தது.
“ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று கேட்டான்.
தன் காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டாள். உதடுகளை இறுக்கமாய் மூடினாள்.
இவன் அவளை சமாதானம் செய்யதான் விரும்பினான். ஆனால் அவள் பிடிவாதம் பிடிக்கவும் இவனும் தன் பிடிவாதத்தை கைக்கொண்டு விட்டான்.

 

தொடரும்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!