எரிக்கும் விழிகளில் மங்கை அவளோ அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவளது பார்வையை சற்றும் அசட்டை செய்யாது அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டினான். அவளது முகத்தாடையோ இறுகுவது போல் தோன்றிட, அவளோ மேலும் அவனை முறைத்திட துடிக்கும் அவளது செவ்விதழை தன் இதழால் வன்மையாக சிறை செய்தான்.
அவனது இந்த தாக்குதலை சற்றும் விரும்பாத அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ள முயன்றாள் . ஆனால் அவள் முன்பு ஆறடியில் ஆஜானு பாகுவாக நின்றிருக்கும் அவனை துளி அளவும் அசைக்கக்கூட முடியவில்லை. அவளோ தன் இரு கைகளாலும் அவனது நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள் . அவள் அடிக்க அடிக்க அவனது இதழ் முத்தம் வன்மையான யுத்தமாக மாறி அவளது செவ்விதழை பற்களால் கடிக்க ஆரம்பித்தான். வலி தாங்க முடியாதவள் அவனை மீண்டும் அடித்துக் கொண்டே இருக்க அவனது அழுத்தம் கூடியதே தவிர குறையவே இல்லை. இவனிடமிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது என்று அவள் உணர்ந்ததாலோ என்னவோ அடிப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.
அவளது கண்ணீர் அவனது முகத்தில் பட்ட பிறகே அவளை விடுவித்தான் அந்த கள்வன்.
“எதுக்கு இப்போ அழுது டிராமா போடுற உனக்கும் விருப்பம் என்று சொன்னதுனால தானே கிஸ் பண்ணினேன்” என்ற குகநேத்ரனை முறைத்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சஷ்டிப்ரதா.
தனது உதட்டில் வழிந்த இரத்தத்தை அழுந்த துடைத்தவள், “பொறுக்கி மனுஷனாடா நீ” என்று கேட்டிட , “நான் மனுஷன்னு உன் கிட்ட எப்போடி சொன்னேன் நான் அரக்கன் தான் இந்த வேலை உனக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ இந்த வேலையை வேண்டாம் என்று சொல்லி தூக்கி போட்டுட்டு போகவும் முடியாது. அதே நேரத்துல என்கிட்ட இருந்து தப்பிக்கவும் முடியாது” என்று அவன் கூறிட ஆற்றாமையுடன் அவனைப் பார்த்து வைத்தாள் சஷ்டிப்ரதா.
“இதோ பாரு ப்ரதா நீ இந்த குகனோட சொத்து என்னை விட்டுட்டு தப்பிச்சு போகலாம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தன்னு வச்சுக்கோயேன் மவளே உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அவன் கூறிட அவனை பிடித்து தள்ளி விட்டவள் அந்த அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
தனது இடத்தில் அமர்ந்து வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் .மங்கை அவளது இதழ் தேனை ருசித்த கயவனோ அந்த தித்திப்பு இன்னும் தன் உதட்டில் இருப்பதாக எண்ணிக் கொண்டு தனது வேலையில் மூழ்கி விட்டான் .
அவளால் வேலையை சரியாக பார்க்க முடியவில்லை. “என்னைப் பார்த்தால் இவனுக்கு எப்படி தெரியுது பப்ளிக் டாய்லெட் மாதிரி இருக்கா பொறுக்கி என்னை இன்னும் எவ்வளவு தான் டா கொடுமை படுத்துவீங்க”என்று நொந்து கொண்டவள் தன்னுடைய உதட்டை மேலும் மேலும் துடைத்துக் கொண்டிருக்க, “சஷ்டி என்ன பண்ணிட்டு இருக்க” என்றாள் அவளுடன் பணிபுரியும் யாத்ரா.
“ஒன்றும் இல்லை” என்ற
பிரதாவோ தன் வேலையை பார்க்க முயன்றாள் . ஆனால் ஏனோ அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை தனது இழிநிலையை நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக நொந்து கொண்டிருந்தாள்.
“என்ன குகன் ஆபீஸ்க்கு வர சொல்லி இருக்க என்ன விஷயம்” என்றான் அவனது தோழன் பிரகாஷ். அந்த பெரிய மருத்துவமனையின் பெயரைக் கூறியவன் இந்த பணத்தை கட்டிரு என்று ஒரு பணக் கட்டை நீட்டினான் குகநேத்ரன்.
“என்னடா இவ்வளவு பெரிய அமௌன்ட் யாருக்கு” என்ற பிரகாஷிடம், “நான் சொல்வதை செய்யறது தான் மச்சி உன்னோட வொர்க் என்னை கொஸ்டின் பண்றது கிடையாது ஓகேவா நான் சொல்ற வேலைய மட்டும் செய்” என்றான் குகநேத்ரன்.
“சரி ஓகே” என்ற பிரகாஷும் அவன் நீட்டிய பணக் கட்டை வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.
இண்டர்காமில் அவளை அழைத்தான் குகநேத்ரன் . அவனது அறைக்குள் தயங்கியபடியே நுழைந்தாள் சஷ்டிப்ரதா. “என்ன ப்ரதா இன்னும் உனக்கு பயம் போகலையா உன் பயத்தை நான் போக்கட்டுமா இன்னோரு கிஸ் கொடுத்து” என்று அவன் நக்கலாக கேட்டிட, அவளோ கோபமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, “இந்த கண்ணுல தாண்டி விழுந்துட்டேன்” என்றான் குகநேத்ரன்.
” பொறுக்கி வாயில் அசிங்கமா வருது டா நாயே கண்ணுல விழுந்தானாம் தரித்திரம் புடிச்சவன். இந்த தரித்திரம் புடிச்சவனை என்னைக்கு நான் பார்த்தேனோ அன்னைக்கு பிடிச்சது எனக்கு சனி” என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் சஷ்டிப்ரதா.
“என்ன ப்ரதா மைண்ட் வாய்ஸ்ல என்ன போட்டு பயங்கரமா திட்டுற போல” என்ற குகநேத்ரனை பாவமாக பார்த்து வைத்தாள் சஷ்டிப்ரதா .
“படுபாவி பையன் மனசுக்குள்ள நினைக்கிறதெல்லாம் எப்படித்தான் கண்டுபிடிக்கிறானோ எனக்கே தெரியாமல் என் மைண்ட் இந்த பொறுக்கி கூட ஃப்ரண்ட் ஆகிருச்சோ என்னவோ தெரியலையே” என்று மீண்டும் மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் சஷ்டிப்ரதா.
“புலம்பாதே ப்ரதா ஹாஸ்பிட்டல்ல பணம் கட்ட சொல்லியாச்சு பயப்பட தேவையில்லை உன்னோட லவ்வருக்கு டிரீட்மென்ட் நல்லபடியா நடக்கும்” என்றான் குகநேத்ரன்.
அவனை எரிக்கும் விழிகளில் பார்த்தவள், “விஷ்ணு ஒன்றும் என்னோட லவ்வர் கிடையாது. என்னுடைய ஃப்ரண்ட். ஃப்ரண்டுக்கும், லவ்வருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . முதலில் அதை புரிஞ்சுக்கோங்க சார்” என்றாள் சஷ்டிப்ரதா.
“அவன் லவ்வர் இல்லையா அப்பறம் ஏன் அவனுக்காக இவ்வளவு துடிக்கிற வெறும் பிரண்டுகாகன்னு மட்டும் சொல்லாதே , என்கிட்ட ஃப்ரண்ட்னு பொய் சொல்லிட்டு அந்த பக்கம் அவனையும் லவ் பண்ணிட்டு சுத்துறியோ என்னவோ” என்றான் குகநேத்திரன்.
” மிஸ்டர் குகநேத்ரன் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் பிரண்ட்ஷிப் கொச்சைப்படுத்துற மாதிரி பேசாதீங்க லவ் வேற ஃப்ரெண்ட்ஷிப் வேற”என்றவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தவன், “என்னடி குரலை உயர்த்தி பேசுற யாரு கிட்ட பேசிட்டு இருக்கனு மறந்துட்டியா?” என்றான் குகநேத்ரன்.
கன்னத்தை தாங்கிப் பிடித்தவள், “ஸாரி சார் விஷ்ணு என்னோட நண்பன். அவனுக்காக என் உயிரை கூட கொடுப்பேன்” என்றாள் பற்களை கடித்துக்கொண்டு.
“உன் உயிர் எல்லாம் வேண்டாம் நீ தான் வேண்டும் நம்ம காண்ட்ராக்ட் ஞாபகம் இருக்கு தானே” என்று அவன் கேட்டிட, “நான் எதையும் மறக்கவில்லை சார் , எல்லாமே என் ஞாபகத்துல இருக்கு” என்றவள் கோபமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
“நண்பனுக்காக என்ன வேணாலும் செய்வியா உயிரைக்கூட குடுப்பியா” என்று நினைத்த குகநேத்ரன், “உன் உயிர் என்னுடையது செல்லம், அதை கண்டவனுக்கும் கொடுக்க இந்த குகன் அனுமதிக்க மாட்டான்” என்று நினைத்தவன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
“பீடை , பீடை, சனியன், சனியன் வீட்ல ஒரு வேலையும் பார்க்குறதில்ல பொழுதோட எவனோ ஒருத்தன் ஹாஸ்பிடல்ல படுத்து கிடக்கிறானாம் அவன் பக்கத்துல போய் உட்கார்ந்துட்டு ராத்திரி ஏழு மணி ஆனாலும் வீட்டுக்கு வருவதில்லை. தரித்திரம் புடிச்ச நாய்” என்று திட்டிக் கொண்டிருந்தார் கார்த்திகா .
“யாரை திட்டிட்டு இருக்க” என்ற ராஜேஷிடம், “வேற யாரை திட்டுவேன் என் அக்கா பெத்து போட்டு செத்துப் போனாலே ஒரு சனியன் அந்த சனியன் தான் மணி 7:30 ஆக போகுது இன்னும் வீட்டுக்கு வராம ஹாஸ்பிடல்ல போயி அந்த பொறம்போக்கு பயலையே பாத்துட்டு உக்காந்து கண்ணீர் வடிச்சிட்டு இருப்பாள் . எவனோ ஒருத்தன் இருந்தால் என்ன, செத்தால் என்ன வீட்ல உள்ள வேலை எல்லாம் யாரு பார்க்கிறது. நான் இவளுக்கு பாத்துட்டு இருக்க முடியுமா?” என்று பொரிந்து தள்ளினார் கார்த்திகா.
“எங்கே போயிற போறாள் வந்து விடுவாள் விடு” என்ற ராஜேஷிடம் “எங்கேயாச்சும் போய் தொலைஞ்சான்னா கூட நிம்மதி தானே போயும் தொலைய மாட்டேங்ககறாளே” என்றார் கார்த்திகா.
“அவள் போயிட்டாள்ன்னா அவள் பெயரில் உள்ள இந்த வீடு அதுவும் நம்ம கையை விட்டு போய்விடும் உனக்கு ஓகேவா” என்ற ராஜேஷிடம், “அந்த ஒரு காரணத்துக்காக தான் அந்த பீடைய விஷம் வச்சு கூட கொல்லாமல் இன்னும் வளர்த்துக்கிட்டு இருக்கேன். அவள் அப்பன் செத்த உடனே இதுவும் செத்து தொலைச்சிருந்தால் இந்த வீடு என் கைக்கு வந்து இருக்கும் பீடை, பீடை இருந்து என் தாலியை அறுத்துட்டு இருக்காள்” என்றார் கார்த்திகா.
வாசலில் சஷ்டிப்ரதா வருவதைக் கண்ட ராஜேஷ், “சஷ்டி வந்துட்டியா” என்று அவள் அருகில் வர இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள் சஷ்டிப்ரதா.
“என்ன டா நீ எப்ப பார்த்தாலும் அப்பா உன்கிட்ட வந்தாலே தள்ளி தள்ளி போற” என்ற ராஜேஷை பார்த்து வியர்த்து விறுவிறுத்தது அவளுக்கு.
” ஏய் என்னடி பேசாமல் நின்னுட்டு இருக்க வந்ததே லேட் இப்போ தான் சிலையாட்டம் நின்னுட்டு போடி போயி சாப்பாடு ரெடி பண்ணித் தொலை பசிக்குது” என்ற கார்த்திகா அவளை விரட்டி விட அவள் நேராக கிச்சனுக்குள் வந்தாள்.
அவளுடைய உடம்பில் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்து குடித்தவள் வேகவேகமாக சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
“அவசர, அவசரமா பண்றேன்னு உப்பு, மிளகாய் எல்லாம் அதிகமா போட்டு வச்சிடாமல் எல்லாம் பார்த்து ஒழுங்கா செய்து கொண்டு, அஞ்சு பத்து நிமிஷம் ஆனாலும் காத்துட்டு இருக்கேன்” என்று கார்த்திகா சத்தமிட “சரிங்கமா” என்றவள் வேக வேகமாக சமையலை செய்தாள்.
” ஹாய் அக்கா என்ன சமைச்சிட்டு இருக்க” என்றபடி வந்தாள் கார்த்திகாவின் மகள் பிரனிதா. “சப்பாத்தியும், எக் கிரேவி” என்ற சஷ்டிப்ரதாவை கட்டிக் கொண்டவள், “செல்ல அக்கா எனக்கு புடிச்சது தான் எப்பவுமே சமைக்கிற” என்று கூறிட “சரிடா அம்மு அக்கா சமைச்சிட்டு வரேன் வந்து உனக்கு பாடம் சொல்லி தரேன்” என்றாள் சஷ்டிப்ரதா.
“சரிக்கா” என்ற பிரனிதாவோ தன் அறைக்கு சென்று விட்டாள் .
“என்னடி சமையல் ஆச்சா, இல்லையா?” என்று மீண்டும் கார்த்திகா சத்தமிட, “இதோ ரெடியாயிடுச்சுமா” என்றவள், உணவு மேஜைக்கு எடுத்து வந்து சமையல் பதார்த்தங்களை வைத்தாள்.
“எப்போ பார்த்தாலும் முட்டை கிரேவி இதைத் தவிர உனக்கு வேற எதுவுமே சமைக்க தெரியாதா?” என்றான் கார்த்திகாவின் மகன் ஷர்வன்.
” ஷர்வன் அக்கா உனக்காக தானே சமைச்சுக்கிட்டு இருக்காள். முட்டை உனக்கு பிடிக்காதா என்ன சாப்பிடு இதே முட்டை கிரேவிய உன் அம்மா வச்சா அமைதியா தான சாப்பிடுவ” என்று ராஜேஷ் கூறிட, “இல்லை டாடி டெய்லி முட்டை சாப்பிடுவது என்னமோ போல இருக்கு ஒரு பனீர் கிரேவி, பொட்டேட்டோ கிரேவி இந்த மாதிரி வேற ஏதாவது வச்சா என்ன எப்ப பார்த்தாலும் இவளுக்கு ஈசியா இருக்குன்னு சொல்லிட்டு முட்டை குருமாவே வச்சுட்டு இருக்காள்” என்றான் ஷர்வன் .
ராஜேஷ் ஏதோ சொல்ல வர, “நீங்க சும்மா இருங்க எப்போ பாத்தாலும் இவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் எப்ப பாத்தாலும் இந்த முட்டை குருமா தான் வைக்கிறாள். ஏன்டி சப்பாத்திக்கு முட்டை குருமா தவிர உனக்கு வேற எதுவுமே வைக்க தெரியாதா அதுவும் பாரு அதிக காரமா இருக்கு வாயில் வைக்க முடியல இவ்வளவு காரம் சாப்பிட்டால் எனக்கு அல்சர் வந்துரும்”
என்று அவளை திட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார் கார்த்திகா.
…. தொடரும்….