ப்ரதா என்னாச்சு டீ உனக்கு என்று பதறியவன் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்து அவளது கையில் சாவிக் கொத்தை கொடுத்து வலிப்பை நிறுத்தினான். அவளோ மயங்கி விட அவன் சென்று தன் நண்பன் பிரகாஷிற்கு போன் செய்து சில மருந்துகளின் பெயரைச் சொல்லி வாங்கி வரக் கூறினான்.
அவனும் பத்து நிமிடத்தில் வந்து விட அவளது உடலில் ஒரு இஞ்செக்சனை செலுத்தினான் குகன். அவளும் அந்த ஊசியின் விளைவால் நன்கு உறங்கினாள்.
அந்த அறையை பூட்டி விட்டு கீழே சென்றான் குகநேத்ரன். யாருக்கு டா இந்த இஞ்செக்சன் என்ற பிரகாஷிடம் சஷ்டிப்ரதாவிற்கு என்று கூறிவிட்டு யோசனையாக அமர்ந்தான்.
அந்த பொண்ணு எங்கே இங்கே வந்துச்சு என்ற பிரகாஷிடம் நான் தான் அவளை அழைத்துக்கொண்டு வந்தேன் என்று கூறிய குகன் அவள் என் கூட ஒன் மந்த் ஸ்டே பண்ணுவாள் என்றான் குகன்.
வாட் என்ன குகன் இதெல்லாம் அந்த பொண்ணை உனக்கு பிடிச்சு இருந்தால் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே எதற்காக இப்படி ரகசியமா அதுவும் ஒன் மந்த் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்றான் பிரகாஷ்.
உன் கிட்ட நான் அட்வைஸ் கேட்க வில்லை பிரகாஷ் என்று கூறிவிட்டு அவள் இங்கே இருக்கிற விஷயம் என் அப்பா, அம்மாவுக்கு தெரியவே கூடாது என்று கூறினான்.
நான் ஏன் சொல்ல போகிறேன் ஆனால் நீ பண்ணிட்டு இருக்கிற விசயம் ரொம்ப தப்பு டா என்று பிரகாஷ் கூறிட அவன் அதை காதில் வாங்கவே இல்லை.
சரி ஒரு விஷயம் சொல்லு ஒருவேளை அந்த பொண்ணு இந்த ஒன் மந்த் ரிலேசன்ஷிப்ல கன்சிவாகிட்டால் என்ன பண்ணுவ என்றான் பிரகாஷ்.
ஆகட்டும் அதனால் என்ன கழுத்தில் தாலி இல்லாமல் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா யார் என்று சொல்ல முடியாமல் அவமானத்தில் சாகட்டும் என்று அவன் கூறிட என்ன பேசுற குகன் அப்படி என்ன அந்த பொண்ணு மேல வெறுப்பு என்றான் பிரகாஷ்.
வெறுப்பு இல்லை குகன் கொலை வெறி அவளால் நான் இழந்த இழப்பு அதிகம் என்று பற்களைக் கடித்தான் குகநேத்ரன்.
என்ன சொல்லுற என்ற பிரகாஷிடம் தன் மனக்குமுறலை கூறினான் குகன். என்ன குகன் இதெல்லாம் அதற்காக தான் என்று அவன் ஏதோ கூறிட நான் பட்ட அவமானம், அசிங்கம் எல்லாம் அவளும் பட வேண்டும் அவ்வளவுதான் என்று அழுத்தமாக கூறினான் குகன். அவன் ஒரு முடிவு எடுத்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று உணர்ந்த பிரகாஷும் சென்று விட்டான்.
இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த சஷ்டிப்ரதா தான் எப்படி மெத்தையில் படுத்து இருக்கிறேன். கடைசியாக பாத்ரூம் ஷவரில் நனைந்தது மட்டுமே அவளது நினைவில் இருக்க தன்னை நன்றாக பார்க்க ஆரம்பித்தாள்.
உடை எல்லாமே எனக்கு மாற்றி விட்டது என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்க கண் விழித்து விட்டாயா என்று அந்த அறைக்குள் வந்தான் குகன்.
உனக்கு இந்த பிரச்சினை எத்தனை நாளா இருக்கு என்று அவன் கேட்டிட எந்த பிரச்சினையும் எனக்கு கிடையாது என்றாள் சஷ்டிப்ரதா.
பிரச்சனை இல்லாமல் தான் வலிப்பு வந்ததா என்று அவன் கேட்டிட உங்களால் தான் வந்துச்சு என்றாள் அசராமல்.
என்னால வந்துச்சா புரியலை என்று அவன் கூறிட நீங்க தானே என் கிட்ட தப்பா நடந்துக் கிட்டிங்க என்று அவள் சொல்லி முடிக்கவில்லை நான் சரியாக தானே நடந்து கொண்டேன் தப்பா எதுவும் செய்ய வில்லையே என்றவனது பார்வை சென்ற இடத்தை பார்த்து கடுப்பானவள் எழுந்து கொள்ள பார்க்க நீ ஒழுங்கா பதில் சொன்னால் தான் என்னால உனக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும் என்று அவன் கூறிட தப்பான ட்ரீட்மெண்ட் கொடுத்து தயவுசெய்து என்னை கொன்று விடுங்கள் ப்ளீஸ் என்று அவள் கெஞ்சினாள்.
உன்னை கொல்லுறதுக்காகவா உன் உதவாக்கரை காதலனுக்கு லட்சம் லட்சமாக ட்ரீட்மெண்ட் பார்க்க பணம் கொடுத்தேன் என்று குகன் கூறிட அவன் என்னோட ஃப்ரண்டு லவ்வர் கிடையாது என்றாள் அழுத்தமாக.
சரி விடு அவன் உனக்கு யாரா இருந்தால் எனக்கு என்ன ஒரு மாதம் முழுக்க நீ என் கூட இருந்து விட்டு அப்புறம் உன் வாழ்க்கையை பார்த்துட்டு போகப் போற அதனால் என் கூட இருக்கிற வரை டிராமா எதுவும் போடாமல் நான் கொடுத்த பணத்திற்கு உண்மையான டெடிகேசனோட என் கூட இரு சரியா என்று அவளது கன்னத்தில் தட்டியவன் சரி வா என்றான்.
அவள் பயத்துடன் அவனைப் பார்க்க என்ன திரும்பவும் ரொமான்ஸ் பண்ண கூப்பிடுகிறேன் என்று நினைத்து விட்டாயா பயப்படாதே சாப்பிட தான் உன்னை கூப்பிட்டேன் என்றான் குகன்.
அவள் எழ நினைக்க அவளால் எழ முடியவில்லை அவளைத் தூக்கிக் கொண்டவன் உணவு மேஜையில் இறக்கி விட்டான். உட்காரு என்று சொல்லி விட்டு அவளுக்கான உணவை பரிமாறினான் குகன். அவளும் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க தானும் சாப்பிட்டான்.
உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்பே அவன் கேட்டு விட்டான். நீ வெர்ஜின் இல்லையா என்று அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்திட என்னமோ சொன்ன ஹாஸ்பிடலில் இருக்கிற உன்னோட மாமா குட்டி ஏற்கனவே உன் கூட குடும்பம் நடத்தி விட்டான் போல இதுவல்லவா நட்பு என்று அவன் கூறி முடிக்க வில்லை அவனது கன்னத்தில் இடியாய் இறக்கினாள் தன் கையை. அவ்வளவு அழுத்தமாக அவளால் அடிக்க முடியுமா என்று குகனே அதிர்ந்து போனான். அவனது கன்னம் எரிய ஆரம்பித்தது அவள் கொடுத்த அறையில்.
ஏய் பைத்தியம் பிடித்த நாயே ஏன் டீ அறைந்த என்ற குகனிடம் உன் தங்கச்சியோட வெர்ஜினிட்டி உன்னால போச்சுன்னு நான் சொன்னால் என்னை கொஞ்சுவியாடா நீ என்றாள் ருத்ரகாளியாக கர்ஜித்த படி என்னடீ சொன்ன என்று அவன் கை நீட்ட வர அவனது கையை எட்டிப் பிடித்தவள் வலிக்குதா அப்படித் தான் எனக்கும் வலிச்சது என்னையும், விஷ்ணுவையும் சேர்த்து வைத்து நீ பேசும் போது என்றாள் சஷ்டிப்ரதா.
அதற்கு என்னை அடிப்பியாடீ நீ என்ற குகனை முறைத்தவள் அடுத்த முறை தப்பா பேசும் போது இந்த அடி உங்களுக்கு நியாபகம் இருந்தால் தான் பார்த்து பேசுவீங்க என்று அவள் கூறிட ஹும் சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பிரச்சனையை டைவர்ட் பண்ணிட்டு இருக்கியா என்றான் குகன்.
என்ன கேள்வி என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ வெர்ஜின் இல்லையா என்று கேட்டேன் என்றான் குகன். அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தவன் அவள் உணரும் முன்பே மறு கன்னத்திலும் அறைந்து விட்டு கேள்வி கேட்டால் பதில் சொல்லனும் அது மட்டும் இல்லை எனக்கு எதையும் வாங்கிப் பழக்கம் இல்லை கொடுத்து தான் பழக்கம் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக என்ற குகனை தீயென முறைத்தவள் வெர்ஜின் பொண்ணு கூட மட்டும் தான் பெட் ஷேர் பண்ணுவீங்க என்று சொல்லி இருந்தால் அன்னைக்கே சொல்லி இருப்பேன் நான் வெர்ஜின் கிடையாது என்று என்றாள் சஷ்டிப்ரதா.
ப்ரதா உனக்கு எக்ஸ் பாய்ஃபிரண்ட் என்று அவன் தயங்கிட கிடையாது. உங்க கிட்ட நான் கெஞ்சி கேட்கிறேன் தயவுசெய்து வெர்ஜினிட்டி எப்படி போச்சுன்னு மட்டும் கேட்காதீங்க என்னை இன்னும் நான்கு அடி கூட அடிச்சுக்கோங்க என்று கூறிவிட்டு அவள் சென்று விட அவனுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவள் சென்று பால்கனியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள். தன் வாழ்வில் நடக்க கூடாத எல்லாமே நடந்து முடிந்து விட்டது. ஒரு மாதம் பற்களைக் கடித்து கொண்டு இவனுடன் இருந்து விட்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள் சஷ்டிப்ரதா.
என்ன துவாரகா என்னை பார்க்க வரச் சொல்லி இருக்க என்ற பிரகாஷிடம் உங்க ஃப்ரண்டை பற்றி பேசனும்னா உங்களை தானே வரச் சொல்லனும் பிரகாஷ் அண்ணா என்றாள் துவாரகா.
உன் அண்ணனைப் பற்றி பேச என்ன இருக்கு என்ற பிரகாஷிடம் அண்ணனுக்கு கல்யாணம் என்று அவள் தயங்கிட நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் அவன் கேட்க மாட்டேன் என்று சொல்கிறானே என்றான் பிரகாஷ். ஒருவேளை இன்னும் அந்த ரித்விகாவை என்று தயங்கிய துவாரகா விடம் கண்டிப்பா அவன் மனசில் ரித்விகா இல்லை ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு எப்படியும் உன் அண்ணன் மூன்று மாதத்திற்குள் கல்யாணம் பண்ணி கொள்வான் என்று கூறினான் பிரகாஷ்.
நிஜமாவா அண்ணா என்ற துவாரகா விடம் இது என்னோட கெஸ் தான் நீ பாட்டுக்கு அம்மா, அப்பா கிட்ட சொல்லி அவனை திரும்பவும் முருங்கை மரத்தில் ஏற வைத்து விடாதே என்று கூறிவிட்டு கிளம்பினான் பிரகாஷ்.
என்ன துவாரகா சந்தோஷமா இருக்க என்ற சித்ரா தேவியிடம் சும்மா தான் அம்மா என்றவள் நீங்களும் சந்தோஷமா இருக்கீங்க போல என்றாள் துவாரகா. ஆமாம் துவாரகா உன் அண்ணன் ஜாதகத்தை ஜோசியர் கிட்ட காட்டினேன். உங்கள் பையனுக்கு மாலை நோக்கம் வந்து விட்டது இன்னும் ஆறு மாதத்திற்குள் கல்யாணம் முடிந்து விடும் என்று சொல்லிட்டாரு என்று கூறிவிட்டு சித்ரா தேவி சந்தோஷமாக மகனுக்கு ஃபோன் செய்தார்.
என்னங்க அம்மா என்ற குகனிடம் இன்னைக்கு சன்டே நீ வீட்டுக்கு வரவில்லையா என்று சித்ரா தேவி கேட்டிட ஸாரிம்மா மறந்துட்டேன் ஒரு இருபது நிமிசத்தில் வீட்டுக்கு வரேன் என்று கூறிவிட்டு போனை வைத்தான் குகன்.
பால்கனியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கிப் போய் இருந்தாள். அவளைத் தூக்கி மெத்தையில் படுக்க வைத்தவன் என்ன நினைத்தானோ அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே கிளம்பிச் சென்றான்.