சீதளம் 19
இரண்டு நாளைக்கு முன்பு மேகா அவளுடைய வீட்டிற்கு வந்த பொழுது அவளுடைய அப்பா அவளிடம் பேசினார்.
“ மேகா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்” என்று சொல்ல அவளோ,
“ என்னப்பா என்னோட படிப்பு கூட இன்னும் முடியல அதுக்குள்ள ஏன்” என்று அவள் மேலும் ஏதோ சொல்ல வர அதற்குள் அவரோ,
“ என்னமா இன்னும் கொஞ்ச நாள்ல உன் படிப்பு முடிய போது அப்புறம் என்ன. இல்லன்னா நீ வேற யாரையாவது விரும்புறியா?” என்று மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்க அவளோ,
“ என்னப்பா நீங்க நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல நான் யாரையும் விரும்பவில்லைன்னு அப்புறம் என்னப்பா”
“அப்பா பார்த்து இருக்கிற மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன் என் பிரண்டோட பையன் தான் அமெரிக்காவுல சொந்தமா ஒரு கம்பெனி ரன் பண்றான்” என்று சொல்ல அவளோ,
“ அப்பா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் இருந்தாலும் இப்போ உடனே கல்யாண தேவையா” என்று கேட்டாள் மேகா.
உடனே சத்யராஜ் முகத்தை தொங்க போட அவரை அப்படி பார்த்த மேகாவிற்கோ உருகி போனது.
“ ஐயோ அப்பா இப்ப ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கீங்க இப்ப என்ன இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கனும் அவ்வளவு தானே. ஓகே நீங்க சொன்ன அந்த அமெரிக்கா மாப்பிள்ளை உங்க பிரண்டோட பையன் அப்படிங்குறதுக்காக எல்லாம் நான் ஓகே சொல்லல என்னோட அப்பாவுக்காக இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று சொல்ல உடனே சத்யராஜ் முகமோ 100 வாட்ஸ் பல்பு போல மின்னியது.
அவளை தன்னோடு அனைத்து அவளுடைய நெற்றியில் முத்தம் இட்டவர்,
“ என் செல்ல குட்டி” என்று அவளைக் கொஞ்சியவர்,
“ சரிமா அப்போ நான் உடனே ஏற்பாடு பண்றேன் அந்தப் பையன் இப்போ இந்தியா வந்திருக்கான் நான் உடனே அவங்க கிட்ட பேசுறேன் நாளைக்கு உனக்கும் அவனுக்கும் நிச்சயதார்த்தம் ஓகேவா” என்று சொல்ல அவளோ அதிர்ந்தவள்,
“ என்னப்பா நாளைக்கு நிச்சயதார்த்தமா இப்படி நாளைக்கே வச்சா என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் நான் எப்படி சொல்றது” என்று அவள் கேட்க அதற்கு சத்யராஜ்,
“ அம்மாடி அந்த பையன் இன்னும் ஒரு வாரத்துல திரும்பவும் அமெரிக்கா போய்ருவான் அதனால இப்போதைக்கு நம்ம வீட்டுக்கு மட்டும் நிச்சயதார்த்தம் பண்ணிக்கிடுவோம். அதுக்கு பிறகு என்ன கல்யாணத்தை நல்ல பெருசா ஜாம்ஜாம்னு பன்னிரலாம் அப்போ உனக்கு யார் யாருக்கெல்லாம் சொல்லணும்னு தோணுதோ எல்லாருக்கும் சொல்லு சரியா” என்றார் சத்யராஜ்.
அவளோ யோசித்தவள்,
“ ஓ அப்படியா சரிப்பா அப்போ நான் என் பிரண்டு பூங்கொடிக்கு மட்டும் சொல்லிடவா அவளை நாளைக்கு வர சொல்லிடுறேன்” என்று கேட்க அதற்கு அவரோ பூங்கொடி என்று பெயரை கேட்டதும் முகத்தை சுழித்தவர் தன்னுடைய மனதிற்குள்,
‘ முதல்ல என் பொண்ண அந்த பூங்கொடி பொண்ணு கிட்ட இருந்து விலக்கி வைக்கணும் எப்ப பாரு அவ கூடையே சுத்துறா. நம்ம ஸ்டேட்டஸ் என்ன அவளோட ஸ்டேட்டஸ் என்ன இவளுக்கு காலேஜ்ல வேற பணக்கார பிரண்ட்ஸே கிடைக்கலையா போயும் போயும் அந்த கிராமத்து பொண்ணு’ என்று நினைத்தவர்,
“ அய்யோ வேணாம்மா உன்னோட கல்யாணத்துக்கு நீ கூப்பிட்டுக்கோ” என்று சொல்ல அவளோ,
“ ஏன்பா பூங்கொடி மட்டும் என்கூட இருக்கட்டுமே” என்று மீண்டும் கேட்க அதற்கு அவரோ,
“ இல்லமா சும்மாவே அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா கூச்சப்பட்டுக்கிட்டே இருக்கும் இப்போ நாளைக்கு என் பிரண்டும் நம்மள விட கொஞ்சம் பெரிய பணக்காரன் தான் அப்படி இருக்கும்போது அந்த பொண்ணு நாளைக்கு வந்து கூச்சப்பட்டுக்கிட்டு தனியா நின்னா பாவம் தானே நீ நிச்சயதார்த்தத்தில கவனம் செலுத்துவியா இல்ல அந்த பொண்ணு மேல கவனம் செலுத்துவியா. அந்த பொண்ணோட நல்லதுக்காக தான் சொல்றேன். கல்யாணத்துக்கு நீ அந்த பொண்ண ஒரு வாரத்துக்கு உன் கூடயே இருக்கிற மாதிரி கூட்டிட்டு வா” என்று சொல்ல அவளும் நிதர்சனத்தை யோசித்தவள்,
“ ஆமா அவ இங்க வந்தாலே கூச்சப்பட்டுக்கிட்டு தான் இருப்பா. சரிப்பா நான் கல்யாணத்துக்கு நீங்க சொல்ற மாதிரி ஒரு வாரத்துக்கு அவ என் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன் நீங்க நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்யுங்க” என்றாள்.
அதேபோல் இப்பொழுது நிச்சயதார்த்தமும் நடக்க வேந்தனோ உள்ளே வந்தவன் எதையும் கண்டுகொள்ளாமல் மேகாவின் கழுத்தில் தாலியை கட்டி அவளுடைய இதழில் இதழ் பதிக்க அவளோ கொஞ்சமும் அதை எதிர்பார்க்கவில்லை.
அவன் அங்கிருந்து சென்றாலும் அவன் ஏற்படுத்திய இந்த திடீர் அதிர்ச்சியில் இருந்து மீளவே அவளுக்கு சற்று நிமிடங்கள் எடுத்தன.
“ ராஸ்கல் எவ்வளவு தைரியம் அனக்கு என் கண்ணு முன்னாடியே என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு போறான்” என்று சத்யராஜ் கோபப்பட அதற்கு அவருடைய நண்பரோ,
“ என்ன சத்யா இதெல்லாம் கூப்பிட்டு வச்சு எங்கள் அசிங்கப்படுத்துறியா” என்று கேட்க அதற்கு சத்யராஜோ,
“இல்ல அப்படி எல்லாம் இல்ல நீ எதும் தப்பா எடுத்துக்காத” என்று சத்யராஜ் சொல்ல அதற்கு அவரோ,
“ இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு சத்யா அதான் எல்லாம் சரியா நடக்குதே” என்று அவர் கோபமாக பேச சத்யராஜோ,
“ இங்க பாரு அப்படி எல்லாம் எதுவும் இல்லை அவனோட ஃபேமிலி வந்து என்கிட்ட பொண்ணு கேட்டாங்க நான் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் அதுக்காக வந்து இப்படி முட்டாள் தனமா ஏதோ செஞ்சுட்டு போயிட்டான் இப்ப என்ன என் பொண்ணு கழுத்துல இருக்குற இந்த தாலியை எடுத்துட்டா எல்லாம் முடிஞ்சது நீ கவலைப்படாதே இரு வரேன்” என்றவர் மேகாவை நோக்கி வந்தவர்,
“ அம்மாடி மேகா அந்த தாலியை கழட்டி போடுமா” என்று சொல்ல அவளோ அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
“ ஐயோ என்னமா நீ” என்றவர் அவளை நெருங்கி வந்து அவளுடைய தாலியில் கையை வைக்க அப்பொழுது திடுக்கிட்டவள் அந்த தாலியை அவருடைய கையில் இருந்து பிரித்து இறுக்க தன்னுடைய கைக்குள் பொத்திக் கொண்டாள்.
“ அப்பா என்ன செய்றீங்க” என்றவள் அதிர்ச்சியாக கேட்க அவரோ,
“ ஓ நீயே கழட்டுறியாமா சரி நீயே கழட்டி போடு” என்று அவர் சொல்ல மேகாவோ,
“அப்பா என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க தாலிய கழட்டனுமா என்னால முடியாது” என்றாள்.
அதில் கோபப்பட்ட சத்யராஜ்,
“ என்ன மேகா நீ அவன் தான் ஏதோ கிறுக்குத்தனமா வந்து தாலியை கட்டிட்டான்னா நீ கழட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கிற இங்க பாரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வெயிட் பண்றாங்க நீ அந்த தாலியை கழட்டி போடுமா” என்று சொல்ல அதற்கு அவளோ,
“ முடியாதுப்பா என்னால முடியாது எனக்கு பிடிச்சு கட்டினாரோ பிடிக்காம கட்டினாரோ தெரியாது ஆனா கட்டிட்டாரு இந்த தாலிய என்னால கழட்ட முடியாது இனி அவர்தான் என் புருஷன் இதை யாராலும் மாற்ற முடியாது” என்றாள். “மேகா என்ன பேசிக்கிட்டு இருக்க நீ” என்று அவர் ஆத்திரத்தில் கத்த அதற்கு அவருடைய நண்பரோ,
“ என்ன சத்யா அதான் உன் பொண்ணு தெளிவா பேசுறால்ல அவன் தான் அவளுடைய புருஷன் அப்படின்னு இருக்கும்போது நீ ஏன் எங்களை கூப்பிட்ட” என்று அவர் ஒரு பக்கம் சத்தம் போட, அதற்கு மேல் அவருடைய மகன் வேறு,
“ அப்பா என்ன நடக்குது இங்க எனக்கு என்ன வேற பொண்ணு கிடைக்காதா அமெரிக்காவில எத்தனை பேர் எனக்காக லைன்ல நிக்கிறாங்க தெரியுமா அவங்களையெல்லாம் விட்டுட்டு ஏதோ உங்க பிரண்டோட பொண்ணுன்னு சொன்னதுக்காக கல்யாணம் பண்ணலாம்னு வந்தா இங்க என்னென்னமோ டிராமா பண்ணிட்டு இருக்காங்க ரெடிகுலஸ் நான் கிளம்புறேன்” என்று அவன் ஒரு பக்கம் கிளம்ப போக அவனை தடுத்த சத்யராஜ்,
“ மாப்பிள்ளை அவசரப்படாதீங்க கொஞ்சம் இருங்க நான் என் பொண்ணு கிட்ட பேசுறேன்” என்று சொல்ல அதற்கு அவனோ,
“ என்ன இன்னொருத்தன் தாலி கட்டி என் முன்னாடியே அவளுக்கு முத்தம் கொடுத்துட்டு போறான். அப்படிப்பட்ட பொண்ண நான் கல்யாணம் பண்ணுவேன்னு இன்னுமா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க முடியவே முடியாது டாட் வாங்க போகலாம்” என்று அவன் அங்கிருந்து சென்று விட்டான். பின்பு மேகாவின் புறம் திரும்பிய சத்யராஜ்,
“ மேகா அப்பா கடைசி தடவியா கேட்கிறேன் அந்த தாலியை கழட்டுவியா மாட்டியா” என்று கேட்க அதற்கு அவளோ,
“அப்பா நானும் உங்களுக்கு கடைசியா சொல்றேன் இந்த தாலி என் கழுத்துக்கு என் விருப்பம் இல்லாம தான் ஏறுச்சு ஆனா கழுத்துல ஏறின தாலிய தூக்கி எரிகிற அளவுக்கு நான் ஒன்னும் இதோட அருமை தெரியாத பொண்ணு கிடையாது. இனி இதுதான் என்னோட வாழ்க்கை அதை நான் முடிவு பண்ணிட்டேன் நீங்களும் அதை ஏத்துக்கோங்க” என்றாள் மேகா.
Wowww super mega ….