சீதளம் 24
மறுநாள் வேந்தன் மற்றும் மேகாவினுடைய ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேந்தனோ கோட் சூட் அணிந்திருக்க அவனது பக்கத்தில் தங்க நிற பட்டில் தேவதை போல நின்று கொண்டிருந்தாள் மேகா.
அங்கு வந்திருந்த அனைவருடைய பார்வையும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை கண் வைக்காத குறையாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய ரிசப்ஷன் நல்லபடியாக நடக்க அந்த ஒவ்வொரு தருணத்தையும் அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர்களோ அவர்கள் இருவரை மட்டும் தனியாக வெளியே சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று சொல்ல அதற்கு வேந்தனோ வேண்டாம் என்று மறுக்க, மேகாவோ அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
‘இத்தனை பேர் கூட நிற்க்கும் போதே இந்த ஏலியன் மூஞ்சில சிரிப்பையே காணோம். இதுல தனியா போய் ஜோடியா எடுத்தா மட்டும் இவன் அப்படியே சிரிச்சிடுவான்’ என்று அவள் ஒரு பக்கம் மனதில் நினைத்துக் கொண்டிருக்க அறிவழகியோ,
“ அண்ணா என்ன அண்ணா நீ வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க இது உங்களோட மெமரிஸ். ரெண்டு பேரையும் தனியா சில பல போஸ் எல்லாம் கொடுத்து எடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்”
“ அறிவு அதெல்லாம் வேணாம் நீ சும்மா இரு” என்று வேந்தன் சொல்ல,
“ ஐயோ உனக்கு ஒன்னும் தெரியாது அண்ணா.. அண்ணி நீங்க சொல்லுங்க உங்க ரெண்டு பேரையும் தனியா போட்டோ எடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா” என்று மேகாவிடம் கேட்க அவளோ,
“ எனக்கு விருப்பம் தான் அறிவு ஆனா உன்னோட இந்த உம்முனா மூஞ்சி அண்ணனோட தனியா போட்டோல சிரிக்காம உர்னு இதே மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு எடுத்தா அந்த போட்டோவுக்கு என்ன வேல்யூ இருக்கு அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன் என்ன செய்யலாம் அப்படின்னு” என்று அவள் சொல்ல அதில் கடுப்பேறியே வேந்தனோ,
“ என்னடி சைடு கேப்பில என்ன உம்முனா மூஞ்சின்னு சொல்றியா இவ அப்படியே அழகு சுந்தரி.. சரி வா தனியா போட்டோ எடுப்போம் அந்த போட்டோல யார் நல்ல போஸ் கொடுக்கிறான்னு பார்ப்போம்” என்று அவளிடம் சொல்ல அவளோ,
“ எப்படியும் அதுல நான் தான் அழகா தெரிவேன் நீ உன்னோட இந்த உம்முனா மூஞ்ச உர்னு தான் வச்சுக்கிட்டு இருக்க போற” என்று வாரினாள்.
அறிவழகியோ போட்டோகிராபரிடம் திரும்பியவள்,
“ அண்ணா பொண்ணும் மாப்பிள்ளையும் ரெடி போட்டோஸ் எடுக்கலாம் அவங்க ரெண்டு பேரையும் நல்லா அழகழகா நிறைய வெரைட்டியான ஸ்டைல்ல அழகா போட்டோ எடுத்து குடுங்க” என்று அவள் சொல்ல அதற்கு அவர்களோ,
“ அதுக்கு என்ன மேடம் சூப்பரா எடுத்து கொடுக்கிறோம் நாங்க எடுத்து கொடுக்கிற போட்டோவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க” என்று சொல்லியவர்கள் அவர்கள் இருவரையும் அங்கு மண்டபத்தில் வைத்து சில பல போஸ்களில் போட்டோ எடுத்து விட்டு வெளியில் அழைத்துச் சென்றார்கள்.
அவர்களுடைய வீட்டின் அருகில் வயல்வெளி தான் அதிகம் இருப்பதால் அங்கு வைத்து எடுக்கலாம் என்று நினைத்தவர்கள் அவர்கள் இருவரையும் அந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்பொழுது அந்த போட்டோகிராபர் தன்னுடைய மொபைல் போனில் ஒரு மாடல் போட்டோவை அவர்கள் இருவரிடமும் காண்பித்து அதைப்போலவே போஸ் கொடுக்க சொல்ல, அவர்களும் அதைக் கேட்டுக் கொண்டவர்கள் அந்த போஸில் சரியாக நிற்க வேந்தனுடைய முகமோ இறுக்கமாகவே இருந்தது.
அதை பார்த்த போட்டோகிராபர்,
“ சார் கொஞ்சம் சிரிங்களேன்” என்று சொல்ல அவனும்
தன்னுடைய மீசை அடர்ந்த இதழ்களை மெதுவாக விரித்தான்.
அதைப் பார்த்த மேகாவோ அவனுடைய சிரிப்பில் தன்னை மறந்து சிறிது நொடியே யானும் ரசித்தால் என்பது உண்மையே.
மேகா அதே பட்டுப் புடவையில் இருக்க வேந்தனோ வயல்வெளியில் போட்டோ எடுப்பதற்காக, தான் அணிந்த கோட் சூட்டை மாற்றி விட்டு அவள் சேலைக்கு ஏற்ப நிறத்தில் சட்டை அணிந்து வெள்ளை வேஷ்டி அணிந்து இருந்தான்.
நெற்றியில் சின்னதாக திருநீறு கீற்றோடு அவனுடைய அந்த மாநிற முகமோ அவன் சிரித்த சின்ன சிரிப்பில் பேரழகனாகவே அவளுடைய கண்ணிற்கு தெரிந்தான்.
தன்னை மறந்து ரசித்தவள் அவனுடைய முகத்தை பார்க்க அந்த போட்டோகிராபரோ அதை அழகாக புகைப்படம் ஆக்கினார்.
பின்பு மேகாவை வேந்தனுடைய கன்னத்தில் முத்தம் கொடுக்க சொல்ல அவளோ,
“ என்னது முத்தமாக அதெல்லாம் கொடுக்க முடியாது. சும்மா இந்த மாதிரி கைய பிடிக்கிறது சும்மா நடக்கிற மாதிரி அப்படி ஏதாவது போஸ் சொல்லுங்க இந்த முத்தம் கொடுக்குற போஸ் எல்லாம் வேண்டாம்” என்றாள்.
அதைக் கேட்ட போட்டோகிராபர் இருவருக்கும்,
இவர்கள் இருவரும் புருஷன் பொண்டாட்டி தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
“ என்ன மேடம் நீங்க வேற யாருக்கோ முத்தம் கொடுக்க சொன்ன மாதிரி இப்படி பண்றீங்க அவர் உங்க புருஷன் தானே பரவாயில்லை குடுங்க மேடம்” என்று அவர் சொல்ல அதற்கு அவளோ முடியாது என்று எவ்வளவோ மறுத்து சொல்ல, அப்பொழுது வேந்தனோ அவள் எதிர்பார்க்காத நேரம் அவளுடைய இதழோடு இதழ் சேர்த்தான்.
அதை போட்டோகிராபர்களும் எதிர்பாக்காததால் ஒரு நொடி திகைத்தவர்கள் மறு நொடியே அந்த அழகான தருணத்தை மிஸ் செய்து விடக் கூடாது என்பதற்காக பல கோணங்களில் அதை அழகாக புகைப்படமாக்கினார்கள்.
இவர்கள் போட்டோ எடுத்து முடித்தும் கூட வேந்தன் அவளுடைய இதழை விடாமல் இருக்க அதை பார்த்த போட்டோகிராஃபரின் அசிஸ்டன்ட்,
“ அண்ணா அவரு இங்கேயோ ஃபஸ்ட் நைட் நடத்தினாலும் நடத்துவாரு ஏதாவது சொல்லி அவரை நிப்பாட்டுங்க” என்று அவருடைய காதில் இவன் கிசுகிசுக்க, அதற்கு லேசாக புன்னகைத்த அந்த போட்டோகிராஃபரும்,
“ சார் போதும்” என்று அவர் கத்த அதன்பின்பே அவள் இதழை விட்டவன் அவளுடைய காதின் அருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் பொருட்டு,
“ என் கன்னத்துல கிஸ் பண்றதுக்கு அவ்வளவு யோசனையா உனக்கு அடுத்த தடவை ஏதாவது சொன்ன இப்ப விட்ட உதட்ட அப்ப விடவே மாட்டேன் நல்லா யோசிச்சுக்கோ” என்றான்.
அதில் திடுக்கிட்டவள் இவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துக் கொண்டு அடுத்த போசுக்கு ரெடியாக நிக்க அந்த போட்டோகிராபரோ மீண்டும் இவளை விடாமல் அவன் நெற்றியில் முத்தம் கொடுங்கள் கழுத்தில் முத்தம் கொடுங்கள் என்று அவளை வைத்து செய்ய அவளோ வேந்தனையும் அந்த போட்டோகிராபரையும் வாயுக்கள் வசை பாடிக் கொண்டே வேண்டா வெறுப்பாக அவர்கள் சொன்னபடி போஸ் கொடுத்தாள்.
எப்படியோ ஒரு வழியாக அவர்கள் இருவரையும் பல விதமாக போட்டோ எடுத்தவர்கள் வீட்டிற்கு வர அப்போது அவள் கண்ணில் பட்டான் வீரா.
‘ஹை என்னோட வீராவை நான் எப்படி மறந்தேன். வந்ததிலிருந்து நான் அவனை பார்க்கவே இல்லை. எல்லாம் இந்த ஏலியனால இவன் பண்ண குழப்பத்தினால நான் வீராவையும் மறந்து போயிட்டேன்’ என்று நினைத்துக் கொண்டவள் போட்டோகிராபரிடம் திரும்பி,
“ ஹலோ போட்டோகிராஃபரே எனக்கு ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா” என்று கேட்க அவரோ என்ன என்று புரியாமல்,
“ சொல்லுங்க மேடம் என்ன செய்யணும்” என்று கேட்க,
“ நான் என் வீரா கூட போட்டோ எடுக்கணும்” என்று சொல்ல,
“ அதுக்கு என்ன மேடம் தாராளமா எடுத்துட்டா போச்சு எங்க அவரை கூப்பிடுங்க எடுப்போம்” என்று போட்டோகிராபர் சொல்ல அதற்கு அவளோ ஓகே என்றவள்,
“ வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன்” என்று அவர்களை அழைத்தவள் நேராக வீராவிடம் சென்று,
“இதோ இவன்தான்” என்று சொல்ல அதை பார்த்த அந்த போட்டோகிராபரோ அவளை ஒரு மாதிரியாக பார்த்தார். பின்பு வேந்தனை திரும்பி பார்த்தார். அவனும் அமைதியாக நிற்க பின்பு அவள் புறம் திரும்பியவர்,
“ என்ன மேடம் இந்த மாட்டுக்கூடைய போட்டோ எடுக்க சொல்றீங்க” என்று கேட்க,
“ ஆமா ஏன் மாட்டு கூட போட்டோ எடுத்தா என்ன அதுவும் போக இவன் என்னோட ரொம்ப ஃபேவரைட்” என்று சொல்ல உடனே அந்த போட்டோகிராபரோ,
‘ அது சரி இப்ப எல்லாம் கல்யாணமானவங்க அவங்களோட செல்ல பிராணின்னு நாய் கூடையும் பூனைகூடையும் போட்டோ எடுக்க தான் செய்றாங்க இவங்க கொஞ்சம் வித்தியாசம் கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்குற இந்த மாட்டு கூட எடுக்கணும்னு நினைக்கிறாங்க நமக்கு என்ன எடுத்து கொடுத்திடுவோம்’ என்று நினைத்துக் கொண்டவர்,
“ சரி ஓகே மேடம் ரெடியா” என்று அவர் கேட்க உடனே அவளும்,
“ ஹான் நாங்க ரெடி” என்றவள் முதலில் வீராவை கட்டிப்பிடித்து எடுக்கச் சொன்னாள்.
அவர்கள் எடுத்தார்கள்.
பின்பு வீராவினுடைய நெற்றி கொம்பு காது கழுத்து என ஒவ்வொரு இடத்திலும் அவள் மிகுந்த சந்தோஷத்தோடு அவள் முகம் பளிச்சிட முத்தம் கொடுத்து எடுக்க சொல்ல அவர்களுடைய பார்வையோ வேந்தனின் புறம் திரும்பியது.
அவனோ கொலை வெறியோடு நின்று கொண்டிருந்தான்.
அதை பார்த்த அந்த போட்டோகிராஃபரின் அசிஸ்டன்ட் போட்டோகிராஃபரின் காதில்,
“ அண்ணா இந்த பொண்ணு கல்யாணம் பண்ணது இவரையா இல்ல அந்த மாட்டையான்னு எனக்கு சந்தேகமாக இருக்குன்னா இவருக்கு முத்தம் கொடுக்க சொன்னா கொடுக்கவே மாட்டேன்னு அவ்ளோ அழிச்சாட்டியும் பண்ணுச்சு ஆனா இப்போ இந்த மாட்டுக்கு வளச்சி வளச்சி முத்தம் கொடுக்குது. பேசாம அந்த மாட்டோட தலைக்கு பதிலா இந்த மாப்பிள்ளையோட தலையை வைத்து எடிட் பண்ணி கொடுத்துடுவோமா” என்று அவன் சொல்ல அவரோ,
“ டேய் வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா” என்று கடிந்தான்.
அந்த அசிஸ்டன்ட் சொன்னது வேந்தனுடைய காதிலும் விழ அவனோ, அந்த அசிஸ்டன்ட்டை பின் கழுத்தோடு பிடித்தவன்,
“ நீ ஏன் போட்டோல எடிட் பண்ணனும் நான் நெனச்சா இப்பவே உன்னோட தலையை எடுத்து அதுக்கு வச்சிடலாம் நீ என்ன சொல்ற” என்று அவன் கேட்க உடனே அவனும் பம்மிக் கொண்டு,
“ ஐயோ சார் நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன் என்ன ஆள விடுங்க” என்று அவன் கையில் இருந்து நழுவினான்.
மனதிற்குள்,
‘ எல்லாம் இவளால இந்த நண்டு சிண்டு எல்லாம் என்ன கிண்டல் பண்ற அளவுக்கு இருக்கு. வாடி உனக்கு இருக்கு’ என்று மனதில் கருவிக்கொண்டான்.
ஆனால் இது எல்லாம் தெரியாத மேகாவோ வீராவுடன் அழகாக போஸ் கொடுத்து கொண்டு இருந்தாள்.
Wowwwwww superb vera level epiii ❤️❤️❤️❤️