சீதளம் 43
“எனக்கு அப்பவே உங்கள ரொம்ப புடிச்சி இருந்துச்சு”
“ ஏய் இதுக்காகவா ஒருத்தர் மேல காதல் எல்லாம் வரும்” என்று கதிரவன் கேட்க.
“ இருங்க ஒரு நிமிஷம் நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன் நீங்க அவங்களுக்கு அட்வைஸ் பண்ணும் போது எனக்கு அதுல ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது.
நீங்க அவங்க கிட்ட புள்ளைங்கள பெத்தா மட்டும் பத்தாது அவங்களுக்கு என்ன தேவை அவங்க என்ன ஆசைப்படுறாங்க அப்படிங்கறது பார்த்து செய்ய சொன்னீங்க.
அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க அப்படின்னு நீங்க சொன்னீங்க அப்போ உங்க கண்ணுல ஒரு ஏக்கம் தெரிஞ்சது” என்று அவள் சொல்ல அவனோ தன்னுடைய விழிகளை கீழே தாழ்த்திக் கொண்டான்.
ஆம் அவனுக்கு அவனுடைய அப்பா என்றால் மிகவும் பிடிக்கும்.
அவருடன் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைப்பான்.
ஆனால் சிறுவயதில் இருந்து அவனுக்கு அது ஒரு எட்டா கனியாகவே மாறிவிட்டது.
அவனுடைய அப்பாவிற்கு ஏன் செல்வரத்தினத்தை பிடிக்காது என்று அவனுக்கு தெரியாது.
ஆனால் தன்னுடைய அப்பாவிற்கு அந்த குடும்பத்தை பிடிக்காது அதனால் தனக்கும் அந்த குடும்பத்தை பிடிக்காது என்று நினைத்துக் கொண்டவன், எப்பொழுதுமே வேந்தனிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
அதை பார்த்தால் தன்னுடைய தந்தைக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்று அந்த சிறு வயதில் அவனுக்கு பதிந்து போனது.
ஆனால் ஒவ்வொரு முறையும் வேந்தனிடம் அவன் தோற்பதை பார்க்கும் சங்கர பாண்டியனுக்கோ தன் மகனின் மீது வெறுப்பே அதிகமாகியது.
“அதுக்கப்புறம் நான் உங்களை தினமும் பார்க்கணும்னு ஆசைப்படுவேன். ஆனா உங்க கண்ணுல பட மாட்டேன். ஒரு கட்டத்துல என்னோட காதல உங்ககிட்ட சொல்லலாமுன்னு நினைக்கும் போது, எங்க நான் என்னோட காதலை உங்க கிட்ட சொன்னா நீங்க என்னோட அப்பாவுக்கு போன் பண்ணி என்னை மாட்டி விட்டுடுவீங்களோன்னு பயமா இருக்கும். அதனால நான் சொல்லவே இல்ல.
ஆனா இப்படி இவ்வளவு சீக்கிரமா வீட்டுல கல்யாணம் ஏற்பாடு செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கல.
எனக்கு பார்த்த அந்த மாப்பிள்ளை கிட்டயும் நான் லவ் பண்ற விஷயத்தை சொன்னேன். அவர் வேண்டாம்னு சொல்லிவிடுவாருன்னு நினைச்சேன். ஆனா அவர் அப்படி செய்யல.
என்னால உங்க கிட்ட காதலையும் சொல்ல முடியல என்ன பண்றதுன்னு தெரியாம தான் மண்டபத்தில இருந்து ஓடி வந்துட்டேன்.
முதல்ல சாகலாம்னு தான் நினைச்சேன் ஆனா எனக்கு சாக விருப்பம் இல்லை.
எனக்கு உங்க கூட ரொம்ப வருஷம் வாழனும்னு ஆசை. அதனாலதான் இனி என்ன ஆனாலும் பரவால்ல உங்ககிட்ட என் காதலை சொல்லணும்னு நினைச்சு வந்தேன்.
ஆனா இப்படி நீங்க என்ன கடத்திட்டு வந்து எனக்கே தெரியாம என் கழுத்துல தாலி கட்டியிருப்பீங்கன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை.
இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா” என்று அவள் சொல்லிக் கொண்டே போக இங்கு கதிரவனோ அவனுடைய மனதிற்குள்,
‘அப்போ எனக்கு விருச்ச வலை தெரியாம நானே போய் சிக்கிட்டேனா’ என்று நினைத்துக் கொண்டான்.
பக்கத்தில் இருந்த ரகுவந்தனோ அவளுடைய இந்த பதிலில் திகைத்துப் போனவன்,
“ ஏண்டா மச்சான் நானும் எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து உன் கூட தானடா சுத்துறேன் இதெல்லாம் எப்படா நடந்துச்சு” என்று அவன் கேட்க கதிரவனோ,
“ ஆமா அது ரொம்ப முக்கியம் இப்ப என்ன பண்றது டா ஏதாவது ஐடியா கொடுடா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அப்படியே தல சுத்துது” என்றான் கதிரவன்.
“ உனக்கு ஐடியா நான் கொடுக்கணுமா.. ஏன் இல்ல ஏன்னு கேக்குறேன் ஏற்கனவே நான் போதையில உளறுனதுக்கு நீ பண்ணி வச்சிருக்க காரியத்துக்கே நான் என்ன ஆகப் போறேன்னு எனக்கு இன்னும் தெரியல. இதுல உனக்கு இன்னொரு ஐடியா வேறையா ஆள விடுறா சாமி” என்று நழுவ,
அவனுடைய சட்டைக் காலரை கொத்தாக பிடித்தவன்,
“ இங்க பாரு நீதானே சொன்ன விவரம் தெரிஞ்சதுல இருந்து என்கூட ஒண்ணாவே சுத்துறன்னு அதனால இனியும் நீ ஒண்ணாதான் சுத்தணும் பாதியில கழண்டுட்டு போற ஐடியா உனக்கு வந்துச்சு மவனே நானே உன்னை கொன்னுடுவேன்” என்று கதிர் சொல்ல இருவரும் சிறிது நேரம் அங்கு தள்ளுமுள்ளு நடத்திக் கொண்டிருக்க அறிவழகியோ,
“ அய்யோ ரெண்டு பேரும் முதல்ல நிறுத்துங்க இவ்வளவு வளர்ந்தும் சின்ன புள்ள மாதிரி இப்படி சண்டை போடுறீங்க” என்றாள்.
“முதல்ல என்னோட கட்ட அவிழ்த்து விடுங்க நான் கொஞ்சம் அவசரமா போகணும்” என்று அவள் சொல்ல,
“ ஐ புத்தி வந்துருச்சா உனக்கு சரி சரி இரு இப்பவே அவுத்து விடுறேன், இங்கே இருந்து போயிடு” என்று சந்தோஷமாக கூறிய கதிரவன் அவளுடைய கட்டை அவிழ்த்து விட வர,
“ ஹலோ ஹலோ அந்த அளவுக்கு எல்லாம் சீனு இல்ல எனக்கு ரொம்ப நேரமா அர்ஜெண்டா இருக்கு இப்படியே எவ்வளவு நேரம் தான் கட்டி வச்சிருப்பீங்க இங்க எங்க பாத்ரூம் இருக்கு” என்று அவள் கேட்க.
அவள் எதற்காக அவிழ்த்து விட சொல்கிறாள் என்று இப்பொழுது புரிந்து கொண்டவனோ தலையில் அடித்துக் கொண்டான்.
பின்பு அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு பாத்ரூம் எங்கே என்று கை காட்ட அவள் அங்கு சென்றதும் நண்பர்கள் இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ரகுவந்தனோ ஏதோ யோசனை வந்தவனாக கதிரவனிடம் திரும்பியவன்,
“ டேய் மச்சான் எனக்கு ஒரு ஐடியா வருதுடா உங்க அப்பாவுக்கு வேந்தனோட குடும்பத்தை பிடிக்காது. ஆனா இப்ப நீ என்ன செஞ்சிருக்க அந்த குடும்பத்து பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்க.
அங்கேயும் கல்யாணம் நின்னு போச்சு அவங்க குடும்பத்துக்கு ஊருக்குள்ள பெரிய அவமானம் ஏற்பட்டு இருக்கும். இதுல நமக்கான நல்ல விஷயம் என்னன்னா. இந்த பொண்ணோட வீட்ட பொறுத்த வரைக்கும் இந்த பொண்ணு கல்யாணம் வேண்டாம்ன்னு ஓடிப்போயிட்டா.
சோ நீ கடத்தினது வெளியே யாருக்கும் தெரியாது.
இப்போ நீ என்ன செய்ற இந்த பொண்ண கூட்டிட்டு நேரா உங்க வீட்டுக்கு போ உங்க அப்பா பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்” என்றான்.
“ டேய் மச்சான் உண்மையாவா சொல்ற” என்று அவன் சந்தோஷமாக கேட்க.
“ ஆமாடா கண்டிப்பா உங்க அப்பா சந்தோஷப்படுவாரு நீ வேணா பாரு. உங்க அப்பாவ பொறுத்த வரைக்கும் ஊருக்கு முன்னாடி வேந்தன் உடைய குடும்பம் அசிங்கப்படணும் அதுவும் நடந்திருக்கு. அதுவும் அவங்க வீட்டு பொண்ணாளையே.
இங்க பாரு நீ என்ன பண்ற அப்படின்னா நேரா உங்க அப்பா கிட்ட போயி இந்த பொண்ண லவ் பண்ற மாதிரி நடிச்சு அவளே அவ வீட்டை விட்டு ஓடி வர்ற மாதிரி பண்ணி தான் நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன்னு சொல்லு. அப்புறம் பாரு நீ எதிரி வீட்டு பொண்ணையே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கன்னு பெருமைப்படுவார்.
அப்படி இருக்கும்போது உங்க அப்பா சந்தோஷப்படாம எப்படி இருப்பார். கண்டிப்பா உன்னை பார்த்து சந்தோஷப்படுவார் தைரியமா போ மச்சான் எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்று அவன் சொல்லி முடிக்க அறிவழகியும் அங்கு வந்து சேர்ந்தாள்.
“என்ன திரும்பவும் ரெண்டு பேரும் பிளானா.. பண்ணுங்க பண்ணுங்க எப்படியும் எனக்கு நல்லது தான் நடக்கும்” என்று சிரித்தவாறு அவள் வர அவளுடைய கையை பிடித்து தன் பக்கம் இழுத்த கதிரவனோ,
“ இங்க பாரு நீ என் கூட இருக்கலாம் அதுக்காக நான் உன்ன ஏத்துக்கிட்டேன்னு எல்லாம் அர்த்தம் கிடையாது. நான் சொல்ற மாதிரி நீ எங்க வீட்ல சொல்லணும் அப்படி நீ செஞ்சன்னா நீ என் கூட இருக்கலாம். அவளோ அவன் இவ்வளவு தூரம் ஒத்துக்கொண்டதே தனக்கு போதும் என்று நினைத்தவள் சரி என்று தலை ஆட்டினாள்.
“ இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்”
“ ஆமா நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம் தானே” என்றாள் அறிவழகி.
“ ஏய் குறுக்க பேசாத நீதான் என்ன லவ் பண்ற நான் உன்ன லவ் பண்ணல நான் சொல்றத முதல்ல முழுசா கேளு”
“ சாரி சொல்லுங்க” என்றாள்.
“ நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம் உனக்கு வீட்ல கல்யாணம் ஏற்பாடு செஞ்சுட்டாங்க நான் சொன்னதால அந்த கல்யாணத்தை நிப்பாட்டிட்டு என்கூட நீ ஓடி வந்துட்ட சரியா.
எங்க வீட்ல எங்க அப்பா கேட்டா நீ இதை தான் சொல்லணும்.
உனக்கு நான் தான் முக்கியம் உங்க வீட்டு ஆளுங்க முக்கியம் இல்லன்னு சொல்லணும் சரியா” என்றான் அவன்.
“ இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்றாள் அறிவழகி.
“ இங்க பாரு ஓவரோ ஓவர் இல்லையோ நீ என் கூட இருக்கணும்னா நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லணும் இல்லன்னா நீ உன் வேலையை பார்த்துட்டு போகலாம்” என்றான்.
அவளோ,
‘அய்யயோ வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிடுமோ’ என்று பயந்தவள் சரி என்று ஒத்துக் கொண்டாள்.
Quickly upload nxt epiii sisss…….