Home Novelsதாமரையின் தழலவன்தாமரையின் தழலவன் 16

தாமரையின் தழலவன் 16

by Banu Rathi
4
(3)

கடற்கரையில் கரையைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்த அலைகளையே பார்த்துக் கொண்டு தமிழ் எத்தனை நேரமாக நின்றிருந்தானோ தெரியவில்லை, அவனது தோளில் யாரோ கை வைக்கவும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

அங்கே முறைத்துக் கொண்டு தமிழின் நண்பன் நஸ்ரூல் தான் நின்றிருந்தான்.

“ஹேய்.. நீ எங்கேடா இங்கே..”

“ஆ.. வேண்டுதல்..”

“ஓ வேண்டுதல் முடிஞ்சுதோ..”
என்றவனை முறைத்தபடி அப்படியே கீழே அமர்ந்து விட்டான் நஸ்ரூல்.

நண்பனின் அருகில் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்திருந்தான் தமிழ்.

நஸ்ரூலுக்கு தான் தமிழ் மீது கோபம் கோபமாக வந்தது, அன்றைக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டு இருக்கும் போது, தன்னை அழைத்துக் கொண்டு போய் அவன் கேட்ட உதவி அவனுக்கு இப்போது வரை பிடிக்கவேயில்லை.

“சரி சரி.. உடன மலை ஏறிடாத.. என்ன செய்யணும்னு சொல்லு.. செய்து தொலைக்கிறேன்.. யார் யார்கிட்டேலாம் இடி வாங்க வைக்க போறானோ..”

“வரலக்சுமிக்கு டெஸ்ட் வைச்சா மாதிரி தாமரைக்கும் டெஸ்ட் வைக்கலாம்னு யோசிக்கிறேன்டா..”
என்ற நண்பனின் சட்டையைக் கோபமாகப் பிடித்தான் நஸ்ரூல்.

“ஏன்டா ஏன்டா.. உனக்கு மட்டும் புத்தி இப்புடிக் கோணல் மாணலாப் போகுது.. வீட்டுக்கு வந்த லக்சுமியை வைச்சு ஒழுங்காக் குடித்தனம் பண்றதை விட்டுட்டு.. ஏன்டா இப்புடி எல்லாம் லூசு மாதிரி நடந்து கொள்றாய்..”

“தேவையில்லாமல் கத்தி எனர்ஜியை வேஸ்ட் பண்ணாமல்.. ஒழுங்கா நல்ல பிள்ளையா நான் சொல்றதை செய்து குடுக்கிற வழியைப் பாரு..”

“ஏன்டா எருமை மாடே.. நல்ல பிள்ளை செய்ற வேலையாடா இது..”

“டேய் செய்ய முடியுமா முடியாதானு எல்லாம் கேட்க மாட்டேன்.. நீ செய்றாய் ஓகேயா..”

“தமிழ்.. ரொம்ப அநியாயம் பண்றாய்.. வரலக்சுமியோட கதை வேறை.. அவளுல எனக்கே ஆரம்பத்துல இருந்தே நல்ல அபிப்பிராயம் இல்லைடா.. ஆனா இவ தாமரை அவளை மாதிரி இல்லைடா இவ தனி ரகம்.. இவளுக்கு எல்லாம் அந்த மாதிரி டெஸ்ட் வைக்கிறது கடவுளுக்கே அடுக்காதுடா..”

“எந்த மாதிரி டெஸ்ட் வைக்கிறது..”

“அது தான் பணம் உள்ளவனாப் பாத்து அவளுக்கு புரபோஸ் பண்ண வைச்சு.. அந்த மாதிரி..”

“இவளுக்கு அந்த மாதிரி டெஸ்ட் வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. இருந்தாலும் கஷ்டப் பட்டா தானே விஷயம் சரியாகும்..”

“இல்லை புரியலை..”

“அதெல்லாம் புரியுது உனக்கு இருந்தாலும் பிறகு சொல்றேன்.. இந்த முறை மட்டும் ஒரு சிக்ஸ் மந்த் டைம் எடுத்துக்கோ..”

“அதென்ன சிக்ஸ் மந்த் கணக்கு..”

“அவ கூட நிண்டு பேசுறதுக்கே உனக்கு ஒரு மாதம் ஆகும்.. அப்புடிப் பட்டவடா அவ..”

“ஓ..”

“அதோட அவ கிட்டே இந்த புரபோஸ் பண்றது எல்லாம் செட் ஆகாது.. சோ..”

“சோ..”

“கொஞ்சம் றிஸ்க் எடுக்கணும்..”

“இதைப் பாரு.. இந்த முறை நீ என்ன செய்தாலும் இந்த விசியத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்.. என்னால இதைச் செய்யவே முடியாது..”

“அப்போ செய்ய மாட்டே..”

“தமிழ் மேல ஆணையா இந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்..”

“ரைட்டு விடு.. ரூபனை இறக்குவம் அவனுக்கும் இந்த வேலைன்னா நல்லாவே ஓடும்..”

“ஏன்டா ஏன்டா உனக்கு இப்புடிப் போகுது புத்தி.. கடவுளே இந்த எருமைக்கிட்டே இருந்து அந்தப் பிள்ளையை நீ தான் காப்பாத்தணும்..”
என வாய் விட்டே புலம்பிய நஸ்ரூல், தமிழுக்கு ஒரு முறைப்பைப் பரிசாகக் கொடுத்து விட்டு, வேகமாகப் போய் விட்டான்.

அவனுக்குமே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தது. அதில் ஆயிரத்தோறாவது பிரச்சினையாக இணைந்தவள் தான் வரலக்சுமி. இனி அவளின் தலையில் இரண்டு கொட்டுக் கொடுத்து அவளுக்குத் தண்ணீர் தெளித்து வேறு விட வேண்டும். அதே ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்க, இவன் வந்து வலு கூலாக இன்னொரு குண்டைப் போடுகிறானே என ஆதங்கப் பட்டுக் கொண்டே வெளியே வந்தவனுக்கு, வரலக்சுமியைப் பார்க்க பார்க்க இரத்த அழுத்தம் கூடிப் போனது.

அன்று தமிழைக் கோபித்துக் கொண்டு போனவன் தான் அதன் பிறகு நண்பனைக் காண வரவில்லை, அவன் மீது இருந்த கோபம் வேறு அவனை வர விடவில்லை.

ஆனாலும் ரூபனின் நடவடிக்கைகளை அவன் கண்காணிக்காமலும் விடவில்லை. நஸ்ரூலுக்கு தாமரையைத் தெரியும், ஒரு சிநேகமான புன்முறுவலும் இரண்டு மூன்று நலன் விசாரிப்புகளும் தவிர, தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள் அவள்.

அதே நேரத்தில் முகம் கொடுத்துப் பேசினால் அலட்சியப் படுத்தவும் மாட்டாள். தமிழின் நண்பர்கள் வட்டாரத்தில் பல ரகமான நண்பர்கள் உண்டு, அவர்களில் தாமரை முகம் கொடுத்துப் பேசும் ஒரே நபர் நஸ்ரூல் மட்டும் தான்.

அதிலும் அவனிடமே வந்து, நான் உங்களை அண்ணா என்று அழைக்கலாமா என்று அவனிடம் அனுமதி கேட்டு விட்டே அவனை அண்ணா என்று அழைத்துப் பேசுவாள் தாமரை. அவளது அந்தச் சுபாவம் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
எதையுமே கேட்டு அடுத்தவரது அனுமதி பெற்ற பின்னரே அவள் செய்வது அவனுக்கு அவள் மீது மரியாதையை ஈட்டிக் கொடுத்தது.

ரூபன் ஒரு பிளேபாய் என்பதால், அவன் தாமரையை எப்படி நெருங்குகிறான் என்பதை நஸ்ரூலும் முழுமூச்சாகக் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

மனம் தாங்காமல் அதைப் பற்றிப் பேசுவதற்கு தான் நண்பனைத் தேடிக் கொண்டு வந்திருந்தான் நஸ்ரூல்.

“இங்க பாரு தமிழ்..”

“சொல்லு..”

“எதுக்கும் ரூபனுக்கு ஒரு ஆளு வையி.. அவனோட பார்வையே சரியில்லை.. சும்மா நடிடானு அனுப்பி வைச்சா.. ஓவர் ஆக்டிங் பண்ணீட்டு இருக்கான்..”

“அதெல்லாம் பாத்துக்கலாம் ஃப்ரீயா விடு..”

“என்னமோ தெரியலை தமிழ்.. எனக்கு மனசுக்குள்ள என்னவோ சரியில்லைனு தோணுது.. தேவையில்லாத விஷப் பரீட்சை வைச்சிட்டு அப்புறம் தலையில கை வைச்சுக் கொண்டு இருந்திடாதே.. ஒரு நண்பனா உனக்கு நல்லது கெட்டது சொல்றது என்னோட கடமை எண்டதால சொல்றேன்.. தாமரை மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை.. அவளுக்கு இந்த மாதிரி நீ டெஸ்ட் வைக்க ஆளு அனுப்பியிருக்கேனு தெரிஞ்சால் எப்புடி நடந்துக்குவானு என்னால சொல்ல முடியலை..”
என்றவன் நண்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து போய் விட, வழமை போல அலட்சியமாக நின்றிருந்தான் தமிழ்.

தான் செய்யும் வேலையால் சாந்த சொரூபியான தன் மனைவி பத்ரகாளியாக மாறப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பாவம் அப்போது அவன் அறியவில்லை.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!